டாம் ஆல்ட்டர் என்றொரு  கலைஞர்

ஹிந்தியின் பல ஜனரஞ்சக வெற்றிப்படங்களோடு, சத்யஜித் ராய், மஹேஷ் பட், ஷ்யாம் பெனகல் போன்ற தரமான இயக்குனர்களின் படைப்புகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர் ஆல்ட்டர். அஸ்ஸாமியா, தெலுங்கு, குமாவூன் மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார் டாம் ஆல்ட்டர்.  300 திரைப்படங்கள், நாடகங்கள் என இந்தியக் கலை உலகில் பலவருடங்களாகப் பிரகாசித்த ஆளுமை. … இந்தியா தனது முதல் கிரிக்கெட் உலகக்கோப்பையை 1983-ல் வென்றபின், அமெரிக்கா சென்றது. அதில் டாம் ஆல்ட்டரும் இடம்பெற்றிருந்ததோடு அந்த ஆட்டத்தில் ஆடவும் செய்தார் அவர்! ஆர்வமாக, விஷய ஞானத்துடன் கிரிக்கெட் பத்திகள் எழுதிய அவர், எண்பது, தொண்ணூறுகளில் மதிக்கப்பட்ட கிரிக்கெட் பத்தியாளர் என்கிற நிலைக்கு உயர்ந்திருக்கிறார். அப்போது வந்துகொண்டிருந்த ஸ்போர்ட்ஸ்வீக், டெபொனேர் (Debonair) ஆங்கில இதழ்களிலும், அவுட்லுக்(Outlook) வார இதழிலும் வெளியான இவரது கிரிக்கெட் விமரிசனக்கட்டுரைகள்,  விளையாட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

ஐபிஎல் -10 : க்ரிக்கெட் கோலாகலம்

200, 230 என்றெல்லாம் அணிகளின் ஸ்கோர்கள் தவ்விய கதைகளைப் பார்த்தால் போதுமா? நூறுக்கும் கீழே அணிகள் நொறுங்கிவிழுந்த ஐபிஎல்-இன் அபத்தக்கதைகளைப் பார்க்கவேண்டாமா? போனவருடம் கீழ்வரிசையில் இருந்த பஞ்சாப் இந்தவருடம் முதல் நாலுக்குள் வரக் கடும் முயற்சி செய்தது. மும்பைக்கெதிராய் 230 போட்டுக் கலக்கிய இந்த அணி, டெல்லியையும் ஒருகை பார்த்தது

காலாவதியாகிவிட்டதா டெஸ்ட் கிரிக்கெட்?

அக்டோபரில் வரவிருக்கும் ஐசிசி மீட்டிங்கில், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான உலக சேம்பியன்ஷிப் பற்றிப் பிரஸ்தாபிக்கப்படும் எனத் தெரிகிறது. அதாவது, ஐசிசி தரவரிசைப்படி, உலகின் முதல் இரண்டு இடங்களில் உள்ள டெஸ்ட் அணிகள் சேம்பியன்ஷிப்பிற்காக, ஒரு நடுநிலை மைதானத்தில் (neutral ground) மோதவேண்டும்; இந்த சேம்பியன்ஷிப் போட்டி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படவேண்டும் என ஒரு திட்டம் வலம் வந்துகொண்டிருக்கிறது. இப்போது இருப்பதைப்போலவே இரு நாடுகளுக்கிடையே நடத்தப்படும் டெஸ்ட் தொடர்பற்றிய தேதிகள், ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட நாடுகளின் கிரிக்கெட் போர்டுகளே பேசித் தீர்மானித்துக்கொள்ளலாம் எனப் பொதுவான கருத்து நிலவுகிறது. அதாவது, இரு தரப்பு டெஸ்ட் மற்றும் பிறவகைக் கிரிக்கெட் தொடர் விஷயத்தில் ஐசிசி மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஐசிசி உறுப்பினர்-நாடுகள், டெஸ்ட் கிரிக்கெட்டை புதுப்பிக்க, மேலும் புதிய யோசனைகளை சொல்லக்கூடும்.

கிரிக்கெட்: மனதை வசீகரித்த மாயாஜாலம்

அப்போது, இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா என்கிற பத்திரிக்கை வந்தது. ஸூப்பர் சைஸ் வாரப்பத்திரிக்கை. கிரிக்கெட் பத்திகளுக்காக லைப்ரரிகளுக்குப்போய் அதைத் தேடிப் படிப்பேன். கிரிக்கெட் சீசனில், ஸ்போர்ட்ஸ்வர்ல்ட் (Sportsworld), ஸ்போர்ட்ஸ்டார் ஆகிய வார இதழ்களை வாங்கிப் படிப்பது வழக்கம். இதுவரை பேரை மட்டுமே கேட்டிருந்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான, பட்டோடி, வாடேகர், சோல்கர், விஸ்வநாத், கவாஸ்கர், துராணி, இஞ்ஜினீயர், சந்திரசேகர் ஆகியோரின் ஆக்‌ஷன் படங்களை பார்த்ததும் ஏதோ தேவலோகத்து மனிதர்களை தரிசித்த பரவசம் மனசில் பாய்ந்ததை மறக்கமுடியுமா? ‘பாடப் புஸ்தகத்தப் படிக்காம, கண்ட கண்ட புஸ்தகங்களை எல்லாம் வாங்கிப் படிக்கிறான் பாருங்கோ!` -அப்பாவிடம் அம்மாவின் கோழிச்சொல்லல் கிரிக்கெட் ஆர்வத்துக்கு அவ்வப்போது பக்கவாத்தியமாய் அமைந்தது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்: புதிய பயிற்சியாளர் – புதிய பாதை

ஐந்து வருடங்கள் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த நியூசிலாந்தின் ஜான் ரைட் அறிமுகப்படுத்திய buddy system என்று அழைக்கப்பட்ட, ஒரு பௌலர்- ஒரு பேட்ஸ்மன் என ஜோடி, ஜோடியாகப் பந்துவீச்சு, பேட்டிங் எனப் பயிற்சி செய்தலை கும்ப்ளே மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளார். அதே சமயம், நெட்-பயிற்சியை உன்னிப்பாகக் கவனித்து இந்திய வீரர்களுடன் அவர்களது பேட்டிங் செய்யும் முறை, பௌலிங் ஆக்‌ஷன் போன்றவைகளில் ஏதேனும் குறை தெரிந்தால், மாற்றம் தேவைப்பட்டால் அதுபற்றி அவர்களுடன ஒன்றுக்கு ஒன்றாய் பேசி, கவனத்தைக் கொணர்கிறார். தேவையான மாற்றங்கள் செய்து மீண்டும் அவர்களை முறையே பௌலிங் அல்லது பேட்டிங் செய்யவைத்துக் கூர்ந்து கவனிக்கிறார்.