தொழுது உயர் கையினன், துவண்ட மேனியன் (5)

குழுவும் நுண் தொளை வேயினும், குறி நரம்பு எறிவுற்று
எழுவு தண் தமிழ் யாழினும், இனிய சொல் கிளியே!
முழுவதும் மலர் விரிந்த நாள் முருக்கு இடை மிடைந்த
பழுவம், வெம் கனல் கதுவியது ஒப்பது பாராய். (2162)
குழலிசையினும் யாழிசையினும் இனிமையானவளே! அடர்ந்த மரங்களில் பூத்திருக்கும் சிவந்த முருக்க மலர்கள் காடு தீ பற்றி எரிவதைப் போல காட்சி தருவதைப் பார்.

விழியின் சேல் உகள் வால் நிற வெள்ளத்து முழுகி

‘கொற்றவர், முனிவர், மற்றும் குவலயத்து உள்ளார், உன்னைப்
பெற்றவன் தன்னைப் போல பெரும் பரிவு இயற்றிநின்றார்;
சிற்றவை தானும் ஆங்கே கொணர்க எனச் செப்பினாள்; அப்
பொன் தட மகுடம் சூடப் போதுதி விரைவின் ‘என்றான். (1664)
”மன்னர், முனிவர், மற்றும் உலகத்தவர் யாவரும் மகிழ்ந்திருக்கின்றனர். தசரதன் அடையும் மகிழ்ச்சியை அனைவரும் அடைகின்றனர். சிற்றன்னை கைகேயி தங்களை அழைத்து வரச் சொன்னார்’’ சுமந்திரர் இராமனிடம் தெரிவித்தார்.
‘ஆழி சூழ் உலகம்

யானை பிழைத்த வேல் – பகுதி இரண்டு

தடுத்து இமையாமல் இருந்தவர் தாளின்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் (783)
அந்நிகழ்வு அரிதானது என்பதால் அதன் எந்த ஒரு துளியையும் தவறவிட்டுவிடக் கூடாது என இமைக்காமல் அதனை நோக்கியிருந்தனர். அப்படியிருந்தும் இராமன் கையில் வில்லை எடுத்ததைப் பார்த்தனர். அது முறியும் சத்தத்தை கேட்டனர். இமைப்பொழுதுக்கும் குறைவான நேரத்தில்  இராமன் வில்லை முறித்தான்.

யானை பிழைத்த வேல் – பகுதி ஒன்று

இராமனும் சீதையும் பார்த்துக் கொண்ட போது விழிகள் சந்தித்தன. இருவரின் உணர்வும் ஒன்றென ஆனது.
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணைத்து……..
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார் (600)
விழிகளில் உருவான காதல் இராமனின் இதயத்தில் சீதையையும் சீதையின் இதயத்தில் இராமனையும் இடம்பெறச் செய்தது.
இந்திரநீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோலுமே அல
முந்தி எம்உயிரை அம்முறுவல் உண்டதே (619)
இராமனின் மென்முறுவல் தன் உயிரை உண்டது என்கிறாள் சீதை. இராமனின் மென்முறுவலிடம் சென்று சேர்கிறது சீதையின் அகமும் உயிரும்.
இந்திர நீலம் போன்ற சிகையும் பிரகாசிக்கும் சந்திரனைப் போன்ற முகமும் நீண்ட கைகளும் மலை போன்ற தோள்களும் முதலில் என் உயிரைக் கவரவில்லை; மாறாக இராமனின் புன்னகையே தன் உயிரைக் கவர்ந்தது என்கிறாள் சீதை.

சித்திர சுவர் நெடுஞ்சேனை

தேவரையும் மருள் கொள்ளச்செய்யும் அழகுடைய பெண்கள், அணிகலன் கள் அணியாமல், பூக்களை உதிர்ந்து விட்ட, இலையுதிர் கால கொம்புகள் போல் அவ்வூர்வலத்தில் சென்றார்கள்.

தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர்,
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார்.

இப்படி காட்சிகளை மாபெறும் உயரத்தில், பிரமாண்டத்தில் வானை மறைக்குமாறு சொல்லிவருகின்ற கம்பர், ஓர் இடத்தில் சரசரவென இறங்கி, இயல்பாக, எளிய ஆனால் புன்னகைக்க வைக்கும் ஓர் சித்திரத்தைக் காட்டுகிறார்.

வெங் கனல் கதுவியது ஒப்பன

காரணம் மிக எளியதுதான். செம்மை நிறம் கொண்ட பாத சுவடுகள் செம்மாணிக்க நிறமுடைய பாறைகளில் தெரியாது. அதே சமயம், பச்சை நிறமுள்ள பாறைகளில் நன்கு தெரிகின்றன. பச்சை பாறைகளில் சிவப்பு பாதச் சுவடுகள்! கவரும் அடர் வர்ணக்கலவைகள்…இடை இடையே இருக்கும் மாணிக்கப் பாறைகளில் மறைந்தும் பின் வரும் பச்சைப் பாறைகளில் தொடர்ந்தும்!

கம்பனின் இரணியன்

பிரகலாதனையும் விபீஷணனையும் துரோகிகள் என்று தமிழில் வலிந்து வலிந்து எழுதப் பட்டிருக்கிறது. பாரதிதாசன் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்று நாடகம் ஒன்று எழுதியிருக்கிறார். நாடகத்தைப் பார்க்கவில்லை. படித்திருக்கிறேன். படித்தால் தமிழ்த் துரோகியாக மாறிவிடலாமா என்ற சபலம் உங்களுக்குத் தோன்றலாம். சமீபத்தில் திரைப்படம் ஒன்றில் நரசிம்மர் வதைக்கப்படுகிறார். இரணியன் கதாநாயகியை மணக்கிறான் என்று ஞாபகம். இவற்றைப் போன்ற படைப்புகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றினால் அது புரட்சி அல்லது புதுமை என்ற மூட நம்பிக்கையில் விளைந்தவை. இவற்றையெல்லாம் சர்க்கஸில் கோமாளி கைகளால் நடந்து வருவதைப் பார்த்து கைதட்டி சிரித்து விட்டு மறந்து விடுவதைப் போல மக்கள் மறந்து போய் விடுவார்கள்.

கைவிளக்காம் கடவுள் திங்கள்

எத்தனையோ துடர்பாடுகளுக்கு, மனசஞ்சலங்களுக்கு பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு ஆறுதலானச் சொல், ஒரு கனிவான பார்வை, சரியான வழி காட்டும் கரம், சட்டென கண்களில் படும் தேவாலயச்சுவர்களில் தென்படும் நம்பிக்கை வாக்கியம் எதுவாகிலும் அது கடவுள் திங்கள்தான் இல்லையா?

அறம் செய்த அறம்

சில படைப்புகளை படிக்கும் போதே படைப்பாளிகளின் சூழ்நிலையைப் பற்றி மனதில் ஒரு வரி தனியாக, தொலைக்காட்சி சேனல்களில் அடியில் “முக்கியச் செய்திகள்” ஓடுவது போல் ஓடிக்கொண்டே இருக்கும். கம்பராமாயணத்தைப் படிக்க ஆரம்பித்துச் சில அமர்வுகளிலேயே தோன்றியது, கம்பனின் பார்வை ஒரு drone camera பார்வை அல்லது பெருங் கழுகுப் பார்வை என்று. எதையும் “உலகத்தோடு” அல்லது உலகம் யாவையுமாகத்தான் பார்க்கிறார். மேலும், கடலை ஒட்டிய பெரிய மலைத் துண்டின் உச்சி மேல் இருப்பிடம் அமைத்து அங்கிருந்து தினமும் கடலையை நோக்கி அமர்ந்துதான் கம்பராமாயணம் இயற்றியிருப்பாரோ என்று தோன்றியது.

தனியும் தானும் அத் தையலும் ஆயினான்

ஒரு பாடல் தரும் வாசிப்பு அனுபவத்தை வாசகர்கள் நெருக்கமாக உணரும்போது அது அவரவருக்கான அனுபவமாக ஆகிவிடுகிறது. ஒரே appதான், ஆனால் அவரவருக்காகவே தனித் தனி session!