ராபர்ட் கனிகலின் The Man Who Knew Infinity: புத்தக விமர்சனம்

ராபர்ட் கனிகல் எழுதிய The Man Who Knew Infinity என்ற புத்தகத்தின் ஆங்கிலம் மற்றும் தமிழ் பிரதிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இரு வேறு நண்பர்களிடமிருந்து எனக்கு பரிசாய்க் கிடைத்தன. அதுவும் ஒரே டிசம்பர் வாரத்தில் இரு வேறு நாட்களில் இந்தப் புத்தகங்கள் என்னை வந்தடைந்தன (இதோ இதை தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் பிப்ரவரி 14ஆம் தேதியும்கூட புத்தக காதலர்களுக்கு விசேஷமான நாள்: இன்று சர்வதேச புத்தகப் பரிசு தினம் கொண்டாடப்படுகிறது). ஆங்கில புத்தகத்தைக் கொடுத்த நண்பரும் நானும் ஒவ்வொரு முறை நாங்கள் சந்திக்கும்போதும் புத்தக பரிவர்த்தனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருப்பவர்கள். அந்த வழக்கப்படி ஆங்கில பிரதி கிடைத்ததில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. 2015ல் கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வையொட்டிய இந்தப் புத்தகம் திரைப்படமாக வடிவெடுத்து வெளிவந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். நான் படம் பார்த்திருந்ததால் கதையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது நினைவில் நன்றாகவே பதிந்திருந்தது. எனவே, “அப்புறம் படிக்கலாம்,” என்று ஆங்கிலப் பிரதியை எடுத்து வைத்திருந்தேன்.

ரோபாட்களுக்கு விருப்பு வருமா?- ஜூடேயா பேர்ல்:நேர்காணல்

பேர்ல்: ரோபோட்டுகள் நிகழ்வுச் சான்றுகளுக்கு மாறாக, “நீ இன்னும் நன்றாகச் செய்திருக்க வேண்டும்,” என்பதுபோல், ஒன்றுடனொன்று தகவல் பரிமாறிக் கொண்டால், அப்போது அது முதல் தடயமாக இருக்கும். கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் ரோபோட் அணி ஒன்று இந்த மொழியில் பேசிக் கொள்ளத் துவங்கினால் அப்போது அவற்றுக்கு சுய இச்சை உணர்வு இருக்கிறது என்பது நமக்குத் தெரிய வரும். “ நீ பந்தை எனக்கு பாஸ் செய்திருக்க வேண்டும்- உனக்காகக் காத்திருந்தேன், ஆனால் நீ பாஸ் செய்யவில்லை!”. “நீ செய்திருக்க வேண்டும்,” என்று சொன்னால், நீ என்ன செய்தாயோ, உன்னை அப்படிச் செய்யச் செய்த உந்துதல் எதுவாக இருந்தாலும் அதை நீ கட்டுப்படுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று பொருள். ஆனால் நீ கட்டுப்படுத்தத் தவறிவிட்டாய் என்று சொல்வது, எனவே முதல் அறிகுறி உரையாடலாய் இருக்கும்; அடுத்தது, இன்னும் நல்ல கால்பந்தாட்டம்.

கோணக் கணிதம்

பொது சகாப்தத்திற்கு முன் 120ஆம் ஆண்டில் கிரேக்கத்தில் ஹிப்பார்க்கஸ் என்னும் வானவியலாளர் கோணவியலின் சூத்திரத்தை நிறுவினார் என நேற்று வரை எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால், இப்போது பொது சகாப்தத்திற்கு முந்தைய 1762ஆம் வருடத்திலேயே பாபிலோனியர்கள் கோணக் கணிதத்தை அறிந்திருக்கிறார்கள் என்பதை கல்வெட்டு காட்டுகிறது. பித்தேகோரஸ் தேற்றம் சொல்வதற்கு ஆயிரம் “கோணக் கணிதம்”

மகரந்தம்

இன்றைய காலகட்டத்தில் நோய்க் கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆன்டிபயாடிக் உட்கொண்டாலும் உங்கள் உடம்பை சாதாரணமாக்க முடிவதில்லை. நுண்ணியிரிகள் அவற்றை எளிமையாக எதிர்கொண்டு, தாக்குப்பிடிக்கக் கற்றுக் கொண்டுவிட்டன. நோய் எதிர்ப்புத் திறன் இல்லாமல் வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த மாதிரி சமயத்தில்தான் மக்கள் தாவரத்தொடர்பியில் விஞ்ஞானியைக் குறித்த இந்தக் கட்டுரை வெளியாகிறது. இவர் இயற்கையை நாடுகிறார். பழங்கால வைத்திய முறைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்கிறார். வெறும் வேதியியல் கொண்டு, இரசாயனவியல் கலவைகளைக் கண்டுபிடிப்பதை விட தொன்றுதொட்ட பழக்கங்களை வைத்து நோய்களை குணமாக்கும் வைத்தியத்தை விளக்குகிறார்

சிள்வண்டுகள் அறிவிக்கும் கணிதம்

சாவகாசமா ஆனா தேர்ந்த ரசனையோட வேலைசெய்யற ஒரு சிற்பி மாதிரி அந்தக் காடு. அந்தக் காடு உயிர்ப்போட இருக்கு அப்டிங்கறத அறிவிக்கறதே சத்தமும், அசைவுகளும்தான். ஒரு கர்நாடக இசைக்கச்சேரியோட சுருதிப்பெட்டி மாதிரி சிள்வண்டுகளோட ரீங்காரம் கேட்கும் அங்க. தன் இருத்தலைச் சொல்லி, தன் தேவையை கூவிக் கேட்கும் உயிரி அது. ஆனா நம்மள்ல நிறைய பேர் ஒரு சிள்வண்டப் பார்த்திருக்க மாட்டோம். ஆனா அதனுடைய ரீங்காரத்தைக் கேட்டிருப்போம். அந்த சில்வண்டுகள்ல ஏகப்பட்ட உட்பிரிவுகள் உண்டு. அதுல இரண்டு வகைகளுக்கு தனி சிறப்பு இருக்கு. அதுங்கதான் பதினேழு அப்புறம் பதிமூணு வருஷ சிள்வண்டுகள்(17 and 13 year cicadas). மண்ணுக்குள்ளேயே மறைஞ்சிருந்து அத்தனை வருஷத்துக்கு ஒருமுறை வெளியில வந்து இனப்பெருக்கம் பண்றதாலதான் அந்தப் பேர்.

“நீ என்றும் வெல்லமாட்டாய்” : கென் ஓனோவுடன் ஒரு நேர்காணல்

ஷ்பீகல்: ஆனால் இந்தப் புதிய சிந்தனைகள் எங்கிருந்து வரும்? ….. எந்த வித முன் விவரணைகளோ, தர்க்கங்களோ, உறுதிப்பாடுகளோ இன்றி வெற்றுச் சமன்பாடுகள் மட்டுமே. இம்மாதிரி சிந்தனைகள் நேரடியாக வானத்திலிருந்தே (கடவுளிடமிருந்து) வந்திருக்குமா?
ஓனோ: இன்றும் இது ஒரு அறியாப்புதிர். …இறப்பதற்கு மிகச்சமீபத்தில் அவர் கண்டுபிடித்த mock-theta functions… இராமானுஜன் எழுதிய அந்தச்சமன்பாடுகள் பொதுவான கணக்கு ஆராய்ச்சியின் விளைவாக எழுதி இருக்கவே இயலாது….
ஷ்பீகல்: அவரே சொல்லி இருக்கிறாரே அவருடைய குலதெய்வம் (நாமகிரித்தாயார்) அருளியதாக…

தேனீக்கள், கணிதம், பரிணாமம்- ஒரு கணித-உயிரியலாளருடன் உரையாடல்

பொதுவாக உயிரியல் அமைவுகளை அளவைக்கு உட்படுத்தும் போது நாம் எளிதாக வேதியியலையோ அல்லது இயற்பியலையோ பயன்படுத்த முடிகிறது. மருத்துவத்தில் நமக்கு தேவையான ஒரு தீர்வு, பொறியியல் தொழில்நுட்பத்திலிருந்து கிடைக்கக் கூடும். நம் மாணவர்களை மிகவும் ஆரம்பத்திலிருந்தே சிலவிஷயங்களில் தெளிவுடையவர்களாக்குவது நல்லது. வெவ்வேறு புலங்களிடையே இருக்கும் எல்லைக் கோடுகள் உண்மையில் நாம் உருவாக்கியவைதான். நமக்கு சுவாரசியமான நம்மைச் சுற்றி நம்மை ஈர்க்கும் விஷயங்களை அறிந்திட அவற்றை விளங்கிக் கொள்ள நாம் முயற்சி செய்வதே நமக்கு முக்கியமானது. இதை நாம் உணர்த்த வேண்டும்.

ஒளி – இப்போதும் இனியும்

நாம் உண்மையாகவே புரட்சிகரமான மாற்றத்தைக் கணிப்பதானால் எதிர்கால கணினிகள் ஈரிணை ஒளிக்கணினிகள் (binary optical computer) என்று சொல்லப்பட மாட்டாது. அவை க்வாண்டம் கணினிகளாகவே (Quantum computers) செயலாற்றும். .. .. .. மீபொருட்களில் வேறொரு சுவாரசியமான துறை, ஒளிப் போர்வைகள் (optical cloaks). ஹாரி பாட்டர் தன்னை மறைத்துக் கொள்ள போர்த்துக் கொள்ளும் போர்வை நினைவுக்கு வரலாம். ஒரு பொருளின் மீது விழும் ஒளி சிதறும்போதுதான் நாம் அப்பொருளைப் பார்க்க முடிகிறது. .. .. .. கடலில் உள்ள மீன்கள் சில, கடல் நீருக்கு இணையான ஒளித்திரிபு எண் கொண்டிருப்பதால் பார்வைக்குப் புலப்படாமல் நீந்துகின்றன.