1668ல் மரியா அந்நகரின் இளம்பெண்களுக்கு மலரோவியங்கள் வரையக் கற்றுக் கொடுத்தார், Jungferncompaney (“Company of Young Misses,”) எனப்படும் திருமணத்திற்கு காத்திருக்கும் மேல்மட்ட குடும்பப்பெண்களின் அத்தகைய குழுமங்களில் மலர்களின் ஓவியம் வரையக் கற்றுக்கொடுப்பது, லினென் துணிகளில் இயற்கை சித்திரங்களை எம்பிராய்டரி செய்வது, ஆகிய வகுப்புக்களின் மூலம் மரியாவுக்கு பல செல்வந்தர்களின் சொந்த தோட்டங்களுக்கு செல்ல அனுமதி கிடைத்தது.
Category: தாவரவியல் கட்டுரை
குட்ஸூ
ஆசியாவிலிருந்து அறிமுகமாகி அமெரிக்காவின் சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை அளித்துக் கொண்டிருக்கிறது இந்த குட்ஸூ கொடி. இக்கொடிக்கு அமெரிக்காவில் ’’தெற்கை தின்ற கொடி’’ என்றே பெயர் .(the vine that ate the South) ஏனெனில் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் மிக வேகமாக பரவி ஆக்கிரமித்திருக்கும் இக்கொடியை அகற்ற களைக்கொல்லிகள் பயன்படுத்துவது, வெட்டியகற்றுவது ஆகியவற்றிற்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் 6 மில்லியன் டாலர்கள் செலவாகிறது.
பப்பைரஸ்
ஆனால் கிமு 3ம் நூற்றாண்டில் கிளியோபாட்ராவின் முன்னோடிகளான எகிப்தின் மன்னர்கள், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அதுவரை எழுதப்பட்ட ஒவ்வொரு நூலையும் கண்டுபிடித்து மொழிமாற்றுவது, வாங்குவது அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றபோது, திருடுவதை கூட செய்தார்கள். இந்த பட்டியலில் எஸ்கிலாஸ், சோபோகிளிஸ் மற்றும் யூரிபிடிஸ் ஆகியோர் இருந்தனர்.
கனி மரம்
உலகின் மிக அதிகம் விளைவிக்கப்படும் கனிகளில் ஆப்பிள், வாழை, மா இவற்றுடன் ஆலிவ்களும் இருக்கின்றன. உலகில் எண்ணெய்க்காக சாகுபடி செய்யப்பட்ட கனிகளில் மிகபழமையாதும் ஆலிவ்தான். 7000 வருடங்களுக்கு முன்னர் மத்தியதரைக்கடல் பகுதியில் ஆலிவ் சாகுபடி செய்யப்பட்டு எண்னெய் பிழிந்து எடுக்கபப்ட்டதற்கான சான்றுகள் உள்ளன
நாடும் சுவை, தேடும் தொல்லியல்
தொல்லியல் என்பது பழங்கால எலும்புகள், மட்டைகள் மற்றும் எறிகணை புள்ளிகள் பற்றியது மட்டுமல்ல, அத்தகைய கலைப்பொருட்கள் காணப்படும் சூழல்களையும் ஆராய்வதாகும். பழைய துண்டுகள், தொலைந்து போன பொருள்களைத் தவிர, அவை படிந்திருக்கும் பூமியின் அடுக்குகள், மண்ணின் கலவை போன்றவற்றையும் உட்கொண்டது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு காலத்தில் பானைகளை உருவாக்கியவர்கள், வேட்டையாடுவதற்கான புள்ளிகள் அல்லது விலங்குகளின் மறைவுகளை இந்த இடத்தில் துடைத்தவர்கள் பற்றிய கதையை வடிவமைக்க உதவும் தடயங்கள்.
சர்க்கரை பூஞ்சை
எப்போது, எங்கிருந்து ஈஸ்ட் மனிதனால் நொதித்தலுக்கு பயன்படுத்தப்பட்டது என்று துல்லியமாக சொல்ல முடியாவிட்டாலும் அகழ்வாய்வுகள் அவை பண்டைய எகிப்திலிருந்தே பயன்பாட்டுக்கு வந்திருக்கும் என சொல்லுகின்றன. 8000 ஆண்டுகள் பழமையான ஒய்னும் 7000 ஆண்டுகள் பழமையான பியரும் நமக்கு கிடைத்திருக்கிறது எனினும் 1680 வரை அவை ஈஸ்டினால் உருவானவை என்று உலகிற்கு தெரிந்திருக்கவில்லை.
அகார் அகார்
அகார் கடற்பாசிகள் கடலின் 20 லிருந்து 25 மீட்டர் ஆழங்களில் , 2 லிருந்து 40 செ மீ உயரம் வரை வளரக்கூடியவை. மையத் தண்டின் இருபுறமும் ஒழுங்கற்றுக் கிளைத்த சிவந்த நிற உடலம்(Thallus) கொண்டவை. அகார் ஜப்பானில் Gelidium pacificum என்னும் கடற்பாசியிலிருந்தும் பிற நாடுகளில் Gelidium sesquipedale, வகையிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றது. ஜெலிடியம் வகை கடற்பாசிகள் இல்லாத ஐரோப்பிய நாடுகள் பிற கடற்பாசிகளிலிருந்து அகாரை தயாரிக்கின்றனர்.
லண்டானா கமாரா
லண்டானா வெர்பினேசி குடும்பத்தை சேர்ந்தது. இந்த பேரினத்தில் கமாரா உள்ளிட்ட சுமார் 150 சிற்றினங்கள் உள்ளன. லண்டானா ஒரு பல்லாண்டு தாவரம் இவை 7 அடி உயுரம் வரை வளரும் புதர் வகைகளாகவும் மரங்களில் படர்ந்து ஏறி வளரும் உறுதியான தண்டுகளையும் கொண்ட கொடி வகை தாவரமாகவும் சிறு செடிகளாகவும் காணப்படுகிறது.லண்டானாவின் அகன்ற முட்டை வடிவ எதிரிலைகள் கடும் நெடி கொண்டவை. இவை பல நிறம் கொண்ட மலர்கள் அடங்கிய மஞ்சரிகளை கொண்டிருக்கும். ஒரு செடியிலிருந்து சுமார் 12000 கருப்பு நிற சிறு கனிகள் உருவாகும்.
ஊனுண்ணித் தாவரம் – வீனஸ்
சுமார் 70 மில்லியன் வருடங்களுக்கு முன்பு மாபெரும் டைனோசர்கள் காடுகளில் பல்கி பெருகிக் கொண்டிருந்த போது குறிப்பிட்ட சில தாவரங்களுக்கு இலைகளில் நடைபெற்ற ஒளிச்சேர்க்கையில் கிடைக்கும் உணவு போதாமலும், அவை வாழ்ந்த நிலத்தில் சத்துக்கள் குறைவாகவும் இருந்ததால் அவற்றின் இலைகள் பூச்சிகளை பிடிக்கும் பொறிகளாக மெல்ல மெல்ல மாறி பரிணாம வளர்ச்சி அடைந்தது. அவற்றின் வளர்ச்சிக்கு நிலத்திலிருந்து கிடைப்பதில் போதாமல் இருக்கும் சத்துக்களை இவ்வாறு பூச்சிகளை, சிறு விலங்குகளை உண்பதன் மூலம் அவை சரி செய்து கொண்டன.
கடுகு
இந்தியாவின் இரண்டாவது முக்கிய எண்ணெய் பயிர் கடுகுதான் (நிலக்கடலைக்கு அடுத்ததாக). பெரும்பாலான இந்திய கடுகுப் பயிர்கள் வடஇந்தியாவில் பயிராகின்றன. கடுகின் நுண் விதைகளில் 45 சதவீதம் கடுகு எண்ணெய் அடங்கியிருக்கிறது. இந்தியாவின் மொத்த கடுகு உற்பத்தியில் 60 சதவீதம் உத்தரபிரதேசத்தில் பயிராகின்றது. இந்தியாவில் மிக அதிகமாக பயிராகும் கடுகு வகைகள்:
ரிஸின்
மார்கோவின் படுகொலையை இப்போது நினைக்கையில் , அக்கால அரசியல் காழ்ப்புக்கள் அப்படி நஞ்சூட்டப்பட்டு நிகழ்ந்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றும் , ஆனால் அப்போதும் இப்போதும் அப்படி ஒன்றும் பெரிய வேறுபாடில்லை என்பது 2020ல் ருஷ்ய எதிர்கட்சி தலைவரும், ஊழலுக்கெதிரான செயற்பாட்டாளருமான அலெக்ஸி நவல்னி (Alexei Navalny)க்கு நடந்த நஞ்சூட்டி கொல்லும் முயற்சியை அறிந்து கொண்டால் தெரியவரும். ரிஸின் கொண்டிருக்கும் ஆமணக்கு எண்ணெய் , உணவுப்பொருட்களில் சிறு அளவில் இவ்விதைகள் சேர்க்கப்படுவது ஆகியவை மிகுந்த கவனத்துடன் கண்காணிக்கப்பட வேண்டும்
மிஸல்டோ – முத்தச் சிறுகிளை
பொதுவெளியில் பாராட்டுவது, அன்பை தெரிவிப்பது ஆகியவற்றிற்கு அவ்வளவாக பழக்கப்பட்டிருக்காத தென்னிந்திய சமூகத்தை சேர்ந்த ஒரு இளைஞனுக்கு நிச்சயம் இது வெட்கத்தை உண்டாக்கும் நிகழ்வுதான்.அந்த குறுங்கிளை மிஸல்டோ (Mistletoe) என்னும் ஒரு மர ஒட்டுண்ணிச்செடியின் பகுதி. இந்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் இச்செடியின் கிளைகள் அலங்காரத்துக்கான பயன்பாட்டில் இருக்கின்றன எனினும் அதனடியில் முத்தமிட்டுக் கொள்ளும் வழக்கம் இந்தியாவில் இல்லை.
பைனும் இல்லாத ஆப்பிளும் இல்லாத பைன் ஆப்பிள்
அவை எவ்வாறு பழங்குடியினரால் கண்டு கொள்ளப்பட்டு சாகுபடி செய்யப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனினும் அவை பழங்குடியினரால் ஏராளமாக சாகுபடி செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்தன. பெரு மற்றும் மெக்ஸிகோவின் அகழ்வாய்வுகளில் 200 கிமு – கிபி 700 காலகட்டத்தில் அன்னாசி பயன்பாட்டில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. மாயன்களும் அஸ்டெக்குகளும் அன்னாசியை சாகுபடி செய்து அதன் மதுவை அருந்தியிருக்கின்றனர். பிரேசிலின் தென்பகுதியை சேர்ந்த அன்னாசி 15 ம் நூற்றாண்டில் மத்திய மற்றும் வடஅமெரிக்காவிலும் புழக்கத்திலிருந்து.
மைதா
கேடுவிளைவிக்கும் உணவுகள் என்று இணையத்தில் தேடினால் வரும் 10 உணவுகளில் பெரும்பாலும் முதலிரண்டு இடங்களில், மைதா, பரோட்டா இரண்டும் இருக்கும்
ஆனால் மைதா உடலுக்கு கேடுதருவது என்பதற்கு அடிப்படையாக எந்த அறிவியல் ஆதாரங்களும் காட்டப்பட்டதில்லை. இது குறித்த முறையான ஆய்வுகளும் செய்யப்பட்டதில்லை.
புல்லரிசிப் பூஞ்சை
1692ன் ஒரு துரதிர்ஷ்டவசமான நாளில் இளம் சிறுமிகளான பெட்டியும் அபிகெய்லும் வலிப்பு, உடல் நடுக்கம், தனக்குத்தானே பேசிக்கொள்வது, திடீரென உச்ச ஸ்தாயியில் அலறுவது என பல அசாதாரணமான இயல்புகளுடன் பித்துப் பிடித்தவர்களைப்போல் நடந்துகொண்ட போது ஊர்மக்கள் அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்து விட்டதாக நம்பினர். கிராமத்து மருத்துவர் வில்லியமும் அதையே உறுதி செய்தார்
பிராணஜீவிதம்
நாம் எப்படி மனம் போன போக்கில் இருக்கிறோமோ, அப்படியே இயற்கையும் நடக்க ஆரம்பித்துவிட்டது. பருவநிலை மாற்றங்களை எல்லா நாட்டினரும் அனுபவிக்கின்றனர். மழை மாதங்களில் மழை பெய்வதில்லை, பெய்தாலும் பெருவெள்ளமாக மாறி கடலில் சென்று சேர்கிறது.ஆல், அரசு, பனை, புன்னை போன்ற மரங்கள் நெடுங்காலம் வாழக்கூடியவை.மண் அறிப்பைத்தடுப்பவை. காற்றின் மாசைக்கட்டுக்குள் வைப்பவை. பருவ நிலை மாற்றத்தைக்கட்டுக்குள் வைக்க உதவுபவை
ஸாகே!
ஜப்பானிய தொன்மங்களிலும் ஸாகே இடம்பெற்றிருக்கிறது. ஒரு கிராமத்தில் யமட்டா நோ ஒரோச்சி (Yamata-no-Orochi) என்னும் எட்டுத்தலைகள் கொண்ட நாகமொன்று ஒவ்வொரு வருடமும் ஒரு இளம்பெண்ணை விழுங்க வரும், எட்டாவது வருடம் அப்படி விழுங்க வருகையில் கிராமத்தினரின் அழுகையை அந்த வழியே வரும் கடலின் கடவுளான சுசானோ கேட்கிறார். அவர்களுக்கு உதவ முன்வரும் அவர் அந்த மாநாகத்துக்கு எட்டு மாபெரும் பீப்பாய்களில் கடும் ஸாகே மதுவை நிரப்பி வைக்கிறார். ஸாகே மீது விருப்பம் கொண்டிருந்த மாநாகம் எட்டுத்தலைகளையும் பீப்பாய்களுக்குள் நுழைத்து ஸாகேவை அருந்தி மயங்குகையில் கடவுள் அதன் தலைகளை வெட்டிக்கொல்கிறார் ஜப்பானிய குழந்தைகள் மிக இளமையிலேயே கேட்டு மகிழும் கதைகளில் இதுவும் ஒன்று
காய்ச்சல் மரம் (சிங்கோனா)
ஒவ்வொரு கோடையிலும் மினுங்கும் பச்சை இலைக்குவையுடன் தெரியும் ஒவ்வொரு மரத்தையும் தேடித்தேடி பார்ப்பான். மாமனி ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் பனி மூடிய மலை முகடுகளில் ஏறி அழகிய இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த மலர் கொத்துக்கள் தெரிகிறதா என்று தேடுவான். 28 மரவகைகள் கண்டறிந்தும் அவன் தேடிய ஒன்று கிடைக்கவில்லை இன்னும்.மமானிக்கு அந்த வருடத்தின் வசந்தம் அதிர்ஷ்டத்தை கொண்டு வருமென்று நம்பிக்கை இருந்தது. தேடியதை கொடுத்தால் இன்னும் சில அல்பகாக்களை எஜமான் அவனுக்கு கொடுப்பாரென்பதால் மட்டும் அல்ல, அந்த மரத்தை காண்கையில் அவருக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்காகத்தான் அதைத் தேடுகிறான்.
யூகலிப்டஸ்
இந்த நவீன தேவதைக் கதையின் பெயர் ’’யூகலிப்டஸ்’’. 1 ஏராளமான உயரிய இலக்கிய விருதுகளை பெற்ற இந்த நாவலை ஆஸ்திரேலியரான முர்ரே பெயில் (Murray Bail) எழுதினார்.ஆஸ்திரேலிய நிலப்பரப்பின் செழுமையான விவரிப்பு, பெண்மையின் அழகு, ஆஸ்திரேலியாவின் அடையாளங்களில் ஒன்றான யூகலிப்டஸின் சிற்றினப் பெயர்களில் அமைந்திருக்கும் அத்தியாயங்கள், அபாரமான மொழிவளம் ஆகியவை கொண்ட ’யூகலிப்டஸ்’ மிக அழகிய காதல் கதை; இளமைப்பெருக்கில் இரு ஆணும் பெண்ணும் கொள்ளும் காதலும், ஆஸ்திரேலியர்களுக்கு இயற்கையாகவே இருக்கும் யூகலிப்டஸ் மீதான காதலும் இணைந்த வசீகரமான கதைக்கரு கொண்டது யூகலிப்டஸ்.
இகபானா மலர்களின் வழி
உலகெங்கிலும் இன்று மத எல்லைகளை கடந்த மலர்களின் பயன்பாடு இருக்கிறது. தெய்வங்களின் மலர் இருக்கைகள், கோவில்களின் கல்தூண்களின் மலர்ச்செதுக்குகள், தென்னிந்திய கோலங்களின் மலர் வடிவங்கள், மலர்க்களங்கள், குகை ஓவியங்களின் மலர் வடிவங்கள் என பண்டைய நாகரிகங்களின் மலர்களின் பயன்பாட்டினை குறித்த பற்பல சான்றுகள் உள்ளன. எகிப்திய கல்லறைகளில் பெரும்பாலானவற்றில் மலர்களின் வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும். கி.மு.2 முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக உருவாக்கப்பட்ட பிரபல அஜந்தா குகை ஓவியங்களில் கைகளில் ஒற்றை மலரொன்றை ஏந்தியிருக்கும் இடை ஒசிந்த ஓவியம் உலக பிரசித்தி பெற்றது.
காஃபி
அந்த காஃபி பயிர்களே இந்தியாவில் முதல் முதலாக பயிரிடப்பட்டவை. பாபா புதான் கொண்டு வந்தது காஃபியின் இரு முக்கியமான சிற்றினங்களில் ஒன்றான அரேபிகா வகை. அவற்றிலிருந்து கிடைத்த பழங்களின் கொட்டைகளை பாபா மெக்காவில் தான் கேட்டறிந்த முறைப்படி பக்குவப்படுத்தி வறுத்து அரைத்து பானமாக்கி உள்ளூர் மக்களுக்கு கொடுத்தார். காஃபி பானமும், பயிரும் அதன்பிறகு கர்நாடகாவில் பிரசித்தி பெற்றது
ஆரோக்கிய பச்சை
கூம்பு வடிவத்தை கொண்டிருக்கும் இம்மலையின் பாறைகளில் தொற்றி ஏற வேண்டி இருந்ததால் புஷ்பாங்கதனும் பிறரும் மலையேற்றத்தின் நடுவில் களைப்பும் சோர்வுமடைந்தனர். மர நிழல்களிலும் பாறை மறைவுகளிலும் பலமுறை அமர்ந்து நீரருந்தி ஒய்வெடுத்துக் கொண்டனர். ஆனால் உடன் வந்த காணிகள் ஒருமுறைகூட சோர்வடையாதது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது .பழங்குடியினர் அவ்வப்போது மடியில் கட்டிக்கொண்டிருந்த கருமையான சிறிய பழங்களை எடுத்து உண்பதை அவர்கள் கண்டார்கள்
ஃபெனி – முந்திரிக்கனிச்சாறு
போர்த்துகீசியர்களால் 16 ம் நூற்றண்டில் முந்திரி இந்தியாவிற்கு அறிமுகமானதாகப் பொதுவாக சொல்லப்பட்டாலும் அதற்கு ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் குறிப்பாக தமிழக்தில் முந்திரி இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன.மேலும் திருச்சிராப்பள்ளியின் 2500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலின் கல் தூண்களில் முந்திரிபழங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.
வெட்டிவேர்
வெட்டிவேர் ஆசியாவை தாயகமாக கொண்டது. வெட்டிவேரின் வட இந்திய, தென்னிந்திய என்னும் இரு வகைகளில் வட இந்திய வகைகள் வழக்கம் போல் மலர்ந்து கொண்டிருக்கின்றன.
கோடைகாலத்தில் தென்னிந்தியாவெங்கும் உலை போல் கொதிக்கும் காலநிலையில் இருந்து மக்களை காப்பாற்றி குளிர்விக்க வெட்டிவேர் மற்றும் நனனாரி சர்பத்துகளும், தர்பூசணியும், இளநீரும் எப்போதும் கிடைக்கும். வீடுகளில் பானை தண்ணீரில் நன்னாரி அல்லது வெட்டிவேர் போட்டு வைத்து நல்ல வாசனையும் குளிர்ச்சியுமாக நஅருந்தப்படும்.. வெட்டிவேர் தட்டிகளில் நீர் தெளித்த இயற்கை குளிரூட்டிகளும் பரவலாக புழக்கத்தில் இருக்கின்றன.
கடலைப் பயிரும் கார்வரும்
கார்வர் முதன்முறையாக அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களில் பயிர் சுழற்சி முறையை அறிமுகப்படுத்தி பருத்திக்கு மாற்றாக நிலக்கடலை பயிரிட கற்றுக்கொடுத்தார் பயிற்சுழற்சி முறையில் அடுத்தடுத்து மாற்றுப் பயிர்கள் குறிப்பாக பயறு வகைகளை பயிரிடுகையில் அவற்றின் வேர் முடிச்சுகளில் இருக்கும் நுண்ணுயிரிகள் நிலத்தின் நைட்ரஜன் சத்துக்களை மேம்படுத்துவதால் நிலவளம் குறையாமலிருக்கும்.
கார்வர் பருத்திக்கு மாற்றாக நிலக்கடலையுடன் சோயாபீன்ஸ், தட்டைப்பயறு சர்க்கரை வள்ளிக்கிழங்குகள் ஆகியவற்றையும் பயிரிடும் முறையை அறிமுகம் செய்தார்.
பெருங்காயம்
சைவம் அசைவம் என்னும் பாகுபாடில்லாது அனைத்துவித உணவுகளிலும் இந்தியாவில் சேர்க்கப்படும், உணவுக்கு வெங்காயம் மற்றும் பூண்டின் எரிமணத்தை அளிக்கும் இந்த பெருங்காயம் இந்தியாவில் விளைவதில்லை என்பது பலருக்கு வியப்பளிக்கும் செய்தியாக இருக்கும். உலகப் பெருங்காய உற்பத்தியில் 40 சதவீதம் இந்தியாவில் மட்டும் உபயோகிக்கப்பட்டாலும் இந்தியா அஃப்கானிஸ்தான் மற்றும் இரானிலிருந்தே இத்தனை வருடங்களாக பெருங்காயத்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது.
மலர்ப் பித்து
வருடாவருடம் ட்யூலிப் மலர்க்கண்காட்சிகளும் தொடர்ந்து நடந்தன. கண்காட்சிகளின்போது மிக அழகிய ட்யூலிப் வகைகளுக்கு பரிசுகளும் அளிக்கப்பட்டன. 1849ல் யார்க்கில் (York) நடந்த ஒரு மலர்க்கண்காட்சியில் போட்டியில் 2000 வகை ட்யூலிப்கள் இருந்ததால் நடுவர்கள் சுமார் 6 மணி நேரம் செலவழித்து பரிசுக்குரிவற்றை தேர்ந்தெடுக்க வேண்டி வந்தது.
சிக்கரி
காபி அருந்துதல் செல்வாக்கின் அடையாளமாகவும் ஆனது. காஃபியின் மீதான விருப்பம் கூடி காஃபி பயன்பாடு மேலும் மேலும் அதிகரித்தபோது, காஃபி சாகுபடி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பல நாடுகளின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த துவங்கியது. பொருளாதார ஸ்திரத்தன்மையின் பொருட்டு காஃபியின் பயன்பாட்டை கட்டுக்குள் வைப்பதற்காக, காஃபி இறக்குமதிக்கு இடைக்காலத் தடைகளும் புதிய வரிகளும் பல நாடுகளில் விதிக்கப்பட்டன. இதில் கீழ்தட்டு மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
சோயாவும் டோஃபுவும்!
சோயா பால், சுத்தமாக்கப்பட்டு ஊறவைத்த சோயா விதைகளை அரைத்த விழுதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. விழுது சூடாக்கப்பட்டு சோயாவின் கடும் நெடிக்கு காரணமான lipoxidase என்ஸைம்கள் நீக்கப்படும். பின்னர் வடிகட்டுதல் மூலம் கசடுகள் நீக்கப்பட்ட சோயா விழுதில் சர்க்கரை மற்றும் நீர் கலக்கப்பட்டு, அதன் நறுமணமும் நுண் சத்துக்களின் அளவும் மேம்படுத்தப்படும். பின்னர் இவை கிருமி நீக்கம் செய்யப்பட்டு, கொழுப்புக் கட்டிகளை அரைத்து, கலக்கி, மிருதுவாக்கப்பட்ட பால் சந்தை படுத்தப்படுகின்றது…. விலங்குப்பாலுடன் ஒப்பிடுகையில் சோயாபாலில் புரதம் கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் அதே அளவில் இருந்தாலும் பிற முக்கியமான நுண் சத்துக்கள் மிக குறைவாக இருப்பதால் அவை தயாரிப்பின் போது சேர்க்கப்படுகின்றன.
சீமைக்கருவேலம் – நன்றும் தீதும்
ரோமானிய தொன்மத்தில் வளமை மற்றும் விடுதலையின் கடவுளான சனியின் (Saturn) மனைவி ஓபிஸ் (Opis) நிலம்,மிகுதியான வளம் மற்றும் அறுவடையின் கடவுளாக கருதப்படுகிறார். ஓபிஸின் கைகளில் செங்கோலும், சோளக்கதிர்களும், தானியங்கள் நிரம்பி வழியும் கொம்புக்கொள்கலனும் இருக்கும். 1877ல் ஜமைக்கா’விலிருந்து இந்தியாவுக்கு தருவிக்கப்பட்டதால் ’’சீமைக்கருவேலம்’’ (foreign acacia) என்றழைக்கப்படும், தென் “சீமைக்கருவேலம் – நன்றும் தீதும்”
கிண்ணத்தை ஏந்துதல்
பல வடிவங்களில் இருக்கும் வைன் கோப்பைகளின் வசீகர வடிவம் அந்த பானத்தை ரசித்து ருசிப்பதற்கான் காரணங்களில் முக்கியமானதாகி விட்டிருக்கிறது…கோப்பைகளின் விளிம்பு எத்தனை மெல்லியதாக உள்ளதோ அத்தனைக்கு வைனை ஆழ்ந்து ருசித்து அருந்தலாம்., விளிம்புகள் கூர்மையாக இல்லாமல் மென்மையாக்க பட்டிருப்பது வைனை நாவில் எந்த இடையூறுமின்றி சுவைக்க உதவுகின்றது. கிண்ணப்பகுதியை கைகளால் பற்றிக்கொள்கையில் உடலின் வெப்பத்தில் வைனின் சுவை மாறுபடலாம் என்பதால் கோப்பைகளை எப்போதும் தண்டுப்பகுதியை பிடித்தே கையாள வேண்டும்.
கன்னிக்கருவறை: பார்த்தீனியம்
ஆக்கிரமிப்பு தாவர இனங்கள் குறுகிய வாழ்க்கைச் சுழற்சிகளைக் கொண்டுள்ளன, இனப்பெருக்கத்தில் அதிக கவனம் கொண்டு,மிக அதிக அளவில் விதைகளை உற்பத்தி செய்து, வேகமாக முளைத்து,அதிகமாக பரவுகின்றன..மேலும் பல ஆக்கிரமிப்பு தாவரங்கள் ‘பினோடிபிக் பிளாஸ்டிசிட்டி’ Phenotypic plasticity எனப்படும் ஆக்கிரமித்திருக்கும் புதிய வாழ்விடங்களுக்கேற்ப மாறும் திறனையும் கொண்டிருக்கின்றன.
காகித மலர் – ழ்ஜான் பாரெ
உறுதியான கொடியையும் அதன் பிரகாசமான காகிதங்களைப் போல இருந்த இளஞ்சிவப்பு மலர்களையும் சோதித்த கம்மர்சன் அசந்துபோனார்.
’’பாரெ, இம்மலர்கள் மிக அழகியவை’’என்ற கம்மர்சனிடம் ’’ இவை மலர்கள் அல்ல, பிரேக்ட் (Bract) எனப்படும் மலரடிச் செதில்கள் , உள்ளே சிறிய குச்சிகளை போல வெண்ணிறத்தில் இவற்றினால் மறைக்கப்பட்டுள்ளவைதான் உண்மையில் மலர்கள் ‘’ என்றார் பாரெ.