பைசாசத் திருமணமும் ராக்ஷசத் திருமணமும்: கொடியது எது? – ஒரு சிந்தனை

சமீப காலமாக, இந்து காரணங்களுக்காக உழைப்பதாக உண்மையாகவே நினைப்பவர்கள்-இந்து வெறியாளர்கள் என மதச்சார்பற்ற சக ஊழியர்களால் சீட்டு ஒட்டப்பட்டவர்கள்-கூட இக்கருத்தை உபயோகிப்பதை  பார்க்கிறேன். சென்ற வார ஸ்வராஜ்யா இதழில், முஸ்லீம் மக்கள் தொகை அதி வேகப் பாய்ச்சலில் முன்னேறுவதிற்கு ( 26 விழுக்காடுள்ள முஸ்லீம் சமூகம் 42 விழுக்காடு புதிய பிறப்புகளை அடைந்துள்ளது) பதிலடியாக இந்துக்கள் தங்கள் மனைவியை அதிகக் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கட்டாயப் படுத்துவது தந்தையாட்சி முறையாகும் என்கிறது.

நோக்கு அரிய நோக்கே, நுணுக்கு அரிய நுண்ணுர்வே

இந்திய வேதாங்களின்படி, நம்மைச் சுற்றி நாம் காணும் அனைத்தும் சக்தியின் மாறுபட்ட வடிவங்களே. பார்ப்பவர், பார்க்கும் பொருளை, அதன் உண்மை வடிவத்தில் பார்ப்பதாக நினைத்துக் கொள்கிறார், அவ்வளவே!ஹைஸென்பர்க் தன் ‘அன்செர்னிடியில்’, ஒன்றை நிறுவுகிறார். துகள் மின்னணுக்களை நீங்கள் ஆராய்கையில், ஒன்று அதன் நிலையைப் பார்ப்பீர்கள் அல்லது அதன் வேகத்தை. அவரது இந்த ஆய்வுதான் குவாண்டக் கணினி, குறியாக்கம் போன்றவற்றில் பயன்படுத்தப் படுகிறது

ஒரே ஒரு முத்தம்

உங்கள் அப்பாவை நீங்கள் முத்தமிட்டது உண்டா? இதென்ன அசட்டுத்தனமான ஒரு கேள்வி என்று தோன்றலாம். குழந்தைப் பிராயத்தில் உண்டு என்பது நாம் தரக்கூடிய சிறுபிள்ளைத்தனமான பதிலாக இருக்கலாம். எனவே கேள்வியை இன்னும் சற்று தெளிவாக்கலாம்…உங்கள் பால்யத்திற்குப் பின் எப்போதேனும் அப்பாவை முத்தமிட்டுருக்கிறீர்களா? நான் ஏன் இக்கேள்வியை கேட்கிறேன் என்பதை விளக்குவதற்கு முன், உங்கள் தந்தை இப்போது உங்களுடன் இருந்தால் உடனே சென்று முத்தமிட்டு வாருங்கள்.

சகோதரி  நிவேதிதையின் பார்வையில் இந்தியா                

தொடக்க கால வைணவத்தில் இலக்குமி என்னும் கடவுள் ஏது? வரலாறு கொண்டு சேர்த்ததே அப்பெண்கடவுள். வாசகச் சிந்தனையைக் கிளறிவிடுகிறார் நிவேதிதா. ராஜபுதனத்தப்பெண்  கிருஷ்ணப்ரேமி  மீராபாய்க்கும் வங்காளத்திற்கும் ஒரு தொடர்பு இருந்திருக்கிறது. இஸ்லாமியர்களின்  வசமிருந்த கயாவை மீட்க ராஜபுதனத்து இளவரசர்கள் விரும்பினார்கள்.சைதன்யரைப்போல் கிருஷ்ணனை பிரேமித்த மீரா வங்களாத்து கிருஷ்ண வழிபாட்டை கையிலெடுத்தார்.வைணவ வரலாறு  வங்கத்து மகான் சைதன்யரோடு பிணைந்ததே. சுடலைக்கு உறவான  சிவபெருமான் அர்த்தநாரி ஆனார். சிவனே மஹாதேவர் ஆனார்.ஆதிசங்கரருக்கு இதனில் பங்கில்லாமல் இல்லை.

காற்றில் கலக்கும் பேரோசை

கிரெடிட் சூயிஸ் மற்றும் யூ பி எஸ் யின் சங்கமம் சிறிய அளவில், அதுவும் சில அன்னிய வர்த்தகங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனச் செய்திகள் வந்தாலும், இந்தியாவின் பொருளாதார நிலை மோசமாக இல்லை. மார்ச் 2021ல் ரூ 9.6 ட்ரிலியனாக இருந்த வங்கிகளின் வைப்புத் தொகை ரூ.175.4 ட்ரில்லியனாக வளர்ந்துள்ளது- அதாவது, ஜி டி பியில் (GDP- Gross Domestic Product) 45% ஆக இருந்தது 67.6% ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்தியா பொறுப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். வர்த்தகங்கள் குறையும், வாடிக்கையாளர் அல்லது நுகர்வோரின் நம்பிக்கைகள் குறையும்

அன்று செயலழிந்தல மருபொழுது

இன்று இந்தியாவில் தான் உலக அளவில் இளைஞர்கள் அதிகம். மூன்றில் ஒருவர் இளைஞர் என்கிறார்கள்.  ஜப்பான் போன்ற நாடுகளில் குழந்தைப்பிறப்பு விகிதம் பல ஆண்டுகளாக குறைவாக இருந்துவருகிறது. வளரும் அறிவியல் சூழலில், சராசரி வயது உலகெங்கும் ஏறிக்கொண்டே வருகிறது. நான் வாழும் சிங்கப்பூரில், சராசரியாக முதியவர்கள் தொண்ணூறு வயது “அன்று செயலழிந்தல மருபொழுது”

காடுகள் மலைகள் தேவன் கலைகள்

 காதல் காட்சிகளில் கூட ’’அடடே இந்த  மால்வாவிஸ்கஸ் மலர்ச்செடிகள் பின்னால் இன்னும் கொஞ்ச நேரம் அவர்கள் காதல் மொழி பேசிக்கொண்டிருந்திருக்கலாம், செடியை பார்த்தே ரொம்ப நாளாச்சு ’’என்று அங்கலாய்ப்பது,  காதலர்கள் பெயர் பொறித்திருக்கும்  மரப்பட்டைகளை கண்டவுடன் ’’இது முதலை மரப்பட்டை அப்படின்னா இது மருத மரம்தான்’’ என்று கூவுவது, ’’என்னதிது  பாட்டில் தாமரைன்னு வருது,  இவங்க என்னமோ அல்லிக்குளத்தில் நீந்தறாங்களே’’ என்று கொதிப்பது,

அதிட்டம்

அதிர்ஷ்டம் எனும் சொல்லுக்கு அகராதிகள் தரும் பொருள்கள் 1. காண இயலாதது 2. நல் வாய்ப்பு 3. நல்லூழ் 4 ஆகூழ் என்பன. அதிருஷ்ட போக்கியம் என்றால் மறுமை, வினை, துய்த்தல் என்பன பொருளாம். அதிருஷ்ட யத்தினம் என்றால் பயன் – முயற்சி, பயன் தரு முயற்சி. யத்தினம் எனும் சொல்லையே நாமின்று யத்தனம் என்கிறோம். பிரயத்தனம் எனும் சொல்லும் அறிவோம். அதிருஷ்டானுகூலம் என்றால் ஆகூழ், நற்காலப் பயன், அதிருஷ்டத்தால் கிடைக்கும் அனுகூலம் என்பன பொருள்.

ஜோ ரோகன் – புதுயுகத்தின் கலாச்சார நிகழ்வு

முன் தயாரித்த கேள்விகள் இல்லாமல், பேட்டி கொடுப்பவரின் பதில்களில் இருந்து அடுத்த கேள்விகள் என மூன்று மணிநேரத்தில் இருந்து அதிகமாக நான்கைந்து மணி நேரம் வரைகூட நீளும் பேட்டிகள் தான் “ஜோ ரோகன் அனுபவம்”. முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கு இல்லாததனால் இப்பேட்டிகள் வானத்தின் கீழ் பூமிக்கு மேலே உள்ள அனைத்து விஷயங்களையும் ரோகனும், பேட்டி கொடுப்பவரும் பேசிக்கொள்ளும் இயல்பான உரையாடலாக அமைகிறது. கச்சிதம் என்பதோ, துறைசார் முழுமை என்பதோ இதன் இலக்கு அல்ல என்பதால் மட்டுறுத்தலோ, தவிர்க்கப்பட வேண்டிய தலைப்புகளோ பெரும்பாலும் இல்லை எனலாம்

மௌனமாய் இருந்து உன்னை நீ அறிந்து கொள்

சில ஆண்டுகளுக்கு முன் இதைப் படித்த போது நான் ஒன்றைப் புரிந்து கொண்டேன்- என் மனம்/சிந்தனை காலியாக இல்லை; அதற்குக் குறியீடுகள் இல்லை. ஆயினும், ஹெர்ல்பெர்ட் சொல்கிறார், தான் இந்த வகைதான் என்று அறுதிப்படுத்துதல் அவ்வளவாகச் சரியான ஒன்றல்ல. நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பது நமக்குத் தெரிவதில்லை, அந்தச் சோதனை ஒலிக்கு முன்னரும், பின்னருமான பதிவுகள் இதைக் காட்டித் தருகின்றன. நாம் சிந்திப்பதைப் பற்றி, சிலர் கேள்வி கேட்கையில் பொத்தாம்பொதுவாக நாம் பதில் சொல்கிறோம் அல்லவா? நம் எண்ண ஓட்டங்கள் மறைந்துள்ளதாக, மாறுபடுவதாக இருப்பதை ஓரளவிற்கேனும் நாமும் உணர்கிறோம். ஒரு மூளையில் சிந்தையின் பல வடிவங்கள் இருக்கின்றன.

அமெரிக்கக் கால்பந்து: கலாச்சார தனித்துவம்

என்.எப்.எல் அணிகளுக்கிடையே சமநிலையை தொடர்ந்து தக்கவைக்க சம்பள வரம்பு பின்பற்றுகிறது. அதாவது எல்லா அணிகளும் தங்கள் 53 வீரர்களையும் அவ்வருடத்திய அதிகபட்ச சம்பள வரம்பிற்குள் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இதனால் ஒவ்வொரு அணியும் தங்கள் தேவைகள் கருதி பணத்தை அள்ளி எறியமுடியாது. உடனடி தேவைகளும், முக்கிய வீரர்களின் சம்பளமும் வரம்பிற்குள் அமைய ஐவீ பல்கலைக் கழகங்களில் பயின்ற வணிக நிர்வாகப் பட்டதாரிகளையும், சட்ட வல்லுநர்களையும் அணிகள் ஆலோசனையாளர்களாவோ, பணியாளர்களாகவோ வைத்திருக்கின்றன.

சொல்லா, காட்சியா, எண்ணங்கள்?

உள் உரையாடல் கொண்டவர்கள், தன்னைப் பற்றி, தன் உணர்வுகளைப் பற்றி, ஆசைகள், ஆவல்கள் பற்றி சிந்தித்த வண்ணமிருப்பார்கள். இந்தத் தன் மையமானது வெளியில் உரத்த குரலில் ஒலிக்கும். 1980ல் மனோதத்துவவாதியான பெர்னார்ட் ரைம், (Bernard Rime) நாம் ஏன் நம் எதிர்மறை எண்ணங்களை பிறரிடம் சொல்கிறோம் என ஆராய்ந்தார். கெட்ட அனுபவங்கள், அசை போடுவதோடு நிற்பதில்லை, அதை வெளிப்படுத்தும் இச்சையையும் கொண்டவை. நாம் மகிழ்ச்சியாக இல்லை என்பதை மற்றவரிடம் சொல்கையில், அவர் நம்மை விட்டு விலகிச் செல்கிறார்.

சொல்லென்றும், மொழியென்றும்…

ஒற்றை மொழி பேசுபவர் இந்த முனையில் இருக்கிறார் என எடுத்துக் கொள்வோம். ஒப்புமை கொண்ட பேச்சொலிகள் இரண்டு மொழிகளிலும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. முதல் ஒரு முனை பேச்சின் (மொழியின்) ‘ஆடியோ கோடெக்’ மாதிரியிலிருந்து, ஒலிக்குறி தூண்டுதல்களைப் பெற்று, மறுமுனையில், அந்த மொழியின் ஒலிக்குறிப்பை வால் ஈஎக்ஸ் தந்துவிடுகிறது. (Coding) அந்த இடத்திலே குறி விலக்கி, செயல்படும்; மறுமுனையில் உள்ள மொழியில் இந்தப் பேச்சு பெறப்படும்.(Decoding) ஒரே பேச்சாளர்களின் மாற்று மொழித் தகவல் தரவுகள் இதற்குத் தேவையில்லை. சொல்லும் சூழலைப் பொறுத்து, அதன் தொனியை இது புரிந்து கொண்டு விடுகிறது

நேரம் எனும் கள்வன்

நம் வீட்டுக் குழாயில் நாம் பெறும் தண்ணீர் இவைகளில் ஒன்று. இன்று நாம் குழாயைத் திறந்து பயன்படுத்தும் நீரை, 19ம் நூற்றாண்டில், 20ம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் அவ்வளவு எளிதாகப் பெற முடியவில்லை. உலகின் செழிப்பான நாடுகளிலும் அப்போது இதுதான் நிலை. அந்தக் காலத்தில், வீட்டிற்குத் தேவையான நீரைக் கொணர்வதும், சேமிப்பதும், மீண்டும் நிரப்புவதுமே ஒரு தனித்த வேலையாகிப் போனது. இந்தக் கருத்தை, ‘அமெரிக்க வளர்ச்சியின் ஏற்றமும், இறக்கமும்’ (The rise and fall of American Growth) என்ற நூலில் பொருளியலாளர் ராபர்ட் ஜெ கோர்டன் (Robert J Gordon) சொல்லியிருக்கிறார்.

தமிழகம்-தமிழ்நாடு சர்ச்சை பற்றி

உணர்வு என்பதே ஒரு அற்புதமான சொல். நேர்மறையான, உன்னதமான, நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் அகத்தை ஊடுருவும் பொழுது ஏற்படுவதே உணர்வு. தொன்மையில் இருந்தது போலன்றி தற்காலத்தில் சொற்கள் அவரவர் விருப்பதிற்கேற்றவாறு பயன்படுத்தப்பட்டு பொருளின் அடர்த்தி நீர்த்துப் போய்விட்டது. பள்ளி செல்லும் வயதில், 80களின் முற்பகுதியில், மதுரை மேம்பாலங்கள் அனைத்திலும் “இன உணர்வு கொள்” என்று கரியினால் எழுதப்பட்ட வாசகத்தை பார்த்தபடி கடந்ததுண்டு.

அஷ்டத்யாயீ

பாணினி ( Pānini ) கி மு 350ல் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் வசித்தவர் எனக் கூறப்படுகிறது. இந்திய மொழியியலின் தந்தை என்று மதிக்கப்படுபவர். அவர் எழுதியது, (சிற்சில முன் தொகுப்புக்களின் உதவி கொண்டும், தானே பெரும்பாலும் வடிவமைத்தும்) அஷ்டத்யாயீ என்னும் வடமொழி இலக்கண புத்தகம். எட்டு அத்தியாயங்கள் கொண்டுள்ள நூல். இங்கே அத்தியாயங்கள் என்று குறிப்படுவது புத்தகங்களை. ஒவ்வொரு புத்தகத்திலும் நான்கு பாடாந்தரங்கள். வடமொழி இலக்கணத்திற்கான 4000 நெறிமுறைகள் கொண்டுள்ளது. இதன் சிறப்பே இது வெறும் இலக்கண நூல் மட்டுமில்லை; படிப்படியான வழிமுறைகளின் படி, இதைக் கொண்டு இலக்கண சுத்தமான வார்த்தைகளையும், வாக்கியங்களையும் அமைக்க முடியும் என்பதால் இது முழு அளவிலான ஒரு மொழி இயந்திரம்.

சோசியலிசம்: நிறுவனங்களை பலவீனப்படுத்துவதா?

அவர் நாடும் சோசியலிசம் நிறுவனங்களை பலவீனப்படுத்துவது அல்லது அதற்கு மேலும் சென்று அவற்றை அழிப்பது ஆகிய வழிமுறைகளைக் கையாளுவதில்லை. அல்லது அதில் அடிப்படையாகவே புதிய ஆளுகைக் கருவிகள் கொண்டுவரப்படும் என்ற கற்பனைகளும் இல்லை. நடப்பில் உள்ள இயங்கமைவுகள் (mechanisms) மற்றும் குறியீடுகள் (indices) -வரிவிதிப்பு, மக்களுக்காக செலவிடுதல், பெருநிறுவனத்தின் நிர்வாகக் குழு, பொருளாதாரப் புள்ளி விவரங்கள், உயர் கல்வி, யூரோப் ஒன்றியம்,மத்திய ரிசர்வு அமைப்பு – ஆகியவற்றை மாற்றியமைத்து புதிய சமத்துவ நியாயத்தைப் (Egalitarian Logic ) பின்பற்றச் செய்வதே அவர் நோக்கம்.

கு. அழகிரிசாமி நூற்றாண்டு (23/9/1923 – 5/7/1970) – ஓர் எளிய மலர்ச்செண்டு

நாம் எப்போதும் இலக்குடனும், பெருமளவு இலக்கின்றியும் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டும், பதிந்து கொண்டும் இருக்கிறோம். அதில் கு. அழகிரிசாமி போன்ற தேர்ந்த எழுத்தாளர் அதன் எல்லா அம்சங்களையும் கூர்ந்து நோக்குகிறார். வாசகரோடு பகிர்கிறார். இதயத்தை நொறுங்க வைக்கும் தாங்கொணாத் துயரையும், நிராசையையும், சாமான்ய மனிதர்களுக்கு நிகழும் சாமான்ய சம்பவங்கள் மூலம் வாழ்வின் சாரத்தையும், அர்த்தத்தையும், அனர்த்தத்தையும், தினசரி வாழ்வில் தானாய் நிகழும் நகைச்சுவையையும் இவரது கதைகளில் நாம் காண்கிறோம்.

சமூக ஒழுங்குகளும் அரசியல் நிறுவனங்களுமே ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணம்?

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இதற்கெல்லாம் பல்துறை இணைவுப் (interdisciplinary) படைப்பால் மட்டுமே விளக்கம் தர முடியும் . அதையேதான் (அவர் எழுதிய) காபிடல் அண்ட் ஐடியாலஜி (போதுமான அளவு பாராட்டுப் பெறாத நூல்) என்னும் பகுப்பாய்வு மற்றும் முறையியல்சார் (analytical and methodological) திருப்புமுனைப் படைப்பு வழங்கி இருக்கிறது “சமூக ஒழுங்குகளும் அரசியல் நிறுவனங்களுமே ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணம்?”

ஆலமர் அவை – அறிதலின் எல்லைகள்-  நிறைவுப் பகுதி

அறிவார்ந்த கட்டுமானம் ஒன்று, நம்மால் நினைக்க முடியாதது, ஆனால், பௌதிக உண்மைகளை அறிய உதவும் முக்கியமான ஒன்று- இதைத்தான் இந்தக் கட்டுரை வெளிப்படையாகச் சிந்திக்கிறது. நாம் அறியக்கூடிய சாத்தியங்கள் உள்ளன என்றாலும், நாம் அதைச் செய்ய முடியாமல் போவதற்கு, அத்தகு அறிவைப் பற்றிய சிந்தனையே நம்மிடம் இல்லை என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வாசகர் கடிதம்

கொழும்பு பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயிலப் புகுந்தபொழுது மெய்யியல் என்ற கலைச்சொல்லை அறிந்துகொண்டேன். அது philosophy க்கு நிகரான தமிழ்ச்சொல். தத்துவம் வடமொழி என்பது தெரிந்ததே. ஒரு மெய்யியல் மாணவனாகிய எனக்கு இவை மூன்றும் ஒன்றையே குறிப்பவை. 

எதிர்வளர்ச்சி

This entry is part 17 of 17 in the series 20xx கதைகள்

இயந்திரப் பொருளாதாரத்தினால் சில தலைமுறைகளாக நம் உடைமைகளின் எண்ணிக்கை அதி வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதற்கேற்ப நம் வருமானம் பணவீக்கத்தையும் தாண்டி அதிகரித்து இருக்கிறது. நமக்குப் புதுப்புது விருப்பங்கள். அவற்றில் பல அவசியங்களாக மாறிவிட்டன. அவற்றை நிறைவேற்ற புதுப்புது தொழில் நுட்பங்கள். நாளை இன்றைவிட சிறப்பாக இருக்கும் என்பது அரசியல் கோஷம் மட்டுமல்ல. அது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு, சமுதாயத்தின் முக்கிய அங்கம். புதிய தொழில் முயற்சிகளுக்கு அதுவே ஊக்கம். ஊர்திகள் வீடுகள் வாங்குவதற்குத் தேவையான கடன், ஓய்வுக்காலத்தில் உழைப்பில்லா வருமானம், உலகெங்கும் கூடிக்கொண்டே போகும் பங்குச் சந்தைகளின் மதிப்பு போன்ற பணத்தினால் அளக்கக்கூடிய எல்லா பரிமாற்றங்களுக்கும் அது தான் அஸ்திவாரம். அது இல்லை யென்றால் வர்த்தக மற்றும் அரசியல் நிறுவனங்களின் திட்டங்களும் இல்லை.

கான மயிலாட, மோனக் குயில் பாட

இந்தக் கணக்கீட்டின்படி, இந்த வெற்றிகரமான மீம்ஸ் போர்கள், சென்ற பத்தாண்டுகளாக அமெரிக்க அரசியலை வடிவமைத்து வந்திருக்கின்றன; ஆனால், அதில் நேரடியாக ஈடுபட்டவர்களின் வாழ்க்கையும் சிதைந்திருக்கிறது.  ஆக்ரோஷமான போராளிகள் குற்றச்சாட்டுக்களை, சிறை தண்டனையை, திவாலாகும் நிலையை, குடும்பத்தை, தங்கள் பெருமிதங்களை இழக்கும் அவலத்தை இப்போது சந்தித்து வருகிறார்கள். ஆனால், அவர்களின் கருத்து, மீம்ஸ் வடிவில் வெளிப்பட்ட கருத்து, நம் சமூகத்தின் குருதியில் புனலாகப் பாய்ந்து கொண்டுள்ளது. Learn to Code, It’s about Ethics in Journalism, Race is Real, It’s Ok to be white, Critical Race Theory, Let’s go Brandon, Blue Lives Matter, A Deep State Operates extra legally inside the US Govt. இவையெல்லாம் கவர்ச்சிகரமாக மக்களை ஈர்த்தன. பெரும்பாலானவை வெள்ளைத் தோலின் மேன்மையைப் பறை சாற்றும் வண்ணம் எழுதப்பட்டவை.

மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம் (இரண்டாம் பகுதி)

வெள்ளையரின் தலையில் இந்த வேலையை கட்டுவது ஒரு சுலபமான மாற்று வழி. அதிலும் நம்பிக்கையானவர்களாக இருந்தால் இன்னுமே வசதி. ஃப்ராலி புத்திசாலித்தனமாக தன்னை ஹிந்து என அறிவித்து கொள்வதோடு பண்டிட்.வாமதேவ சாஸ்திரி என்ற பெயரை வைத்துக் கொண்டுள்ளார்.வேதம், ஜோதிடம், ஆயுர்வேதம் ஆகியவற்றில் இவரது புலமையை கண்டு ஹிந்துக்கள் இவரை ஒரு பார்ப்பனராகவே  ஏற்றுக் கொண்டுள்ளனர். அவரது மனைவி இந்தியர்;ஒரு “யோகினி”யும் கூட. மாறாக, எல்ஸ்ட் தான் ஹிந்துவல்ல என்பதை வலியுறுத்துகிறார். ஏனென்றால், யாரையும்  ஹிந்து மதத்திற்கு “மாற்ற முடியாது” அது பிறப்புடன் இணைந்தது என்பதையும்,  ‘ஹிந்துயிசம் பூகோள அமைப்புடன் ஆழமாக இணைந்த ஒன்று’ என்பதையும் அறிந்தவர். 

சிலை கொய்தலும் சில சிந்தனைகளும்

சுக்ரீவன்- கும்பகர்ணப் போரில் முன்னவன், பின்னவனின் மூக்கையும், செவியையும் கடித்து பங்கம் செய்துவிடுகிறான். பின்னரும் நடக்கும் யுத்தத்தில் தன் உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டும் கவலையுறாத கும்பன், தோல்வி நிச்சயம் என்ற தருணத்தில் ‘என் உடல் பாகங்களற்றுப் போய்விட்டது; ஆனாலும், குறைபட்ட நாசியோடும், செவியோடும் பிறர் நகைக்கும் விதத்தில் என்னை யாரும் பார்க்க வேண்டாம்; என் கழுத்தை நீக்கி கடலுள் என் தலையைப் புதைத்துவிடு, இராமா என்று வேண்டுகிறான்.

பறக்கும்தட்டு – மீண்டும் ஒரு விவாதம்

கடந்த சில வருடங்களாக இந்தக் கருத்தோட்டத்தில் ஓர் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு வித்திட்டது 2017 ஆம் ஆண்டில் பிரபல நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை. ஹெலன் கூப்பர், ரால்ப் ப்ளூமெந்தால் மற்றும் லெஸ்லி கீன் எழுதிய இந்தக் கட்டுரை அந்த ஆண்டு உலகம் முழுவதும் பலரால் வாசிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. அதன் சாராம்சம் இது தான்.
கடந்த பல வருடங்களாக இந்த நிகழ்வுகளை கண்காணிக்க பென்டகனில் (அமெரிக்க ராணுவ தலைமையகம்) ஓர் அமைப்பு பல கோடி டாலர்கள் செலவில் பயனாற்றிக் கொண்டிருந்ததை இந்தக் கட்டுரை வெளிச்சம் போட்டுக் காண்பித்தது. மேலும் இந்த அமைப்பு சேகரித்து வைத்திருந்த பல காணொளிகளில் இரண்டை கட்டுரையாளர்கள் வெளியிட்டிருந்தனர். மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த இக் காணொளிகளில் அமெரிக்கப் போர் விமானங்கள் அடையாளம் தெரியாத விண்கலன்களை விமானியறையில் உள்ள அதி நவீன கதுவியிலும் (radar), அகச்சிவப்பு படமியிலும் (infra-red camera) பதிவு செய்யப்பட்ட காட்சிகள் உள்ளன.

செந்தணல்

சீனா, ஆப்ரிகாவின் கொம்பு (Horn of Africa) என அழைக்கப்படும் நாடுகளில் தன் வணிக ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது. ஆப்ரிகாவின் வடகிழக்கிலுள்ள தீபகர்ப்ப நாடுகள் இவை; செங்கடலின் தெற்கு எல்லையில் இவை அமைந்துள்ளன. எதியோப்பியா (Ethopia) சீனாவின் இராணுவ வன்பொருட்களுக்கான சந்தை. ஜெபோடியில் (Djibouti) தன் இராணுவத் தளத்தை அமைத்துள்ளது சீனா. எரித்ரியா, (Eritrea) எதியோப்பியா, சோமாலியா, (Somalia) ஜெபோடி ஆகிய நாடுகளில் கட்டுமானத்திற்கெனவும், பிற முதலீடுகளாகவும் $14 பில்லியன் கடன் வழங்கியுள்ளது சீனா. இந்த ஆப்பிரிக நாடுகளில், இரும்புத் தாது, தங்கம், விலையுயர்ந்த நவரத்தினங்கள், இயற்கை வாயு, அதிக அளவில் இருப்பதுதான் சீனாவின் இத்தகைய ஆர்வத்திற்கும், முன்னெடுப்பிற்கும் காரணம்.

கல்வித் துறைக் கொடுமையாளர்கள்

அந்த இடத்தை அடைவதற்கே, கருத்தியல் ரீதியான கட்டாயக் கோட்டில் கால் பிறழாமல் நடந்தவர். அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ இந்துக்களை தங்கள் தூண்டிலில் மாட்ட விழையும் நிறுவனம் எதிர்ப்பாளர்களை கல்வி உலகத்தில் நீண்ட நாள் காலூன்ற விடாது. எதிர்பார்த்தது போலவே, முந்தைய தலைமுறை கல்வியாளர்களின் நிலையையே இவரும் விரிவுபடுத்துகிறார். உதாரணம், அவுரங்கசீப்பிற்கு வெள்ளை பூச்சு.இது அவருக்கு கடினமான வேலையாக தெரியவில்லை. ஏனென்றால் அவர் தான் கூறுவதை உண்மையாகவே நம்புபவர் எனத் தோன்றுகிறது

பெண்களும் கற்புப் பூட்டும்

கற்புபெல்ட் என்பது உலோகத்தினால் ஆன உள்ளாடையாகும். பெண்களது பாலியல் உறுப்பான யோனியை மறைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதற்கு பூட்டும் சாவியும் உள்ளது. இது பல்வேறு வடிவங்களில் உள்ளது. அவற்றில் சில சிறுநீர், மலம் கழிப்பதற்கு ஏற்பவும் வடிவமைத்துள்ளது. இவை வரலாற்றின் இடைக்காலத்தில் பெண்களின் பாலியல் ஒழுக்கத்தை பாதுகாக்க பயன்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பெல்ட் அணிந்த பெண்கள் தங்கள் கணவரின் அனுமதியின்றி உடலுறவு கொள்ள முடியாது.

இந்திய மறுமலர்ச்சியைக் கொணரும் நவோதயா பள்ளிகள்

அரசுப் பள்ளிகளில் பயிலும் பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த கிராமப்புற மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் “மாதிரி பள்ளிகள்” எனப்படும் இணை கல்வி நிறுவனங்களை அமைக்க 1985ல் மத்திய அரசு தீர்மானித்தது. அன்றைய பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி, “ஜவஹர் நவோதயா வித்யாலயா(ஜேஎன்வி)” எனப்படும் பள்ளிகளை, இருபாலாருக்குமான ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான இலவச குடியிருப்புப் பள்ளிகள் திட்டமாக, 1986ல் தொடங்கி வைத்தார். கல்வி அமைச்சகத்தின் கீழ் “நவோதயா வித்யாலயா சமிதி” எனும் ஒரு தன்னாட்சி அமைப்பு இப்பள்ளிகளை நிர்வகிக்கிறது.

ஹஸ்ரத் மோஹானி

This entry is part 1 of 12 in the series கவிதை காண்பது

உருதுக் கவிதைகளை வாசிக்கையில் அங்கங்கே தென்படும் மதநல்லிணக்க வரிகளை எளிமையாகக் கடக்க இயலவில்லை. இன்னொரு மதத்தைப் பின்பற்றினாலும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக ஹஸ்ரத் மோஹானி, மகாகவி இக்பால், ஹாஃபீஸ் ஜலந்த்ரி, ஃபிராக் கரக்பூரி எனப் பல கவிஞர்கள் தங்களுடைய கவிதை வரிகளில் இராமனையும், கிருஷ்ணனையும் வடித்துள்ளனர்.

உள்வெளி

தர்க்க நியாயத்தில், விவாதங்களில் அல்லது எண்ணப் போக்கில் ஏற்படச் சாத்தியங்களுள்ள தவறுகளையும் பற்றி இந்திய தர்க்கம் சிந்தித்திருக்கிறது. அந்தத் ‘தவறை’ ‘ஹேத்வபாஷா’ என்று அழைத்தார்கள். உண்மையான காரணமாகத் தோன்றும் ஒன்று அப்படியில்லை என்று சொல்வதில் அவர்களின் மூளைத்திறம் வெளிப்படுகிறது. அதிலும் ஐந்து விதங்கள்- சவ்யவிசாரா, விருத்த, சத்பதிபக்ஷா, அசித்தா, பதிதா.

புகையும் , புகை சார்ந்தவைகளும்

கடந்த  வார உலக செய்திகளில் மிக முக்கியமாக கவனிக்கப்பட்டது நியூசிலாந்தின் அதிரடி அறிவிப்பொன்று.2008’ம் ஆண்டிற்கு பிறகு பிறந்தவர்கள்  சிகரெட் மற்றும் புகை பிடிப்பதற்கான எந்த ஒரு தயாரிப்பையும் வாங்க வாழ்நாள் தடை விதித்திருக்கிறது நியூசிலாந்து. புகையிலை தொழில் வரலாற்றிலேயே இப்படியொரு அதிரடி முடிவு எந்த காலகட்டத்திலும், எந்த ஒரு நாட்டிலும் எடுக்கப்பட்டதில்லை. 

இன்சுலினும் அமெரிக்க மருத்துவமும்

மற்ற தொழில்மயமான நாடுகளைப் போலவே கனடாவும் குறைவான விலையில் எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மருந்துகளின் மீதான விலைக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதே அங்கு குறைந்த விலையில் இன்சுலின் கிடைப்பதற்குக் காரணம். கனடாவைப்போல் மருந்தின் விலையை அரசு நிர்ணயம் செய்யாததும், லாப நோக்குடன் செயல்படும் மருந்து உற்பத்தி, மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் அராஜகப் போக்குகளே அமெரிக்காவில் இன்சுலின் விலை ஏற்றத்திற்குக் காரணம்.

சாரணர் மனோபாவமும் போர்வீர மனோபாவமும்

This entry is part 2 of 3 in the series தீர யோசித்தல்

“ஆய்ந்தறிந்து பேசுதல்” என்ற பாட்காஸ்ட்டை நடத்துபவரும், செயல்முறை ஆய்வறிவுக்கான லாபநோக்கில்லாத மையம் ஒன்றை பெர்க்லியில் நிறுவத் துணை நின்றவருமான கேலெஃப், இந்தக் கருது பொருளைப் பற்றி எழுதிய புத்தகத்தில் ‘ஆய்தறிதல்” என்ற சொல்லை மிக அரிதாகவே பயன்படுத்துகிறார். மாறாக அவர், “சாரணர் மனோபாவம்” ஒன்றை விவரிக்கிறார். அது நமக்கு “சாரணர் மனோபாவமும் போர்வீர மனோபாவமும்”

சந்ததிகளை உருவாக்கும் உழைப்பு

இனவிருத்திக்களம் பரம்பரைப் பழக்கமாக பொதுமங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. அடிப்படையாகவே அது உயிரைப் பேணிப் பாதுகாக்கும் பணி. எனவே சந்ததிகள் உருவாக்க உழைப்பிற்குத் (reproductive labour) தலையாயவர் என்கிற வகையில் பெண்ணுக்கு பொதுமங்களுடன் திடமான இணைப்பு நிலவுகிறது; வரலாற்றில் பெண்கள் பெரும்பாலும் பொதுமங்களின் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். பின்னர் அந்த இணைப்பு பறிபோனதால் மிகுந்த வேதனைக்குள்ளானார்கள்.

தீர யோசித்தல்

This entry is part 1 of 3 in the series தீர யோசித்தல்

இதற்கிடையில், அமெரிக்கர்களில் பாதிப்பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கிறார்கள்; பலர் சதித்திட்டங்கள் பற்றியும், போலி அறிவியல் முடிவுகளையும் நம்புகிறார்கள். நாம் சிந்திப்பதில்லை என்று சொல்ல முடியாது- நாம் தொடர்ந்து படிக்கிறோம், கருத்து சொல்கிறோம், விவாதிக்கிறோம் – ஆனால் நாம் செய்வதை ஓட்டமாய் ஓடியபடி, நம் செல்ஃபோன்களில் வம்புவதந்தி பரப்பித் தொல்லை செய்யும் புன்மதியாளர்களைப் பார்வையைக் குறுக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நுனி மேய்வதா, நுட்ப அறிதலா – குறியீட்டு அட்டவணைகள்?

இன்றைய உருவத்தை அடைவதற்கு முன்னரும்கூட அட்டவணைகள் ‘ஒத்திசைவுகளும், வேறுபாடுகளும்’ கொண்டு பயன்பாட்டில் இருந்தன. பக்கங்களில் எண்கள் அச்சிடப்படத் தொடங்கிய காலத்தில் இவைகள் ஒரு நிலைப்பை அடைந்தன.

கவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்

இவர் வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டச் செயற்பாடுகளில் ஆரம்பத்தில் தன்னை ஈடுபடுத்தியிருந்தாலும் பின்னர் அதிலிருந்து தன்னை முற்றாக விடுவித்து ஆன்மீகம் மற்றும் மெய்யியல் சார் விடயங்களுக்குள் அதிகமாக ஈடுபடுத்திக்கொண்டார். இந்தியா மற்றும் வங்கம் ஆகிய இரு நாடுகளினதும் தேசிய கீதங்களைப் படைத்தை பெருமையும் இவரையே சாரும்.

பார்லர் மூடுவிழா – ஏன்? எதற்கு? எப்படி?

பேச்சுரிமை அது சடாரென்றுதான் எனக்கு நிகழ்ந்தது. ஒரு வார காலம் அவகாசம் கொடுத்திருப்பார்கள். சொல்வனம் இயங்கும் வோர்ட்பிரெஸ் தளத்தில் என் வலைப்பதிவை வைத்திருந்தேன். அந்த வலைப்பதிவில், ஆங்கிலத்தில் பல இடங்களில் வரும் விஷயங்களைச் சுட்டு, மறுபதிப்பாக என் தனி வலையாகச் சேமிப்பது வழக்கம். ஹார்வார்டு பிஸினெஸ் ரிவ்யூ போன்ற “பார்லர் மூடுவிழா – ஏன்? எதற்கு? எப்படி?”

இரண்டு வடையும் இளையராஜாவும்

ஒரு முறை மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த தந்தையிடம், அவருக்கு வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை ஏதாவது இருக்குமோ என்று பலவிதமாகக் கேட்டுப் பார்த்தேன். அவர் ஏதும் பிடி கொடுப்பதாக இல்லை.
“அப்பா, உனக்கு மகிழ்வாக என்னால் இப்பொழுது ஏதாவது செய்ய முடியுமா?” என்றேன்.
“சுடச்சுட ரெண்டு வடை கிடைக்குமா?” என்றார்!

பெருந்தக்க யாவுள

ஆப்பிரிக்க –அமெரிக்கரான கேத்ரின் ஜான்ஸன், விண்வெளிப் பயணங்களுக்குக் கணிதம் மூலம் துணை நின்றவர். …1953-ல் நேஷனல் அட்வைசரி கமிட்டி ஃபார் எரோனாடிக்ஸ்சில் (NACA) இவர் பணி என்ன தெரியுமா? தன் மேலாளர்களான வெள்ளை ஆண்கள் செய்யும் வேலைகளை, இயந்திரக் கணக்குக் கருவி மூலம் ஆராய்ந்து தவறுகளை நீக்கிச் சரி செய்து கொடுப்பது. அந்த வேலை’கம்ப்யூட்டர் ‘ என்று அழைக்கப்பட்டது. …விண்வெளி வீரர்களை வானில் அனுப்பவும், பின்னர் நிலவிற்கு அனுப்பவும் இவர் எழுதிய கணிதக் கோட்பாடுகள் உதவின. சுருங்கச் சொன்னால் மனிதனின் விண்வெளி பயணத்தின் மையம் இவர் கணிதத்தில் இருந்து பிறந்ததுதான்.

வெங்காயக் கண்ணீர்

இன்று பாரத மணித் திருநாட்டின் பெருந்துன்பம் என்பது மரணம் ஏற்படுத்தும் டெங்கு முதலாய நோய்கள் அல்ல, ஓராண்டில் இரயில்வே லெவல் கிராசிங்குகளில் எண்ணூறு பேர் செத்துப் போனதல்ல. பல லட்சம் கோடிப் பணம் அரசு வங்கிகளில் வாராக்கடனாக இழந்து நிற்பதல்ல. கொலை, கொள்ளை, கள்ளநோட்டு, ஆள் கடத்தல், வன்புணர்வுத் தீனங்கள் அல்ல. காசு வாங்கி வாக்களிப்பதல்ல. சாதி அரசியல் அல்ல. …..அவற்றைவிட எல்லாம் பெரிய இனமானச் சிக்கல் – வெங்காய விலை உயர்வு.

முள் முனை

நெப்போலியனின் சரிதம் எழுதுவதற்கு இவர் எடுத்த முயற்சிகள், ஆவணக்காப்பகங்களில் செலவிட்ட நேரங்கள் நல்ல பலனைக் கொடுத்தன. McClure இதழ் விற்பனை ஏறியது. இவருடைய அடுத்த தொடர் லிங்கனைப் பற்றியது. நான்கு வருடங்கள் ஆராய்ந்து 20 பகுதிகளாக இவர் வெளியிட்ட அந்தத் தொடர் அமோக வரவேற்பைப் பெற்றது. போட்டிப் பத்திரிகையாளர்களின் காதில் புகை வந்தது; ‘பெண் எழுதும் வரலாறாம்’ என்ற கேலி வேறு. ஆனால், இவருக்குத் தடைகள் என்பது செயலூக்கிகள் என்பது, பாவம், அவர்களுக்குத் தெரியவில்லை. இவர் தலைநகரின் பெருந்தலைகளைச் சார்ந்து லிங்கன் சரிதத்தை எழுதவில்லை. லிங்கனின் பிறப்பிடமான கென்டக்கிக்குச் சென்றார். அவரது வாழ்க்கைக் குறிப்புகளை ஊராரிடம் கேட்டறிந்தார்;ஆவணக் காப்பகங்களுக்குச் சென்றார்.