நோயுற்ற சுயத்தின் அரற்றல் – மௌனியின் படைப்புகளை முன்வைத்து

ஆனால் மௌனியின் மீது புதுமைப்பித்தனுக்கு பெரிய மரியாதை இருந்தது என்பதை இக்கூற்று இடம்பெற்ற சிறுகதை மறுமலர்ச்சி காலம்  என்ற கட்டுரையை (1946ல் வெளியானது) முழுதாக வாசித்தாலே உணர்ந்து கொண்டு விட முடியும். அக்கட்டுரையில் அதுவரை தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் மௌனியின்  ‘எங்கிருந்தோ வந்தான்’, தன்னுடைய  ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ உள்ளிட்ட நான்கு கதைகளை தமிழின் ஒப்பற்ற கதைகள் என்று  புதுமைப்பித்தன் சொல்கிறார். புதுமைப்பித்தனின் சமகாலத்தவரான கநாசுவுக்கு மௌனியின் கதைகள் மீது பெரும் மயக்கமே இருந்திருக்கிறது. சி.சு.செல்லப்பா எழுதிய விரிவான கட்டுரையிலும் (மௌனியின் மனக்கோலம்) மௌனியின் கதைகள் குறித்த தீவிரமான பற்று வெளிப்படுவதை பார்க்கலாம்.

ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில்

தேவலோகத்தில் நடைபெற்ற ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் ஊர்வசி ‘லக்ஷ்மி’யின் வேடத்தை ஏற்று நடனமாடுகிறாள். அவளுடைய எண்ணமெல்லாம் புரூரவஸைப் பற்றியே இருந்தது. அதனால் ‘புருஷோத்தமா’ (விஷ்ணு) எனக் கூறுவதற்குப் பதிலாக புரூரவஸ் என அழைக்கிறாள். இதனால் அவளுடைய நாட்டிய குருவான பரதமுனிவர் சினமடைந்து அவளைச் சபிக்கிறார். “நீ யாரை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ, அவனுடன் வாழக் கடவாய். உனக்கு ஒரு மகன் பிறப்பான். தந்தையும் மகனும் சந்தித்துக் கொள்ளும்போது நீ அவர்களிருவரையும் விட்டு விலகி தேவலோகத்திற்குத் திரும்ப வேண்டும்.”

புதுமைப்பித்தன் எனும் அறிவன்

புதுமைப்பித்தன் இறந்து சரியாக முக்கால் நூற்றாண்டு ஆகிவிட்டது என்ற அடிப்படையில் புதுமைப்பித்தனும் ஒரு ‘வரலாறு’ (அவர் தன்னைப்பற்றி ‘வாழ்ந்துகெட்ட வரலாறு’ என்று சொல்வாராயிருக்கும்) என்று கொள்ளத்தக்கவரே. புதுமைப்பித்தன் குறித்து இலக்கிய விமர்சகன் அல்லது எழுத்தாளன் என்ற அடிப்படையில் அவரை அழகியல் ரீதியாக மதிப்பிடுவதுதான் என் வேலையாக இருக்க முடியும். அவர் எழுதியவற்றில் இன்றும் எஞ்சுவது எது என்பதைப் பார்க்க வேண்டியதே சமகாலத்தவர்களாக நம்முடைய முதன்மையான நோக்கம். ஆனால் இலக்கியம் என்பது சமூகத்துடனும் தொடர்புடைய கலையாக இருக்கிறது. எல்லை கடந்து இலக்கியம் ‘சமூகத்துக்குப் பயன்தர வேண்டும்’ என்றெல்லாம் கூட சொல்லப்பட்டது. ஆனால் இலக்கியம் முதன்மையாக வாசகருக்கு ஒரு அனுபவத்தை வழங்குவதன் வழியாக அவருக்குள் விழுந்திருக்கும் சில முடிச்சுகளை அவிழ்க்கிறது. அவர் போதத்தை இன்னும் சற்று கூர்மைப்படுத்துகிறது.

பாதாளத்தை வடிவமைத்தல்: பேயோவுல்ஃப், கிரெண்டல்

ஹெர்குலிஸ் அல்லது தீசியஸ் போல நாயகன் ராட்சதர்களைக் கொல்கிறான். ராட்சதன், அதன் அம்மா, டிராகன் இவையெல்லாம் அக்காலத்து மக்கள் இக்கதையில் எதிர்பார்த்த விஷயங்கள். இவை தீமையின் அவதாரங்கள், “பார்வையாளர்களால் உண்மையென ஏற்றுக் கொள்ளப்பட்டவை,” எழுத்தாளன் இவ்வகைமையைத் தேர்ந்தெடுத்த பின்னால் இந்த அவசியக் கூறுகளைச் சேர்ப்பது தவிர்க்க இயலாமல் போகிறது. இரும்பால் பிணைக்கப்பட்ட, விதி சூழ்ந்த வீடு (ஹீராட் ஹால்), கிரெண்டல் மற்றும் அதன் உருவற்ற அன்னை பீடிக்கும் நீருக்கு அடியே அச்சமே உருவான ஓர் இடம், கடைசியாகப் பாறைகளாய் இறுகிய பாதைகளற்ற டிராகனின் குகை என்று அச்சத்தின் அடிப்படை உருவகைகள் மூன்றின் வழியே கதையைக் கொண்டு செல்லும்போது:

இது வேற லெவல்…!

சமீபகாலங்களில் எனக்கொரு சந்தேகம். உங்களுக்கும் இருக்கலாம். தமிழில் வார்த்தைகளுக்கு அத்தனை பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா என்பதே அது. சந்தேகம் சும்மா வரவில்லை. பல நாட்களாக, பல பேரிடம் பேசும் பொழுது சட்சட்டென்று இந்த எண்ணம் வந்து போகும். எதனால் என்று கேளுங்கள்… ஒரு நண்பரிடம் அவர் சென்று வந்த பயணம் “இது வேற லெவல்…!”

தமிழகம்-தமிழ்நாடு சர்ச்சை பற்றி

உணர்வு என்பதே ஒரு அற்புதமான சொல். நேர்மறையான, உன்னதமான, நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் அகத்தை ஊடுருவும் பொழுது ஏற்படுவதே உணர்வு. தொன்மையில் இருந்தது போலன்றி தற்காலத்தில் சொற்கள் அவரவர் விருப்பதிற்கேற்றவாறு பயன்படுத்தப்பட்டு பொருளின் அடர்த்தி நீர்த்துப் போய்விட்டது. பள்ளி செல்லும் வயதில், 80களின் முற்பகுதியில், மதுரை மேம்பாலங்கள் அனைத்திலும் “இன உணர்வு கொள்” என்று கரியினால் எழுதப்பட்ட வாசகத்தை பார்த்தபடி கடந்ததுண்டு.

கு. அழகிரிசாமி நூற்றாண்டு (23/9/1923 – 5/7/1970) – ஓர் எளிய மலர்ச்செண்டு

நாம் எப்போதும் இலக்குடனும், பெருமளவு இலக்கின்றியும் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டும், பதிந்து கொண்டும் இருக்கிறோம். அதில் கு. அழகிரிசாமி போன்ற தேர்ந்த எழுத்தாளர் அதன் எல்லா அம்சங்களையும் கூர்ந்து நோக்குகிறார். வாசகரோடு பகிர்கிறார். இதயத்தை நொறுங்க வைக்கும் தாங்கொணாத் துயரையும், நிராசையையும், சாமான்ய மனிதர்களுக்கு நிகழும் சாமான்ய சம்பவங்கள் மூலம் வாழ்வின் சாரத்தையும், அர்த்தத்தையும், அனர்த்தத்தையும், தினசரி வாழ்வில் தானாய் நிகழும் நகைச்சுவையையும் இவரது கதைகளில் நாம் காண்கிறோம்.

மொழிபெயர்ப்பினாலான பயனென்கொல்?

எனக்கு நேரடியாகச் சந்தோஷம் கொடுக்கும் எழுத்தாளர்கள் சிலர் உண்டு. சில எழுத்தாளர்கள் என்னை யோசிக்கச் செய்வார்கள், அல்லது நல்ல விதமாக என்னைத் தொந்தரவு செய்வார்கள், அல்லது அவர்களின் பாத்திரங்களுக்காக என்னைக் கவலைப்படச் செய்வார்கள். லாஃபெர்ட்டி இவை எல்லாவற்றையுமே செய்தார், அவற்றை எல்லாம் மிகவும் நன்றாகவும் செய்தார். ஆனால் அவர் அதற்கு மேலும் ஏதோ செய்தார். ஒரு லாஃபெர்ட்டி கதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது நான் சந்தோஷத்தால் புன்னகைக்கத் துவங்குகிறேன்.

பிராட்டம்மா எழுதிய நாவல் ‘சோபாவதி’

விண்ணப்பம் என்ற பெயரில் கனுபர்த்தி வரலக்ஷ்மம்மா எழுதிய முன்னுரையில் இந்த நாவலின் கருப்பொருளாக அவருடைய பதினான்காவது வயதில் அவருடைய வீட்டிற்கு வந்த ஒரு முதிய பெண்மணி தன் தாய்க்குக் கூறிய கதையை எடுத்துக் கொண்டதாகக் கூறுகிறார். பிற பெண்டிர் மோகத்தில் அலைந்த கணவனிடம் மகள் பட்ட கஷ்டங்களைப் பற்றி அவர் கூறிய விஷயமே தனக்கு நாவல் எழுதுவதற்கு ஊக்கப்படுத்தியது என்று குறிப்பிடுகிறார். ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எழுதி அப்படியே விட்டு விட்டதாகவும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிழிந்து போகும் நிலையிலிருந்த பிரதியை மீண்டும் எழுதி அச்சேற்றியதாகவும் கூறுகிறார்.

பிரிவினைத் துயர்: பன்மொழி இந்திய இலக்கியங்கள் வாயிலாக

இந்திய தேசிய பிரிவினையின் போதும், அதற்குப் பிறகும், மக்கள் அனுபவித்த துயரை, பல எழுத்தாளர்கள், நாவல்கள், கதைகள் மற்றும் கவிதைகள் வாயிலாக வெளிப்படுத்தினர். இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை “அம்ருத் மஹோத்ஸவ்” ஆக கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நம் முன்னால் இருந்த சவால்களையும், அதில் நாம் கண்டடைந்த “பிரிவினைத் துயர்: பன்மொழி இந்திய இலக்கியங்கள் வாயிலாக”

வைக்கோல் மாந்தர்களும் பேசா பிராட்டிகளும்: பாழ்நிலத்துக்குப் பிந்தைய கவிதைகள்

பாகம் 1 1. ஹாலோ-மென் எலியட்டின் சர்வதேசப் புகழும் The Waste Land கவிதையும் ஒன்றி இருப்பதால் “வாழ்க்கை குறித்த ஓர் தனிப்பட்ட முக்கியமற்ற பிலாக்கணத்திற்கான வடிகால்… வெறும் சந்தநயமான முணுமுணுப்பு” என்று அவர் அப்பெருங்கவிதையைப் பற்றிய பின்னோக்கிய மதிப்பீட்டொன்றில் கூறியது பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம். நவம்பர் 1922-லேயே அவர் “வைக்கோல் மாந்தர்களும் பேசா பிராட்டிகளும்: பாழ்நிலத்துக்குப் பிந்தைய கவிதைகள்”

மல்லவரபு சுப்பம்மா, வேமூரி ஆண்டாளம்மாள், வேங்கட செல்லாயம்மா & காஞ்சனபல்லி கனகாம்பா

ராவோஜியும், ஆண் வேடத்தில் இருந்த லட்சுமிபாயும் சகதேவராவிடமிருந்து சேதுபிண்டாரியைக் காப்பாற்றுவது ஒரு அம்சம். பிரியம்வதா என்ன ஆனாள்,  சேதுபிண்டாரி எதனால் நாவலின் கரு பொருளுக்கு மையமானான் என்பதைக் கூறும் கதைப்பகுதி இரண்டாவது பாகத்தில் இருந்திருக்கலாம். நாவலில் முதல் பாகம் மட்டுமே இப்போது கிடைக்கிறது. ஸ்ரீனிவாசம்மாவின் வரலாற்று அறிவு, சரித்திரப் பார்வை, பூகோள அறிவு, காடுகளைப் பற்றிய புரிதல் போன்றவை இந்த நாவலில் அழகாக வெளிப்படுகின்றன.

ஜெயந்தி சூரம்மா & தேவமணி சத்யநாதன்

தெலுங்கில் நாவல் செயல்முறையை எடுத்து வந்தார்களே தவிர, ஆரம்ப காலங்களில் அதனை எந்தப் பெயரால் அழைப்பது என்பதை அறிந்திருக்கவில்லை. சில நாட்கள் அதற்கு முன்னால் அறிந்திருந்த பிரபந்தம் என்ற இலக்கிய வடிவின் சிறப்பைக் கூறும் உரைநடைச் செய்யுள் என்ற பொருளில் ‘வசனப் பிரபந்தம்’ என்று அழைத்தார்கள். கந்துகூரி வீரேசலிங்கம், ‘ராஜசேகர சரித்திரம்’ என்ற நாவலுக்கு விமரிசனம் எழுதுகையில், ‘காசீபட்ட ப்ரஹ்மய்ய சாஸ்த்ரியின் நவல’ என்ற பெயரை பயன்படுத்தினார். புதிய என்ற பொருள் படும் ‘நவ’ என்ற சொல்லின் ஆதாரத்தோடு  நாவல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அருகாமையில் விளங்கும் ‘நவல’ என்ற சொல், அன்று முதல், நாவல் என்ற முயற்சியின் தெலுங்குப் பெயராக நிலைபெற்றது. ‘நவல’ என்பது தேசியச் சொல். ‘பெண்’ என்பது அதன் பொருள். 

காசில் கொற்றம்

நமது தேட்டம் காசு என்ற சொல்லில். ‘காசில்லாதவனுக்கு வராகன் பேச்சென்ன?’ என்றோர் பழஞ்சொல் இருப்பது தெரியும். எல்லாத் தமிழ்ச் சொல்லும் வராகன் மதிப்புடையது என்பதும் அறிவோம். ஆனால் இன்றைய தமிழர்களின் சொற் பயன்பாட்டு நிலை ‘காசுக் கூண்டு கரிக் கூண்டாய்ப் போச்சு’ என்றே கூறிவிடலாம். ஆனால் காசு எனும் சொல்லுக்கு சமூகத்தில் இன்றிருக்கும் மதிப்பு என்ன?

செருப்பிடைச் சிறுபரல்!

பாதுகம் என்றாலும், பாதுகை என்றாலும் ஐயம் திரிபற செருப்பேதான். தேவர்களும் தேவகுமாரர்களும் அணிந்தால் பாதரட்சை, பாதுகை, பாதுகம்; சாமான்யரான நாமணிந்தால் செருப்பு என்றும் பொருள் கொண்டால் அது மொழியின் குறைபாடு அல்ல. சொற்களை மேநிலையாக்கும் மானுடப் பண்பு. நிலக்கிழார் அணிந்தால் உத்தரீயம், அங்கவஸ்திரம், நேரியல்; சாமான்யன் போட்டிருந்தால் துண்டு, துவர்த்து என்பதைப்போலவே அதுவும்.

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!

இப்படித்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய வரலாற்றுக் குறிப்புகள் இலக்கியங்கள் மூலமாகவும் இன்று சான்றுரைக்கின்றன. காழ்ப்பற்ற, வஞ்சமும் சூதுமற்ற, வெளிப்படையான, தமிழ்ப்புலவன் வழி நெடு வரலாற்றை, மரபை, புராணங்களை விதைத்துச் செல்கிறான். அவனது அனுபவமும், ஞானமும், தெளிவும், படைப்பு ஆற்றலும் புரிதலும் வியப்பேற்படுத்துகின்றன.
சித்திரையில் பிறக்கும் புத்தாண்டின் வரிசையில் அறுபதனுள், நந்தன என்பது இருபத்தி ஆறாவது. நந்தனன் என்றால் குமரன் என்று பொருள் தருகிறது சூடாமணி நிகண்டு.