தியாகராஜன் அவர் கைபேசியை அணைத்து வைத்திருந்தார். யாருடனும் பேசப் பிடிக்கவில்லை அவருக்கு. என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது? என்றிருந்தது. வேண்டாத அழைப்புகள் நிறைய வருகின்றன என்று எரிச்சல்பட்டு அணைத்து வைக்க ஆரம்பித்தவர் இப்பொழுது வேணும் அழைப்புகளும் தேவையில்லை என்று தோன்ற அது அணைந்தே கிடந்தது. உலகமே அதை அணைத்துக்கொண்டு “நீக்(ங்)குதல்”
Category: எதார்த்தக் கதை
வெண்ணெய்த் தாழி
யமுனாவுக்கு குடைராட்டினம்தான் பிடிக்கும். சிங்கம் குதிரை அன்னபட்சி னு எல்லோரும் போட்டி போட்டாலும் இரட்டை நாற்காலிலதான் ஏறுவாள்.. கொஞ்சம் கொஞ்சமா வேகமெடுத்தவுடன் காற்றில் ஜிவ்வுனு பறக்கற மாதிரி இருக்கும்.
விதி
வேலை செய்து கொடுத்த கூலியை கேட்க, கோதண்டத்தின் வீட்டிற்கு முன்னால் வந்து நின்றான் கதிரேசன். சுத்துப்பட்டி கிராமத்துல குடிசை வீடு கட்டுறவங்களுக்கு மண்ணால சுவர் எழுப்பி கொடுக்குறதுல கதிரேசனுக்கு மிஞ்சின கெட்டிக்காரன் இல்லைன்னு சொல்லலாம். கைராசிக்காரன்னு பேரு எடுத்தவன். வேலைக்கு ஏற்ற கூலியை கறாராக கேட்டு வாங்கிடுவான். வயசு “விதி”
மாயன்
காலையில் ஐந்தரை மணிக்கு வண்டியிலேறி அமரும்போது உள்ளே இருளாகவே இருக்கும். முதல் பலகையில் அமர்பவர்கள் தூங்கிக்கொண்டு வருவார்கள். அடுத்தடுத்த பலகைகளில் அமர்பவர்கள் தூக்கம் வரவில்லை என்றாலும் கண்களை மூடியபடியே வருவார்கள். திறந்திருந்தாலும் இருட்டையே நோக்க வேண்டுமென்பதால். இதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பரமன் இங்கே வரும்வரைதான். பரமன் வந்த “மாயன்”
நிறங்கள்
இன்றோடு பின்னக் கணக்கு முடிந்தது. இன்று அவர் கண்ணாடி வளையல்களை அணியவில்லை. கைகள் வெறுங்கைகளாகவே இருந்தன. ஆனாலும் பழைய பழக்கத்தில் அவர் எழுதுவதற்கு முன்னர் தன் வலது முன்கையைப் பிடித்து, அழுத்தி, பின்னுக்குத் தள்ளிக்கொண்டார்.
மத்தளம் கொட்ட
மார்பில் மடியில் தோளில் படுத்துறங்க வைத்தவர். எப்பொழுதும் அவர் பக்கத்தில் சாய்ந்தே அமர்ந்திருந்த நினைவு. உண்ணும் போதும் அவரின் பக்கம் தான். வேண்டாம் என்பதை எடுத்து அவர் தட்டில் போடவும் பிடித்ததை கேட்காமல் எடுத்துக்கொள்ளவும் வசதி. கணக்கு வழக்கு பேசும் இவர் யார்?
ஷெரின்
அந்தப் படத்தின் பின்னணி இசைதான் காலைமுதல் தெளிவாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த இசையில் ஓர் ஈர்ப்பு இருந்தது. அந்த இசை, நம்மை அனைத்தையும் மறக்க வைக்க, அல்லது ஏதோ ஒன்றை நினைவுக்குக் கொண்டுவந்து நிறுத்த வல்லதாய் இருந்தது.
புனித வெள்ளி
“இன்று நான் இறந்த நாள். இன்னும் மூன்று நாட்களில் இன்னோரிடத்தில் பிறந்து மீண்டும் ஓர் வெள்ளிக்கிழமை சாக வேண்டும். நான் செத்த உடலுடன் அப்படியே பிறப்பதாக இந்த மக்கள் நினைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு எப்படிச்சொல்லி புரியவைப்பது. எதற்கு, இருப்பது அப்படியே இருக்கட்டும். அப்பனே என்னை ஏன் இப்படி செய்கிறாய் முதல் தடவை கொன்றாய், அப்படியே என் பிறப்பறுத்திருக்கலாமே. மீண்டும் மீண்டும் சவக்குழியில் இறக்கி பிண நாற்றத்துடம் வெளிக்கொண்டு வந்து ஏன் விளையாடுகிறீர்,”
பார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள்
அடுத்தடுத்த நீதிபதியின் கேள்விகளை வைத்தும், குற்றவ்வாளியின் பதிலைக்கொண்டும் தெரியவந்த செய்திகள் : ஹாலந்து நாட்டவர், பத்திரிகயாளர், ஒரு நிறுவனத்தின் உரிமையாளர். இந்நிலையில்தான் பாடகி ஒருத்தியுடன் அறிமுகம், கவிதைகளும் எழுதுபவள். அவளின் நட்பில் அவளை முன்னுக்குக்கொண்டுவர ஏராளமாக செலவு, ஒரு நாள் அவர் வெறும் ஆள் என்றவுடன், அப் பெண்மணி இவரை உதறிவிட்டு வெளியேறுகிறாள். பத்து ஆண்டுகளுக்கு மேலாக பெரிய நகைக்கடைகள், ஆயத்தஉடை கடைகள் முதலானவற்றில் விலையுயர்ந்த நகைகள் ஆடைகள் வாங்குவது, நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது. அவற்றிற்குரிய பணத்தை வங்கிகளில் பொய்த் தகவல்களைக்கொண்டு தொடங்கியக் கணக்கில் பெற்ற கடனட்டைகள்,காசோலைகளில் செலுத்துவது, பிடிபடுவது, சிறைசெல்வது.
இப்படிக்கு
அதுசரி. . நான் என்னமோ ஆணாதிக்கவாதியா மாறிட்டங்கறது போல எழுதியிருக்க. உன்னோட நெற்றி சுருக்கிய முகம் முன்னாடி வருது. நல்லாவே இல்ல. கொஞ்சம் புன்னகையோட கூட வாசிக்கலாமே.
ஏன். . டீ போட்டு தரமாட்டீங்களா? வீடு பெருக்க மாட்டீங்களா? நானும் செய்யலன்னு சொல்லல. நானே செய்யனுமா?
வேலை சுமை தெரியாம இல்ல. அதே வேலையத்தானே நாங்களும் செய்யறோம். பின்ன தினமும் உங்கள வேற தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஊர்வலம் வரனுமா? என்னை அப்படியா நினைக்கிற? குழந்தையில இருந்து கூடவே இருந்த நீயுமா? ஆச்சரியமா இருக்கு. நீ எப்ப பெண்ணாதிக்கவாதியா மாறினன்னு நானும் கேட்கலாமில்ல? என்ன?
பெண் தெய்வம்
சுலோச்சனாவை காணாமல் நடேச ஐயரும், அவரது மனைவியும் ஊர் முழுக்க தேடத்தொடங்கினர். ஊரில் இருந்தது ஒரே ஐயர் குடும்பம் என்பதால் இருந்த இரு நூறு முன்னூறு குடும்பங்களுக்கும் நடேச ஐயரைப் பற்றியும் அவரது மனைவியைப் பற்றியும் புத்தி சுவாதீனம் அற்ற அவரது ஒரே மகளைப் பற்றியும் நன்றாகவே தெரியும். நடேச ஐயர்தான் சுற்றுவட்ட கிராமங்களில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் பூஜைகள் செய்துவந்தார். அப்படி ஒன்றும் நிறைய கிராமங்கள் இருக்கவில்லை. பத்து கிலோமீட்டர் சுற்றளவில் இருந்தவை மொத்தம் மூன்றுதான் . ஆனால் கோவில்களின் எண்ணிக்கையோ அதைவிட பத்துமடங்கு. ஐம்பது வயது வரை எல்லா கோவில்களுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ, அவர் வசதிக்கு…
எம். எல். – அத்தியாயம் 6
விவேகானந்தா பிரஸைத் தாண்டி மேலமாசி வீதியில் நுழைந்ததும் பையிலிருந்த சில்லரைகளை எண்ணினான். அதை வைத்துதான் இந்த மாதம் பூராவும் ஓட்ட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் எப்போது சம்பளம் கொடுப்பார்கள் என்று தெரியாது. சில மாதம் பதினைந்தாம் தேதிகூடக் கொடுத்திருக்கிறார்கள். சம்பளம் போட மறந்துவிட்டார்களோ என்று நினைப்பான். கோபால் பிள்ளை வீட்டுக்குப் போனதும், நேரே வெளிப்புற மாடிப்படி வழியாக அவர் அறைக்குப் போகவில்லை. கீழ்ப் பகுதியில் குடியிருந்த பெரியவர் ராமசாமியைப் போய் முதலில் பார்த்தான்.
ஆழம்
கிணற்றில் இறங்கச் சொல்லி அப்பாதான் பழக்கப்படுத்தியது,சின்னக் கிணறில் ஒரு நாள் குளிக்கத் தண்ணி மொள்ளும் போது வாளி அறுந்து விட்டது அப்போது எனக்கு ஒரு பத்து பன்னிரண்டு வயசு இருக்கும் அருகில் இருந்த மற்ற வாளியில் என்னை அமரச் சொல்லி பயந்த என்னிடம் சத்ரபதி சிவாஜி புலி நகம் அணிந்து தப்பி வந்த கதையச் சொல்லி உள்ளே இறக்கியது.
நான் பயத்தில் வாளியில் அமர்ந்து கொண்டு கயிறையும் பிடித்து கொண்டேன். அமர்ந்து இருந்த வாளி கிணற்றில் கிடந்த வாளி அருகே சென்றதும் யானை தும்பிக்கையை நீட்டி வாங்குவது போல் வாளியை ஏந்திக் கொண்டு ஏற்றம் போல் மேலே வந்தேன் சிரித்துக்கொண்டு.
மீள்சந்திப்பு
ம்மா அவரை விவாகரத்து செய்து மூன்று வருடங்களாகிறது அன்றிலிருந்து நான் அவரைப் பார்த்ததில்லை எனினும் அவரைப் பார்த்த அந்த நொடியிலேயே நான் அவர் எனது ரத்தமும் சதையும் எதிர்காலமும் துயரமும் என்பதுபோல் நெருக்கமாக உணர்ந்தேன். நான் வளர்ந்தால் நிச்சயம் அவரைப் போலத்தான் இருக்கப் போகிறேன் என்பது போலவும்..நான் நிச்சயம் என்னுடைய வாழ்க்கையை அவரது எல்லைகளுக்குள்தான் வைத்துக்கொள்ள வேண்டும்.
மாரியம்மன் கஞ்சியும் அந்தோணிசாமியும்
ஊர்வலம்போன மாரி அம்மன் சிலையும் மனிதர் கூட்டமும் உள்ளே நுழைந்தது. அவர்களுக்காகவே காத்திருந்ததுபோல மண்டபத்தை நிறைத்த கற்பூர வாடையும் வேப்பிலை மணமும் அந்தோணிசாமிக்குப் பிடித்திருந்தது. மண்டபம் நிரம்பியதும் நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் மனிதர்களின் முகங்களை ஆர்வத்துடன் பார்த்தார். அவர்கள் மனங்களைப்படித்தார். மிக எளிதாகத்தான் எழுதப்பட்டிருந்தது. நீண்ட வாக்கியங்கள் இல்லை. புரியாத சொற்கள் இல்லை. வெவ்வேறான இழைகள் தறியில் ஒன்றிணையும் அதே சாதுர்யத்துடன் முகங்களில் பாவனைகளும், சமிக்கைகளும். ஒரு கிளிஷேக்கு தம்மை தயார்படுத்திக்கொண்டுவந்தவைபோலவும், அந்தக் கணத்திற்கு வாழ்ந்துமுடித்துவிட்டு நீர்த்திடவேண்டுமென்பதுபோலவும் இருக்கிற முகங்கள்.
வாழ்க்கையில் ஒரு நாள்
“சீக்கிரம் நீங்க சினிமாவுல பாடறத நாங்க கேக்கணும் சார்” என்று வாழ்த்துவார்கள். கைகுலுக்குவார்கள். ”எப்படியாவது மகாதேவனயாவது, இல்ல எம்.எஸ்.வி.யவாவது போய் பாருங்க சார். உங்களுக்கு கண்டிப்பா ஒரு வாய்ப்பு தருவாங்க” என்று நம்பிக்கை ஊட்டுவார்கள். ”எஸ்.பி.பாலசுப்ரமணியன்னு புதுசா ஒருத்தருக்கு அடிமைப்பெண்ல மகாதேவன் வாய்ப்பு குடுத்திருக்காரு. நீங்களும் முயற்சி செஞ்சா கண்டிப்பா கிடைக்கும்” என்றார்கள். “எதிர்காலத்து டி.எம்.எஸ். நீங்கதான் சார். அதுல சந்தேகமே இல்லை. சார் பெரிய ஆளாவும்போது எங்களயெல்லாம் மறந்துடக்கூடாது” என்று வேண்டிக்கொள்வார்கள்.
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
“வீட்டுல வேலை செய்யும் பெண்ணை நாள் முழுவதும் எனக்குத் துணையா இருக்கச் சொல்லியிருந்தாங்க. அவங்களுக்கு இருந்த அன்பால அதைச் செய்திருக்கலாம். ஆனால் எனக்கு அது கண்காணிப்பு மாதிரி பட்டுது. அது தாங்கலை. போரிவிலி ஸ்டேஷன் போனேன். நான் அடிக்கடி அந்தேரி வருவேன் சாமான்கள் வாங்க அப்புறம் ஸாத் பங்களாவில இருக்கிற கோயிலுக்கு. அதனால ஒரு பாஸ் எடுத்து வெச்சிருந்தேன். ரயில் வந்ததும் சட்டென்று ஏறிவிட்டேன். அந்தேரியில இறங்கினதும் மனசு குழம்பிப் போச்சு. ஒரு அறுபது வயதுப் பெண்மணிக்கு வீட்டை விட்டுப் போனால் தங்க ஏது இடம்? அவளை ஏதாவது ஆசிரமத்துக்குப் போன்னு சொல்லுவாங்க. அங்கேயே ஸ்டேஷன்ல உட்கார்ந்துவிட்டேன். ஒரு பெரிய பாறாங்கல் மாதிரி ஒரு துக்கம் நெஞ்சுல கனத்துது. மனசுல இருக்கும் ஒரு ஆசையச் சொன்னதுக்கு எனக்கு தண்டனை. சொல்லாமல் செத்திருந்தா கொண்டாடியிருப்பாங்க. சுதா, உனக்கு பல ஜன்மங்கள்ல நம்பிக்கை இருக்கா? எனக்கு இல்லை. என் பாபா சொல்லுவார். நரகமும் சொர்க்கமும் மனசுலதான். உயிரோடு இருக்கும்போதுதான். இறந்த பின்னால நாம எல்லாம் காத்து, வெறும் காத்து…”
இந்தப் பக்கத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
செய்தி தெரியுமா உங்களுக்கு? பிரதம மந்திரியைக் கொலை செய்து விட்டார்களாம். ரேடியோவில் செய்தி வந்தது. அக்கம் பக்கத்திலும் பேசிக்கொள்கிறார்கள். டிவியைப் போட்டுப் பார்த்தேன், அதில் ஒன்றும் சொல்லவில்லை. குழந்தைகள் வீட்டுக்கு வந்து விட்டார்கள். மூடச் சொல்லி உத்தரவு வந்ததாம். அஸ்நாவைப் பாவம் கல்சியே தன் காரில் கொண்டு வந்து விட்டாள்.
அந்நியன் என ஒருவன்
‘அவங்ககிட்ட அன்பு பாசம் இல்லாம இல்ல செய்ய நிறைய மனசு இருக்கு, ஆனா அவங்களுக்கு குடும்பம், குட்டிங்கனு ஆன பிறகு, அதெல்லாம் செய்ய முடியறதில்லை; இதெல்லாம் இயற்கைதான் நீங்களே உங்க வயசுல புரிஞ்சுப்பீங்க பாருங்க’ என்றார். அதன்பின் அவர் கூறிய எதுவும் அவன் காதில் விழவில்லை. நீண்ட ஒரு உரைபோல பேசிக்கொண்டே போனார். ஏதோ ஒரு பெரிய மேடைப்பேச்சை முடித்து சாதனை செய்துவிட்ட மகிழ்ச்சியில் அவர் முகம் அந்த சின்ன ஒளி இடைவெளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.
ஆருடம் பலித்த கதை
எனக்கு ஆருடத்தில் என்றும் நம்பிக்கை இருந்ததில்லை. வாழ்வின் அடிப்படை நம்பிக்கைகள் தகர்ந்து போய் நிற்கும்பொழுது இது போன்ற பூச்சுற்றல் வேலைகள் எல்லாம் ஒரு வித நடுத்தரவர்க்கத்து பம்மாத்துத்தனம் என்பதுதான் என் முடிவு. எல்லையற்ற சுயநலமே இது போன்ற விஷயங்களை வளர்த்து வருவதாக என் அபிப்பிராயம் .இருப்பினும் நாளிதழில் தனுர் இராசிக்கு இன்று என்ன என்று பார்ப்பதற்கு காரணம் நானும் இது போன்ற ஒரு மத்தியதர வர்க்கம் என்று சமாதானம் செய்து கொள்வேன்.
பழையன கழிதல்
உடமைகளை வெளியேற்றிய விட்டில் நின்று பார்க்கும்போது எங்களில் ஒரு பகுதியை விட்டுச் செல்வது போல இருந்தது. சுவரின் தீபாராதனை கருப்பு திட்டு, பென்சில் கிறுக்கல்கள், கைவிரல் தடங்கள், எண்ணெய் பிசுக்கு என்று எங்கள் அடையாளங்கள் மிச்சம் இருந்தன. எங்கள் நினைவுகளிடமிருந்து உன்னால் அவ்வளவு சீக்கிரம் விடுபட முடியாது என்று வீட்டிடம் சொல்கிறமாதிரி தோன்றியது. அத்தனையும் ஒரு சுண்ணாம்புப் பூச்சில் ஒளிந்து கொண்டாலும் இந்த விட்டின் நிரந்தரமான ஒரு அங்கமாய் உள்ளே உறைந்துவிடும்.
தேளும் – கொஞ்சம் நினைவுகளும்
”பால்மாறாம பயல காளி கோயில் பூசாரிகிட்டக் கூட்டிட்டுப் போயி மந்திரிச்சு தின்னூரு பூசிக் கூட்டிட்டு வா… காளியாத்தா எந்த விஷச் சந்தும் அவன அண்ட விடாமப் பார்த்துக்குவா…..” என்றாள் அம்மி. அம்மா விஷயத்தைச் சொல்லவும் பூசாரி தாத்தாவுக்கு வெலம் வந்து விட்டது. “எந்தப்பய தொட்டான்னு சொல்லும்மா….! எலும்ப எண்ணீடலாம்; வரவர அவனுங்களுக்கு துளிர் விட்டுப் போயிருச்சு…. பத்து நாளைக்கு முன்னால இப்படித்தான் வெள்ளிக் கெழமை பூசையப்ப, ஒரு எளந்தாரிப் பய கோயிலுக்குள்ள ஏறீட்டான்; எறங்குடா, நீயெல்லாம் கோயிலுக்குள்ள கால் வைக்கக் கூடாதுன்னா, இப்ப என்னன்னு சிலுத்துக்கிட்டு நிக்குறான்…. அவனுக்கு நம்ம பயலுக நாலு பேரு சப்போர்ட்டு வேற…. அதான் இந்தக் கழிசடைகள் எல்லாம் கண்ணு மண்ணுத் தெரியாம ஆடுறானுங்க…. யாருன்னு மட்டும் சொல்லும்மா பொலி போட்றலாம் அவனுங்களை……”