மனச் சோர்வைக் குணப்படுத்தும் மேஜிக் காளான்கள்

மிதமானது முதல் கடுமையானது வரையான பெரும் மன அழுத்தச் சீர்குலைவுகளுக்குச் சைலோசிபின்னுடன் உளவியல்சார் சிகிச்சை முறைகளையும் இணைத்து சிகிச்சை அளிக்கும்போது, இரண்டு டோஸ் சைலோசிபின் மருந்து, பொதுவான மனச்சோர்வு முறிமருந்தான எஸ்சிடாலொப்ரம் (escitalopram) அளவுக்குச் சம ஆற்றல் உடையதாகத் தோன்றுகிறது என்று இரண்டாம் கட்ட மருத்துவ முயற்சியில் எட்டப்பட்ட முடிவுகள் கூறுகின்றன.

உணர்ச்சி வசப்படல் எவ்வாறு மூளையால் உருவாகிறது?

”ஆசை” திரைப்படத்தில் வரும் வசனம் நினைவுக்கு வருகிறது: “ஒருவரின் முகத்தைப் பார்த்தே அவர் நல்லவரா, கெட்டவனா என்று தெரிந்து கொண்டு விடுவேன்.” அவ்வாறு அறிய முடியுமா? அகத்தின் அழகை முகத்தில் பார்க்கலாமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை உங்களின் முகபாவங்கள் காட்டிக் கொடுத்துவிடுமா? சந்தோஷத்தையும் துக்கத்தையும் கோபத்தையும் கவலையையும் “உணர்ச்சி வசப்படல் எவ்வாறு மூளையால் உருவாகிறது?”

புத்துருவாக்கமும் பிறழ் மைய நடத்தைகளும்!

மனச் சிதைவுக்கு ஆளான தாய்மார்களது குழந்தைகளிடம் ஸ்கிட்ஸோடைப்பல் இயல்பும் காணப்பட்டது அதே சமையம் மற்றவர்களைவிடவும் மிக உயர்ந்த கற்பனை வளமும், படைப்பாக்க சிந்தனையும் இணைந்திருந்தது.
இது போன்ற கற்பனை வளமும், படைப்பாக்கத் திறனும் கொண்டவர்களிடையே எதிர்காலத்தைப் புலப்படுத்தும் கனவுகள், ரெலிபதி, கடந்த காலம் பற்றிய உணர்வு என்பன குறித்த நம்பிக்கைகள் ஆழமாக இருப்பதையும் ஆய்வுகள் புலப்படுத்தின.
இது போன்ற விபரீத எண்ணப்போக்கினுக்கும், புத்துருவாக்கத் திறனுக்கும் இடையே காணப்படும் தொடர்பு, பல ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

ஒருவரை தத்துவவாதியாக ஆக்குவது எது?

This entry is part 3 of 6 in the series உலக தத்துவம்

இக்கட்டுரை ‘what makes a philosopher’ என்ற ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு. இக்கட்டுரையில் வரும் சில கருத்துக்களுக்கும், கலைச்சொற்களுக்கும் கூடுதல் வரையறையும் அறிமுகமும் வேண்டுமென்று கருதியதால் அவை கட்டுரைக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தத்துவவாதியாக ஆக்குவது எது? இது மிக அடிப்படையான கேள்வியாக இருப்பினும் இதன் பதில் நாம் நினைப்பதை “ஒருவரை தத்துவவாதியாக ஆக்குவது எது?”

ஜோசியம் – ஜோலி – சீலம்

இஸ்ரேலின் யூரி கெல்லர் (Uri Geller) தென்பட்டார்; அவர் கரண்டிகளை கண்ணாலே வளைத்தார்; மாற்றுகிரகவாசிகளுடன் உரையாடினார். மேற்கத்தியர்கள் அவரை அபரிமிதமாக நம்பினர். காற்றில் இருந்து பெட்ரோல் கிடைக்கும் இடங்களை கண்டுபிடிக்கலாம் என நம்பி, ஃப்ரெஞ்சு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பல மில்லியன் டாலர்களை எல்ப் அக்விடேன் (Elf Aquitaine) ஆருடத்தில் கரைக்கிறார். புற்று நோய் உருவாகுவதற்கு காரணமாக இருக்கும் “பூமிக் கதிர்”களை, அறிவியல்பூர்வமாக இல்லாமல் முள்கரண்டி குச்சிகளால் நீரோட்ட கணிப்பாளர்களைக் கொண்டு ஜெர்மனியில் தேடுகிறார்கள். ஃபிலிப்பைன்ஸில் ஆவியின் துணை கொண்டு அறுவை சிகிச்சை நடக்கிறது. ராணி எலிசபெத் முதற்கொண்டு கடைநிலை குடிமகன் வரை எல்லோரும் பேய், பிசாசு பைத்தியமாக இங்கிலாந்தில் திரிகிறார்கள்.இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எக்கச்சக்கமான மதங்களை ஜப்பான் கண்டுபிடித்திருக்கின்றது. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குறி சொல்வோரை ஜப்பான் மட்டுமே தழைக்கவைக்கின்றது.

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம்-12

குருநாதர்கள் எல்லோரும் தியாகராஜ ஸ்வாமிகள் என்று தம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தியாகராஜ ஸ்வாமி லோகாயதமாகப் பணம் சம்பாதிக்காமல் உஞ்சவிருத்தி எடுத்து ஜீவனம் செய்து வந்தவர். சரபோஜி மகாராஜா தனம் சமர்ப்பித்துச் சபையில் வந்து பாட அழைத்த போது ‘நிதி சால சுகமா’ என்று பாடியவர். இவருடைய மேன்மையை இன்றிருக்கும் குருநாதர்களுடன் எந்த வகையில் ஒப்பிட முடியும்? மனமெல்லாம் பணம் புகழ் செல்வாக்கு; வாயில் மட்டும் ஆன்மீகம் தெய்வீகம்! ஜானகி ராமன் எழுதுவாரே ‘நடன் விடன் காயகன்’ என்று அது போல் தான் பெரும்பாலானவர்கள் நடந்து கொள்கிறார்கள். இதனால் தானோ என்னவோ காந்தர்வ வேதம் என்று புகழப் பட்டாலும் சங்கீதத்தை வேத அத்யயனத்துக்கு ஒரு படி தாழ்த்தித் தான் வைத்திருக்கிறார்கள்.

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம்-11

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்கிற கதையாக முகநூல் வாட்ஸப்பும் பெரிய தொல்லையாகத் தொடர்ந்தன. என் மனைவி போடுகிற படங்களை சூசகமாக எடுத்துக் கொண்டு ஏதாவது செய்வது என்று ஆரம்பித்திருந்தார்கள். திருவள்ளுவர் படம் போட்டால் திருக்குறளைப் பாடுவது, தஞ்சாவூர்க் கோயில் படம் போட்டால் தஞ்சாவூரில் போய்க் கச்சேரி செய்வது என்று ஆரம்பித்திருந்தார்கள். ஒரு முறை என் மனைவி மண்டை ஓட்டு மாலையுடன் கையில் அசுரனின் கொய்த தலையைப் பிடித்தவாறு நிற்கும் பத்ர காளியின் படத்தைப் போட்டிருந்தாள். உடனே அங்கிருந்து ‘தாயே! நான் என்ன குற்றம் செய்தேன்?’ என்று பொருள் படும் படியாக பதில்.

குளக்கரை

நம் உடலை சற்றே உற்று கவனித்தாலே தெரியும், அது எத்தனையோ ஆச்சரியங்களை இயற்கை என்ற பெயரில் பொதித்து வைத்திருக்கிறது என்று. ஓர் ஆரோக்கியரின் ரத்தத்தில், சோடியத்தின் அளவு ஓர் லிட்டருக்கு 135லிருந்து 145 milliequivalents (mEq/L). இந்த அளவுகளிலிருந்து சற்றே மீறினாலும் உடல் சீர்கேட்டிற்கு கொண்டு செல்லும். அவ்வாறு செல்ல விடாமல் உயிரினங்கள் உடல், தன்னளவிலேயே சம நிலைக்கு கொண்டு வந்துவிடும். இத்தனை கட்டுக்கோப்பாக உயிரனங்களின் உடல் சுயமாக சமநிலை பேணுவதை மருத்துவ துறையில் homeostasis என்ற சொற்றொடரில் குறிக்கப்படுகிறது. தன் தகப்பனார் உடல் நிலை சரியில்லை என அறிந்தவுடன் சித்தார்த் முகர்ஜி அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு விரைவதில் தொடங்குகிறது, இந்தக் கட்டுரை.

தானோட்டிக்கார்கள் – முடிவுரை

எந்திரக் கற்றலியலில், மிகவும் ஆராயப்பட்டுவரும் மேற்பார்வையற்ற ஒரு நெறிமுறை (unsupervised learning algorithm) reinforced learning என்பது. இந்த நெறிமுறை, எதையும் சொல்லிக் கொடுக்காமல், ஒரு எந்திரத்தைத் தானாகவே கற்றுக் கொள்ளவைக்கும் மேற்பார்வையற்ற ஒரு நெறிமுறை. இந்த நெறிமுறையில் உள்ள முக்கிய அம்சம், அதிக முயற்சிக்கு அதிக பரிசு என்பதாகும். அதிகமாக பொருட்களை விற்கும் விற்பனையாளருக்கு அதிக கமிஷன் கொடுப்பதைப் போன்ற விஷயம் இது. விடியோ விளையாட்டிற்குச் சரிப்பட்டுவரும் இந்த நெறிமுறை தானோட்டிக்காருக்குச் சரிப்பட்டுவருமா? அம்மா கட்டுப்பாடற்ற சிறுவனைப்போல, கார் இயங்கத் தொடங்கிவிடுமா? இதை Mobileye காரர்கள் சோதனை செய்து பார்த்தார்கள்.

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 2

அந்த மருத்துவரை என்னால் மறக்க முடியவில்லை – ‘டெட்டி பேர்’ போன்றதொரு உருவத்துடன் தடிமனான கண்ணாடி அணிந்து ‘பிரஸன்ன வதனம்’ என்பார்களே அதுபோல் சிரித்துக் கொண்டேயிருந்தார். கண்களும் சிரித்துக் கொண்டேயிருந்தன. உறவினர் அவருடன் ஏற்கனவே தொலைபேசியில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும் போது பையனைப் பற்றி விவரித்திருப்பார் போலிருக்கிறது. அவர் நேரடியாகப் பையனிடம் “நான் கேக்கறதுக்கு நீ பதில் சொன்னேன்னா நான் உனக்கு சாக்லேட் தருவேன்” என்றார்.

பையன் அவர் மேஜையில் இருக்கும் சாமான்களில் எதை எடுத்து உடைக்கலாம் என்பதுபோல் தொட்டுத் தொட்டு ஆராய்ந்து கொண்டிருந்தான். அவர் வற்புறுத்திக் கேட்கும் ஒன்றிரண்டு கேள்விகளுக்கு பதில் சொன்னான். சிரித்துக் கொண்டே இந்த அவர்

“தேர் இஸ் நத்திங் ராங் வித் த சைல்ட்” என்றார் சிரித்துக் கொண்டே.

உறவினர் விடாமல் “பையனுக்கு ‘ஆட்டிஸம்’ இருக்கோல்யோ?” என்றார்.

டாக்டர் சிரித்துக் கொண்டே, நான்தான் சொன்னேனே “தேர் இஸ் நத்திங் ராங் – ஹி இஸ் நாட் ஆட்டிஸ்டிக், ஹி இஸ் ஒன்லி ஆர்ட்டிஸ்டிக்,” என்றார் தீர்மானமாக

சுயமும் சூர்யோதயமும்

மேற்கத்திய தத்துவத்தின்படி நாம் சுயம் என்னும் தனிப்பட்ட குணத்தோடு பிறப்பதில்லை. தன்னியல்பு என்பது நம்முடைய முதல் இரண்டாண்டுகளில் உருவாகி ’சுயம்’ என்னும் பிம்பத்தை எழுப்புகிறோம். நாம் பார்ப்பது, கேட்பது எல்லாம் நம் கற்பிதமே. இதனால் நம் அறிதலை சுருக்கிக் கொள்கிறோமா? புத்தரின் வழியில் யோசித்தால் தற்சார்பற்ற உண்மைகளை இன்னும் “சுயமும் சூர்யோதயமும்”

ஒரு நொடிச் சிந்தனை

இந்த எச்சரிக்கை உணர்வு,  முதலில் தயக்கமாக உள்ளிருந்தது. தகவல்களை உள்வாங்கும்போது அவை வெளிவராது,  ‘ஏதோ சரியில்லை’ என்ற உணர்வாக உள்ளே பரிணமித்து, பய உணர்வாகவே நின்றிருக்கும். தகவல்கள் அவற்றிற்குச் சாதகமாக இருப்பினும், அதிக உறுதியுடன் முடிவெடுக்க முனையாதிருக்கும். தருக்க நிலையில் வெளிக்காட்டப்படாத உணர்வு பூர்வமான அசொளகரிய நிலையாகவே இருப்பதால், பொதுவெளியில் தங்களது பய உணர்வைப் பகிர்ந்துகொள்ள மக்கள் தயங்குகிறார்கள்.

நுண்ணறிவு-2

மூளை சில குறிப்பிடத்தக்க கற்கும் குணங்களைக் கொண்டிருக்கிறது. முதலாவது, நாம்  விரைவாகக் கற்கிறோம். பல நேரங்களில் புதிய ஒன்றை அறிந்துகொள்வதற்கு, சில மேலோட்டமான பார்வைகள் அல்லது  விரல்களின் சில தொடுதல்கள் மட்டுமே போதும். இரண்டாவது, கற்றுக்கொள்ளல் என்பதே, படிப்படியாக நிகழ்கிறது. புதிதாக சிலவற்றைக் கற்குமுன், மூளையை மறு  பயிற்சிக்கு உட்படுத்த வேண்டிய அவசியமோ  அல்லது  முன்பு கற்றதை மறக்கவேண்டிய நிர்ப்பந்தமோ இல்லை. மூன்றாவது, மூளைகள் தொடர்ந்து கற்றுக்கொள்கின்றன. திட்டமிட்டும், செயலாற்றியும் உலகில் நடமாடி வரும் வேளைகளில் கூட, நாம் கற்பதை ஒருபோதும் நிறுத்துவது இல்லை. மாறும் உலகிற்கேற்ப மதிநுட்ப அமைப்புகள் (intelligent systems) இயங்க வேண்டுமானால்,  விரைவு, படிப்படியான உயர்வு, எல்லையற்ற நீட்சி ஆகிய மேற்குறிப்பிட்ட   சிறப்பியல்புகள் கொண்ட கற்றல் அவசியம்.

தேறேன் யானினி

அதிர்ச்சியின் அடுத்த நிலை , தற்காப்பிற்காக தாக்குதல், அல்லது தப்பியோடுதல். இரண்டும் கிடைக்காத நிலையில் , மூளை தடுமாற, அது அமிக்டெலாவின் ஆளுமையிலேயே இருப்பதால், இயலாமை, மற்றொரு உணர்வின் வடிவெடுக்கிறது. கோபம்.  “எனக்கு ஏன் இந்த நிலை?” என்ற கோபம், வேலையை விட்டுப் போகச் சொல்லப்பட்ட இளைஞனை, “இப்படி முடிவெடுத்த அந்த மேனேஜரை… மவனே, போட்டுத் தள்ளணும்” என்றோ “ போர்க்கொடி பிடிக்கிறேன்” என்றோ பேசவும் இயங்கவும் செய்ய வைக்கிறது. அதன் விளைவுகள் எப்படியிருப்பினும், தோற்றுவாய் கோபம் , அதன் முன்னான அதிர்ச்சி. சங்கரி “அந்தக் கடவுளுக்கு ஈவு இரக்கமே கிடையாதா?” என்கிறாள். இந்த  உணர்வுக் கொந்தளிப்பு நிலை  20 நிமிடங்கள் நீடிக்கலாம். பெரும்பாலும் 10 நிமிடங்களில் மூளையின் தருக்கப்பகுதி தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிவிடும். அமிக்டெலா, கொந்தளிக்க வைத்து, கற்கால மனிதனை ஓட வைத்த நிம்மதியில், அடங்கிவிடும்.