எலெக்ட்ரிக் எறும்பு – இறுதிப் பகுதி

நியூயார்க் மாநகர் இரவில் ஒளித் தெப்பமாய் மின்னியது, கலங்கள் சுற்றி எங்கும் திரிந்தன, அதிர்ந்தன, ராத்திரி வானிலும், பகல்களிலும், வெள்ளங்களூடேயும், கடும் வறட்சியூடேயும் பரபரத்தன. வெண்ணெய் உருகி திரவமாக அவனுடைய நாவில் பரவியது, அதே நேரம் மோசமான நாற்றங்கள், சுவைகள் அவனைத் தாக்கின: கசப்பான விஷங்களும், எலுமிச்சைப் புளிப்பும், கோடைப் புற்களின் நுனிகளும் இருப்பதை உணர்ந்தான்.

கல்மேடு

சிறிய உருவம் கொண்ட முதியவரான உள்ளூர்ப் பாதிரியார் மலைகளின் மேல் ஏறிச் செல்ல வேண்டும் என்பது வேடிக்கையான யோசனையாக இருந்ததால், அங்கு நீண்ட சிரிப்பலை எழுந்தது. தந்தை இஜியஸ் அனாவசிய கர்வம் இல்லாதவர்தான். ஆனாலும், சிரிப்பலையால் சற்றே மனம் புண்பட்டாரோ என்னவோ, கடைசியில், விறைப்பாகப் பேச ஆரம்பித்தார், “ஐயா, அவர்களுக்கு அவர்களுடைய கடவுளர்கள் உண்டு.”

ரோந்து

அவன் ஒவ்வொரு ரவையாக வெளியே எடுத்து உள்ளங்கையில் வைப்பான். பிறகு நாயின் நெற்றிப்பொட்டுக்குக் குறிவைப்பான். காலி துப்பாக்கியின் குதிரையை க்ளிக்… ரெண்டடி தூரம். அதன் கண்ணுக்கு இடையேயான குறி. சின்னச் சத்தம், பாதிவழியிலேயே அது தேய்ந்து அடங்கிவிட்டது. வழக்கமில்லாத வழக்கமாய் நாய் மூத்திரம் பெய்துவிட்டது. மற்ற சமயங்களில் அதன் இதயத்தில் அவன் முட்டிவிட்டாப் போல அது நடுங்கும்.

நாசகார வலை

அன்று இரவு வீடு திரும்பியதும் கம்ப்யூட்டரை ஆன் செய்தேன். பிரபல இணையதளம் ஒன்றில் அவள் செய்திருந்த விளம்பரத்தைக் கண்டதும் எனக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. ”ஆரோக்கியமான இளம் பெண்ணின் உடல் உறுப்பு(கள்) விற்பனைக்குத் தயார். கார் வாங்க இருப்பதால், காரை ஓட்டுவதற்கு இடைஞ்சல் இல்லாத வகையில் எந்த ஓர் உறுப்பும் விற்கப்படும். தொடர்பு கொள்ளுங்கள், பேசுவோம்..”

தனிமை

தங்கள் அடுக்கக கட்டட வாயிலை அடைகிறார்கள். உள்வராந்தா இருட்டிக் கிடந்தது. திடுதிப்பென்று, சொல்லப்போனால் யோசனையே இல்லாமல் அவன் தன் கையில் இருந்து கத்தியை வெளியெடுத்தான். அந்தச் சந்தில் தட்டுப்பட்டானே அவன்… ஒருவேளை எங்களைக் கொல்ல முயற்சி செய்திருந்தால்?… என யோசித்தான். கத்தியை நீட்டிக்கொண்டான். ஒரு சுத்து சுத்தி மனைவியைத் தாக்கினான். ரெண்டு முறை, ஒரு டஜன் முறைகள், பைத்தாரத்தனமாய்க் குத்தினான். ஒரு அலறல். மனைவியின் உடல் சரிந்தது.

நன்றி அம்மணி

பையனின் முகத்தில் இருந்து வியர்வை கொப்பளித்தது. அவன் நெளிந்தான். திருமதி ஜோன்ஸ் நின்றாள். அவனை முன்பக்கமாக சுண்டியிழுத்தாள். அவன் கழுத்தில் இறுகப் பிடிபோட்டாள். அப்படியே தெருவில் நெட்டித்தள்ளிப் போனாள். தன்வீடு வந்ததும், அவனை அப்படியே உள்ளிழுத்தாள்.

எலெக்ட்ரீஷியன் நவாப்தீன்

உடைந்த ரேடியோக்களை வாங்கி அவற்றை சரிசெய்து மீண்டும் விற்றான். கடிகாரங்களை ரிப்பேர் செய்யும் தொழிலைச் செய்யக் கூட அவன் தயங்கவில்லை. ஆனால் அத்தொழில் அவன் செய்த தொழில்களிலேயே மிகப்பெரிய தோல்வியைக் கண்டது. வாழ்த்துகளைக் காட்டிலும், வசவுகளையே அதிக அளவில் பெற்றுத்தந்தது. ஏனென்றால் அவன் சரி செய்த கடிகாரங்கள் அதன்பின் எப்போதுமே சரியான மணியைக் காட்டியதில்லை.

எல்லாக் கோடையும் ஒரே நாளில்

ஏழு வருடமாக மழை பெய்கிறது; ஆயிரமாயிரம் நாட்களையும் கூட்டிக் குவித்தால் எல்லாம் மழை, ஒரே நீர்த்தாளம், பீறிக் கொண்டு ஓடும் நீரொலி, அவ்வப்போது இனிமையாக மணிமணியாகச் சிதறும், சில நாள் புயலாக மழை பெய்து பெரும் சுவர்களைப் போல எழுந்து அலைகள் அந்தத் தீவுகளை அறையும். ஆயிரம் காடுகள் மழையில் அழிக்கப்பட்டு, ஆயிரம் காடுகள் மறுபடி எழுந்து மறுபடி அழிந்திருக்கின்றன.

குவாலிடி வீதி

அத்திருமண நாள் விசேஷ நாளாக எஞ்சோவுக்குப் படவில்லை. உற்சாகம் தருவதாக இல்லை. மகளின் முகத்திலும் மகிழ்ச்சியைக் காணோம். இன்னும் கொஞ்சம் அழகாக அலங்காரம் பண்ணிக்கொண்டு பளிச் என்று உடுத்திக் கொள்ளேன் என்று மகளிடம் சொல்லிப்பார்த்தாள். அவள் காது கொடுப்பதாக இல்லை.

பிற மனிதர்கள்

பைசாசம் அவன் உயிரை அக்கக்காகப் பிரித்து எடுத்தது. கணம் கணமாக, படுமோசமான ஒவ்வொரு சம்பவத்தையும். இதெல்லாம் ஒரு நூறு வருடம் நீடித்தாற்போலிருந்தது, இல்லை இல்லை, ஆயிரம் வருடங்கள் போல நீண்டது- அவர்களுக்கென்ன அந்த சாம்பல் நிற அறையில், கால நெருக்கடி என்று ஏதும்தான் இல்லையே, எல்லா நேரமும் இருந்ததே. இறுதியில் அவனுக்குப் புரிந்தது, அந்தப் பைசாசம் சொன்னது சரிதான். உடலால் சித்திரவதைப்பட்டது எவ்வளவோ அன்பாக இருந்தது.

புரிந்து கொள் – 6

என் பெயரை ரெய்னால்ட்ஸ் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே நான் இத்தனை மாறுதல்களையும் செய்து தயார் நிலையில் இருந்தேன். அவனுடைய அடுத்த வாக்கியம் என் அழிப்புக்கான கட்டளையாகத்தான் இருக்க வேண்டும். இப்போது என் புலன்களின் உள்ளெடுப்பு நூற்றி இருபது மில்லி-வினாடித் தயக்கத்துடன் நேர்கிறது. நான் மனித புத்தி பற்றிய என் முந்தைய ஆராய்வை மறுபடி சோதிக்கிறேன், அவன் சாதித்தது சரியாக இருக்குமா என்று தெளிவாகச் சோதிக்கிறேன்.

மாதிரிக் கணிப்பில் பிழையின் எல்லை

“நீ ஒரு பொழுதும் விஞ்ஞான வாழ்க்கையை வாழ விரும்பவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் விரும்பியதை நீ வெறுத்தாய். உனக்கு எப்போதும் குழந்தைகள் வேண்டும். இதெல்லாம்… வேண்டும்.” அவள் குப்பைக்கூளமாக இருந்த முன்புறத்தை சுட்டினாள். டேவிட் சென்று பதினெட்டு மாதங்கள் ஆகிவிட்டன. பணம் அனுப்புகிறான். போதவில்லை.

புரிந்து கொள் – 5

என் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் ஒருவனுடன் கலந்து பேசுவதும், எனக்குத் தோன்றாத ஒரு புதுக் கருத்தை அவனிடம் பெறுவதும், எனக்குக் கேட்காத சுஸ்வரங்களைக் கேட்கக் கூடியவனைக் காண்பதும் எத்தனை இன்பம் கொடுக்கக் கூடிய அனுபவங்கள்! அவனுமே இதைத் தான் விரும்புகிறான். இந்த அறையை விட்டு இருவரில் ஒருவன்தான் உயிரோடு வெளியே போகப் போகிறோம் என்பது எங்கள் இருவருக்குமே மிகக் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

மனிதர் உபயோகம்

மறுநாள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் கானமைட்டுகள் முன்வைத்த புதிய எரிசக்தி குறித்த ஆய்வு அறிக்கைகள் மளமளவென்று குவிந்தன. அத்தனை முடிவுகளும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. மிகமிக மலிவானதொரு விலைக்கு வழங்கப்படும் உலோகத்தாலான சிறு பெட்டிகள் ஓர் அணுமின்கலத்தைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தியை ஓய்வில்லாமல் வழங்கும் என்பதை நம்புவதா கூடாதா என்பதில் எனக்குங்கூட சிக்கலிருந்தது. விலை மிகவும் குறைவென்பதால் ஆளுக்கொன்று வைத்துக்கொள்ளலாம் என்பதுபோல உலகம் முழுக்கப் பேச்சு. பதினேழு நாடுகள் பெட்டிகளை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகளைக் கட்டத் தொடங்கிவிட்டதாகப் பிற்பகல் செய்தி.

மூன்று கனவுகள்

”வெளிய நல்ல மழைப்பா. குளிர் வெடவெடங்குது…” வழக்கம்போல ஒராள் பருவநிலை பத்திப்பேச மற்றவர்கள் கண் தன்னைப்போல ஜன்னல்பக்கம். கிரனோவ் தலையை நிமிர்த்தியபோது கழுத்துச் சுருக்கத்தில் நரம்பு விண்ணென்று புடைத்தது நீலமாய். அப்படியே தலையணையில் பின் சரிந்தார். மருந்தை சொட்டு எண்ணி தம்ளரில் விட்டபோது அவள் உதடுகளை சேஷ்டை செய்தாள். அடர்த்தியான கருங் கூந்தலில் மழை முத்துக்கள். கண்ணின் கீழே நீலமாய் என்ன அழகான நிழல்கள்!

தனிப்பாடல்

வண்ணங்கள் அவன் மனதில் ஓசைகளாய் ஒலித்தன என்பதைய் அவன் கண்டான். கோடைக்காலச் சூரிய ஒளி வீறிடும் சுரம். குளிர்கால நிலவொளி மெலிவான சோகப் புலம்பலொலி. வசந்தத்தின் புதுப்பச்சை கன்னாப்பின்னா தாளங்களில் முணு முணுப்பாயிற்று (ஆனாலும் காதில் விழுந்தது.) இலைகளூடே மின்னித் தெறித்து ஓடும் செந்நரியோ அதிர்ச்சியில் திக்கித் திணறும் மூச்சொலி. அத்தனை ஒலிகளையும் அவன் தன் வாத்தியத்தில் வாசிக்கப் பழகினான்.

புரிந்து கொள் – 4

அண்டப் புளுகை அவிழ்த்து விடும் விளம்பரங்கள் மனிதர் அறிவை முடக்கப் பயன்படுத்தும் உத்திகளைப் போன்ற புத்தியைக் கட்டுப்படுத்தும் சக்திகளை நான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன். முழுக்க உடல் வழியே மட்டும் வெளிப் போகும் அலைவீச்சுகளை நான் கட்டுப் படுத்தி இருப்பதால், பிறரிடம் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி கச்சிதமான மறுவினைகளை உசுப்பி எழுப்ப என்னால் இப்போது முடிகிறது. ஃபெரொமொன்களாலும்(வாசமுள்ள உடல் கசிவுகள்), தசை இறுக்கங்களாலும் என்னால் பிற மனிதரைக் கோபமூட்ட முடியும், பாலுறவுணர்வை அவரிடம் தூண்ட முடியும், பரிவுணர்வை அவரிடம் எழுப்ப முடியும். நண்பர்களாக்கவும், அவர்களை வசப்படுத்தவும் நிச்சயமாகவே முடியும்.

யானை வேட்டை

நிராயுதபாணியான உள்ளூர் வாசிகளுக்கு முன் நான் ஒரு வெள்ளைக்காரனாய், கையில் துப்பக்கியை வைத்துக் கொண்டு இங்கே நிற்கிறேன். பார்ப்பவர்க்கு நான் ஒரு கதாநாயகன். உண்மையில் நான் ஒரு முட்டாள் பொம்மை. என்னை ஆட்டுவிக்கும் கயிறு பின்னால் நிற்கும் மஞ்சள் முக பொம்மலாட்டக்கார்களிடம் உள்ளது! ஒரு வெள்ளைக்காரன் சர்வாதிகாரியாகும் போது அவன் பறிப்பது மற்றவர்களின் சுதந்திரத்தை அல்ல; தன் சுதந்திரத்தை என்று அப்போது அறிந்து கொண்டேன்.

புரிந்து கொள் – 3

ஒரு பயங்கரக் கும்பல் வாஷிங்டன் மாநகரத்து மெட்ரோ ரயில் அமைப்பை வெடி குண்டு வைத்துத் தாக்க்த் திட்டமிட்டிருந்தது சி ஐ ஏ இயக்குநருக்குத் தெரிந்திருந்தது. இருந்தும் அவர் அந்த வெடிகுண்டுத் தாக்குதலை நடக்க விட்டார். அதைச் சாக்காக வைத்து, மிகக் கடுமையான எதிர் நடவடிக்கைகளை அக்கும்பலின் மீது செலுத்த நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவது அவர் திட்டம். இறந்த பல பயணிகளில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் இருந்தான்.

சிவப்பு மை

”திரு வூ? நம்ம எல்லாரும் ஹாயா உட்கார்ந்துகிட்டு அழகழகான பாறைகளையும் மேகக் கூட்டங்களையும் விதவிதமா வரைஞ்சுகிட்டு தாலாட்டிக்கிட்டு, அக்கடான்னு கெடந்தமானா, இந்த ராஜ்ஜியம் என்ன கதியாவும்?”

புரிந்து கொள் – 2

என்னை சிஐஏ மேன்மேலும் சோதனைகள் நடத்துவதற்குப் பயன்படுத்த விரும்பலாம், மற்ற நோயாளிகளையும் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து இப்படியே பயன்படுத்த விரும்பும். அதற்குப் பிறகு வெளியாட்களில் தானாக முன்வருபவ்ர்கள் சிலரை சிஐஏ பொறுக்கி எடுத்து, அவர்கள் மூளைகளுக்குப் பிராணவாயு கிட்டாமல் அடைத்து வைத்து சேதமாக்கி, பின் மீட்டு எடுக்க ஹார்மோன் கே சிகிச்சை அளிக்கும். எனக்கு சிஐஏ உடைய சொத்துப் போலாக விருப்பமில்லை.

புரிந்து கொள்

மோசமான கனாக்கள் வருவது நின்ற பின் நான் கொஞ்சம் ஓய்வெடுக்க முடிந்தது. முதல் மாறுதல் நான் கவனித்தது, நான் படிக்கிற வேகமும், படித்ததைப் புரிந்து கொள்கிற வேகமும் மிகவும் கூடியிருந்தன. சீக்கிரம் ஏதோ ஒரு நாளைக்குப் படிக்க வேண்டும் என்று அலமாரியில் நாட்களாய் தொடாமல் வைத்திருந்த புத்தகங்களை எல்லாம், படிக்கக் கடினமாய் மிக டெக்னிகலாக இருந்த புத்தகத்தை எல்லாம் படித்து முடித்திருந்தேன்.

சிறை எண் – 1

போலிஸ்காரர்கள் உணவகத்தில் தன்னைக் கைது செய்தபோது அவர்கள் பணத்தை எடுத்துக் கொள்வார்கள் என்று தனக்கு தெரியும் என்றும், அதனால் பணத்தைச் சுருட்டி ஆசன வாயில் வைத்துக் கொண்டதாகவும் ஈபோவில் சொன்னான்.“ஜெனரல் அபாச்சாவுக்கு நான் பணத்தை மறைத்து வைத்த சாமர்த்தியம் பிடித்திருந்தது. புது சிறைவாசிகளை அரைமணி நேரம் தோப்புகரணம் போடச் சொனான். என்னைப் பத்து நிமிடத்தில் விட்டுவிட்டான்”

கடைசி வெற்றி

கடந்த ஏப்ரல் மாதம் மறைந்த சிறந்த இங்கிலாந்து எழுத்தாளரான J.G.பல்லார்ட் எழுதிய கடைசிச் சிறுகதையின் மொழிபெயர்ப்பு இது: ”…அவளுடைய இந்த அவமதிப்பால் கோவப்பட்டு, வேகமாக சுவற்றைத் தள்ளினேன். அதுவோ லேசில் பிடி கொடுக்கவில்லை. ஆனால் கைகளை விலக்கிய பின்னரே கவனித்தேன். சுவற்றின் மேல்பரப்பில் உதிர்ந்த சுண்ணாம்புத் துகள்களுக்கு மத்தியில் மெலிதான ஒரு விரிசல்! ஆர்வமாக மீண்டும் தள்ளினேன். விரிசல் பிளவாக அகண்டது. நத்தை வேகத்தில் நகரத் தொடங்கிய பிளவு, பின் புலி போல மேல் நோக்கி பாய்ந்தது. மூன்று அடிகள் நீண்டு, அலங்காரப் பூச்சுகளை எல்லாம் தாண்டி, முதல் மாடியில் உள்ள தடுப்புக் கம்பியை நெருங்கியது.”

ஆகஸ்ட் மாதப் பேய்கள்

அந்த மாளிகைக்கு ஒரு வயதான பாட்டி சரியான வழியைக் காட்டினாள். மாளிகையில் அன்று இரவைக் கழிக்கும் எண்ணமுண்டா என அந்தப் பாட்டி கேட்டாள். அங்கே மதிய உணவுக்கு மட்டும் செல்வதே எங்கள் நோக்கமெனக் கூறி பாட்டிக்கு விடைகொடுத்தோம். `அப்படியென்றால் சரி. ஏனென்றால் அது ஒரு பேய் வீடு` என பயங்காட்டினாள் பாட்டி.

ஹாரிசன் பெர்ஜரான்

2081-ஆம் ஆண்டு. எல்லோரும் ஒருவழியாக முழுமுற்றான சமத்துவத்தை அடைந்து இருந்தனர். கடவுளின் முன்போ, சட்டத்தின் முன்போ மட்டுமே கட்டுப்பட்ட சமத்துவம் இல்லை அது. எல்லா நிலைகளிலும் அனைவரையும் முழுமையாக ஒருமைப்படுத்திய அதிசயம் அது. யாரும் யாரை விடவும் புத்திசாலியாக இல்லை, அழகாகவும் இல்லை. அவ்வளவு ஏன், எந்த ஒருவரும் மற்றவரை விட அதிக வலிமையும், சுறுசுறுப்பும் கூட கொண்டு இருக்கவில்லை.