திருமணம் முடிந்து கல்லூரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு செல்ல தயாராகிக் கொண்டிருந்த சில நாட்களில் அந்த கிராமத்து புகுந்த வீட்டில் புதுப்பெண்ணான என்னை கும்பல் கும்பலாக வந்து வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு நாளில் என் மாமியார் அவர் வயதில் இருந்த இரு பெண்களுடன் வந்தார். அவர்கள் என்னருகில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள் அவர்களில் ஒருவரைக்காட்டி என் மாமியார் என்னிடம் ’’இவளுக்கு ரெண்டு நாளா காய்ச்சலடிக்குது’’ என்றார்.நான் ஆதுரமாக அவர் கையை பற்றிக்கொண்டு ’’அப்படியா நல்ல ஓய்வில் இருந்து உடம்பை பார்த்துக்குங்க’’ என்றதும் என் மாமியாருக்கு வந்ததே கோபம், ’’ஆமா, இதை சொல்லத்தான் நீ இருக்கியா? ஒரு ஊசி போடு சரியா போகும்’’ என்றர். எனக்கு தூக்கிவாரி போட்டது.’’’ஊசியா என்னத்தை சொல்லறீங்க?”’ என்றேன்.
Category: உடல் நலவியல்
மூத்தோர்கள்
கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் 2.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் உருவானார்கள் என்று இன்றைய அறிவியல் கருதுகிறது. இன்றைய மனிதர்களுக்கு ஒப்புமை சொல்லும் வகையில் ஒத்த, உடல் எழும்பி நேராக நிற்கும் (Homo Erectus) விரைப்பானத் தன்மை கொண்ட வகையினர் அவர்கள். தொன்மையான மனிதர்களின் அழிந்து பட்ட உயிரினம் இந்த ‘ஹோமோ எரெக்டக்ஸ்.’ கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து உலகின் பல பாகங்களுக்குப் பயணம் செய்து அவர்கள் பல்வேறு வகையில் ஒத்த இனங்களாக, ஆசியாவில் நியண்டர்தால்களைப் போல் பரிணாம வளர்ச்சி பெற்றார்கள். இன்றைக்கு மூன்று இலட்சம் வருடங்களுக்கு முன் வரை ஹோமோ சேபியன்ஸ் அல்லது இன்றைய நவீன மனிதன் தோன்றியிருக்கவில்லை.
செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி 2
செயற்கைச் சர்க்கரை ரசாயனத்தை நாம் உட்கொண்டால், மூளை குழம்பிவிடுகிறது. ‘ஏராளமான சர்க்கரையை உண்கிறான் இந்த மனிதன்.’ இதைச் சமாளிக்க நிறைய கணையநீரை (insulin) உற்பத்தி செய்கிறது. இப்படி உற்பத்தி செய்யப்படும் அளவுக்குக் கணையநீர் தேவையில்லை. இதனால், அநாவசியமாக உணவைக் கொழுப்பாக மாற்றுகிறது. இதனாலேயே, செயற்கைச் சர்க்கரை ரசாயனம் பயன்படுத்தும் குளிர்பானங்களை அதிகமாக அருந்துபவர்கள் பருமானாகி விடுகிறார்கள்
விஞ்ஞானத் திரித்தல் – ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்
ஆறு வகையான கனிமப் பொருள்களுக்குப் பொதுவான பெயர் ஆஸ்பெஸ்டாஸ். அதிக நார்கள்கொண்ட சிலிகேட்டினால் (silicates) உருவானவை இவை. ஆஸ்பெஸ்டாஸ், மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்தாது. இதனால், பல நூறு ஆண்டுகளாக ஆஸ்பெஸ்டாஸ் ஒரு கட்டுமானப் பொருளாக வெற்றிநடை போட்டது உண்மை.
விஞ்ஞானத் திரித்தல் – டிடிடி பூச்சி மருந்து
டிடிடி எப்படி வேலை செய்கிறது? தெளிக்கப்பட்ட பூச்சியின் மூளையில் உள்ள நரம்பணுவின் சோடியம் சானல்களை, சகட்டு மேனிக்குத் திறந்துவிடும். இதனால், பூச்சியின் பல கோடி நரம்பணுக்கள் ஒரே சமயத்தில் இயங்கத் தொடங்க, அதன் விளைவாக வலிப்பு ஏற்பட்டுப் பூச்சி இறந்துவிடும்.
மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 2
மிக முக்கியமான இன்னொரு விஷயம், சிகரெட் எப்படி ஒருவரை அடிமைப்படுத்துகிறதோ, அதே அளவிற்கு மின் சிகரெட்டும் அடிமைப்படுத்துகிறது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால், சிகரெட் பழக்கத்திலிருந்து நுகர்வோரை விடுவிக்கிறேன் என்று முழங்கி, சந்தைக்கு வந்த மின் சிகரெட்டுகள் இன்னும் அதிக நிகோடினை உடலில் சேர்த்து, மேலும் நுகர்வோரை அடிமைப்படுத்துகிறது.
மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1
அதாவது, இவருடைய பார்வையில் சிகரெட்டில் உள்ள நிகோடின் தேவை. ஆனால், சிகரெட்டின் ஏனைய ரசாயனங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இந்த மற்ற ரசாயனங்கள் நுரையீரல் புற்றுநோய் விளைவிப்பதால், அவற்றிலிருந்து விடுபடவேண்டும். ஹானின் 2001 புரிதலே, இந்த மின் சிகரெட்டின் உருவாக்கப் பின்னணி.
சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 4
1990–ல், அமெரிக்க நீதிபதி சரோகின், சிகரெட் தொழில் மீதுள்ள வழக்கின் முடிவில் மிக அழகாக இவ்வாறு கூறினார் (இதைக் கல்வெட்டாக ஒவ்வொரு ஊரிலும் பதிக்கவேண்டும்):
“நுகர்வோரின் உடல் நலனா அல்லது லாபமா என்ற கேள்வி எழும்போது, சிகரெட் தொழில், மிகத் தெளிவாக இயங்கியுள்ளது.
1. உண்மைகளை மறைப்பதை, நுகர்வோரை எச்சரிப்பதைவிட முக்கியமாகக் கருதுகிறது.
2. விற்பனையைப் பாதுகாப்பைவிட முக்கியமாகக் கருதுகிறது.
3. பணத்தை அறத்தைவிட முக்கியமாகக் கருதுகிறது.
இந்தத் தொழில் தெரிந்தும், ரகசியமாக, நுகர்வோரின் உடல்நலத்தை லாபத்திற்காகப் பகடையாக்குகிறது. சிகரெட் தொழில், உண்மைகளை மறைக்கும் விஷயத்தில் ராஜா.”
சருமம், டாக்டர் மற்றும் முனைவர்
பின்னர் மருத்துவர் தகுந்த பாதுகாப்புடன் உடற்கவசம், முகக்கவசம், முகத்தின் மேல் மற்றுமொரு வெல்டிங் செய்பவர்கள் அணிவது போன்ற பாதுகாப்புக் கவசமென்று அணிந்து உயிரி ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் போரில் கலந்துகொள்ளும் வீராங்கனையைப்போலவும், தமிழ் சினிமாக்களில் வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நிபுணரைப்போலவும் வந்து இருக்கையில் அமர்ந்தார்.
சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 3
சிகரெட் நிறுவனங்கள், தங்களுடைய தயாரிப்புகள் அபாயகரமானவை அல்ல என்று சாதித்து வந்தனர். எட்டு ஆண்டுகள் வரை அமெரிக்க சர்ஜன் ஜென்ரலின் அறிக்கையைத் தங்களுடைய பணபலத்தால் தள்ளிப்போட வைத்தார்கள். 1964–ல் வெளிவந்த அந்த அறிக்கை, தெளிவாக, அமெரிக்கர்களுக்குப் புகைபிடிப்பதால் புற்றுநோய் வரும் அபாயம் இருப்பது அரசாங்கத்தால் தீர்மானமாய் அறிவிக்கப்பட்டது. இதை ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாக எல்லோரும் பார்க்கிறோம்.
சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 2
ஒவ்வொரு சிகரெட்டிலும் உடலுக்குக் கேடான 93 ரசாயனங்கள் உள்ளன. இவை அத்தனையும் சிகரெட் உற்பத்தியால் உருவானதா என்று கேட்டால் ‘பெரும்பாலும்’ என்றுதான் பதில் சொல்லவேண்டும். சிகரெட்டில் உள்ள ரசாயனங்கள், மூன்று படிகளில் உருவாகின்றன.
சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள்
சிகரெட் தொழிலுக்கு, அதன் தயாரிப்பில் மனிதர்கள் அடிமையாவது மிக முக்கியம். ஒரு நாளைக்குப் 12 பாக்கெட் சிகரெட் பிடிப்பேன் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் மனிதர்கள் அதற்கு மிகத் தேவை.
சூரிய ஒளியால் தோலில் நச்சுத்தன்மை ஏற்படுத்தும் மருந்துகள்
சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்கள், குறிப்பாக (320-400) நானோ மீட்டர் அலைநீளம் கொண்ட புற ஊதாக் கதிர்கள்-A (UVA) தோல் செல்களில் உள்ள மூலக்கூறுகளால் உறிஞ்சப்படும்போது நச்சு வினைகளைத் தோல் செல்களில் உண்டாக்குகின்றன.
செவித் திறனிழப்பு
தமிழகத் திருமணங்களில் காதைப் பிளக்குமளவில் ஒலிபெருக்கிப் பெட்டிகளை அமைப்பது சம்பிரதாயமாகிவிட்டது. இதனால் செவித்திறனிழப்பை அடைந்தவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்று நினைக்கிறேன். சென்னையின் தெருக்களில் வாகனங்களின் ஹார்ன் சத்தம் ஓய்வதேயில்லை. சினிமா கொட்டகைகளிலும், கலையரங்குகளிலும், சில சமயம் வீடுகளிலுமே காதை மந்தப்படுத்தும் அளவு சத்தம் நிரம்பியுள்ளது. தொழிற்சாலை ஊழியர்களும் மணிக்கணக்கில் இயந்திரங்களின் சத்தத்தில் இயங்க வேண்டியுள்ளது. தீது விளைவிக்கும் சத்தம் உரோம உயிரணுக்களை நேரடியாகவும் வேறு வழிகளிலும் தாக்குகிறது.
வாழ்வின் இறுதிக் காலங்களில் பிறரைச் சார்ந்திருத்தல்
முதியோர்களின் எண்ணிக்கை இவ்வாறு கூடிக்கொண்டே போவது தொடர்ந்தால் இதனுடைய விளைவுகள் இம்முதியோரைப் பேணும் குடும்பத்தினரையும் நண்பர்களையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் நவீன சமுதாயத்தில் முதியோர்களிடையே விவாகரத்தும், வெவ்வேறு இடங்களில் வசிக்கும் குடும்பத்தினரும், வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போவதால் இவர்களைச் சிறிதளவே சார்ந்திருக்கும் முதியோர்களின் நிலைமை எல்லா நாடுகளிலுமே கடினமாகி வருகிறது….உறவினரல்லாத, பண வசதியற்ற முதியோர்களின் நிலை மிகவும் கடினமான ஒன்று என்பது மட்டுமல்லாமல் சமுதாய சமத்துவமின்மைக்கு முக்கிய மேற்கோளாகவுமாகிறது. அதே சமயம், முதியோரைப் பேணிக் காக்கும் குடும்பத்தினரின் பொருளாதார நிலைமை பாதிக்கப்படும் வாய்ப்புமுள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
குளக்கரை
தமிழ்த் திரைப்படத்தில் வரும் பாலியல் வன்முறைக் காட்சிக்குப் பின், ஒரு பஞ்சாயத்து கூடும். அதில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண்ணை அதை நிகழ்த்தியவன் மணம் செய்துகொள்ள வேண்டும் என்ற (வழக்கமான) விசித்திரமான தீர்ப்புக் கூறப்படும். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு தீர்ப்பை அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகண நீதிமன்றம் அளித்துள்ளது. பாலியல் வன்முறை மூலம் பிறந்த ஒரு குழந்தையை அதன் தாயோடு, அந்த வன்முறையை நிகழ்த்தி அவளைக் குழந்தைக்குத் தந்தையாக்கியவனும் பராமரிக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பு. இது தவறான தீர்ப்பு என்றும், தனது கட்சிக்காரரை இரண்டாவது முறையாக சட்டம் தண்டித்துள்ளது என்றும் அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
நரம்புத் தூண்டல்- மருத்துவ சாதனங்களும் சாதனைகளும்
மின்முனைகளை மூளையின் உட்பாகங்களின் பதிப்பது வலிப்பு, ஸ்கிட்ஸஃப்ரீனியா போன்ற வியாதிகளை கண்டறியவும் சிகிச்சையளிக்கவும் உதவும். சில மூளைபகுதிகளைத் தூண்டினால் வலியுணர்வைத் துண்டிக்கலாம் என்பது தற்செயலாக தெரிய வந்தது. அதன் பின் தலாமஸ் எனும் மூளைப் பகுதியின் பல பாகங்களில் மின் நுனியை பொருத்துவதின் மூலம் மருந்தினால் கட்டுப்படுத்த முடியாத, நீண்ட காலமாகத் தொடரும் வலியைக் குறைக்க முடியும் என்பது தெரிந்தது. … பார்க்கின்சன் வியாதியினால் ஏற்படும் நடுக்கத்தை செரிப்ரல் பெடன்க்குள் எனும் கீழ்ப்பாகத்தை வெட்டுவதின் மூலம் குறைக்க முடியும். ஒரு சமயம் இவ்வறுவை சிகிச்சையை கூப்பர் எனும் அமெரிக்க நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் செய்து கொண்டிருக்கும்போது சிக்கலேற்பட்டு தலாமஸ் பகுதி பாதிக்கப்பட்டது. அதனால் சிகிச்சை முடியுமுன்னரே நிறுத்தப்பட்டது. மயக்கம் தெளிந்த பின் அப்பிணியாளரின் கை நடுக்கமும் இறுக்கமும் முற்றிலும் குணமானது தெரிய வந்தது.
உடல் தடிப்பு- தவிர்ப்பும் நிவர்த்திப்பும்
40லிருந்து 60 வயது உள்ளவர்களிடையே மாதத்தில் ஒரு நாளாவது 10 நிமிடங்கள் விரைவாக நடப்பவர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதமே என்ற ஒரு அறிக்கை. இருந்தும், சிறிதளவு எடையிழபபிறகும் பலன்கள் உள்ளன 5% எடையிழப்பு இன்சுலினுடைய தாக்கத்தை அதிகரிப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது. ஒரு வருடத்தில் 8.6% எடையிழப்பை அடைந்தவர்களிடம்,இரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு, மூன்று மாதத்திய சர்க்கரை அளவு ஆகிய எல்லாமே குறைந்து காணப்படுகிறது. சர்க்கரை வியாதிக்கான அறிகுறிகள் உள்ள நபர்கள் 2.8 வருடங்களில் 5.6 கிலோ எடையை குறைத்தால் சர்க்கரை வியாதி ஏற்படுவதை 58% குறைக்க முடிகிறது. இவர்களை 10 வருடங்கள் தொடர்ந்து கவனித்ததில், மீண்டும் எடை கூடினாலும்,இவ்வியாதி 34% குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.
உடல் மிகு தடிப்பு – காரணங்கள், விளைவுகள்
நான் சென்னையில் வளர்ந்த சமயம், குளிர் சாதனப் பெட்டி உள்ள வீடுகள் மிகக் குறைவே. அதனால், நினைத்தபோது எல்லாம்- பசித்தபோது அல்ல- உணவோ சிற்றுண்டி வகைகளோ கிடைக்காது. சுகாதாரம் பற்றாததால், வெளியுணவுகளைப் பெரும்பான்மையோர் தவிர்த்தனர். பெரிய உணவகங்களில் உண்ணும் பழக்கம் பணப்புழக்கம் அதிகமாக உள்ள ஒரு சிலரிடமே இருந்தது. உடல் வீக்கமும் பண வீக்கமும் சேர்ந்தே இருந்தாலும், அவ்வாறு இருந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இன்றைய சூழ்நிலையைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம்
ஆரோக்கியத்திலும் நோயிலும் குடல் நுண்ணுயிர் சமூகத்தின் பங்கு
தாய்ப்பாலின் வழியாகவும் முதற் சொட்டிலிருந்தே இந்த நுண்ணுயிர்க் கிருமிகள் குழந்தையின் குடலில் அடைக்கலமாகின்றன. எவ்வாறு இந்த நுண்ணுயிர்க் கிருமிகள் தாய்ப்பாலை வந்தடைகின்றன என்பது இன்னும் தெளிவாகவில்லை.. இத்தாய்ப்பாலில் இன்னொரு முக்கியமான அம்சம் என்னெவென்றால் இதில் கலந்துள்ள ஆலிகோசாக்கரைட் எனும் நம்மால் செரிக்க முடியாத சர்க்கரையாகும். வெகு நாட்கள் வரை குழந்தைக்கு தேவையில்லாத இச்சர்க்கரை தாய்ப்பாலில்எதற்காக உள்ளது என்ற கேள்விக்குச் சமீபத்தில்தான் சரியான விடை கிடைத்தது. இதுதான் குழந்தையின் குடலைச் சேரும் நுண்ணுயிர்களுக்கு முக்கிய உணவாகும். தாய்ப்பாலில் குழந்தை வளர்ப்புக்கு வேண்டிய எல்லா பொருட்களும் அடங்கியுள்ளதோடு மட்டுமல்லாமல் நோயின்றி வளர்வதற்கு வேண்டிய நுண்ணுயிர்க் கிருமிகளும் (ப்ரோபயாட்டிக்ஸ்) அவற்றுக்குத் தேவையான உணவும் (ப்ரீபயாட்டிக்ஸ்) அடங்கியுள்ளது என்பதை நினைத்தால் இயற்கை அன்னைக்குத் தலை வணங்காமல் இருக்க இயலவில்லை.