சி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத வாமனாவதாரம் – பகுதி 5

இந்த சூழல் மாற்றமெல்லாம் 12 ஆண்டுகள் விடாப்பிடியாக சில நூறு பிரதிகளுக்குள் சுருங்கி விட்ட ஒரு எளிமையிலும் எளிய முன்னுதாரணம் ஏதுமற்ற ஒரு பத்திரிகையின் விளைச்சல்கள். அது கொணர்ந்த மாற்றங்கள். இன்று மரபுக் கவிதை சென்ற இடம் தெரியவில்லை. இன்று மரபுக் கவிதையை கருணாநிதியும் மறந்தாயிற்று. வைரமுத்து, அப்துல் ரஹ்மான், கனிமொழி எல்லாருமே மறந்தாயிற்று.

பாரதியின் ஆறிலொரு பங்கு – தமிழின் முதல் சிறுகதை

இந்தக் கதையை பாரதி எழுதிய காலகட்டத்தில் அவர் தாகூரின் கதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார், இதன் தாக்கத்தில் எழுதப்பட்ட கதையே “ஆறில் ஒரு பங்கு” என்று குறிப்பிடும் செல்லப்பா, இந்தக் கதையின் தனித்தன்மைகளை நிறுவும் ஆய்வுக் கட்டுரையாக இதை வடிவமைத்திருக்கிறார். மிக நீண்ட கட்டுரையாதலின் சுருக்கித் தருகிறேன்.

பாலையும், வாழையும் – முகப்புரை

சாமிநாதன் ஒரு ‘புரொவகேடிவ்’ விமர்சகர். ஆரம்பத்தில் சொன்னேனே, இந்தக் கட்டுரைகளில் பாலையின் உஷ்ணம் இருக்கிறது. நம்மைச் சுடவும் செய்கிறது. கசப்பான உண்மைகளை நாம் விழுங்க வேண்டி இருக்கிறது. தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் இரண்டிலும் மற்ற கலைத்துறைகளிலும் ஆழ்ந்த அக்கறை எடுத்து அவற்றின் போக்கு, நிலை, சாதனை பற்றி சுய விமர்சனம் செய்து, உரிமையுடன் குந்தகமானவற்றை கடுமையாகச் சாடும் சாமிநாதனது பேனா வரிகள். ‘புலிக்கு தன் காடு பிறகாடு வித்யாசம் கிடையாது’ என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும் கூர்மையிலே யார் யாருக்கோ, எங்கெங்கெல்லாமோ சுடக்கூடும்.

க.நா.சுப்ரமணியத்தின் படைப்பிலக்கியம்

தமிழில் க.நா.சுவின் இடம் என்ன? அவரது இரு நாவல்களும் கலைச்சாதனைகளே. ஆனாலும் தமிழ் புனைவிலக்கியத்தில் அவரது இடம் ஒப்புநோக்க முதன்மையானதல்ல. அவர் விரிவான விமரிசன மதிப்பீடுகளை உருவாக்கியவர். ஆனால் அவரது விமரிசனங்கள் எவையுமே முழுமையான இலக்கிய விமரிசனங்கள் அல்ல. அவரை ஒரு இலக்கிய மையம் என்று கூறுவதே பொருத்தமானது. எல்லா மொழிகளிலும் இம்மாதிரி இலக்கிய மையங்கள் முக்கியமான மாறுதல் கணங்களில் உருவாகி வருவதைக் காணலாம்.

உலக இலக்கியம்

உலக இலக்கியம் என்பது ஒரு இயக்கமாக உருவெடுக்க வேண்டும். அதற்கான வழிவகைகள் என்னவென்று சிந்திப்பது இலக்கிய வட்டத்தின் கடமையாகும். உலகத்தின் எந்த மொழியில் எந்தப் பகுதியில் மிகத் தரமானது, உயர்ந்தது, சிரேஷ்டமானது வந்திருந்தாலும் அது உடனடியாகத் தமிழில் மட்டுமல்ல, தமிழ் போன்ற எல்லா மொழிகளிலுமே வருவதற்கான வழி வகைகள் வகுத்துக் கொள்ள வேண்டும்.

விமரிசனத்தின் நோக்கம்

இலக்கிய விமரிசனத்துக்கான அடிப்படையைத் தருவது நூல்களை அனுபவித்து அனுபவித்துப் பண்பட்ட உள்ளமும் அறிவும்தான். பல்லாயிரக்கணக்கான நூல்களிலே ஒரு பத்திருபது முப்பது நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து அனுபவிக்க விமர்சனம் உதவவேண்டும். விமரிசகன் ஆழ்ந்தும் படித்திருக்கவேண்டும்.- பரந்தும் படித்திருக்க வேண்டும்.

சிறந்த தமிழ் நாவல் “பொய்த்தேவு” – பிரமிள்

‘பொய்த்தேவு என்ற தலைப்பு, ஒவ்வொரு கனமும் மனதில் தோன்றி மறையும் நோக்கங்களைத் தேவர்களாக கடவுளராக ஆக்கி, அவை நம்மை உந்துவதுடன் நமது வீழ்ச்சியுடன் அவை வீழ்வதையும் அர்த்தப்படுத்துகிறது. இந்தப் பயணத்தின் நாயகன்தான் சோமு. நாவலை இந்தக் கோணத்தில் பார்க்கிறபோது ஒரு பாத்திரத்தின் வாழ்வாக மட்டுமல்லாமல் ஒரு சிந்தனை அம்சத்தின் விபரமான சித்தரிப்பாகவும் அதைக் காணலாம். பார்க்கப்போனால் நாவல் சோமுவைப் பற்றியதேதான் என்றே சொல்லிவிட முடியும்.

இலக்கிய விமர்சனம்

கம்பனையும் சங்க இலக்கியங்களையும் பற்றி பற்றி இலக்கியங்கள் வளர்ந்திருக்கின்றனவே தவிர, இலக்கிய விமர்சனம் தோன்றிவிடவில்லை.பாரதியாரைக் கூட தர விமர்சனம் செய்ய இதுவரை யாரும் முன்வரவில்லை என்பது தமிழில் இலக்கிய விமர்சனத்தின் இன்றைய நிலையை நமக்கு நன்கு அறிவுறுத்துகிறது.

மூன்று சிறுகதாசிரியர்கள்

மூன்று கதாசிரியர்களில் லா.ச.ராமாமிருதம் தமிழ்ச் சிறுகதையின் முதல் அலையிலேயே மணிக்கொடிக் காலத்திலேயே தோன்றியவர் — அன்று முதல் இன்று வரை சிறுகதைத் துறையில் உழைத்துப் பாராட்டக்கூடிய அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார். சற்றேறக்குறைய இதே காலக்கட்டத்தைச் சேர்ந்தவர்தான் தி.ஜானகிராமனும். 1950க்கு பின் தோன்றிய நல்ல சிறுகதை ஆசிரியர்கள் இருவரில் ஒருவர் சுந்தர ராமசாமி.

பாரதியார் – இன்றைய எழுத்தாளர்களின் முன்னோடி

பொதுவாக க.நா.சு பாரதியைக் குறித்துப் பேசியதோ, எழுதியதோ இல்லை என்றொரு கருத்து நிலவுகிறது. க.நா.சு கட்டுரைகள் என்ற தொகுப்பில் பாரதியைக் குறித்தும், அவர் நவீனத் தமிழிலக்கியத்துக்கு எப்படி ஒரு முன்னோடியாக இருக்கிறார் என்பது குறித்தும் இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் ஒன்று இக்கட்டுரை. இது அவர் ஒரு கூட்டத்தில் பாரதியின் முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரை.