ஒரு கருப்பினப் பெண்ணாக, வழக்கமாக இத்தகைய மாநாடுகளில் செய்வதைப் போலவே, நீங்கள், அங்கு வந்திருக்கும் நீக்ரோக்களை எண்ணும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நூறு பேர்களுக்கும் மேலானவர்கள் குழுமியிருக்கும் அந்த மாநாட்டில், அவர் பன்னிரண்டாம் நபர். மாநாட்டின் முதல் நாளன்று, நகரும் படிப் பாதையில் நீங்கள் மேலேறிச் சென்று கொண்டிருக்கும் போது, அவர் கீழே இறங்கிக் கொண்டிருப்பதை கவனிக்கிறீர்கள். எந்த சுருக்கப் பெயரால் அவரை அடையாளப் படுத்தலாம் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள். அவரது சிறிய குச்சி முடி, “கவிஞர்” அல்லது “உயர்நிலைப்பள்ளி கணக்காசிரியர்” என்னும் இரு அடையாளங்களுமே, அவருக்கு சமமாக பொருந்துவதாக எண்ண வைக்கிறது.
Category: மொழிபெயர்ப்பு இலக்கியம்
ஏழாவது மலர்
இளம்பருவத்தில் ஒரு கன்று குட்டியின் மீதேறி சவாரி செய்த கதையைச் சொன்ன போது அவள் சிரிப்பில் குலுங்கினாள். வெளிநாட்டில் வேலை தேடிய போது அடைந்த துயரங்களைச் சொன்ன போது அவள் கண்கள் கலங்கின.தன் பத்திரிக்கை துறை அலுவலகத்திலுள்ள நீண்ட கூந்தலை உடைய இளம்பெண்ணின் மீதான காதலைச் சொன்ன போது கீழுதட்டைக் உதட்டை கடித்துக் கொண்டாள்.லேசாக இரத்தம் வந்தது.
உனக்காக உறைபனியில்
அரசவையில் உள்ளோர் மற்றும் உடலுழைப்பு அவ்வளவாகத் தேவைப்படாத பணியைச் செய்து வந்தவர்கள் முழுக்கை கொண்ட உடையையும் விவசாயம், தச்சுவேலை போன்ற பணிபுரிவோர் அரைக்கை ஆடைகளையும் போர்வீரர்கள் போன்ற சண்டையிடுவோர் கைப்பகுதி அற்ற ஆடைகளையும் செய்தொழில் வசதிக்காக அணிந்தனர். அரசவையில் இருந்த முழுக்கை ஆடையோர்க்கு அவர்களின் கைப்பகுதியின் தூய்மை முக்கியத்துவம் பெற்றது. அழுக்காகும் வாய்ப்புகள் குறைவு என்பதால் தனக்கு விதிக்கப்படாத ஒரு பணியைச் செய்தாலொழியக் கைப்பகுதியின் தூய்மை கெடாது எனக் கருதப்பட்டது.
மல்லிகா ஹோம்ஸ்
சென்னை மாதிரியான நகரங்களிலிருந்து வருகிற என்னைப் போன்ற நகரவாசிகளுக்கு, கொஞ்சம் தனிமைப்படுத்தப்பட்டதாகத் தோன்றியது. கோயம்புத்தூருக்கு வெளியே, தம்பூர் சாலையும், தேசிய நெடுஞ்சாலை 181ம், சந்திக்குமிடத்தில், மல்லிகா ஹோம்ஸ் அமைந்துள்ளது. நடுவாந்தரமான நகரத்தை விட்டகன்று, அதன் புறநகர் பகுதிகளுக்குச் சென்றதில், மல்லிகா ஹோம்ஸை உருவாக்கியவர்களுக்கு அதிக இடம் கிடைத்த காரணத்தினால், நாங்கள் பெரிதும் பாராட்டுகிற பல வசதிகளில் அவர்களால் முதலீடு செய்ய முடிந்தது
அல்லாமா இக்பால்
இக்பாலின் ‘இறைவனுக்கு ஒரு கேள்வி’ (ஷிக்வா, புகார்) கவிதை வெளியானபோது அதில் நாத்திகம் ஒலித்தததைக் கண்டு மார்க்க அறிஞர்கள் குழம்பினர். இக்பாலுக்கு இறைவனை நோக்கிக் கேள்வியெழுப்பும் தைரியத்தைக் கொடுத்து எது? எதனால் இக்பால் இப்படி எழுதினார்? என ஐயத்துடன் ‘ஷிக்வா’வை அணுகினர். இக்பாலை இறை எதிர்ப்பாளராகவும் பேசத் தயங்கவில்லை. அதன் பின்னர் ‘கேள்விக்கு பதில்’ (ஜவாப்-ஏ-ஷிக்வா, புகாருக்கு விளக்கம்) கவிதையில் முன்னம் தான் இறைவனை நோக்கிக் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் இறைவன் பதில் அளிக்கும் வகையில் எழுதினார். அந்தக் கவிதைக்குப் பிறகு, இக்பாலின் ஷிக்வா, ஜவாப்-ஏ-ஷிக்வா இரண்டும் இஸ்லாமிய இலக்கியத்தில் சிறந்த படைப்புகளுள் ஒன்றாகப் பார்க்கப்பட்டது
ஜப்பானியப் பழங்குறுநூறு
பழந்தமிழரின் வாழ்வைக்கூறும் நம் இலக்கியங்களைப் போலவே ஜப்பானிய மொழியிலும் இலக்கியங்கள் உள்ளன. நம்மைப் போலவே, புலவர்கள் மட்டுமின்றிப் புரவலர்களும் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். கி.பி. 7ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை ஜப்பானை ஆண்ட பல அரசர்களும் அரசியரும் நிலப்பிரபுக்களும் மதகுருக்களும் இயற்றிய பாடல்களில் சிறந்த 100 பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த சதாய்யே என்ற மன்னர் கி.பி. 1235ல் 百人一首 (Hyaku nin isshu – Verses from Hundred people) என்ற நூலாகத் தொகுத்திருக்கிறார். இவர் இயற்றிய ஒரு பாடலும் 97வது பாடலாக இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.
பிரம்மாஸ்திரம்
’’ஏன் உன்னாலே அது முடியாது?’’ என்றபடி கோபத்தோடு அவளைப் பார்த்து முகம் சுளித்தான் அவன்.
’’உன்னோட கௌரவம் பாழாப் போயிடும்னு நினைக்கிறே அப்படித்தானே? ஹ்ம்…கௌரவம் ! இன்னும்கூட அப்படி இங்கே ஏதாவது மிச்சம் இருக்கா? நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னு உனக்குத் தெரியுதா இல்லியா? நம்ம வீடு எப்படி இருக்கு, குழந்தைங்க நெலைமை எந்த மாதிரி இருக்குங்கிறதெல்லாம் உன் கண்ணிலே படுதா இல்லியா?’’
ஓஷிமா தன்னைச் சுற்றிலும் ஒரு முறை இலக்கின்றி வெறித்துப் பார்த்தாள். வீட்டு நிலவரம்,குழந்தைகள் படும் பாடு இதையெல்லாம் சுற்று முற்றும் பார்த்துத்தானா அவள் விளங்கிக்கொள்ள வேண்டும்?
ஸர்கம் கோலா
குளிர்காலத்தில், சூரியன் மிக விரைவாக அஸ்தமித்துவிடும். மிருதுவான கம்பளித் துணிகளைத் தழுவியபடி, உற்சாகம் தரும் காற்று, கலைக்கூடங் களையும், அரங்குகளையும் நிறைத்திருக்கும். அக்காற்றில் கலந்திருக்கும் மணம், ஆண்மையற்றவர்களை, ஆண்மை நிறைந்தவர்களாகவும், ஆண்மை மிகுந்தவர்களை ஆண்மை குறைந்தவர்களாகவும் மாற்றும் வல்லமை படைத்தது. மக்கள் கலைகளிலும் கலாச்சாரத்திலும் மூழ்கிக் கிடப்பார்கள். கலாச்சாரமும் கலைகளும் மக்களுக்குள் நிறைந்து ததும்பும்.
தபால் பெட்டி
மக்கள் தம்மைச் சுற்றி இருக்கும் பொருட்களை எப்படி கவனிக்கத் தவறுகிறார்கள் என்பது வினோதமான விஷயம்தான். இன்று காலை தான், பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர், என்னிடம் “நான் உங்களை இதற்கு முன்பார்த்திருக்கிறேனா?” என்று கேட்டார். யோசித்துப் பாருங்கள்! நான் அவரது பக்கத்து வீட்டில் பல வருடங்களாக வசித்து வருகிறேன்! ஒருவேளை நான் உருவமற்ற வனோ! இந்த தபால் பெட்டியைப் போல.
கலாஸ்ஸோவை வாசித்தல் – பாகம் I
எழுத்தாளன் முடிக்கும் இடத்தில் வாசகன் துவங்குகிறான். வெளிப்படையான விஷயத்தைப் பெரிதுபடுத்துகிறாய் என்று ஒருவர் முரண்படலாம், ஆனால் இந்த விஷயத்தில் இப்படிச் சொல்வது ஒன்றும் அவ்வளவு மோசமான தேய்வழக்கல்ல.
ஊர்மிளா பவாரின் இரண்டு சிறுகதைகள்
அப்பா அந்த நாளைய ஸ்கூல் மாஸ்டரானதால் ‘அடி’ மாஸ்டராகவே திகழ்ந்தார். ஏதோ அடிப்பார் என்றில்லை. அடிக்க ஆரம்பித்தார் என்றால் தன்னையே மறந்துவிடுவார். எங்கள் ‘வாடி’யில் அவர் ஒருவர்தான் படித்தவர். எவ்வளவு படித்திருக்கிறார் என்று நினைக்கிறீர்கள்? ஏழாம் கிளாஸ் வரை.
சின்னச்சின்ன தாஜ்மஹல்கள்
ஏனோ தெரியவில்லை, தாஜ்மஹால் அவனுக்கு என்றுமே அழகாகத் தோன்றியதில்லை. வெயிலில், அதன் வெண்பளிங்கு கற்களின் கண்களைக் கூசவைக்கும் பிரகாசத்தில், அவன் எப்போதும் அதற்கு முதுகை காட்டியவாறுதான் அமர்வது வழக்கம். மீராவையும் தானே அந்த பிரகாசம் கண்களைக் கூச வைக்கக்கூடும்? ஒருவேளை அவளுக்கு தாஜ்மஹால் அழகாக இருப்பதாகவே தோன்றியிருக்கும்
பள்ளி ஆய்வாளர்
பள்ளி ஆய்வாளர் பதில் பேசவில்லை. இந்த மாதிரி பள்ளிகளை மாவட்டம் முழுவதும் துரத்தித் திரிவது அயர்ச்சியான வேலையாக இருந்தது. அழுக்கடைந்த நகரங்களில், சிதிலமான பகுதிகளில், அவருடைய வாகனம் செல்லமுடியாத தூரத்து மூலைகளில் கிடக்கும் கிராமங்களில். அப்புறம் அந்த பள்ளிக்கூடங்கள் இருக்கும் அவலமான நிலை. இவை எல்லாம் அவருடைய மனதை அழுத்தின. இந்த மூன்று ஆண்டுகளில் இவையெல்லாம் அவருக்குப் பழகிப்போயிருக்க வேண்டும். ஆனால் இல்லை. ஒவ்வொரு பள்ளிக்கூடமும் இப்போதும் வலியேற்படுத்தத்தான் செய்கிறது.
பிற மொழி இலக்கியம் மற்றும் ஈழ இலக்கியம்
தா.நா.குமாரசுவாமி வங்காள மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அவர் மொழிபெயர்த்தபோது கூகிள் போன்ற இந்நாளைய வசதிகள் எதுவுமில்லை. எல்லா அத்தியாயத்திலும் பரிபாடல், திருக்குறள், தேவாரம், பெருங்கதை, திருக்கோவையார், சூளாமணி, கம்பராமாயணம், குறுந்தொகை, பெரியாதிருமொழி போன்றவற்றிலிருந்து ஓரிரு பொருத்தமான வரிகளைச் சேர்த்திருக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பாளரின் வேலை, வெறும் மொழிமாற்றம் மட்டுமல்ல, பிறமொழி வாசகனுக்கும், ரசனை கெடாமல் அந்த படைப்பைக் கொண்டு சேர்ப்பது என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த புத்தகம்.
சாவைப் படைத்த எழுத்தாளன்
‘என்னால வர முடியும்னு தோணலைப்பா!’ அவர் சன்னமாகச் சொன்னார், சிறுமையைத் தரித்தவராகத் தெரிந்தார். ‘அந்த ஜன்னல் வழியே நான் பார்த்தால், எனக்குத் தெரியறதெல்லாம் இரண்டு பரிமாணத்தில்தான் இருக்கிறது.’
நாங்கள் திரும்பி, இருவருமாக அங்கே பார்த்தோம். வெளியே ஒளி மங்கிக் கொண்டிருந்தது. ‘அது கூட அத்தனை கிடையாது,’ என்றார் அவர். ‘எனக்கு ரெண்டே வாக்கியங்கள் தான் கிடைக்கிறது. “வெளியே குளிராக, சாம்பல் நிறமாக, தட்டையாகத் தெரிந்தது.” அடுத்து, “சில இலைகள் ஆடி அசைந்து அந்த மரத்திலிருந்து மெதுவாகக் கீழே அந்த நடைபாதை மீது விழுந்தன, அவை பழுப்பாகவும், தங்க நிறமாகவும், செத்துப் போனதாகவும் இருந்தன.” அவ்வளவுதான்.’
என் தலைக்கான கொன்றை
நடந்து முடிந்திருந்த இறுதிச் சடங்குகள் அங்கிருந்த எல்லாரையுமே அசதிக்கு ஆளாக்கி இருந்தன. அந்த வீட்டிலிருந்த மிகவும் வயது குறைவான பெண்ணும் கூட சீக்கிரம் தூங்கப் போகலாமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் படுக்கையில் படுத்திருந்தபடி நல்ல முழு விழிப்போடு இருந்த லெண்டினாவோ, தான் செய்ய வேண்டிய அடுத்த காரியத்தைப் பற்றித் திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். புதைகுழிக்காகத் தேர்ந்தெடுத்த இடத்தில் ஒரு கொன்றை மரத்தை நடவேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாள்.
விரோதிகள்
“ இது ஒரு வேதனைமிக்க சூழ்நிலை! நமக்குப்பிடித்தமானவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போய்விடுவார்கள் என்ற அபாயத்தில் இருக்கும்போது அவர்களை நாம் நேசிப்பதைப்போல நாம் அவர்களை ஒருபோதும் அதிகமாக நேசிப்பதே இல்லை.”
ஆற்றுக்குக் குறுக்காக வண்டி சென்று கொண்டிருந்தது. தெறித்த தண்ணீரால் தான் பயப்படுவதைப்போல அப்படியும் இப்படியுமாக நெளிந்தான் அபாஜின்.
“கொஞ்சம் பார்— என்னை விட்டுவிடேன்…” என்று பரிதாபமாகச் சொன்னார் கிரிலோவ்.
இவர்கள் இல்லையேல்
உடல் ஒத்துழைத்தவரை, அம்மா தன் கடைசி மகனை கூட்டிக்கொண்டு ராம்வன் சென்று, அங்கு சில நாட்கள் தங்கியிருந்துவிட்டுவருவார். திரும்பி வந்ததும் மிகவும் சந்தோஷமாக சொல்வார் – பாவம், இந்த பைத்தியக்காரனின் தலையெழுத்தில் நல்ல சாப்பாடு என்பது எழுதப்படவேயில்லை.
பிபூதிபூஷணின் மின்னல்
பஞ்சத்தை எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்த கிராமத்தினர், பட்டினி கிடந்து ஒருவர் செத்தும் போகக்கூடும் என்ற அதிர்ச்சியான உண்மையை நேருக்கு நேர் பார்க்கிறார்கள். அந்தச் சாவுதான் பின் நிகழப்போகவிருக்கும், பெருமழைக்கான, பிரளயத்துக்கான முதல் மின்னல் அறிகுறி.
விமான தளத்தை விற்ற சிறுவன்
டெம்சுலா ஆவ்- இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான ஷில்லாங்கைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆங்கிலப்பேராசிரியர். பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் இவர், சாகித்திய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தவர். வடகிழக்கு மாநிலங்களுக்கே {அஸ்ஸாம்,நாகாலாந்த், மேகாலயா போன்றவை}உரிய வித்தியாசமான தனிப்பட்ட பிரச்சினைகளில் பெரும்பாலும் கவனம் செலுத்துபவை இவரது படைப்புக்கள். சாகித்திய அகாடமி பரிசு பெற்ற இவரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பிலிருந்து [LABURNUM FOR MY HEAD] தமிழில் மொழியாக்கம் …
மின்னல் சங்கேதம் – 6
ஒருவேளை குண்டு மஷாயிடம் விலைக்குக் கொஞ்சம் கிடைக்கும் என்று அவரிடம் நபீனை அழைத்துச் சென்றார். அங்கேயும் அதே கதைதான். கடைக்குள் நுழையும்போது இடப்புறம் திரும்பிப் பார்த்தான். அங்கே மூங்கில் திண்ணை மேலே அரிசி மூட்டைகள் கூரை வரை அடுக்கியிருக்கும். இப்போது அங்கே காற்றாடிக்கொண்டிருந்தது.
மின்னல் சங்கேதம் – 5
ராதிகாப்பூர் சந்தையில், நிறைய மக்களின் கண் முன்னாலேயே, பாஞ்சு குண்டுவின் கடை கொள்ளையடிக்கப்பட்டது. இப்படி பட்டப்பகலில் இது போன்றதொரு சம்பவம் இதற்கு முன் இப்பகுதியில் நிகழ்ந்ததில்லை. கங்காசரணும் அப்போது அக்கடையில் பொருட்கள் வாங்கச் சென்றிருந்தான். கூரை வேயப்பட்ட அந்தக் கடை பெரியது. ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் நின்றிருந்தது. மக்கள் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று அந்த சம்பவம் நிகழ்ந்தது. கடையைச் சுற்றி கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை என்னவென்று புரியாமல் திகைப்போடு கங்காசரண் பார்த்தான். மக்கள் ஓலமிட்டுக்கொண்டு கடைக்கு உள்ளேயும் வெளியேயும் ஓடிக்கொண்டிருந்தார்கள். பலர் திருட்டுப் பொருட்கள் நிறைந்த மூட்டைகளையும், கூடைகளையும் எடுத்துக்கொண்டு வயல்வெளிகளைத் தாண்டி ஆற்றங்கரையோரமாக ஓடிக்கொண்டிருந்தார்கள்.
கவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்
இவர் வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டச் செயற்பாடுகளில் ஆரம்பத்தில் தன்னை ஈடுபடுத்தியிருந்தாலும் பின்னர் அதிலிருந்து தன்னை முற்றாக விடுவித்து ஆன்மீகம் மற்றும் மெய்யியல் சார் விடயங்களுக்குள் அதிகமாக ஈடுபடுத்திக்கொண்டார். இந்தியா மற்றும் வங்கம் ஆகிய இரு நாடுகளினதும் தேசிய கீதங்களைப் படைத்தை பெருமையும் இவரையே சாரும்.
வி. ராமஸ்வாமி: நேர்காணல்
1. உங்கள் பின்னணி பற்றி கொஞ்சம் பகிர்ந்துகொள்ள முடியுமா? நீங்கள் எப்போது வங்க இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கினீர்கள்? நான் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றேன், அதன் பிறகு கல்கத்தாவின் வீடற்றவர்களின் வீட்டு உரிமைகளுக்காக சமூக செயற்பாட்டில் என்னை நான் அமிழ்த்திக் கொண்டேன். உயர்நிலை வகுப்பு, கல்லூரி, பட்ட மேற்படிப்பு “வி. ராமஸ்வாமி: நேர்காணல்”
நீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை
மதவெறியாலும் சுயநலத்தாலும் இயக்கப்பட்டு இந்த விரோதம் பகிரங்க யுத்தமாக ஆக நேரமாகவில்லை. ‘முஸ்லீம் குடியானவர்கள் ஆனந்தமயீ கோயிலுக்கடுத்த நிலத்தில் தொழுகை நடத்தப் போகிறார்களாம்.’ அது மசூதியல்ல. அது ஒரு பண்டைய கால இடிந்த கோட்டை – அது ஈசாகானுடையதாக இருக்கலாம் அல்லது சாந்தராயோ கேதார்ராயோ கட்டியதாகவுமிருக்கலாம். அந்த இடததில் தொழுகை நடத்தும்படி முஸ்லீம்கள் தூண்டப் படுகிறார்கள்.
…. நாவல் முன்னேற முன்னேற இன்னும் பல அழகிய காட்சிகள் தம் கண் முன்னே விரிகின்றன. தர்முஜ் வயல், பாக்குப்பழம், சீதலக்ஷா நதியின் நீர், அந்த நீருடன் உவமிக்கத் தக்க வானத்தின் பிரவாகம், பறவைகளின் கூட்டிசை, மிருகங்கள்… அது ஒரு தனி உலகம்.
தமிழில் வங்க எழுத்துகள்
தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகளும் படைப்பாளர்களும் வெள்ளை உறை (வங்க நாவல்): மோதி நந்தி – லக்ஷ்மி நாராயணன் (சாகித்திய அகாடெமி) மணி மகேஷ் (வங்காள பிரயாண நூல்) : உமா பிரசாத் முகோபாத்தியாய் – எஸ். கிருஷ்ணமூர்த்தி (சாகித்திய அகாடெமி) சாம்பன் (வங்க நாவல்) : சமரேஷ் “தமிழில் வங்க எழுத்துகள்”
பால் டம்ளர்
நம் மொழிபெயர்ப்பாசிரியர் ராஜி அவர்கள், சில சமுதாயப் பிரச்னைகளை வித்யாசமாக அலசித் தெலுங்கில் அற்புதமாக எழுதிப் பல வாசகர்களைக் கவர்ந்த சிறப்பான சிறுகதைகளையே தம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு தமிழில் மிக நுண்ணிய முறையில் தம் உயரிய எழுத்தால் செதுக்குகிறார்.
கத்திகளின் மொழி
உடலின் சுத்தம் மிகவும் முக்கியமானது. ஒரு சிறு கண்ணீர்ச் சொட்டு அந்தப் படையலைக் கெடுக்கக்கூடும். ஒற்றை முடிகூட கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்படும் அந்த ஆத்மாவைக் குலைக்கக்கூடும்.…
“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”
மிகச் சிறிய இடத்தில் எழுத்தாளர் திலீப் குமாரும் ராமகிருஷ்ணனும் சிகரெட் புகைசூழ வேலை செய்துகொண்டிருப்பார்கள், நானும் என் மாமாவும் அடுத்த அறையில் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருப்போம். க்ரியா ஒரு கண் திறப்பு அனுபவமாய் இருந்தது. அங்குதான் நான் சுந்தர ராமசாமியின் புத்தகங்களையும் ஸ்ரீராமின் மொழியாக்கங்களையும் அறிந்துகொண்டேன். தார்கோவ்ஸ்கியின் Sculpting in Time என்ற புத்தகத்தின் தமிழாக்கமும் அங்கேதான் கிடைத்தது.