மொழியென்னும் ஆடி

ஆதிமந்தியார்,ஊண்பித்தை,ஓரிற்பிச்சியார்,காமக்கணிப் பசலையார், காவற்பெண்டு,குமிழிஞாழலார் நப்பசலையார் மற் றும் குறமகள் இளவெயினி ஆகியோரின் பாடல்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். இவர்கள் ஒவ்வொருவரும் ஒருபாடல் எழுதியுள்ளார்கள். சங்கப்பாடல்களில் துணங்கை கூத்து என்ற கூத்தினைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பெண்கள் கைக்கோர்த்து ஆடும் நடனம் என்று சொல்லப்படுகிறது. திருவிழாவில் தேர்வலம் முடித்த மாரியம்மன் கோவில் “மொழியென்னும் ஆடி”

எலிசபெத் பிஷப்: இரு மொழிபெயர்ப்புகளும் சில குறிப்புகளும்

நண்பர் “காத்திருப்பு அறையில்” கவிதை தனக்குப் புரியவில்லை என்று பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டிருந்ததை. அதன்பின் சிறிது நேரத்திற்கு அக்கவிதையைப் பற்றி கதைத்துக் கொண்டிருந்தோம். உள்ளே / வெளியே குறித்து, சுயத்தை முதன்முதலில் அடையாளம் கண்டு கொள்ளும் தருணம், கவிதையின் தரவு முரண்பாடுகள், முதல் வாசிப்பைக் காட்டிலும் அதை சுவாரசியமாக்கிய பிஷப்பின் சில சரிதைத் தகவல்கள் என்றெல்லாம் பேசிவிட்டு

மார்க் தெரு கொலைகள் – 1

This entry is part 1 of 5 in the series மார்க் தெரு கொலைகள்

பகுத்தாயும் திறன் (analytical ability) இருக்குமிடமும், அதன் அங்கம் பற்றியும் அத்தனைத் தெளிவாக அறிய முடியாவிடினும், மண்டை ஓடு மற்றும் மூளைத் திறன் அறிவியல் (Phrenological Science) எடுத்து வைக்கும் சில அடிகள், இருத்தலியலை நம்பச் செய்துவிடும் என்பது சாத்தியமற்ற ஒன்றல்ல. இந்த பகுப்பாய்வுத் திறனை விளக்க முடியலாம், சிந்தனைகளின் அங்கமென வரையறை செய்வது கடினம்; முந்தைய மெய்யியலாளர்கள் சொன்ன இலட்சியத்தின் முக்கிய அங்கமாக இதைக் கொள்ளாவிடினும், இது இயல்பில் அமைந்துள்ள பழைய திறன் எனச் சொல்வதற்கு நல்ல காரணங்கள் உள்ளன

ஆ. ராஜம்மா எழுதிய நாவல் சம்பகமாலினி

1929ல் பிரசுரமான சம்பகமாலினி என்ற நாவலை எழுதிய ஆ ராஜம்மா அப்போtது திருவல்லிக்கேணி லேடி வெல்டிங்டன் பயிற்சிக் கல்லூரியில் சமஸ்கிருத ஆசிரியையாக இருந்தார். சமஸ்கிருதம், கன்னடம் இரு மொழிகளிலும்    சந்திரமௌலி, மதுவன பிரசாதம் முதலிய படைப்புகளை செய்திருந்தார். சம்பகமாலினி ஒரு வரலாற்று நாவல், ஜனமஞ்சி சுப்ரமண்ய சர்மா இந்த நாவலை எடிட் செய்தார். ஆந்திர நாரிமணிகளுக்கு இந்த நாவல் அர்ப்பணம் செய்யப்பட்டது. உயர்ந்த குடும்பத்தில் பிறந்த பெண்களானாலும் பிற பெண்களானாலும் அவர்களுக்கு உள்ள சுதந்திரத்தை சாமர்த்தியத்தோடு உபயோகித்துக் கொள்ள வேண்டும் என்பது இந்த நாவலின் நோக்கம். அவ்வாறு உபயோகித்து கொண்டு வெற்றியடைந்த இரு பெண்களின் கதை இந்த நாவல். அவர்கள் தாயும் மகளுமாக இருப்பது சிறப்பு.

இந்தியத் தொன்மத்தின் மனவெளியில்

This entry is part 2 of 3 in the series ரொபெர்ட்டோ கலாஸ்ஸோ

அனைத்திற்கும் முன்னே வருவது “மனஸ்”. அதற்கோ தான் இருக்கிறோமா இல்லையா என்பதுகூட தெரியாது. ஆதித்தருணத்தின் கடவுள், அதற்கு முதலில் பெயர் கூட கிடையாது, வெறும் “பிரஜைகளுக்கெல்லாம் அதிபதி” என்ற பட்டம் மட்டுமே. ஆனால் இதைக்கூட இந்திரன் பிற்காலத்தில் அதனிடம் “உங்களைப் போல் நான் ஆவதெப்படி” என்று கேட்கையில்தான் அது உணர்ந்து கொள்கிறது.
“ஆனால் நான் யார் (க)” என்ற கேள்வியுடன் பிரஜாபதி பதிலளிகிறார்.
“அதேதான், தாங்கள் தங்களை எவ்வாறு அழைத்துக் கொள்கிறீர்களோ அதுதான் நீங்கள், நீங்கள்தான் யார் (க) ” இந்திரன் பதிலளிக்கிறான். ஆக, பிரஜாபதி “க” வாகிறார்.

நடவுகால உரையாடல் – சக்குபாய்

ஆதிவாசி சமூகத்தவரான சக்குபாய் காவித் தஹானு தாலுகாவிலுள்ள பந்த்கரைச் சேர்ந்தவர். சிறு விவசாயிகளுக்காகவும் நிலமற்ற கூலித்தொழிலாளர்களுக்காகவும் போராடி வரும் கஷ்டகரி சங்கட்டனா (பாட்டாளிகள் சங்கம்) என்ற மக்களமைப்போடு கடந்த பத்தாண்டுகளாகப் பணியாற்றி வருபவர். அவரது கிராமத்தில் `சங்கட்டனா’ உருவாகுவதற்கு சக்குபாய்தான் ஊர் மக்களின் ஆதரவைப் பெற்றுத்தந்தார்.

கலாஸ்ஸோவை வாசித்தல் – பாகம் I

This entry is part 1 of 3 in the series ரொபெர்ட்டோ கலாஸ்ஸோ

எழுத்தாளன் முடிக்கும் இடத்தில் வாசகன் துவங்குகிறான். வெளிப்படையான விஷயத்தைப் பெரிதுபடுத்துகிறாய் என்று ஒருவர் முரண்படலாம், ஆனால் இந்த விஷயத்தில் இப்படிச் சொல்வது ஒன்றும் அவ்வளவு மோசமான தேய்வழக்கல்ல.

நாங்களும் படைத்தோம் வரலாறு

என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். தலித் சமூகத்தைச் சேர்ந்தவள் நான். என் அம்மாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. கொங்கண் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமம்தான் என் பூர்வீகம். என் அப்பா ஆறாம் வகுப்பு வரைதான் படித்திருந்தார். என் கிராமத்திலிருந்தவர்களோ அவர் பெரிய படிப்பு படித்திருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் ஆறாம் வகுப்பு படித்திருந்தாலே போதும், வேலை கிடைத்துவிடும். எனவே அவர் ஓர் ஆசிரியராக இருந்தார். அத்துடன் எங்கள் இனத்தில் நடைபெறும் திருமணங்களை முறைப்படி நடத்தி வைப்பார்.

பேரா.சுந்தரனார் விருது

This entry is part 10 of 10 in the series கி.ரா. - அ.ரா.

தனிக் கார் ஒன்றில் பயணம் செய்து நெல்லைக்கு வரும் ஏற்பாட்டிற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனைக்காகச் சென்றபோது “இப்போது பயணம் செய்வது நல்லதல்ல; முடிந்தால் ரயில் பயணம் மேற்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டதாகவும், உடனடியாக ரயிலில் சிறப்பு இருக்கைகள் பெற இயலவில்லை; எனவே மகன் பிரபியும் கழனியூரனும் வருகிறார்கள்; மன்னிக்கவும்” என்று தொலைபேசியில் சொல்லிவிட்டார்.

கிராவின் திரைப்பட ரசனை

This entry is part 9 of 10 in the series கி.ரா. - அ.ரா.

புதுச்சேரியில் இருந்த காலத்தில் அவருடன் நடைபோவதற்குப் புதுப்புது இடங்களைத் தேடிச் செல்வதுண்டு. அப்படித்தான் இப்போது கருவடிக்குப்பம் மயானத்தோப்புக்குள் ஒருநாள் நுழைந்தோம். நூற்றாண்டைத் தாண்டிய மரங்கள் அடர்ந்த வனமாக இருக்கும் சுடுகாட்டை நான் வேறெங்கும் கண்டதில்லை. அந்த வனத்திற்குள் தான் தமிழ் நாடகத்தின் தந்தையென அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் கல்லறை இருக்கிறது.

”சிறுகதையை அப்படியே நாடகமாக்க வேண்டும் என்று அவசியமில்லை.”

This entry is part 8 of 10 in the series கி.ரா. - அ.ரா.

அதிகமான நிகழ்வுகளை அடுக்கும் வடிவமல்ல. குறைவான நிகழ்வுகளை முன்பின்னாக அடுக்குவதன் மூலம் தன் வடிவத்தை உருவாக்கிக்கொள்வது சிறுகதை. சிறுகதை வடிவத்தில் கதைசொல்லியாக ஒரு பாத்திரம் கதைக்குள்ளோ, அல்லது வெளியிலோ இருக்கும். அதனைக் கண்டறிந்து தூக்கிவிட முடிந்தால் நாடகப்பிரதியுருவாக்கத்தின் பாதிவேலை முடிந்துவிடும். பல்லக்குத்தூக்கிகளில் அதைத்தான் செய்தேன். பல்லக்குத் தூக்கிகளைப் பற்றிய வருணனை, சித்திரிப்பு மூலம் அவர்களைப்பற்றியதொரு விலகல்நிலைக் கருத்துக்களை உருவாக்குவனாகக் கதைசொல்லியின் பாத்திரம் இருக்கும்.

கி.ரா நினைவுக் குறிப்புகள் – 32-33

This entry is part 7 of 10 in the series கி.ரா. - அ.ரா.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வண்ணதாசன், கலாப்ரியா, விக்ரமாதித்யன் போன்றவர்கள் தங்களின் நிலப்பரப்பிலிருந்து வந்த முன்னோடியாகக் கி.ராஜநாராயணனைக் கொண்டாடியதை நேரில் கண்டிருக்கிறேன். இவர்களில் பலரும் கி.ரா.வைப் பார்க்கப் புதுவைக்கு வந்து போவதுண்டு. அவர்களில் ஒருசிலரின் வருகையின்போது நானும் உடன் இருந்திருக்கிறேன்.

கி.ரா நினைவுக் குறிப்புகள் – 31

This entry is part 6 of 10 in the series கி.ரா. - அ.ரா.

எனக்கு எதையும் நேரடியாகச் சொல்லியே பழக்கம். இலக்கியம் மற்றும் கருத்தியல் சார்ந்த விவாதங்களை நேரடியாகச் சொல்லிவிடுவேன். அப்படிச் சொல்லிவிடுவது திறனாய்வாளனின் அடிப்படையான குணம் என்ற நம்பிக்கை எனக்கு இப்போதும் உண்டு. இந்தப் பழக்கத்தைக் கவனித்த கி.ரா., ஒருநாள், ‘ராம்சாமி.. நீங்க எதையும் பட்பட்டென்று போட்டு ஒடைக்கிறீங்க.. அப்படி ஒடைக்கிறதெ “கி.ரா நினைவுக் குறிப்புகள் – 31”

கி.ரா நினைவுக் குறிப்புகள் – 30

This entry is part 5 of 10 in the series கி.ரா. - அ.ரா.

ரயிலடியில் தொடங்கி ஒரு சதுரத்தில் சின்னச்சின்னத் தெருக்களில் இரட்டைக்குடியுரிமை கொண்ட ஸ்வொல்தாக்களின் வீடுகள் உண்டு. அந்தப் பகுதியில் இருப்பவர்கள் இன்னும் பிரெஞ்சுக்குடியுரிமை பெற்றவர்கள். அவர்களின் முன்னோர் பிரெஞ்சு ராணுவத்தில் பணியாற்றி அங்கேயே தங்கியிருப்பார்கள். அவர்களின் வாரிசுகள் தங்களைப் பிரெஞ்சுக் குடிகளாக க்கருதிக்கொள்வதில் பெருமைகொள்பவர்கள். அந்த குடும்பத்தில் பெண்ணெடுத்துத் திருமணம் செய்துகொள்ளும் ஒருவர் இப்போதும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்று பிரான்ஸுக்குப் போய்விடலாம். அந்த வசதியைப் பெற்றவர்களேயே ஸ்வொல்தாக்கள் என்று அழைப்பார்கள்.

”பிராமணர்களிடமிருந்து கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கில்ல”

This entry is part 3 of 10 in the series கி.ரா. - அ.ரா.

நாங்கள் செய்யும் தலித் நாடகங்கள் பற்றிக் கேட்கத் தொடங்கினார். இதெல்லாம் தமிழ்நாட்ல இப்பத்தானே பேசத் தொடங்கிறோம். இலங்கையிலெ எப்பையோ ஆரம்ப்பிச்சுப் பேசிட்டாங்க. மல்லிகையின்னு ஒரு பத்திரிகை; அதன் ஆசிரிய டொமினிக் ஜீவாதான் அதில் முன்னோடி. அப்புறம் கே.டேனியல். அவர்களோடு நட்புடன் இருந்து பேசிய தளையசிங்கம் என அரைமணி நேரம் தொடர்ந்தார். தலித் இலக்கியம், தலித் நாடகம் என்ற சொல்லாட்சி மட்டும் தான் நம்முடையது. தொடக்கமும் செயல்பாடுகளும் அங்கதான்

கி.ரா – நினைவுக் குறிப்புகள்

This entry is part 2 of 10 in the series கி.ரா. - அ.ரா.

இதே தன்மையில் உருவானதல்ல கதைசொல்லி என்னும் கலைச்சொல். Performance, Narrative என்ற இரண்டு ஆங்கிலச் சொற்களை அரங்கியல் பலவிதமாகப் பயன்படுத்தத் தொடங்கிய நவீனத்துவ காலகட்டத்துக் கலைச்சொல் சொல்லுதலை நிகழ்த்துதலாக மாற்றிய காலகட்டத்தின் தேவையை உணர்த்தும் சொல். நிகழ்த்துதல் கோட்பாடு..
என்னும் அரங்கியல் சிந்தனையின் வழியாக இலக்கியவியலுக்குள் நுழைந்த அச்சொல்லுதலின் தீவிரம் எல்லாவற்றையும் நிகழ்த்துதலாக்க நோக்கத்தோடு இணைத்தது. நிகழ்த்துதலுக்கேற்ப சொல்லப்படும் மொழியின் பண்புகளும் அடுக்குகளும் மாறவேண்டும் என்று வலியுறுத்தியது.  

கி ரா : நினைவுகள்

This entry is part 1 of 10 in the series கி.ரா. - அ.ரா.

இளங்கலையில் முதல் இடம் பிடித்ததற்காக அந்த ஆண்டு கல்லூரி விழாவில் பரிசு கொடுப்பார்கள். மீனாட்சி புத்தக நிலையம் சென்று 30 ரூபாய்க்குள் நூல்களை வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டுப் போனார் பேரா.கி.இளங்கோ. அதற்கான ஒரு சீட்டும் கொடுத்தார். அதனை எடுத்துக் கொண்டுபோய் கிராவின் கிடை, பூமணியின் ரீதி, ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் வாங்கிக் கொண்டுவந்தேன். எனக்கேயான புத்தகங்கள் என்று வாங்கிய முதல் மூன்று புத்தகங்கள் அவை

காவிய ஆத்மாவைத் தேடி… -3

This entry is part 3 of 3 in the series காவிய ஆத்மாவைத் தேடி

‘ரஸம்’ என்ற கொள்கையிலும் சிருங்கார ரஸமே பிரதானம், சிகரம் என்பது போஜன் கருத்து. இந்த ஒற்றை ரஸமும் உண்மையில் ஒரு சேதனனுள் (அறிவுள்ள மனிதனுள்) ஒரு ரசிகனுள், ஒரு கவிஞனுள், ஒரு பண்பட்ட மனிதனுள் எழுகின்ற சாத்விக அஹங்காரமே என்பது போஜராஜனின் புதுவகையான உளவியல் சார்ந்த அழகியல் கருத்து. இந்த ஒற்றை அடிப்படை அஹங்காரமான சிருங்காரம் எட்டு தலைகளுள் ஒன்றான, ஆண் பெண் விழைவான இன்பச் சுவையைக் குறிக்காது.

காவிய ஆத்மாவைத் தேடி… – 2

This entry is part 2 of 3 in the series காவிய ஆத்மாவைத் தேடி

ஒரு கவிதை வரி வருகிறது. ‘சந்தனுவுக்குக் கங்கையில் வீடு’ என்று. சந்தனு பற்றி மகாபாரதம் மூலமாகத் தெரிந்துள்ளதால், கங்கையை மணந்தவன் சந்தனு என்று நாம் பெற்ற இதிகாசப் படிப்பறிவால், சந்தனுவுக்குக் கங்கைக் கரையில் வீடு என்ற இலக்கணப் பொருளை விட மூன்றாவது விதமாக ஒரு பொருள் நமக்கு ஸ்புரிக்க முடியும். அதாவது ‘கங்கையைத் தன் மனைவியாகக் கொண்டவன்’ என்று. இந்தப் பொருளை ‘கங்கையில் வீடு’ என்ற சொற்றொடர் நேரிடையாகவோ, தொடர்பு முறையாகவோ – அபிதையாகவோ, இலக்கணையாகவோ உணர்த்தாது. படிப்பவருடைய இதிகாச அறிவு, சொல்லப்பட்ட பெயர், சொல்லவந்த பொருளின் முன் பின் தொடர்ச்சி, சூழல் இவற்றையெல்லாம் பொருத்து, தேர்ந்த ரசனை உணர்வு காரணமாக, சொல்லாமல் சொன்ன பொருளாக, படிப்பவர் மனத்தில் பட்டெழுகின்ற பொருளாக அறியக் கிடக்கும். இந்த அர்த்தத்திற்கு ‘த்வனி’ என்று பெயரிட்டார் ஆனந்தவர்த்தனர்.

ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை

This entry is part 2 of 48 in the series நூறு நூல்கள்

ஷோபாசக்தியின் கதைகள் மேல் பார்வையில் அங்கதங்களோடு வந்தாலும், கவனத்தைக் கோருகின்றன. அசோகமித்திரன் வீட்டு வாழ்க்கையின் வன்முறைகளை சாதாரண மொழியில் எழுதி படிப்பவரை ஏமாற்றுவது போன்றது இது.
உதாரணமாக, ரொக்கிராஜ் இந்திராகாந்தி கொல்லப்படட செய்தியை
ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டு வரும்போது அவன் தந்தை கொரில்லா “பத்தாயிரம் சனத்துக்கு கொட்டையை வெட்டி நலம் அடிச்சவள் செத்துப் போனாள்….அதுக்கு இந்தப் பொடி என்ர சோத்தைத் திண்டு போட்டெல்லோ லஸ்பீக்கர்ல வசனம் பேசுது” என்று கருத்து விடுகிறான்.

முடிவுறாத போலிப் பிரதிகள் – ராஸ லீலா நாவல் விமர்சனம்

ஜீரோ டிகிரியைப் போல ராச லீலா நாவலை முதலில் படிக்கும் வாசகர்களுக்கு அதன் பல்குரல்களைப் பின் தொடர்வதினால் கதையோட்டத்தைத் தொடர முடியாமல் போய்விடும். பொதுவாக இருவேறு அடையாளங்களின் கண்ணோட்டத்தின் வழியாகக் கதை சொல்லப்படுவதைத் தெளிவுபடுத்திக்கொண்டால் நாவல் காட்டும் உலகை எளிதில் புரிந்துகொண்டுவிடலாம். பெருமாள் பாத்திரமாக சாருவே கதைக்குள் புகுந்து “முடிவுறாத போலிப் பிரதிகள் – ராஸ லீலா நாவல் விமர்சனம்”

“பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்கிற கூற்றெல்லாம் எப்போதுமே அபத்தமாகப்படும் எனக்கு”

சிறு முடிச்சு, அல்லது சின்ன நிகழ்வு, அல்லது ஒரு கதாபாத்திரத்துக்கு நேர்ந்த அனுபவம் இதுபோன்றவைதான் எனக்குள்ளே கதைகளாகின்றன. வரலாறைத் தாங்கி நிற்கும் அந்தப் பாலமோ வளைவோ பாத்திரமோ இன்னபிற விஷயங்களோ மட்டுமே கதைகளாவதில்லை; ஆக முடியாது; ஆகவும் கூடாது. கதையினூடே நான் சொல்ல முனைவதற்கு வலுச்சேர்ப்பதற்கு வேண்டுமானால் அவை கதைக்குள் வந்தமர்ந்து உதவலாம். அதை நான் படைப்பாளியாக ரசித்து ஏற்பதுண்டு, சிலவேளைகளில் ஒதுக்கித் தள்ளுவதுமுண்டு.

காமத்தால் உண்ணப்படும் பொருளாகிப் போனவள்

“உடலின் ஆகாயத்துக்கும் மனதின் நிலத்துக்கும் இடையிலான வெளியில் உருவாகின்ற உணர்வுகளின் தீவிரம் கொண்ட கவிதைகள் இவை” – கவிஞர் சுகுமாரன். பின் நவீனத்துவம் நவீனத்துவத்தின் எல்லைகளைத் தாண்டியபோது வந்துசேர்ந்த சிந்தனைப் போக்குகளில் பெண், பெண்ணுடல், பெண் மொழி, பெண் வாழ்க்கை போன்றவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஆண்களின் வாழ்வியல் “காமத்தால் உண்ணப்படும் பொருளாகிப் போனவள்”

தந்தைக்கு என்றும் நன்றியுடன்

கிட்டப்பா, அச்சிந்திலு காதல் அனுபவங்கள். வீட்டுப் பெரியவர்களின், மாலை நேர திண்ணைப் பேச்சின் சுவாரசியத்துடன், கிராமிய மக்கள் வழக்கில், துள்ளிப்பாயும் நடையில் கோபல்ல கிராமம் நமக்கு அறிமுகமாகியது. கிட்டப்பன் அச்சிந்திலு தவிர, கோவிந்தப்ப நாயக்கர், காரவீட்டு லச்சுமண நாயக்கர், கோவப்ப நாயக்கர், ராசப்ப நாயக்கர் என புலம்பெயர்ந்த கம்மாள நாயக்கர்களைப் பற்றிய அழுத்தமான சித்திரத்தை கூட்டிக் காண்பித்தது கோபல்லபுர கிராமம். இன்னமும் பல பத்தாண்டுகள் நின்று பேசப்படும் ஓர் இலக்கிய படைப்பாக, பலரின் வாசிப்பின் வழியே அச்சிறு கிராமம் பரந்து விரிந்த பெருநிலமாக உருவாகியிருக்கிறது. சிறிய பாதத்தைக் கொண்டு உலகை அளந்த திரிவிக்கிரமன் போல, கிரா-வால் இந்த ரசவாதத்தை நிகழ்த்தி காட்ட முடிந்திருக்கிறது.

கம்பா நதி – ஒரு வாசக அனுபவம்

கடைசி வரை சங்கரன் பிள்ளை மீது கோபம் வரவில்லை, ஆற்றாமை தான் வருகிறது. அதில் கூட யாரையும் நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ திரு வண்ணநிலவன் கூறுவதில்லை. கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்ற தோணியிலேயே நகர்த்திச் செல்கிறார். வாழ்க்கையை கருப்பு வெள்ளை தவிர்த்து இடையில் பார்க்கக் கற்றுத் தந்தது இந்நாவல்.

துடைத்தழிப்பும் மீட்டெடுப்பும்

நமக்காக என்கிற பரந்த உணர்வுப் பெருக்கின் கசப்பு. முளையில் வெட்டப்படாத அடர் கானகமாகிவிட்ட முட்காடு. தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல் இப்போது அதை எதைக் கொண்டு நீக்குவது என்கிற விரக்தியின் கசப்பு.

ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக…

நல்ல காலம், கெட்ட காலம் என்று வீடுகளிலும் தெருக்களிலும் செவிமடுக்கின்ற காலமாக இருந்தது. ‘ஆம் காலத்தே அவையவை ஆகும், போம் காலத்தே பொருள் புகழ் போகும்’ என்ற கண்ணதாசனின் கவிதை வரி அறிமுகமாயிற்று வாலிப வயதில். ஆம்காலம் என்றால் ஆகும் காலம், போம் காலம் எனில் போகும் காலம்.

பத்மா அர்விந்த் – பேட்டி

படைப்பதனால் அவன் இறைவன் என்றாலும், பிறப்பையும் இறப்பையும் நிறுத்தும் வல்லமை கொண்ட இறைவன்/இயற்கை இல்லை. எழுத்தாளர்களும் மனிதர்கள்தாம், அவர்களுக்கு தொழில் எழுத்து, எனக்கு மேலாண்மை போல. என் துறையிலும் திட்டமிடலும், எழுதுதல், நுட்பமாகவும், விவேகமாகவும், இன்னமும் நூதனமாகவும், சில சமயம் படைக்கும் திறனுடனும் சிந்திக்க வேண்டும். என்னைப்போல, என்னைவிடவும் மேலாக, இன்னும் உயர் பதவிகளில் இருப்பவர்கள் கூட பலர் இருப்பார்கள். நாங்கள் சந்திப்பவர்கள் உண்மையான மாந்தர்கள், தீர்ப்பது உண்மையான பிரச்சினைகள். ஆனால், இதுதான் உயர்ந்தது என்று மற்றதைப் புறந்தள்ள முடியாது. மற்றவர்களை ஒதுக்கித்தள்ளவும் இயலாது. எல்லாவற்றிற்கும் பொது விதியும் இல்லை….

மரணமின்மை எனும் மானுடக் கனவு

“ஒருவனுக்கு நீண்ட ஆயுள் என்றால் அவனுக்கு ஆரோக்கிய வாழ்வென்பதன்று. அப்படிக் குறைந்த ஆயுள் உள்ளவன் என்றால், அவன் ஆரோக்கியமாக இருக்கமாட்டான் என்று அர்த்தமன்று. வாழ்வில் தூய்மையுடன் காலங்கழிப்பவனே ஆரோக்கியம் நிரம்பியவனாவான்” என நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பையும் முரண்பாடையும் சுட்டிக்காட்டுகிறார்.

துருவன் மகன்

This entry is part 8 of 48 in the series நூறு நூல்கள்

அவர் மனதிலும் துருவன் மகன் ஞானவானாக, சத்திய வடிவாக, ஜாதிகளைப் பாராதவனாக, அறிவோடு எதையும் ஆராய்பவனாகத் தானிருக்கிறான். வணிகர் விரிக்கும் வஞ்சகச் செல்வ வலையில் அவர் தலைமை புரோகிதரைப் போல மயங்கவில்லை. வறட்சியால் பஞ்சம் பிழைக்க ஊரை விட்டுக் கிளம்பும் தன் கூட்டத்தினரை தடுத்து நிறுத்த அவர் ரத்னாகர ஏரியைத் தோண்டச் செய்கிறார். அவர்கள் நிராசையுற்று அந்தப் பணியை நிறுத்த நினைக்கையில் தங்கக் கலசம் ஏரியின் அடியில் இருப்பதாகக் கனவு கண்டதாகச் சொல்கிறார். ஊரெங்கும் நதிகள் இளைத்து ஏரிகள் வற்றிவிட இவர்கள் குடியிருப்பின் ஏரியில் நீர் வருகிறது;

இலக்கியமும் ரசகுல்லாக்களும்

ஆரோக்கியநிகேதனம் நவீனத்தின் தாக்கத்தை ஒப்புநோக்கில் மருத்துவம் என்ற குறுகிய வட்டத்தின் உள்நின்று ஆராய்கிறது. ஹன்சுலி வளைவின் கதை அதை மேலும் விரிவாக ஒரு ஓரங்கட்டப்பட்ட குழுவின் உருமாற்றத்தை, காலனியம், போர், தொழில்மயமாக்கல் போன்ற விசைகளைக் கொண்டு ஆராய்கிறது. ஹன்சுலி என்பது நேபாள் மற்றும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் குடிகள் அணியும் வளைந்திருக்கும் ஒரு திருகல்-கழுத்தணி.

கனன்றெரியும் நீர்வெளி

இந்திய இலக்கியத்தின் முதன்மை வரிசையில் வைக்கத்தகுந்த படைப்பாக அதீன் பந்தோபாத்யாய இந்நாவலைக் கொடையளித்திருக்கிறார். பாத்திரங்களின் மீதேறித் தாவித் தாவிச் சென்று கதை சொல்லும் முறைமையைக் கையாண்டிருக்கிறார். ஒரு நிகழ்வின் உச்சத்தில் வாசகனை நிறுத்தி அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ நடக்கும் ஒரு காட்சிக்குத் தாவிவிடுகிறார்.

நான்கு சுவர்களுக்குள் விரியும் அகாலம்

கல்கத்தாவின் மக்கட் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தெருக்களில் வாழ்ந்தனர். இவர்களைவிட ஓரளவு மேம்பட்ட நிலையிலிருந்த நடுத்தர மக்கள் வங்காளத்தின் மரபார்ந்த குடும்ப அமைப்பைப் பற்றிக்கொண்டு கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்தனர். ஒரே வீட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒன்றாக வாழ்வது மிகச் சாதாரணமாக இருந்த காலகட்டம். ஆஷாபூர்ணா தேவியின் கதைகள் பெரும்பாலும் இம்மத்திய வர்க்கத்துக் குடும்பங்களிலிருந்து முளைப்பவை.

மரணத்தின் பல வண்ணம்

பிறப்பு என்பதே மரணத்தோடுதான் பிறக்கிறது என்பதை அறிந்தாலும் அந்த எண்ணத்தை மனதிற்குள் அழுத்தியபடி இல்லையில்லை தன் வாழ்வு நித்யமானது என்று வீறிட்டபடியே ஓடுகிறார்கள் மனிதர்கள். மரணம் என்பது பயப்பட வேண்டியதல்ல, இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டியது என்பதை பல்வேறு மரணங்களின் மூலமாக காட்டுகிறது இந்நாவல்.

காளியின் குழந்தை ராம்பிரசாத்

சிறுவயதில் கல்வி, கேள்விகளில் தேர்ச்சிபெற்ற ராம்பிரசாத் ஆயுர்வேதத்தில் ஆர்வம் காட்டவில்லை. 22 வயதில் சர்வாணி என்ற பெண்ணை அவருக்கு மணம் முடித்தார்கள், நான்கு குழந்தைகளும் பிறந்தன. ஆயினும் ராம்பிரசாத் வழக்கமான லௌகீக குடும்பஸ்தர்போல “பொறுப்பாக” இல்லாமல், நதிக்கரைகளில் திரிதல், குலகுருவிடம் பெற்ற மந்திர தீட்சையின்படி, தனிமையில் அமர்ந்து தியானித்தல் என்று விட்டேற்றியாக இருந்தார்.

வங்க இலக்கியத்தின் சிலமுகங்கள்

எந்த மொழியிலும் இலக்கியத்திற்குப் பலமுகங்கள் உண்டு. வங்க இலக்கியமும் இதற்கு விலக்கல்ல. ஒரு நாகரிகத்தை, கலாச்சாரத்தை, அதன் சரித்திரத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அந்த மொழியிலுள்ள இலக்கியங்கள் என்றென்றும் அதற்குத் துணைநிற்கும். எத்தனை மொழிகள் நமது இத்தேசத்தில், எத்தனை அரிய எழுத்துக்கள், அற்புதமான படைப்பாளிகள், நேற்றும், இன்றும், நாளையும் “வங்க இலக்கியத்தின் சிலமுகங்கள்”

அபத்த நாடகத்தின் கதை

சசியின் தந்தை கோபால்தாஸ் ஒரு தரகர். அந்த வேலைகளுக்கே உரிய சூட்சுமங்கள் நிறைந்தவர். அந்த யுக்தியைப் பயன்படுத்தித் தன் வீட்டில் தங்கவரும் நந்தலால் என்ற பெரிய வியாபாரியை மகளுக்குத் திருமணம் செய்விக்கிறார்.

விஷ்வ சாந்தி

பல வருடங்களுக்குப் பிறகு தாகூரை மீண்டும் படிப்பது பதட்டமாகத்தானிருந்தது. என்னால் அதை அணுகிப் படிக்க முடியுமா? என்னை அது ஈர்த்தால் மட்டுமே படிக்க வேண்டுமென்று எனக்கு நானே நிபந்தனை விதித்துக் கொண்டேன். முடிக்க வேண்டிய அவசியத்திற்காகப் படிப்பது என்பது எனக்கு ஒத்து வராதது. என்னிடம் அந்தளவு பொறுமை மீதமில்லை.

சித்தார்த் வெங்கடேசன் – பேட்டி

வாசிக்கும் பழக்கம் அம்மாவின் மூலமாகவே வந்தது. அம்மா ஒரு நல்ல கதைசொல்லி. கதை கேட்டலின் வழியாகத்தான் அனைவருக்குமே வாசிப்பு துவங்குகிறது என நம்புகிறேன். ஒரு கட்டத்தில் நம் கதைசொல்லிகளின் எல்லைகளை உணரும் பொழுது அல்லது அது ஒரு போதாமையை நமக்கு தரும் பொழுது வேறு கதைசொல்லல் ஊடகத்தை தேர்ந்தெடுக்கிறோம். நான் வளர்ந்த காலத்தில் காட்சி ஊடகம் பெரிதாக இல்லாததால் வாசிப்பு இயல்பான அடுத்தக்கட்டமாக இருந்தது.

பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி

1. உங்களைப் பற்றி அறிமுகக் குறிப்பு தர முடியுமா? என் அப்பாவுக்குச் சொந்த ஊர் கரூருக்கு அருகில் உள்ள வாங்கல் கிராமம்.  என் அம்மா பிறந்தது வெங்கரையில். நான் பிறந்து, வளர்ந்தது சென்னையில். பள்ளிப் படிப்பு தி.நகரில்  உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (வடகிளை)யில். பிறகு கல்வி லயோலா “பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி”

“கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்”

ரா கிரிதரன் பேட்டி ரா. கிரிதரனின் அம்மா ஊர் திண்டிவனம். அப்பாவுக்கு புதுச்சேரி. புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பட்டப்படிப்பு. அதன்பின் தகவல் தொழில்நுட்பத்தில் எம்.டெக். படிப்பு. சென்னை, பெங்களூர், பூனா போன்ற நகரங்களில் வேலை செய்தபின் 2006 ஆண்டு முதல் இங்கிலாந்து வாசம். ““கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்””

பாசுரங்களில் கசியும் வாழ்க்கை

நானும் இப்பாசுரங்களைப் படிக்கும்போது, திருமங்கையாழ்வாரின் திருமொழி வரிசையில் தமிழ் நனைந்த உவமைகளாக ஆற்றங்கரைவாழ் மரம்போல (2022), காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்போல (2023), பாம்போ டொருகூரையிலே பயின்றாற்போல் (2024), இருபா டெரிகொள்ளியினுள் எறும்பேபோல் (2025), வெள்ளத் திடைப்பட்ட நரியினம் போலே (2026) ஆகியவற்றைக் கண்டு ஆச்சர்யமாக இருந்தது. இவற்றுள் பல உவமைகள் தற்போது வழக்கில் இல்லாமல் தமிழுக்கே சம்பந்தமில்லாத வாய்ச்சொற்கள் நிரம்பி வழியும் வழக்கத்தைக் கொண்டு பாசுரங்களின் தமிழ்மீது ஆர்வம் குறைவது வருத்தத்துக்குரியது.

அ.வெண்ணிலாவின் நாவல்- கங்காபுரம்-குறித்து ஒரு வாசகப்பார்வை

முதல் பகுதியில், சரியான இடத்தில் இந்தப் புதினத்தை துவங்க, திருமதி. வெண்ணிலா அதிகம் உழைத்திருக்கிறார். மார்கழி திருவாதிரை நாள், தில்லை, திருவாரூர், கிள்ளை, தஞ்சை என்று பல இடங்களில் எப்படி இருக்கிறது என்பதை சொல்லி, அரசியல் ரீதியாக எப்படி இருந்திருக்கும் என்ற பார்வையை முன்வைக்கிறார்.

ஆற்றுப்படுத்தல்!

எவ்வாறு முருகப்பெருமானை வணங்குவது என இறையருள் பெற்ற ஒருவன் மற்றொருவனுக்குச் சொன்னான்: ‘இன்னிசை முழங்க வெறியாட்டயர்ந்து, அந்த வெறியாடிய களத்தில் ஆரவாரமாகப்பாடி, வாயில்வைத்துக் கொம்புகளை ஊதி முழக்கி, முருகப்பெருமானின் பிணிமுகம் எனும் யானையை வாழ்த்தி வணங்குவர்.

பாவண்ணனின் ‘கிருஷ்ண ஜெயந்தி’ – அழியாத வெண்பாத சுவடுகள்

கர்ணன் பற்றி அறிய வேண்டுமெனில், ‘கர்ணன்’ திரைப்படம் சிறந்த தேர்வன்று என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய தவறான தேர்வுகளே தர்மம் உள்பட சரியான கற்பிதங்களைத் திசை திருப்பி விட்டுவிடுகின்றன. தர்மம் என்னும் பெயரில் அதர்மம் போலி வேஷம் கொண்டு திரிவதை உலகம் பாராட்டுவதால் தர்மம் என்ற பொருள் திரிந்து விடுவதில்லை.

சுஜாதாவின் “நகரம்”- ஒரு வாசிப்பனுபவம்

“Patient பேரு என்ன?” என்ற கேள்விக்குத் தன் கணவனின் பெயரைக் கேட்கிறார்கள் என நினைத்துக்கொண்டு அவர் இறந்துவிட்டதாகக் கூறும் இடத்திலும், “எத்தன ரூபா மாசம் சம்பாதிப்பே?” எனும் கேள்விக்கு “அறுப்புக்குப் போனா நெல்லாக் கிடைக்கும், அப்புறம் கம்பு, கேழ்வரகு!” என்று கூறும் இடத்திலும் வள்ளியம்மாளின் அப்பாவித்தனத்தையும், அறியாமையையும், அன்றாடங்காய்ச்சி நிலைமையையும் எளிதில் உணர்த்தி விடுகிறார் சுஜாதா.

வங்கக்கடலின் அலைகள்

வாழ்க்கையின் அடிகளால் மனம் விழும் போது, எங்கோ ஒரு மனமும் கையும் சேர்ந்து எழுதிய இலக்கியங்கள், தோளில் தட்டி தலையில் கைவைத்து என்னன்னாலும் இந்த ஜீவிதம் இனிது என்று தூக்கிவிடுகிறது. படைப்பாளன் என்ற சொல் எத்தனை பொருத்தமான சொல்.

மதுமலர்த்தார் வாங்கி நீ வா..

“பயில்” என்றால் கற்பது என்பது நாம் அறிந்ததே. தூதுப் பாட்டின் பொருளை கற்றுத் தரும் வண்ணம் ஏற்றப்பட்ட கலிவெண்பாவினாலே…என்ற நேர் பொருள் நாம் கொண்டாலும், இன்னொரு அர்த்தமும் நம்மால் உண்டாக்க இயலும். “பயில்” என்பதற்கு “சைகை செய்வது” என்ற பொருளும் உண்டு. தூதின் உட்பொருளை சைகை செய்யும் வண்ணம் ஏற்றப்பட்ட கலிவெண்பாவினாலே…என்று சொன்னால் இன்னும் நயம் கூடுகிறது அன்றோ?

கலி வெண்பா என்பதை ஏன் களி வெண்பா என்று பெயரிடாமல் விட்டார்கள் என்றெண்ணும் அளவு உற்சாகம் ஊட்டும் வாசிப்பு எழில் கொண்டது இன்னிசை கலிவெண்பாவும் நேரிசை கலிவெண்பாவும்.