ஈக்கோசிஸ்டம் (சூழல்சார் தொகுதி)

ஈக்கோசிஸ்டம் (Ecosystem ) என்னும் சொல், சூழல்சார் தொகுதியைக் குறிக்கிறது. சூழலியல் (Ecology) என்பது சூழல் தொகுதிகள் பற்றிய கல்வி. ஈக்கோ சிஸ்டங்கள், இயற்கை வாழ்விடம் (Habitat), சூழல் உயிரினக் குழுமம் (Biome ), மற்றும் உயிர்க்கோளம் (Biosphere ) என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. ஈக்கோ சிஸ்டம் என்னும் சொல்லுக்கு, Oxford Languages தரும் அதிகார பூர்வ வரையறுப்பு: இடைவினைகள் (interactions) மேற்கொள்ளும் உயிரினங்களையும் (தாவரங்கள், விலங்குகள் மற்றும் சிதைப்புயிரிகள் ) அவற்றின் பௌதீக (உயிரற்ற) சுற்றுச்சூழலையும் (காற்று, நீர் மற்றும் மண் ) உள்ளடக்கிய ஓரிடத்து உயிரிய சமூகம்.

காடு

This entry is part 2 of 2 in the series காடு

நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப் படத்திற்காக மூன்று மாதங்களாக இங்கேயே இருக்கிறாராம். வாட்டிய ரொட்டித் துண்டுகளைச் சாப்பிட்டுவிட்டுப் ஃப்ளாஸ்க்கில் கருப்புக் காபியுடன் வந்தால் மாலைதான் அறைக்கு திரும்புவது, சில சமயங்களில் இரவிலும் காத்திருக்கிறாராம். அவரின் இந்த அர்ப்பணிப்பு வியப்பை ஏற்படுத்தியது. தொலைக்காட்சியில் விலங்குகள் குறித்த ஆவணப் படங்களை ஒரு நொடியில் மாற்றி அடுத்த சேனலுக்குத் தாவியிருக்கும் பலநூறு சந்தர்பங்களை எண்ணி வெட்கினேன்.

நுண்மையில் முடிவிலி – ஆலன் லைட்மான்

இயற்கை அவளுடைய பெரும் மாட்சியைக் கொண்டு நாம் சுவர்க்கத்தை நம்பவேண்டும் என்று, இயற்கையையே தாண்டிய தெய்வீகத்தை, பருண்மையைத் தாண்டிய அரூபத்தை தரிசிக்க வேண்டும் விரும்புகிறார் போலவிருக்கிறது. ஆனால் மறுபடி நோக்கினால், இயற்கை நமக்குப் பெரும் மூளைகளையும் கொடுத்திருக்கிறாள், அதன் உதவியால் நுண்நோக்கிகளையும், தொலைநோக்கிகளையும் கட்டுவதற்கும், இறுதியில் நம்மில் சிலருக்காவது, இதெல்லாம் அணுக்களும், மூலக்கூறுகளும் மட்டுமே என்று முடிவுகட்டுவதையும் சாத்தியமாக்கி இருக்கிறாள்.

கருங்குயில் கீதம், ககன வெளி நடனம்

ஒன்றை நோக்கி ஒன்று செல்கையில் அவற்றின் தீவிரம், அவை வெளிப்படுத்தும் ஆற்றல், இயற்பியலுக்கு (Physics), அதிலும் முக்கியமாக தூலத்தைக் கடந்ததின் (Metaphysics) ஒரு பகுதியான பேரண்டத்தின் பிறப்பை அறிய ஒரு வழி. மொத்தமான எடையில், அதாவது, ஆதவனைப் போல சுமார் 29 மடங்கு மற்றும் 36 மடங்கு எடை கொண்ட அவை, ஒரே கருந்துளையாக இணைந்து ஆதவனைப் போல் 62 மடங்கு எடையாகி 3 மடங்கு ஈர்ப்பு அலைகள் கொண்டு மிகுந்தன. காலவெளியில் ஈர்ப்பு அலைகள் என்பவை ஒலி அலைகள் அல்ல; அவை நடுக்கங்கள்-நில நடுக்கங்களைப் போல் ஓரிடத்திலிருந்து வேறிடம் கடக்கும் போது  மெலிதாகி விடுகின்றன.

ஒளியும் ஒலியும்

ஒளியினால் ஆன இந்த தூதுவலை சூரியனையும் பூமியையும் மட்டும் இணைக்கவில்லை. இந்த வலை நமது பிரபஞ்சம் முழுவதையும் இணைத்துள்ளது. நம் பூமி பால்வழித்திரளில் குடியிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து ஆத்தூருக்கு ஐ.எஸ்.டி வருவது போல பல கோடி மைல்கள் அப்பால் உள்ள அடுத்த கேலக்ஸியில் இருந்து புவிக்கு தூதைச் சுமந்து வருகிறது ஒளி. அப்பால். அதற்கும் அப்பால். அப்பாலுக்கப்பால் உள்ள இடங்களில் இருந்து எல்லாம் வருகிறது.

ஒளி – ஒரு குறுஞ்சித்திரம்: கலைச்சொல் அகரமுதலி

ஒளி- ஒரு குறுஞ்சித்திரம் என்ற கட்டுரைக்கான கலைச் சொல் அகர முதலி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கையாளப்பட்டுள்ள சில கலைச்சொற்களின் மிகச் சுருக்கமான அகரமுதலி இங்கு வழங்கப்படுகிறது. இந்தக் கலைச்சொற்கள் வலிந்து திணிக்கப்படவில்லை; இவை கையாளப்பட்டதன் நோக்கம் மொழித்தூய்மையோ, மொழிக்களஞ்சியத்தைச் செறிவாக்குவதோ, ஏன், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பேசுவதற்குரிய இருபத்தொன்றாம் நூற்றாண்டுத் தமிழை உருவாக்குவதோ அல்ல.

ஒளி – இப்போதும் இனியும்

நாம் உண்மையாகவே புரட்சிகரமான மாற்றத்தைக் கணிப்பதானால் எதிர்கால கணினிகள் ஈரிணை ஒளிக்கணினிகள் (binary optical computer) என்று சொல்லப்பட மாட்டாது. அவை க்வாண்டம் கணினிகளாகவே (Quantum computers) செயலாற்றும். .. .. .. மீபொருட்களில் வேறொரு சுவாரசியமான துறை, ஒளிப் போர்வைகள் (optical cloaks). ஹாரி பாட்டர் தன்னை மறைத்துக் கொள்ள போர்த்துக் கொள்ளும் போர்வை நினைவுக்கு வரலாம். ஒரு பொருளின் மீது விழும் ஒளி சிதறும்போதுதான் நாம் அப்பொருளைப் பார்க்க முடிகிறது. .. .. .. கடலில் உள்ள மீன்கள் சில, கடல் நீருக்கு இணையான ஒளித்திரிபு எண் கொண்டிருப்பதால் பார்வைக்குப் புலப்படாமல் நீந்துகின்றன.

ஒளி – அலையும் துகளும்

இந்திய விஞ்ஞானியாகிய எஸ். என். போஸ் (1894-1974), போஸான்கள் என்று அவரை கௌரவிக்கும் வகையில் அழைக்கப்படும் துகள்களின் புள்ளியிய விசையியலை (statistical mechanics) பயன்படுத்தி நேரடியாகவே இந்தச் சமன்பாட்டைத் தோற்றுவித்தார். இவ்வொளித் துண்டங்கள் (ஃபோடான்கள்), போஸ் – ஐன்ஷ்டைன் புள்ளியியல் விதிகளுக்கு உட்படும் போஸான்களாகவும் இருக்கின்றன. ஆற்றல் துண்டம் என்ற கருத்துருவை உள்ளடியே உள்ள ஒன்றாக ஐன்ஷ்டைன் துணிந்து கருதி, வெகுகாலமாக விடையற்ற புதிராய் இருந்த வேறொரு கேள்விக்கு விளக்கம் கண்டார்: அதுதான் ஒளிமின் விளைவு (photoelectric effect).

ஒளி ஒரு குறுஞ்சரித்திரம்- பாகம் 2

ஒளி ஒரு மின்காந்த அலை எனில், அது ஏதோ ஒரு ஊடகத்தின் வழியே பரவ வேண்டும் என்று அன்றிருந்த அறிவியலாளர்கள் கருதினார்கள். இந்த எதிர்பார்ப்பு இயல்பான ஒன்றே. இதையடுத்து, ஈதரைக் கண்டறியும் தேடல் துவங்கிற்று. ஈதர் விண்வெளி எங்கும் நிறைந்த, கோள்களும் உடுக்களும் அதனூடே விரையும்போதும் அசையாது நின்ற ஒன்று. ஆல்பஹ்ட் மிஹெல்ஸன் (Albert Michelson:1852-1931) மற்றும் எட்வர்ட் மோர்லி (Edward Morley:1838-1923) இயற்பியலின் மிகப் புகழ்பெற்ற எதிர்மறை சோதனை முடிவுகளை வெளியிட்டபோதுதான் இந்தத் தேடல் முடிவுக்கு வந்தது- அவர்களது ஆய்வுகள் ஈதர் என்ற ஒன்றில்லை என்று உறுதி செய்தன. பூமி ஈதர் எனும் ஊடகத்தில் நகர்வதாக வைத்துக் கொண்டால் பூமிக்கு வெளியே ஒளி பரவும் வேகமும், ஈதரில் நகர்ந்து கொண்டிருக்கும் பூமியில் ஒளி பரவும் வேகமும் வேறுபட வேண்டும். ஆனால் சோதனை முடிவுகள் அவ்வாறு இல்லை என்பதை நிறுவின. எது நகர்கிறதோ இல்லையோ, ஒளியின் வேகம் மாறுவதில்லை. 1905ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஷ்டைன் (1879-1955) முன்வைத்த சார்பியல் சிறப்புக் கோட்பாடு ஈதரின் இருப்பை முழுமையாக நிராகரித்தது. பூரண வெற்றிடத்தில் ஒளி பரவும் என்பதை நிறுவிற்று.

'காலமே, இந்த்ரஜாலமே!'- ஐன்ஸ்டீன்

நீங்கள் மிக அதிக வேகத்தில் பயணங்கள் மேற்கொள்ளும் பட்சத்தில், உங்களைச் சுற்றியுள்ள வெளி மட்டும்தான் மாறுகிறது என்பதல்ல, காலமும் ஒரு பச்சோந்தியைப் போல் சூழலுக்குத் தகுந்த வகையில் தன்னை மாற்றிக் கொள்கிறது! …. ஐன்ஸ்டீன் சொல்வதை இப்படி சுருக்கமாகச் சொல்லலாம்- நகர்ந்து கொண்டிருக்கும் கடிகாரத்தில் காலம் தாமதிக்கிறது. இது உண்மைதான் என்று பல பரிசோதனைகள் கண்டறிந்துள்ளன. இவற்றில் மிக சுவாசரியமான ஒரு ஆய்வில், நான்கு அணுத்துகள் ஆற்றல் கடிகாரங்கள் ஒரே நேரம் காட்டும் வகையில் திருப்பி வைக்கப்பட்டன. அவற்றுள் சிலதை அதிவேக ஜெட் விமானங்களில் வெவ்வேறு திசைகளில் உலகைச் சுற்றி கொண்டு சென்றனர். அந்த விமானங்கள் திரும்பி வரும்போது, பூமியில் இருந்த கடிகாரங்களை விட விமானத்தில் பறந்து சென்ற கடிகாரங்கள் ஒரு சில நானோ வினாடிகள் மெல்லச் செல்வது கண்டறியப்பட்டது. ஆக, வேகமாய்ச் செல்லும் விமானமும்கூட காலத்தின் சிறகை, அதாவது கடிகார முள்ளை, கொஞ்சம் கட்டி வைக்கிறது. …