சதுரங்க ஆட்டம் விதிகளுக்கு உட்பட்டது. அதே போல் இஸ்லாமிய மதம் புத்தகத்தில் எழுதப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. கடவுளின் பேச்சை மொகமது நூலாக மொழிகிறார். குரான் என்றால் “ஒப்பித்தல்”. இந்தப் படத்தில் குருவின் வித்தையை சீடன் எப்படி புரிந்து கொள்கிறான் என்று காண்பிக்கிறார்கள். குருவின் குருவான மாயி எனப்படும் சரஸ்வதி கடாட்சம் பெற்ற மகாமேதையின் எண்ணங்களை “பாராயணம்” செய்கிறார் சீடர்.
Category: இந்திய சினிமா
இளந்தலைமுறையினரின் விசுவாசமும் மூத்த தலைமுறையின் லாப வாழ்க்கையும்
வடசென்னை திரைப்படம் ரிலீஸாகி மூன்று வருடம் கழிந்த பின்பு அதனுடைய திரைக்கதையின் சாராம்சத்தை அறிந்துக்கொள்ள முனையும் கட்டுரை இது. வடசென்னை தன்னை இரண்டு விதமாக புனைந்துக்கொண்டுள்ளது. ஒன்று அந்நிலத்தின் கதையாக, இன்னொன்று சாபம் – புனைவின் விதியாக. அந்த நிலம் தன்னை காப்பாற்றிக்கொள்ள தன்னுள்ளிருந்தே மனிதர்களை தெரிவு செய்து அனுப்புகிறது. நிலத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுபவர்கள் அப்புறப்படுத்துபவர்கள் என்கின்ற இருநிலை மனிதர்களையும் …
கல்கோனாக்கள் கரைவதில்லை
‘தூங்கு..தூங்கு..பாலா நீ..’ என்ற எருமைக்குரல் காதில் நுழைந்து மூளையை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தேன் நிலக்கோட்டைக்கும் மதுரைக்கும் நடுவே. சரியாக காதுக்கு நேரே ஒலிபெருக்கிக்குழாய். என் தூக்கத்தைக் கெடுத்த அந்தப் பாடகன்(பாதகன்?) யார் என்று பார்ப்பதற்குள் பேருந்து ஊரைக்கடந்து விட்டது. சர்ச்சில் ஒரு விழா. சர்ச்சை வைத்துத்தான் “கல்கோனாக்கள் கரைவதில்லை”
குருதி
வழக்கமாக மடிததுக் கட்டிய மல் வேஷ்டியும் முண்டும் துண்டுமாகததான் அறவே மேக்கப் இல்லா சேட்டன்களும் சேச்சிகளும் இன்னமும் பச்சைப் பசேல் கேரளத்துக் கொல்லைகளிலும் காடுகளிலும் திரிகிறார்கள். ஆனாலும், கதை என்கிற ஒரு வஸ்துவை மட்டும் தீர்க்கமாக அவர்கள் பிடித்துக் கொண்டு விட்டார்கள். அதில் அவர்கள் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில்லை. கதையோட்டத்தைத் தடை செய்யும் பாட்டுகளையும் அறவே குறைத்துக்கொண்டு வருகிறார்கள்…. கிறித்துவ வெறித்தனமோ, இஸ்லாமிய பயஙகரவாதாமோ, ஹிந்துதுவ ரஸவாதமோ, எதுவாக இருந்தாலும் கதை தான் ஆணிவேர்.
அந்தக் காலப் பாடல்களும் இக்கால கலைகளும்
அஜய் கர் – திரைப்பட பாடல்கள் தொகுப்பு, சத்யஜித் ரேவின் பின்னணி இசை, கொல்கத்தாவின் இக்காலக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம்,
மேதையுடன் ஒரு நேர்காணல்
மானுடத்திற்கு நன்மை பயப்பதே அதன் முதல் நோக்கமாக இருந்தாக வேண்டும். ஒருவேளை நீங்கள் மானுட அபிமானம் கொண்ட படைப்பை உருவாக்காவிடில் அது நிச்சயம் கலைப்படைப்பு ஆகாது. கலை முதலில் சத்தியத்திற்கும் அடுத்ததாக அழகிற்கும் விசுவாசமுடையதாக இருக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் சொல்கிறார். இந்த சத்தியமானது கலைஞனின் சொந்த பார்வையிலிருந்தும் த்யானத்திலிருந்தும் விளைந்ததாக இருக்கிறது.
சத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு
இந்தப் படத்தில் ஒப்பு மின்சாரத்தை முதல் முறையாக எதிர்கொள்கிறான். (கல்கத்தாவில் அவனுடைய அறையில் ஒரு மின்சார பல்பு பொருத்தப்பட்டிருக்கிறது, அதை அவன் தன் அம்மாவுக்கு மகிழ்ச்சியோடு எழுதுகிறான்.) முதல் படத்தில் எதிர்காலத்திலிருந்து வந்த மாயாஜாலப் போக்குவரத்து சாதனங்களாகத் தெரிந்த ரயில் வண்டிகள் இப்போது ஒப்புவின் அன்றாட வாழ்வில் பகுதியாகி விட்டிருக்கின்றன.
எஸ்.பி.பி. என்னும் H2O
இசையறிவும் திரையிசையின் நுணுக்கங்களும் அறிந்த எத்தனையோ திறமையான எழுத்தாளர்கள் இருக்க, எஸ்.பி.பி குறித்து சொல்வனத்திற்காக எழுத என்னை அழைத்திருக்கிறார்கள். என்றாலும் ஒரு பாமர ரசிகனாக சமீபத்தில் மறைந்த எஸ்.பி.பி குறித்த என் மனப்பதிவுகளை எழுத முயல்கிறேன். என்னைப் போன்ற பல பாமர ரசிகர்களின் பிரதிநிதித்துவப் பதிவாகவும் இது அமையக்கூடும் “எஸ்.பி.பி. என்னும் H2O”
பூப்போலே உன் புன்னகையில்…
மரணத்தை வெல்லும் உரிமம் மானுடத்திற்கு இல்லை. இருப்பினும், மரணத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மாற்றுப்பாதையில், மாற்றுருவில் பயணிக்கும் வித்தையை இயற்கை இவ்வுலகிற்கு வரமாக்கியிருக்கிறது. ஆம். கலையின் ஏதேனும் ஒரு வடிவத்தை கற்றறிந்து அதை மற்ற உயிர்களின் உணர்வுகளுக்கு உணவாக அளிக்கும் ஆற்றல் பெற்ற எவரும் காலத்தின் மீதேறி கணக்கற்ற “பூப்போலே உன் புன்னகையில்…”
வெறுமையில் பூக்கும் கலை
இது முற்றிலுமாக ஒரு கொரோனா காலப்படம். திரையில் தோன்றும் பிம்பங்கள், பின்னணிக்குரல்கள், இசை, உரையாடல்,படத்தொகுப்பு, இடையிடை மௌனம் எல்லாமே கொரோனாவின் தாக்கம் கொண்டிருக்கின்றன. புதைத்து விட்ட காதல் என்னும் கொரோனாவைத் தோண்டி விளையாடிக் கொண்டிருக்கும் இருவரும் திடீரென்று தங்கள் தவறை உணர்ந்து மீண்டும் கவசங்களை அணிந்து கொள்கிறார்கள். இல்லை. அந்தப் பெண் அணிந்து கொள்கிறாள்.
‘திதி’ – கன்னடத் திரைப்படம் குறித்து
கி.ரா – வின் ஒரு கரிசல் நாவலை படித்து முடித்த ஒரு மனம் நிறை உணர்வு ததும்பியது படம் பார்த்து முடித்ததும். இத்தனை இயல்பாய், இத்தனை இயற்கையாய் ஒரு படம் எடுக்க முடியுமா?. படம் நெடுகிலும் கேமரா எங்கிருந்தது?. படத்தில் யாருமே நடிகர்கள் இல்லை. நோடேகொப்புலுவின் மனிதர்களையே படம் பிடித்திருக்கிறார் இயக்குநர் ராம் ரெட்டி. கதை கூட அங்கு நடந்த உண்மையான சம்பவம்தான். படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்து, இறுதிக்காட்சி வரை ஒவ்வொரு ஃபிரேமிலும் அழகும், உண்மையும், இயல்பும்…ஒரு துளியும் செயற்கை கலக்காத, துருத்தித் தெரியும் காட்சிகளில்லாத…ஒரு அசல் கிராமம் மற்றும் அதன் மனிதர்கள். படத்தில் பின்னணி இசை என்ற ஒன்று கிடையாது.
சாய்ராட்- மராத்தி திரைப்படம் பற்றி
மராத்தி மொழி மனதில் பதிய ஆரம்பித்தது. தொலைக்காட்சி சேனல்களின் மராத்தி நாடகங்களும், பென்னின் கார்னிவல் சினிமாவாக புதுப்பிக்கப்பட்ட மோரேஷ்வர் தியேட்டரில் பார்த்த மராத்தி படங்களும் மராத்தியை புரிந்துகொள்ள உதவின. சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி பேச்சுத் தமிழில் இருக்கும் வேறுபாடு போலவே, மராத்தியின் பல்வேறு பேச்சுவழக்குகளின் வித்தியாசம் புரிய ஆரம்பித்தது. உட்கிராமங்களின் பழைய பேச்சு வழக்கிலிருந்து, நகரங்களின் பேச்சு வழக்கு மிகவும் வித்தியாசப்பட்டது. அரசியல் கடைக்கோடி கிராமம் வரை கோலோச்சியது. ஒரே குடும்பத்திற்குள் கலவரத்தை உண்டாக்குமளவுக்கு அரசியல் வேரூன்றியிருந்தது.
சத்யஜித் ராய் என்றொரு பெரும் கலைஞன்
கிளாசிக் பட வரிசையில் “நாயக்” 1966ஆம் ஆண்டு சத்தியஜித் ராய் அவர்களால் வங்க மொழியில் இயக்கப்பட்டு வெளிவந்த கருப்பு வெள்ளை படம். அரிந்தம் முகர்ஜி என்ற மிகப் பிரபலமான வெகுஜன நடிகனின் உள்மனப் போராட்டங்களின் தொகுப்புதான் இந்தப் படம். வங்க மொழியைச் சேர்ந்த உத்தம் குமார் அந்த நடிகர் “சத்யஜித் ராய் என்றொரு பெரும் கலைஞன்”
டாம் ஆல்ட்டர் என்றொரு கலைஞர்
ஹிந்தியின் பல ஜனரஞ்சக வெற்றிப்படங்களோடு, சத்யஜித் ராய், மஹேஷ் பட், ஷ்யாம் பெனகல் போன்ற தரமான இயக்குனர்களின் படைப்புகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர் ஆல்ட்டர். அஸ்ஸாமியா, தெலுங்கு, குமாவூன் மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார் டாம் ஆல்ட்டர். 300 திரைப்படங்கள், நாடகங்கள் என இந்தியக் கலை உலகில் பலவருடங்களாகப் பிரகாசித்த ஆளுமை. … இந்தியா தனது முதல் கிரிக்கெட் உலகக்கோப்பையை 1983-ல் வென்றபின், அமெரிக்கா சென்றது. அதில் டாம் ஆல்ட்டரும் இடம்பெற்றிருந்ததோடு அந்த ஆட்டத்தில் ஆடவும் செய்தார் அவர்! ஆர்வமாக, விஷய ஞானத்துடன் கிரிக்கெட் பத்திகள் எழுதிய அவர், எண்பது, தொண்ணூறுகளில் மதிக்கப்பட்ட கிரிக்கெட் பத்தியாளர் என்கிற நிலைக்கு உயர்ந்திருக்கிறார். அப்போது வந்துகொண்டிருந்த ஸ்போர்ட்ஸ்வீக், டெபொனேர் (Debonair) ஆங்கில இதழ்களிலும், அவுட்லுக்(Outlook) வார இதழிலும் வெளியான இவரது கிரிக்கெட் விமரிசனக்கட்டுரைகள், விளையாட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
ரங்கூன் – விஷால் பரத்வாஜின் திரைப் பயணம்
மக்பூல், ஒரு வயதான தாதா, அவனின் இளம் மனைவி, அவளின் காதலன் என மூவரின் கதை. வழக்கமான கதைகளில் வருவது போல, தோற்றம் எழுச்சி, உச்சம் வீழ்ச்சி எனக் கட்டம் கட்டி, கதை சொல்லாமல், நடுவிலிருந்து துவங்கி, முரண்கள் மோதல்கள் வழியே ஒரு காட்டாறு வீழ்ந்து, கரைமீறி உருவாக்கும் அழிவைச் சொல்லும் படம். வழக்கமாக, மூத்திரப் பை தாங்கும் வரை முதல் பாகம், உணர்வெழும் காதை முடிந்ததும் நகைச்சுவை அல்லது பாடல் எனப் பார்த்துப் பழக்கப்பட்ட மனம், இது போன்ற ஒரு திரைக்கதைக்கு மாற சிரமப்பட்டது. படம் பார்த்து முடிந்து அமைதி கவிழ்ந்த சில மணி நேரங்கள் கழிந்த பின் பேச்சில், மகள் மதுரா, படத்தில் கான்ஸ்டபிள்களாக வரும் ஓம்பூரியும், நஸ்ருதீன் ஷாவும், மக்பெத்தில் வரும் சூனியக்காரர்கள் எனக் காட்டித் தந்தாள். அவர்கள் பெயர் – பண்டிட் / புரோகித்.. வெடித்துச் சிரித்தேன். மக்பூலின் ஷேக்ஸ்பியர் அடிப்படை புரியாமல் பார்த்தாலும், அது தன்னளவில் முழுமையான படமாகத்தான் இருக்கும்.
மகரந்தம்
கிளவுட்ஸ் ஆஃப் சில்ஸ் மரியா (Clouds of Sils Maria) என்னும் படமும் ஸ்விட்சர்லாந்தில் படமாகிறது. தில்வாலே துல்ஹானியா லெ ஜாயேங்கே (Dilwale Dulhania Le Jayenge – DDLJ)வும் ஸ்விஸ்ஸில் படமாகிறது. எந்தப் படத்திற்கு பனிச்சறுக்கு மலையின் உச்சியில் ஆளுயுர பிரும்மாண்ட கட் அவுட் வைத்திருக்கிறார்கள்? விடையை மேலே பார்த்திருப்பீர்கள். இருநூறு படங்களுக்கு மேல் இங்கே படமாகியிருக்கின்றன. ஏன்? காஷ்மீர் பிரச்சினை காரணமா அல்லது வெள்ளைத் தோல் கொண்டவர் நமக்கு சிப்பந்தியாக அடிபணிவது காரணமா என்னும் கேள்விகளை இந்தக் கட்டுரை எழுப்புகிறது. உள்ளூர் சிம்லாவில் படப்பிடிப்பை வைத்தால், கால்ஷீட்டை மட்டும் கொடுத்துவிட்டு டிமிக்கி தருபவர்களை மலைப் பிரதேசங்களுக்குக் கொண்டு சென்றால், நாயகன் / நாயகி காணாமல் போகும் தொல்லையில்லாமல் …
சினிமாவும் வரலாறும்- சத்யஜித் ராயின் 'சதுரங்க ஆட்டக்காரர்கள்'
”எளிதில் எல்லோராலும் இகழப்படுபவையில் எனக்கு ரசனையில்லை. அறச்சீற்றம் இருக்கிறது; ஆனால், அந்த தார்மீகக் கோபத்தை அடையும் அடையும் பாதை மாறுபட்டிருக்கிறது. இரண்டு எதிர்மறை சக்திகளை சித்தரிக்கிறேன்: காலனியம் மற்றும் நிலக்கிழாரியம் (ஃபியூடலிஸம்). வாஜித் மற்றும் டல்ஹவுஸி – ஆகிய இருவரையும் கண்டனம் செய்யவேண்டும். இதுதான் எனக்கிருக்கும் சவால். அந்த கண்டனம் வெறுமனே கூக்குரலாக இல்லாமல், சுவாரசியமாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கவேண்டும். இரு அணிகளுக்குமே நல்லனவும் உண்டு; அதையும் சுட்ட வேண்டும். இந்தப் படத்தை நேரடியாகப் பார்க்காமல், கொஞ்சம் பூடகமாகப் புரிந்துகொள்ளவேண்டும்.”
'அவள் அப்படித்தான்' இயக்குநர் ருத்ரையா
திரைப்பட இயக்குநர் ருத்ரையா (67) உடல்நலக்குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ருத்ரையா சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். 1978-ஆம் ஆண்டு வெளிவந்த “அவள் அப்படித்தான்’ படத்தை இயக்கி திரையுலகில் நுழைந்தார் ருத்ரையா. ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, சரிதா ஆகியோரின் நடிப்பில் இந்தப் “'அவள் அப்படித்தான்' இயக்குநர் ருத்ரையா”
ஆறு பேர் உரையாடுகிறார்கள் – பெற்றோர் எதிர்க்கும் காதல்
தமயந்தி: சினிமாக்கள் மொத்தம் 7 கதைக்கருக்களைச் சுற்றியே எடுக்கப்படுகின்றன என்கிறார்கள். பெற்றோர் எதிர்க்கும் காதல் என்பதுதான் இவற்றில் மிகவுமே அடிச்சுத் துவைக்கப்பட்ட ப்ளாட்டோ? லட்சத்திப் பத்தாவது படமாய் இந்தக் கருவில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தின் கலெக்ஷன் 100 கோடியைத் தாண்டிவிட்டதாமே? அதிலே 100 ரூபாய் என்னுடையது. வேறு யாராவது பார்த்தீர்களா?
அமோல் பாலேகரின் பங்கர் வாடி
1939 என்று முதல் காட்சியே சொன்னது. ஒரு இருபது வயது இளைஞன் தன் தாய் தந்தையரிடம் ஆசீர்வாதம் பெறுகிறான். மகாராஜா கொடுத்த வேலை இது. பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். என்று தந்தை ஆசீர்வதிக்கிறார். இன்னமும் ராஜ விஸ்வாசம் நிலவும் ஒரு காலம் என்று தெரிகிறது. அடுத்து அந்த இளைஞனை பங்கன் வாடிக்கு தன் வேலையில் சேர நடந்து போய்க்கொண்டிருக்கிறான். அந்த கிராமம் ஒரு வரண்ட பிரதேசத்தில். எங்கும் வரட்சி. கடைசியில் அவன் வந்து சேரும் பங்கன் வாடி கிராம எல்லையில் நம் ஊரில் ஒரு பிள்ளையார் கோயிலோ இல்லை, ஐயனார் சிலையோ இருப்பது போல இந்த கிராம எல்லையில் நிறைய கிட்டத்தட்ட நாற்பது ஐம்பது படமெடுத்த நாகங்களின் சிலைகள்.
கூறுகிறேன்…. முடிந்தால் கேளுங்கள் – 1
ரஃபி என்கிற புயல் திலீப் குமார், ஷம்மி கபூர் முதலிய சூப்பர் ஹீரோக்களுக்குப் பாடும் குரலாகையில் ராஜ் கபூருக்கு முகேஷும், தேவானந்துக்கு கிஷோரும் என்று பொருந்திப் போய் விட்டது. தலத் முகம்மதும், ஹேமந்த் குமாரும் மங்கிப் போகையில் ராஜ் கபூருக்கும், பால்ரஜ் சஹானிக்கும் பின்னணி பாடிய மன்னா டே அசரீரியாகவும், நகைச்சுவை நடிகர்களின் குரலாகவும் ஆகி விட்டார். ராஜேஷ் கன்னா என்கிற சூப்பர் ஸ்டாரின் வருகை மேதை கிஷோர் குமாரை முன்னணிக்குக் கொண்டு சென்று பிறரைப் பின்னுக்குத் தள்ளிய போதும் மன்னா டே இருந்தார்.
யட்சி – குறும்பட அறிமுகம்
ஒரு பெரிய பாலைவனத்தில் ரெண்டே ரெண்டு ஒட்டகம் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்ததாம். ஒண்ணு பெரிய ஒட்டகம், இன்னொன்னு அதன் குட்டி ஒட்டகம். திடீரென அங்கு வெப்பம் அதிகமானதால், இரண்டு ஒட்டகமும் சேர்ந்து வேறு இடத்திற்கு இடம்பெயர முடிவெடுக்கின்றன. பெரிய ஒட்டகத்திற்கு காலில் அதிகமான காயங்கள் இருந்ததால் வேகமாக முன்னேறி நடக்க முடியவில்லை. ஆகவே சின்ன ஒட்டகத்திடம் “நீ மட்டும் தனியா போயிடு” –ன்னு சொல்லுச்சாம்.
தாகூரின் பேரன்
சொல்லிவைத்தாற்போல அநேகமாகத் தன்னுடைய எல்லா படங்களுக்குமே தேசிய விருது பெற்றவர் ரிதுபர்ண கோஷ். இந்திராணி ஹல்தார், ரிதுபர்ண சென்குப்தா, கிரண் கேர், சுதிப்தா சக்ரபர்த்தி, ராக்கி என ரிதுபர்ண கோஷின் படங்களில் நடித்த நடிகைகளுக்கும் தேசிய விருது தேடி வந்தது. வங்காள சினிமாவின் பெருமைமிகு கலைஞர் அவர்.