அகவல், அறிவியல், அக உடல்

அவரின் ‘வினாயகர் அகவல்’ ஒரு யோக நூலாகக் கருதப்படுகிறது. 72 வாக்கியங்களுள்ள அது, உடலின் ஒன்பது வாயில்களைக்(7+2=9) குறிப்பிடுவதாக யோக மரபினர் சொல்கிறார்கள். மயில் அகவும்;குயில் கூவும். ஆனால், யோகியருக்கோ ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன், மயில் குயிலாச்சுதடி’எனும் அனுபவம் வாய்க்கிறது. கீழே இணைத்துள்ள பேரா தைராய்டின் அறிவியல் படத்தினை கவனிக்கவும். ‘வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்’. இந்த முகம் காட்டும் குறியீடுகள் பல-கம்பீரம், ஞானம். அதில் சித்தம் கனிந்து செந்தூரமாய்த் திகழ்கிறது.மனிதன் கையால் எடுத்து பின்னர் வாய்க்குள் இட்டு உண்பதைப் போல்,யானையும் தும்பிக்கையால் எடுத்து பின்னர் வாய்க்குள் செலுத்தும்.

அவதானத்தின் அறிவியலை அறிய வேண்டாமா?

ஒரு காலகட்டத்தில் ஊருக்கு ஊர் சதாவதானிகளும் சோடசாவதானிகளும் இருந்த நிலை துரதிர்ஷ்டவசமாக மாறி, இவர்கள் ஒரு அரிய மானுட வர்க்கமாகி விட்டார்கள். இந்த அவதானக் கலைகளை பயில எவ்விதமான பயிற்சிகள் … ஒருவர் அஷ்டாவதானமோ தசாவதானமோ செய்யும் போது அவரது மூளை நியூரானிய இயக்கங்கள் செயல்படும் விதம் இவ்வித நவீன கருவிகளால் அறியப்பட்டால் மானுட மனதின் அதி ஆழ செயல்பாடுகள் குறித்த ஒரு சித்திரம் நமக்கு உருவாகலாம். அவதான நிகழ்வுகளின் போது ஏன் தொடர் இறைநாம உச்சரிப்பு ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது? ஒருவித மாற்று பிரக்ஞை தளத்திற்கு (altered state of consciousness) அவதானியை அழைத்து செல்லவா? அதன் மூலம் அவரது நுண்ணறிவுத் திறன்கள் அதிகரிக்கின்றனவா? அப்படி இருக்கலாம் என கருதத்தக்க ஒரு கருத்தை செய்குத்தம்பி பாவலரே சொல்லியிருக்கிறார்: “அவதானத்திற்கென்று மேடை ஏறிவிட்டால் ஒரு தனி உணர்வு உடலை எழுப்பும்; உள்ளத்தை மலரச்செய்யும்; அறிவை ஒளிரச் செய்யும்.; பிறகே என் வாயினின்றும் சொற்கள் வெளிவரும். அவ்வாற்றல் எங்கிருந்து வருகிறது என்று சொல்ல இயலாது.” … இவ்வாறு பன்மை நுண்ணறிவு மேலோங்கிய ஒரு மாற்றுப் பிரக்ஞை தளத்துக்கு செல்லும் அறிவியல் ஒன்று நம் கல்வி மரபில் பரவலாக இருந்திருக்கிறதா? அதன் நிகழ் கலை வெளிப்பாடுதான் அவதான நிகழ்ச்சியா?