நேரத்தை வலைவீசுதல்

மீனவர்களின் வாழ்க்கையை குவெர்னிகா இதழுக்காக படம் பிடித்திருக்கிறார் கேண்டஸ். பஞ்சு மிட்டாய் விற்பவனில் ஆரம்பித்து வீட்டில் தொங்கும் லுங்கி வரை நிழற்பட வேட்டை ஆடியிருக்கிறார்.

இசைக்கு மயங்கும் மசாலா

மிளகும் மஞ்சளும் இஞ்சியும் மல்லியும் சீரகமும் கிலோ கிலோவாக இசைக்கேற்ப துள்ளியெழுகிறது. ஒவ்வொரு மசாலா எழும் போது ஒரேயொரு நாளம் ஒலிக்க, அதன் பிறகு அடுத்த வீணைத் தந்திக்கு ஏற்ப மெல்ல அசைகிறது… விளம்பரத்திற்காக.

மகரந்தம்

இணையம் வந்த பிறகு உலக இசையைக் கேட்பதில் எந்த வித சிக்கலும் இல்லை. ஆனாலும், இசையை திரையில் பார்ப்பதை விட நேரில் அனுபவிப்பது கிறங்க வைக்கும். சங்கீதத்திலேயே மூழ்க வைக்கும். ஆண்டிற்கொருமுறை உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் கலைஞர்கள் ஒரே மேடையில் தங்களின் புதிய ஆக்கங்களை ஒலிக்கிறார்கள். ஆப்பிரிக்க சேர்ந்திசையையும் வேகப் பாட்டையும் கலப்பவர்கள் முதல் பூர்வகுடி வாத்தியங்களையும் அறுபதுகளின் ஹிந்திப் பாடல்களையும் புத்துருவாக்குபவர்கள் வரை, எல்லோருக்குமே இடம் தருகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் இருந்து சில பதிவுகளைக் இங்கே கேட்கலாம்.

ராகவேந்திர பாடீலின் "தேரு"

நம்பிக்கை, சடங்குகள், தொன்மம் முதலான கேள்விகளுடன் கிராமம் எதிர்நோக்கும் சமூக பிரச்சினைகளையும் நாவலினூடே விவரிக்கிறார் பாட்டில். இவற்றுக்குள் மிக ஆழச் செல்லும் தேவையைத் தவிர்த்து மிக புத்திசாலித்தனமாக அவர் இந்த பிரச்சினைகளை கவனப்படுத்துகிறார். சோமப்பாவின் பாத்திரத்தைக் கொண்டு கிராம வாழ்வின் பன்முகத் தன்மையையும் எப்போதுமிருக்கும் சமய வேறுபாடுகளையும் இந்நாவலில் விவரித்திருக்கிறார். சோமப்பா ஒரு ஜைனராக இருந்தாலும்கூட அவர் விட்டலனை நம்புகிறார், தேரோட்டம் துவங்கும்போது விழாக் கொண்டாட்டங்களில் எப்போதும் அவர் முன்னிற்கிறார்.

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

ஒவ்வொரு மாலையும்
என் வருகையை எதிர்பார்த்து
கலைந்த கூந்தலும், சமையலறையின்
பிசங்கற் சீலையுமாய்
என் மனைவி
வாசலில் காத்திருக்க,

கேர்ரியும் அடாப்பிடியர்களின் நெருக்குதலும்

வீட்டிலும், வெளியிலும் கைவிடப்பட்ட பதின்ம வயதினருக்கு இருக்கும் அழுத்தத்தின் வெளிப்பாடு வன்முறை என்பதை முதல் நாவலில் கச்சிதமாகக் காட்டிய கிங் தன் அடுத்த பல நாவல்களிலும் bullying பற்றி எழுதியிருக்கிறார். அவருடையது பல்ப்-க்கும் ஆழமான இலக்கியங்களுக்கும் இடைப்பட்ட பாலமாக அமைகிறது. அவர் எடுத்துக்கொள்ளும் களங்கள் அவர் வசிக்கும் Maine மாகாணத்தில் நடப்பது. ஸ்டீஃபன் கிங் படைப்புகளின் பாத்திரங்கள் American Joe வகையைச் சேர்ந்தவர்கள். தினசரி கவலைகள், சந்தோஷங்கள், வெறுப்புகள், ஆசாபாசங்கள் என்ற சாதாரணர்கள். இவர்களின் அடியாழத்தில் இருக்கும் வன்முறையோடு அமானுட சக்தி கலந்தால் சமன்பாடு குலைந்து அந்த சக்தி இழுக்கும் இழுப்புக்கு ஆடும்.

கடப்பாரை வைத்தியமும் ஜெட்ரோபா விதைகளும்

ஒமை என்ற இலுப்பை சுந்தரர் தேவாரத்திலும், அகநானூறில் யானை கோடையில் பிளந்த பாலை மரக்காட்டின் செறிந்த ஒமை மரத்தின் நீர் செம்மை குறித்தும் அறிந்தவர் தானே நாம்! பாலையில் காடுகளாய் கோடையிலும் நீர்  கிடைக்கும் மரவகைகளை பாதுக்காக்காது இருந்த தலைமுறையின் குற்றம் யாருடையது ?

கூறுகிறேன்… முடிந்தால் கேளுங்கள் – 4

மணியனின் பயணக் கட்டுரைகளையோ, வேறு எழுத்துகளையோ நான் படித்ததில்லை. ஆனால் அவர் ‘எங்கே என்ன சாப்பிடக் கிடைக்கும்’ என்று எழுதியிருந்தால் அதில் என்ன தவறு என்பது எனக்கு உண்மையாகவே தெரியவில்லை. பலர் பயணக் கட்டுரை எழுதுபவர்களை ‘நல்ல வேளை, சாப்பாடு பற்றி எழுதிவிடுவீர்களோ’ என்று பயந்தேன் என்று புகழ்வதை அடிக்கடி கண்டிருக்கிறேன். சாப்பாடு என்ன மேலை நாட்டினரைப் போல நமக்கு கைகளால் தீண்டத் தகாததா? அதிலும் இட்லி.

காகசஸ் மலைக் கைதி – 2

ஒரு சிறிய பெண் ஓடோடி வந்தாள்: அவளுக்குப் பதின்மூன்று வயதிருக்கலாம்; மெலிந்து ஒல்லியாக, கரிய தார்த்தாரியனை ஜாடையில் ஒத்து இருந்தாள். அவள் அவனுடைய மகள் என்பது புலனாகியது. அவளுக்கும் கரிய விழிகளுடன் முகம் பார்க்க நன்றாக இருந்தது. அகலமான கைகளையுடைய நீளமான ஒரு நீல நிறச் சட்டையை இடுப்பில் கட்டும் கச்சையில்லாமல் அணிந்திருந்தாள். அவளுடைய ஆடையின் ஓரங்களிலும் முன்புறத்திலும் சிகப்பு நிறத் துணியால் தைக்கப் பட்டிருந்தது. அவள் காற்குழாயும் செருப்புகளும் அணிந்து அதன் மீது உயரமான குதிகால்களைக் கொண்ட காலணிகளையும் அணிந்திருந்தாள். அவள் கழுத்தில், வெள்ளி ருஷ்யக் காசுகளாலான ஒரு மாலை இருந்தது. அவள் தலையைத் துணியால் மூடவில்லை; அவளது கருநிறத் தலைமுடி ரிப்பனால் பின்னப்பட்டு ஜரிகைப் பின்னலாலும் வெள்ளிக் காசுகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

அணிகலன் அணிவகுப்பு

என்னுடைய மகள் பிறந்த சமயத்தில் இரவெல்லாம் எனக்கு சரியாகவே உறக்கம் வராது. அவள் நன்றாக குறட்டை விடாமலே உறங்குவாள். நானோ ஒரு மணி நேரத்திற்கொருமுறை அருகே சென்று நாடி பிடித்து, அது கிடைக்காமல், நெஞ்சில் காது வைத்து, அதுவும் கேட்காமல், கிள்ளி எழுப்பி அழ வைத்து நிம்மதி கொள்வேன். இப்பொழுதோ இண்டெல் நிறுவனம், குழந்தைக்கு பீதாம்பரத்தை மாட்டிவிடுகிறார்கள்.

ஃபார்மால்டஹைடில் குறியீடுகள் – வரலாற்றையும் புனைவையும் கலத்தலின் சாதக பாதகங்கள்

இந்த வட்டத்திலிருந்து வெளியேறும் வழியைத் தேடத் துவங்கினேன்; என் எழுத்து சிறைச்சாலை அமைப்புக்கு நேரடியாக உதவுவதாக இல்லாத ஒரு வழியைக் கண்டடைய வேண்டும் என்று எண்ணினேன். சிறைகளின் நடைமுறைச் செயல்பாடுகளை நிர்வகிக்கும் அறிவுத்துறை மேலும் நுட்பமான ஆயுதங்களைப் பெற என் எழுத்து பயன்படக்கூடாது. இது எவ்வாறு சாத்தியமாகும் என்ற கேள்விக்கு நான் கண்ட விடை பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியிருக்கக் கூடும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இங்கே ஒரு கிளைக்கதை சொல்ல வேண்டும். நான் ஏன் இப்படி எழுத வேண்டுமென்று தேர்வு செய்தேன் என்பதற்கான உண்மையான காரணத்தைச் சொன்னால் வித்தியாசமாக இருக்கும்.

ஃபார்மால்டஹைடில் பாடமானதா வரலாறு? – சிலந்தியின் விஷக்கடி

அனுமனின் சித்திரத்தை, ஒரு பண்பாட்டின் நோக்கத்தை மதித்து நோக்குகையில். சுயம் ஒதுங்கி, சமூக ஒழுங்கும், அறமும், நற்பண்பும் மையப்படுவது உயர்வாகக் கருதப்படுவதை அது சித்திரிக்கிறது என்பது உடனே புரியும். லீகோ சித்திரமோ சுயம் என்பதே தொடர்ந்து கட்டப்படுவதையும், அதுவும் சுயத்தாலேயே கட்டப்படுவதையும் ஒரு புரியாத, தீர்வில்லாத புதிராகக் காட்டுவது தெரியும். முன்னது பண்டை நாகரீகத்தின் தாக்கம் என்றால், பின்னது தொழிற்சாலை நாகரீகத்தின், அனேகமாகப் பயனற்ற பொருட்களின் பெருக்கத்துக்காக சமூகங்களைப் பலி கொடுக்கத் தயாராக இருக்கும் நாகரீகத்தின் தாக்கம் என்று பார்க்க முடியும். முன்னதில் நம்பிக்கையைத் தொடர்ந்து மேன்மைக்கு வழி கிட்டுவது குறித்த தெளிவு சித்தரிக்கப்படுகிறது. பின்னதில் வாழ்வின் அர்த்தமின்மை குறித்த விசித்திர உணர்வே தலை.

அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை – 2

ரம்ஸ்ப்ரிங்க (Rumspringa) என்பது ஒரு ஜெர்மன் சொல். அதை தோராயமாக ஊர்சுற்றல் என்று மொழிபெயர்க்கலாம். ஒரு பதினைந்து, பதினாறு வயதை எட்டிப்பிடித்த ஆமிஷ் இளைஞர்களும் இளம் பெண்களும் இந்த பருவத்தை அடைகிறார்கள். அடுத்த 2,3 வருடங்களில் அவர்கள் எப்படி நடந்துகொள்ளுகிறார்கள் என்பதை ஆமிஷ் சமூகம் கண்டுகொள்ளுவதில்லை. எனவே இந்த கால கட்டத்தில் விதம் விதமான சிகை அலங்காரமோ, வகை வகையான துணிகள் அணிவதோ , சினிமா பார்ப்பதோ , தினசரி /வாராந்திர குடும்ப பிரார்த்தனைகளில் பங்குகொள்ளாமல் ஊர் சுற்றுவதோ, பயணம் செய்வதோ ஆமிஷ் அல்லாத (English) நண்பர்களுடன் நாட்கணக்கில் சுற்றுவதோ, இங்கிலீஷ் ஆண்/பெண்ணை டேட் செய்வதோ எல்லாம் அனுமதிக்கப்படுகிறது.

அமோல் பாலேகரின் பங்கர் வாடி

1939 என்று முதல் காட்சியே சொன்னது. ஒரு இருபது வயது இளைஞன் தன் தாய் தந்தையரிடம் ஆசீர்வாதம் பெறுகிறான். மகாராஜா கொடுத்த வேலை இது. பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். என்று தந்தை ஆசீர்வதிக்கிறார். இன்னமும் ராஜ விஸ்வாசம் நிலவும் ஒரு காலம் என்று தெரிகிறது. அடுத்து அந்த இளைஞனை பங்கன் வாடிக்கு தன் வேலையில் சேர நடந்து போய்க்கொண்டிருக்கிறான். அந்த கிராமம் ஒரு வரண்ட பிரதேசத்தில். எங்கும் வரட்சி. கடைசியில் அவன் வந்து சேரும் பங்கன் வாடி கிராம எல்லையில் நம் ஊரில் ஒரு பிள்ளையார் கோயிலோ இல்லை, ஐயனார் சிலையோ இருப்பது போல இந்த கிராம எல்லையில் நிறைய கிட்டத்தட்ட நாற்பது ஐம்பது படமெடுத்த நாகங்களின் சிலைகள்.

கண்மணி குணசேகரனின் 'அஞ்சலை'

இக்கதையில் வரும் பெண்களில் ஒருத்திகூட பலவீனமானவள் அல்ல. கணவன் இறந்த பின் ஒற்றை ஆளாய் கூலிக்கு உழைத்து தன் மூன்று பெண்களுக்குத் திருமணம் செய்து மகனையும் ஐ.டி ஐ வரை படிக்க வைக்கும் பாக்கியம். அஞ்சலை படும் பாட்டால் மனமொடிந்து போன நிலையிலும் மாட்டை கார்குடலிலிருந்து மணக்கொல்லை வரை ஓட்டி வந்து அஞ்சலை கன்னுக்குட்டியைத் திருடவில்லை என நிரூபிக்கிறாள். பெரிய அக்கா கல்யாணி, வெளிப்படையாய் கொழுந்தனுடன் உறவு வைத்துக்கொள்வது மட்டுமில்லாமல் ஊர்வாயை அடக்கவும் தெரிந்தவளாய் இருக்கிறாள். அவர்கள் இவளை ஒதுக்குவது பற்றி இவளுக்குக் கவலை இல்லை. சின்ன அக்கா தங்கமணி தன் அன்பாலும், நல்ல குணத்தாலும் குடும்பத்தில் உள்ளவர்களிடையே ஒரு பாலமாய் இருக்கிறாள். அஞ்சலையை ஊர்வாய் சீண்டிகொண்டே இருப்பதில் அவள் அடிபட்டாலும், அது அவளை ஒடுங்கச்செய்வதில்லை.

புளியங்குடிப் பெரியாழ்வார்

நான் இயற்கை விவசாய முன்னோடிகள் பலரையும் பத்திரிக்கைகளில் பேட்டி எடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் எனக்கு மறக்க முடியாத தாக்கத்தை இவர் ஏற்படுத்தியுள்ளார். நம்மாழ்வாரை விட வயதில் மூத்தவர். எண்பது பிராயத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த இளைஞர் மாபெரும் சிந்தனையாளர். தொழில்ரீதியாக இவர் ஒரு பள்ளி ஆசிரியர். உலக அறிவு மிக்கவர். மகாத்மா காந்தி வகுத்தளித்த ஆதாரக்கல்விப் பயிற்சி ஆசிரியராக இருந்ததால் காந்திஜியின் நிர்மாணத்திட்டங்களில் ஆர்வம் நிரம்பியவர். என்னுடன் இருபதாண்டுத் தொடர்புடைய கோமதிநாயகத்தைப் புளியங்குடியில் நான் பல முறை சந்தித்த அனுபவம் உண்டு. முதல் தடவையாக நான் தினமணி சார்பாகப் பேட்டி எடுக்க எண்ணியபோது முழுமையாக ஒரு நாள் வழங்கியதுடன் முதல் நாள் இரவு அவர் வீட்டு விருந்தினராகத் தங்கியபோது அவர் குடும்பத்தில் ஒருவனாகவே எண்ணி உபசரித்ததை மறப்பதற்கில்லை.