Category: இதழ்-96
2013: புரட்டிப் போடும் 10 புதிய நுட்பங்கள்
தனிமங்களைக் கலைத்துப் போட்டு புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பது பழைய வேதியியல் நுட்பம். கணினியைக் கொண்டு பொருத்தமான தனிமங்களை மாற்றி மாற்றிப் போட்டு பொருத்தமான சேர்மங்களைக் கண்டுபிடிக்க வைப்பது தற்கால வேதியியலின் நுட்பம். எளிமையாகப் பொருந்தக் கூடியவை வெண்நிறத்திலும், பொருந்தாதவை கருநிறங்களிலும் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. இதே போல் கரிவளி காப்பகம் “2013: புரட்டிப் போடும் 10 புதிய நுட்பங்கள்”
அஃகம் சுருக்கேல்
அஃகம் என்று அழைக்கப்படும் ஃ ஆய்த எழுத்து எனப்படும். முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, ஆயுத எழுத்து என்பது சரியல்ல, ஆய்த எழுத்து என்பதே நேர். அறியாமைக் காரணமாக நானே ஆயுத எழுத்து என்று பயன்படுத்தியதை எண்ணி, இன்று வெட்கப்படுகிறேன்.
பள்ளி நாட்களில் இந்த எழுத்தை நாங்கள் அடுப்பாங்கட்டி எழுத்து என்போம், அதன் வடிவம் கருதி.
கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
.ராமானுஜன் என்ற கணித மேதையின் சூரிய ஒளியை ஒத்த பிரகாசத்தில் அவருக்குப்பின் வந்த இந்திய கணித நட்சத்திரங்கள் கண்டுகொள்ளப்படவில்லை. இசை மற்றும் விளையாட்டு உலகில் இருப்பது போல் “Hall of Fame” என முதன்மையான இந்தியக் கணித அறிஞர்களைத் தேர்ந்தெடுத்தால் அதில் தமிழ்நாட்டிலிருந்து எஸ்.எஸ். பிள்ளை அவர்கள் சந்தேகமில்லாமல் இடம் பெறுவார்.
முகுந்தன் – முரளி: புலியின் வாரிசுகள்
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நம்மாழ்வார் செங்கற்பட்டு ஏரியின் எதிர்வாயிலில் ’கார்ட்’ என்கிற தொண்டு நிறுவனத்தில் ஒரு சக்தியாக இயங்கி வந்த காலகட்டத்தில் ஓர் இயற்கை விவசாயக் கருத்தரங்கை நடத்தினார். பசுமைப்புரட்சியின் கரிய விளைவுகளைப் பற்றி அங்கு எனக்குப் பேச வாய்ப்பு வழங்குமுன், என் சரியானபடி இயற்கை விவசாயிகளிடையே அறிமுகமும் செய்தார் அதுதான் எனது முதல் மேடைப்பேச்சு.
இணைய உரையாடல் – பெற்றோர்- குழந்தைகள் உறவு
இது மாறிவருகிறது. பெற்றோர்- குழந்தைகளிடையே மன அழுத்ததிற்கு இன்னொரு பெரிய காரணம் அவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட முடிவுகளை குழந்தைகளின் ஆர்வம், ஆற்றல் இவற்றிச் சார்ந்து எடுக்காமல் பெற்றோர் தம் கனவுகளை அவர்கள் மேல் திணிப்பதும்தான்., போர்ட் தேர்வுகளுக்கு முன்பு, பரிட்சை முடிவுகள் வெளியாகும்போதும்தான் எத்தனை தற்கொலைகள்!
ஆதாரமற்ற பொருளாதாரம் – பகுதி 3
இந்திய நாணயம் சரிந்ததும் அரசும் மத்திய ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே பாடிப்பாடிப் புளித்துப் போன அதே பழைய பல்லவியைப் பாடினர். நாம் அளவுக்கதிகமாய் எரிபொருள்களை உபயோகிக்கிறோம், தங்கம் முதலான அத்தியாவசியமில்லாத உலோகங்களை வீட்டில் சேர்க்கிறோம் என நாட்டு மக்களைக் குற்றம் சாட்டி பெட்ரோல்/ டீசல் விலைகளையும் தங்கம் இறக்குமதி செய்யச் சுங்க வரிகளையும் உயர்த்தின. இவை சரியான காரணங்களா?
கவிதைகள்
எல்லோருக்கும் கை அசைத்தபடி
வந்து கொண்டிருந்த மகனின்
மகிழ்ச்சி இழைகளால் ஆன
முகத்தை அணிந்தபடி
சென்று கொண்டிருந்தேன்.
துளை வழியினூடே
அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் அவர்கள் கரைக்குத் திரும்பி நீந்தினர் அவன் அவர்கள் குதிக்க உபயோகித்த பாறையின் மீது ஏறி உட்கார்ந்தான், அவன் தொடைகளுக்குக் கீழ் அதன் உஷ்ணமான முரட்டுத்தனத்தை உணர்ந்தபடி. அந்தப் பையன்கள் தங்கள் ஆடைகளை சேகரித்துக் கொண்டு கடலினுள் நீட்டிக்கொண்டிருந்த இன்னொரு நிலமுனைப்பகுதிக்கு ஓடினர். அவர்கள் அவனிடமிருந்து விலகிப் போவதற்காகச் சென்று கொண்டிருந்தனர்..
.
மகரந்தம்
ஒரு ராணுவமே எப்படி மரக்கறி உணவை நம்பி நடத்தப்பட முடியும்? உலர்ந்த மாமிசம் என்பது ராணுவங்களில், குறிப்பாக மேலை ராணுவங்களில் அடிப்படை உணவு, அல்லது தகர டப்பாக்களில் அடைக்கப்பட்ட மாமிசம் அப்படிப்பட்ட அடிப்படை உணவு என்றுதானே இத்தனை காலமாக இருந்தது. நார்வேயின் ராணுவம் இப்போது மரக்கறி உணவைத் தன் படையாட்களுக்குக் கொடுக்கப் போகிறதென்றால் அதன் செயல்முறைகள் என்ன்? இந்தக் கட்டுரை அப்படி ஒரு முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்று விளக்குகிறது.
தாலிபான் பின்புலத்தில் இரண்டு ஆஃப்கன் நாவல்கள்
செப்டம்பர் 11-க்கு முன் மத்தியக் கிழக்கு நாடுகளின் இலக்கியங்கள் மிகக் குறைவாகவே ஆங்கிலத்தில் மாற்றப்பட்டன. ஆனால் அபுனைவுகள் அதிகமாக எழுதப்பட்டன. முக்கியமானவையாக அகமத் ரஷீதின் ‘தாலிபான்’. பெர்னார்ட் லூயிஸ், எட்வர்ட் சயீத் போன்றோரின் புத்தகங்களும் உண்டு. ஆனால் பொது மக்களிடம் இத்தகைய புத்தகங்களைத் தேடிச்சென்று படிக்கும் பழக்கம் செப்-11-க்குப் பிறகு அதிகரித்தது. ஒரு கட்டுரையின்படி 1997-ல் 793 மத்தியக்கிழக்கு சம்பந்தமான புத்தகங்கள் ஆங்கிலத்தில் வந்தன என்றால் 2004-ல் 1304 புத்தகங்களாக உயர்ந்தன. லியொன் வைஸெல்டியெர் (Leon Wieseltier) கூறியபடி, ’செப். 10 2001 வரை மேற்குலகமக்களுக்கு இஸ்லாம் என்றால் அவ்வளவாகத் தெரியாது. செப்.12 2001 அன்று அதே மக்களுக்கு இஸ்லாம் பற்றி எல்லாம் தெரிந்துவிட்டது’.
கவிதைகள்-பூரணி
முள்முருங்கையின் கிளையில் மாணிக்கம் பூத்திருக்கும்
கள்ளக் கரும் காகம் கண்சாய்த்துத் தேன் குடிக்கும்
கிள்ளை அருகில் வரக் காகம் அதைத் துரத்தும்
முள்ளுக் கிடைத்தாழை மஞ்சள்குளித்திருக்கும்
நேர்காணல் – சங்கீதா ஸ்ரீராமுடன்
அங்கு பெரும்பாலும் மரம் நடச் சொல்வது, பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மட்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரித்தல், பெருநகரத்து நீர்வழிகளைச் சுத்திகரிக்கக் கோரிப் போராடுவது போன்ற மத்தியவர்க்கச் செய்ல்பாட்டாளரிய நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டு வந்தேன். ஆனால் அது ஒரு நல்ல அனுபவம். நிறைய நட்புகள் கிடைத்தன. இங்குத் தான் சூழலியல் சார்ந்த பாலபாடங்களைக் கற்றேன்.
பாண்டிச்சேரியும் பவழ மல்லியும்
வேப்ப மரம் பூப்பதை வைத்து அது சித்திரை மாதமென்றும், அது கோடை காலமென்றும் சொல்கிறோம். அதே போல திரிபுராவில் உள்ள கிராம மக்கள் குறிப்பாக விவசாயம் செய்பவர்கள் ஒரு பருவத்தில் அதிக மழை வருமா, ஓரளவிற்கு மழை வருமா, அல்லது பருவ மழை பொய்த்துவிடுமா என்பதை பவழ மல்லி பூக்கும் விதத்தை வைத்தே சொல்லிவிடுகின்றனர். இதை உறுதி செய்ய ஆராய்ச்சியாளர்கள் 2002லிருந்து 2007 வரை 270 பழவ மல்லி மரங்களின் பூக்கும் விதத்தை அவதானித்து அதை ஆவணப்படுத்தினர்.
கல்யாணராமனுடன் ஒரு காஃபி
அம்பையின் ஓரிரு சிறுகதைகளையும் இந்த காலகட்டத்தில் மொழிபெயர்த்தேன். சுந்தர ராமசாமியின் ‘எங்கள் டீச்சர்’ கதையையும் ஒரு போட்டிக்காக மொழிபெயர்த்தேன். ஆறுதல் பரிசுதான் கிடைத்தது.
இந்த கட்டத்தில் பல விஷயங்கள் எனக்குத் தெளிவாகியது. மொழிபெயர்ப்பு, படைப்பெழுத்துக்கு ஈடான நிறைவைக் கொடுக்ககூடியது.மொழிபெயர்ப்பு தரமானதாயிருந்தால் தேர்ந்த வாசகர்கள் அதை நாடி வருவர். ஒரு சிறந்த படைப்பின் வாசகத் தளத்தை மொழிபெயர்ப்பின் மூலம் விரிவாக்குவது முக்கியமான சமூகப் பங்களிப்பு.எதற்கும் மேலாக மொழிபெயர்ப்பு எனக்கு ஊக்கமும் உவகையும் தரும் செயல்பாடாக இருந்தது.நான் அதைத் தொடர்ந்து செய்துவருவதற்கு இவையே இன்றும் உந்துதலாக விளங்குகின்றன.
சம்பூர்ணமான பூரணி
ஏழு ஸ்வரங்களும் கூடி வரும்போதுதான் இசை சம்பூர்ணமாகிறது என்கிறார்கள். கவிஞர், கலைஞர், இலக்கிய ஆர்வலர், கதைசொல்லி, எழுச்சி கொண்ட பெண், சமூக அக்கறை கொண்ட ஒரு மனிதாபிமானி, மொழிபெயர்ப்பாளர் என்று ஏழு வகைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பூரணி நூறு ஆண்டுக் காலம் வாழ்ந்து சம்பூர்ணமடைந்தார் நவம்பர் 17ம் தேதி. ஒரு மாதம் முன்னால்தான் தன் நூறாவது வயதை எட்டியிருந்தார் பூரணி. அதற்கான எந்தக் கொண்டாட்டத்தையும் அவர் விரும்பவில்லை. இத்தனை வயதாகியும் உடல் நலத்தோடு இருக்கிறோமே, குடும்பத்தினருக்குத் தன் சாவு பற்றி எந்தவித நம்பிக்கையும் தராமல் இருக்கிறோமே என்று வருந்தியவர் பூரணி. மிகவும் அபூர்வமான நபர்.
நேரம் சரியாக.. – 4
முதல் செயற்கைக் கோளிலிருந்து ஒரு குறிகை (signal) ஜி.பி.எஸ். ஏற்பிக்கு அனுப்பப்படுகிறது. 20,200 கி.மீ. பயணித்து வரும் இந்த குறிகையை (நொடிக்கு 300,000 கி,மீ. பயணிக்கும் ஒரு குறிகைக்கு 67 மில்லி செகண்டுகள் ஆகும்) பெற்ற கருவி, அனுப்பிய செயற்கைக் கோளின் நேரம், மற்றும் தூரத்தை வைத்துச் சுமாராக தன்னுடைய இருப்பிடத்தை நிர்ணயிக்கிறது. இரண்டாவது செயற்கைகோள், இதே பணியைச் செய்கிறது. இதன் தூரம் முதல் செயற்கை கோளிலிருந்து சற்று மாறுபடும். இந்த இரண்டு செயற்கைக் கோள்களின் குறிகைகளையும் வைத்து, சற்று மேலும் சரியாக தன்னுடைய இருப்பிடத்தை நிர்ணயிக்க முடிகிறது. மூன்றாவது செயற்கைகோள், இந்த இருப்பிடத்தை நிர்ணயித்தை 3 அடிக்குள் கொண்டு வந்து விடுகிறது.
பன்னீர்
பொழுது போகாத சமயம் அவள் இரும்புப் பெட்டியைத் திறந்து அந்தப் பட்டுப்புடவையை கையில் எடுத்துப் பார்ப்பாள். ஒருமாதிரி பாச்சா உருண்டை மணத்துக் கிடக்கும் அது. அல்சேஷன் நாய் வழிதப்பி சேரிக்குள் வந்தா மாதிரி… அற்புதங்கள் எப்பவாவது நிகழ்கின்றன. பிரத்யேகமாய் அதைக் கட்டிக்கொண்டு அவள் எடுத்துக்கொண்ட புகைப்படம் பெட்டியில் வைத்திருந்தாள். கொஞ்சம் அவ்ட் ஆஃப் ஃபோகஸ் படம் தான். கலரில் எடுக்கச் சொன்னால் கறுப்பு வெள்ளை மாதிரி யிருந்தது, அவளே கறுப்பு என்பதால்.
ஓர் ஆல விருக்ஷம் பரப்பிய விழுதுகள்
1913-ம் ஆண்டு தமிழ் நாட்டின் ஒரு பிராமணக் குடும்பத்தில் ஒன்பது பேரில் ஒருவராகப் பிறந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? ஆனால், இப்போது அவரைப் பற்றி எண்ணும் போது, தெரிந்த ஒரு சில தகவல்களோடு தெரியாதவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது தெரிகிறது, அவர் தன்னை மீறி, தன் சூழலை மீறி, தன் காலத்திய வாழ்க்கைக் கட்டுப்பாடுகளோடு வாழ்ந்தே அவற்றை மீறி தன்னை விகசித்துக்கொண்டு தன் இரண்டு தலைமுறை சந்ததிகளுக்கும் வாழ்ந்து காட்டிய ஆதர்சமாக இருந்தவர்.