பெண்களுக்கு அநியாயமாய் அநியாயம் செய்யும் நாடுகளின் பட்டியல்

பெண்களுக்கெதிராய் செயல்படும் நாடுகள் எவை? இருபாலாருக்கும் கல்வி பயில சம உரிமை கிடைக்கிறதா என்பதில் துவங்கி அரசியலில் எவ்வளவு பேர் ஈடுபடுகிறார்கள் என்பது வரை ஆராய்ந்து இந்தப் பட்டியலை தயாரித்திருக்கிறார்கள். அமெரிக்காவிற்கு 23ஆம் இடம் கிடைத்திருக்கிறது.

பாரத் ரத்னா CNR ராவ் அவர்களுக்கு சொல்வனத்தின் வாழ்த்துக்கள்!

இந்திய வேதியியல் விஞ்ஞானி. முழுப்பெயர் சில வாசனை மூலக்கூறுகள் போல நீண்டது. சிந்தாமணி நாகேஸ ராமசந்திர ராவ். அவர் ஆய்வுக்கூடத்தில் முதன் முதலில் கால்வைத்தே 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் ஒரு வருடத்தில் 80 வயது தாத்தா. வேதியியல் என்ற துறைதான் அவரது சுவாசம், தவம் எல்லாம்….

மகரந்தம்

ஃப்ரான்ஸீனுக்கு ஒரு மஹா கணபதி கிடைத்திருக்கிறார். இன்று நேற்றல்ல… நாற்பது வருடங்களாக கூட வருகிறார். கல்யாணமான பிறகும் அவரின் மேஜையை அலங்கரித்திருக்கிறார். கல்லூரி கல்லூரியாக வேலை மாறினாலும் சுவரில் அருள்பாலிக்கிறார். மேற்கத்திய உலகில் நம்பிக்கைகள் ரொம்ப அதிகம். சொந்த அணி ஜெயிக்க வேண்டுமானால் ஜட்டி கூட மாற்றாமல் அலுவலுக்கு வருபவர்கள் அதிகம். அவர்களுக்காக பிள்ளையாரின் பெருமையை எடுத்துரைக்கிறார்.

பாட்டாளிகளின் அரண்மனை – ஆந்தனி மார்ரா – பகுதி 2

நான் வெளியே போகுமுன் அவர் வரிசையாகப் பல கட்டளைகளை இடுவார்.

“பொடியைக் கொடுக்குமுன் நீ பணத்தை எண்ண வேண்டும்.”

“போலிஸ்காரர்களை முகம் கொடுத்துப் பார்க்கக் கூடாது.”

“நீ மீறுகிற சட்டத்தைத் தவிர பாக்கி எல்லா சட்டங்களையும் மதிக்க வேண்டும்.”

“நீ நின்று யாரோடும் பேசக் கூடாது.”

“வளர்ந்த ஆள் போல நீ நடந்து கொண்டால், அப்படியே நடத்தப்படுவாய்.”

சங்கீத் சாம்ராட் மன்னா டே

பர்ஸாத் கி ராத் என்ற இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து 1960-ல் வெளிவந்த படத்தின் இசையமைப்பாளர் ரோஷன் பாடல்கள்- சாஹிர். பரத்பூஷண் – மதுபாலா ஜோடி. அதில் வரும் ஒரு கவாலிப் பாடல் mother of all qawalis  என்ற மகத்துவம் பெற்றது. ‘நா தோ காரவான் கி தலாஷ் ஹை’ தொடர்ந்து ‘ஹே இஷ்க் இஷ்க்’ என்று காதலின் பெருமையை உயர்த்தும் பாடலைப் பாடியவர்கள் ரஃபி, மன்னா டே, ஆஷா போன்ஸ்லே, பாடிஷ் (batish – qawali specialist) சுதா மல்ஹோத்ரா குழுவினர்.கண்டிப்பாக பாடலைக் கேட்டுப் பாருங்கள்.

ஸச்சின் எனும் ஆச்சரியம்

பித்துப் பிடித்த ரசிகர்கள் உலோகத் தடுப்புக் கதவுகளை உலுக்குவதை, இங்கிலாந்தின் MCC கிரிக்கெட்டின் கிளப் உறுப்பினர்களுக்கான (egg and bacon )டை கட்டிய எண்பது வயதுக்காரர்கள் பயபக்தியுடன் எழுந்து நிற்பதை , பிள்ளைகளை தலைக்குமேல் உயர்த்திக் காட்டும் தந்தைகளை, பெண்கள் கிறீச்சிடுவதை, ராஸ்தாஃபாரிய தாடி வைத்த சுருங்கிய வயதான மனிதர்கள் அவரது ஒவ்வொரு அசைவையும் கவனிப்பதை, நாட்டின் அதிபர்கள் கைதட்டி வரவேற்பதை. கிரிக்கெட்டின் பிரபலங்கள் ஒரு விருந்தை எதிர்நோக்கி இருப்பதைக் காண்பீர்கள். அந்தக் கணத்தின் பாவத்தை ஒரு கவியைத் தவிர யாரால் கைப்பற்ற இயலும்?…’

ஆதாரமற்ற பொருளாதாரம் – பகுதி 2

வட்டி வீதம் மிகவும் குறைவானாலொழிய மீண்டும் கடன் வாங்கும் சூழலை ஏற்படுத்துவது குதிரை கொம்பான விஷயம். மீண்டும் வங்கிகளிடையே, நிறுவனங்களுக்கிடையே, மக்களுக்கிடையே பணம் புழங்க, அனைவரையும் மேலும் கடன் வாங்க வைக்க, பொருளாதார சந்தையில் வட்டி வீதத்தை குறைத்து மலிவு விலையில் மூலதனத்தை கிடைக்கப் பெற்றால் மட்டுமே இது சாத்தியமாகும்.

நேரம் சரியாக… – 3

இவரும், இவருடைய சக ஊழியர்களும் தங்கள் வாழ்க்கையைத் துல்லியமாக ஒரு நொடியை அளக்கும் பணிக்கு அர்ப்பணித்துள்ளனர். அட, நொடியைத் துல்லியமாக அளக்க வாழ்நாள் தேவையா என்றால், ஒன்றல்ல, சிலபல வாழ்நாட்கள் தேவை. விஞ்ஞான முறைகள் அவ்வளவு எளிதானவை அல்ல. ஒரு நொடியை 10 பில்லியன் பங்குகளாய் பிரித்துத் துல்லியமாக அளக்கும் விஷயம் சாதாரண விஷயம் அல்ல..

பயின்ற பாடங்கள் – சுந்தரராமன், சித்தர்

சரியான தடம் புரியாமல் தத்தளித்து வந்த சூழ்நிலையில் அதிர்ஷ்டவசமாக ஒரு நாள் சன் டி.வி. “வணக்கம் தமிழகம்” நிகழ்ச்சியில் எனது பேட்டியைக் கண்டு கவனமாகக் கேட்டார். இயற்கை விவசாயத்தின் தேவையையும் எப்படி கொண்டு செல்ல வேண்டுமென்றும் சற்று விவரமாகப் பேசினேன். ஒரு மணி நேர நிகழ்ச்சி என்பதால் நிறைய பேசும் வாய்ப்பு இருந்தது. பேட்டி முடிந்த மறுகணமே என்னைத் தேடி வந்து சந்திக்க ஆர்வமாக இருந்தார்.

எந்தக் காரிலும் இல்லாத ஒன்று…

மற்ற கார்களைப் போல் டெஸ்லாவில் எந்தவிதமான திருகல்களும் ரேடியோ பொத்தான்களும் குளிரூட்டுவதற்கான விசைகளும் கிடையாது. உங்கள் கணித்திரை போல் பதினேழு இன்ச்சில் பெரிய வெள்ளித்திரை. அதோடு ஐபோன் சிரி போல் பேசலாம். “தேவா இசையில் ஹரிஹரன் பாடிய பாடல்களைப் போடு” எனலாம். ”எழுபத்திரண்டு டிகிரி வை” என கட்டளை இடலாம். “போலீஸ் மாமா ரேடாரில் வேவு பார்க்கிறார்” என்பதை அறிந்து பம்மலாம்.

வன்னி மரத்தைப் பார்க்கப் பயணம்

தல மரங்கள் எனும் concept எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மரங்களை அதுவும் நம் மண்ணுக்குச் சொந்தமான மரங்களைப் போற்றிப் பாதுகாக்கும் காரணிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை ஆமோதித்து அரவணைத்துக் கொள்வது இயற்கைப் பாதுகாவலர்களின் கடமை என்பது எனது எண்ணம்.

ஆறு பேர் ருசிக்கிறார்கள் – ஆடு

விதூஷகன் : தமிழில் ஆடு என்றால் ஆடுவாயா? ஆட்டை வளர்த்து வெட்டுவாயா? ஆடு, புலி, ஆட்டம் வியூகம் வகுப்பாயா? ஆட்டை போடுவாயா?

அறியாமையின் விலை

அப்படி என்னதான் பெரிதாகச் செய்து விட்டார்? “சொற்களின்றி, வெறும் ஒலிகளின் அடிப்படையாக, ஓடும் உணர்வுகள் மூலம் மனித மூளை விவரத்தை வெகு விரைவாக – இரு நொடிகள் அளவில் புரிந்து கொண்டு விடுகிறது” என்பது அவரது கோட்பாடு. அதனை பல உரையாடல்களின் சிறு சிறு துண்டுகள் மூலம் நிரூபித்தார். இரு மனிதர்களின் உரையாடல் நாடாவில் பதிவு செய்யப்படுகிறது. அதில் வரும் சொற்களின் அதிர்வுகளை ஒரு அதிர்வு வடிகட்டி (Frequency filter) மூலம் பிரித்து எடுத்துவிடுகிறார் நளினி. எஞ்சி இருப்பது வெறும் ஒலிகள் மாத்திரம் – சில அடிக்குரலில், சில உச்சஸ்தாயியில்…

கூறுகிறேன்…. முடிந்தால் கேளுங்கள் – 2

எது என்னைத் தீவிர இலக்கியத்திடம் இட்டுச் சென்றது? உயர் சங்கீதம் கேட்க தனியான செவி வேண்டும். இது வெறும் பயிற்சியால் மட்டும் வருவதில்லை. எனக்கு எல்லா ராகமும் சிந்து பைரவியாகத் தெரிகிறது என்றால் என் செவிமனம் அவ்வளவுதான் என்று பொருள். ஓவியத்துக்கு தனிக் கண்கள் வேண்டும். அதே போல் ஓர் உயர் எழுத்தை எழுத்தாளன் எழுத அவனுக்கு எத்தகைய உளம் வேண்டுமோ அதற்கு சற்றும் குறையாத தீவிரமும், வளமும் உள்ள உளம் வாசகனுக்கும் வேண்டும். அது இருந்தால் சென்னையோ, நாகர்கோவிலோ, கம்மவான் பேட்டையோ, ஆரணியோ, டில்லியோ, சிங்கப்பூரோ எங்கிருந்தும் வாசகன் தான் தேடுவதைக் கண்டடைவான். வாசகன் தயாரானதும், அவன் எங்கிருந்தாலும் எழுத்தாளன் தென்படுவான்.