Category: இதழ்-94
அதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை
ஆனால் எல்லாவற்றையும் கடந்து, எங்கோ எப்பொழுதோ ஒரு புள்ளியில் மனிதர்கள் வெறும் புள்ளிவிவரங்களாகவும், மரணங்கள் வெற்று எண்ணிக்கைகளாகவும் கணக்குகளாகவும் மற்றுமொரு சம்பவமாகவும் மாறி விடுகின்றன. ஆனால் மனிதனுக்கு வேறு மார்க்கமும் இல்லை. அவனும் சித்த தெளிவுடன் பிழைத்திருக்க வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு இருக்கிறதே!
ஏற்கெனவே எப்போதும்
ஆதி உணர்வு அச்சம். எங்க நாம தாக்கப்பட்டுறுவமோன்னு ஒரு பயம். இதுதான் உலகத்தில் எந்த உயிருக்கும். மனிதன் சமூக விலங்கு. அவனும் முதலில் வெளிச் சமூகத்தை அச்சத்துடனே பார்க்கிறான். பின்னர் எப்படியாவது அதில் சேர்ந்து தனது தனித்தளத்தைக் கைவிட்டுக் கரைந்து விடப்பார்க்கிறான். கரைவதில் அவனுக்கு அபாயம் குறைவு.
ஆதாரமற்ற பொருளாதாரம் – 1
வங்கிகள் தன்னிடம் காசு இல்லாமலேயே பிறருக்கு கடன் வழங்கிக் கொண்டிருக்கின்றன. என்னிடம் நூறு ரூபாய் இருந்தால்தான் நான் உங்களுக்கு நூறு ரூபாய் கடனாக தர முடியும். ஆனால் கையிருப்பை விட அதிகமாக பிறருக்கு கடன் கொடுக்கும் உரிமை வங்கிகளுக்கு மட்டுமே உள்ளது. அதுவும் பல பல மடங்கு அதிகமாக கடன் கொடுப்பது வழக்கமாகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. இது எப்படி சாத்தியம் ஆகும்?
வாழ்வியல் ரகசியங்கள்
“நாம் வாழும் இந்த உலகத்தில் நல்ல கருத்துகளைக் கூறும் தலைவர்களுக்கும் அணிகளுக்கும் பஞ்சமே இல்லை. ஒப்பற்ற ஒரே லட்சியத்தை நோக்கி, இணையாத இரு கோடுகளாக இயக்கங்கள் செல்வதைக் கவனிக்க முடிகிறது. ஒன்றாக இயங்கத் தயக்கம் காட்டுவதும் புரிகிறது. ஒருங்கிணைந்து செயலாற்றி ஒரு வலைப்பின்னலை உருவாக்கி சாதனை செய்வது அவசியம். இயற்கை விவசாயத்தில் மாறுபட்ட சிந்தனையுள்ளவர்களை ஒருங்கிணைத்துச் செல்ல இந்த நூல் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நூல் காலத்தால் அழியாத ஒரு கருத்துப் பெட்டகமாகவும் விளங்குகிறது. இயற்கை விவசாயத்திற்குப் பாடுபட்டு வரும் முன்னோடிகளுக்கும் ஒப்புதலை இந்த நூல் வழங்குவதும் ஒரு சிறப்பு. “
தன்மானத் தேடல் – ரேமண்ட் சான்ட்லரின் ஃபிலிப் மார்லோ
உண்மை எது பொய் எது என்ற தெளிவில்லாத மார்லோவின் உலகில் போலீஸ்காரர்கள் வராமல் இருக்க முடியாது. சான்ட்லரின் போலிஸ்காரர்கள் லட்சியவாதிகள் அல்ல, முழுக்க முழுக்க ஊழலானவர்கள் அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட, யதார்த்தத்தை ஒட்டிய பாத்திரங்களைக் கொண்டு சான்ட்லர் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட சமநிலையை அடைகிறார். சான்ட்லரின் கதைகளில் மார்லோ அத்தனை வகை போலீஸ்காரர்களையும் சந்திக்கிறான். சிலர் வன்முறையால்தான் குற்றங்களை ஒடுக்க முடியும் என்றால் அப்படியே ஆகட்டும் என்று நினைப்பவர்கள், சிலர் மிகவும் கடுமையான காவல்துறைப் பணியைத் தங்களால் இயன்ற அளவு நன்றாகச் செய்ய முயற்சி செய்பவர்கள்.
இணைய உரையாடல் – ஆண்பார்வை
பெண்களின் மனோநிலைகள், சமூக நிலைகள், பெண்ணியம் என்ற கருத்தியலால் ஏற்பட்ட மாறுதல்கள், பாதிப்புகள் போன்றவற்றைப் பற்றி உரையாடினோம். இலக்கியத்தில் மட்டுமல்லாது அன்றாட வாழ்விலும் ’ஆண் பார்வை’ என்பது என்னவொரு உபாதை, அது கரிப் பிசின் போல எல்லாவற்றையும் குறைப்படுத்துகிறது என்ற ஒரு கருத்து பற்றியும் பேசி இருக்கிறோம்.
கூறுகிறேன்…. முடிந்தால் கேளுங்கள் – 1
ரஃபி என்கிற புயல் திலீப் குமார், ஷம்மி கபூர் முதலிய சூப்பர் ஹீரோக்களுக்குப் பாடும் குரலாகையில் ராஜ் கபூருக்கு முகேஷும், தேவானந்துக்கு கிஷோரும் என்று பொருந்திப் போய் விட்டது. தலத் முகம்மதும், ஹேமந்த் குமாரும் மங்கிப் போகையில் ராஜ் கபூருக்கும், பால்ரஜ் சஹானிக்கும் பின்னணி பாடிய மன்னா டே அசரீரியாகவும், நகைச்சுவை நடிகர்களின் குரலாகவும் ஆகி விட்டார். ராஜேஷ் கன்னா என்கிற சூப்பர் ஸ்டாரின் வருகை மேதை கிஷோர் குமாரை முன்னணிக்குக் கொண்டு சென்று பிறரைப் பின்னுக்குத் தள்ளிய போதும் மன்னா டே இருந்தார்.
இரண்டு கவிதைகள் – எம்.ராஜா
இன்னுமென்ன சத்தம்?
ஊரைக்கூட்டி
உரக்கக் கத்தினாலும்
விழவா போகிறது காதுகளில் ?
பாட்டாளிகளின் அரண்மனை – ஆந்தனி மார்ரா
ராணுவப் பணியிலிருந்து விடுவிப்பை, பல்கலைக் கழகத்துக்குப் போகிறவர்களுக்கோ, ஜெயிலுக்குப் போனவர்களுக்கோ மட்டுமே கொடுப்பார்கள். என் நண்பர்களில் சிலருக்கு வேண்டும் அளவு மதிப்பெண்கள் இருந்தாலும், பல்கலைக்கு நுழைவதற்குக் கொடுக்க வேண்டிய லஞ்சப் பணத்தைக் கொடுக்க அவர்களிடம் வசதி இல்லை, வேறென்ன செய்வது, அதனால் நாங்களெல்லாம் ஜெயிலுக்குப் போகத் திட்டமிட்டிருந்தொம் அதற்கு உயர்கல்வி என்று நாங்கள் பெயரிட்டோம். உயர்நிலைப் பள்ளியின் கடைசி வசந்த காலத்தில், வகுப்புகளுக்குப் போகாமல் டாவ்ரைட் தோட்டத்தில் பியர் குடித்தோம்.
லூயீஸ் எர்ட்ரிக் – கதை அறிமுகம்
பெண்குழந்தை, ஊனமானது, வாழப்போவதில்லை என்பது ஒதுக்கி வைக்கப்படுகிறது. இதற்கு நேர்மாறான ஆண், ஊனமற்றது, வாழக் கூடியது தேர்வு செய்யப் படுகிறது.
கழித்துக் கட்டப்பட வேண்டிய உயிரிடம் தருவதற்கு இருக்கிறது. வாழ்வுக்கு உகந்ததென்று தேர்ந்து வளர்க்கப்பட்டதிடம் அதை வாங்குவதற்குக் கூட திராணி இல்லை.
கவிதைகளில் ஆண்பார்வை
நிச்சயம் போய் விட்டிருக்கும்: இல்லை
நிச்சயம் இருக்கும்: ஈ போய்விட்டிருக்கும்
சார்ல்ஸ் ஸிமிக் கவிதைகள்
பூஞ்சை எறும்பொன்றுதான் எனக்கு
இன்று சிந்திக்கத் துணை.
பிறரிடம் உண்டு புனிதர்களின் படங்கள்,
பிறரிடம் உண்டு ஆகாச மேகங்கள்.
மகரந்தம்
பல்லாயிரம் மக்களின் வாழ்வை அழித்து, பல கோடி உயிரினங்களை ஒழித்த ஒரு பெரும் விபத்தை, இத்தனை ஆண்டுகள் துப்புத் துலக்கி, இறுதியில் ஒரு சில தனி நபர்களை மட்டும் தண்டித்து விட்டு வழக்கை இழுத்து மூடப் போகிறது அமெரிக்க முதலிய அரசு. பெரும் தனக்காரர்களின் பலம் உலகப் பொருளாதாரத்தில் அத்தனை வலுவாக உள்ளது. இந்தியாவில் எத்தனை அழிப்புகளை இவர்கள் ராகு காலத்தின் ஆட்சியில் செய்யப் போகிறார்களோ.
மூவகைப் போட்டி
உங்களுக்கு நீஞ்சத் தெரியுமா? சைக்கிள் விடுவீர்களா? ஓடவும் வருமா? அப்படியானால் நீங்களும் டிரையாத்லான் போட்டியில் கலந்து கொள்ளலாம். இந்த மாதம் ஹவாய் மாநிலத்தில் நடந்த வருடாந்திர இரும்பு மனிதன் உலகக் கோப்பையில் இருந்து சில படங்களைக் காண வாருங்கள்.
நேரம் சரியாக… – 2
மத நம்பிக்கையுள்ளவர்கள், ராகுகாலம், யமகண்டம் என்று சில குறிப்பிட்ட நேரங்களைத் தவிர்க்கிறார்கள். அமாவாசை, பெளர்ணமி போன்ற சந்திரன் சம்மந்தப்பட்ட நேர அளவுகளும், நம்மில் பலருக்கு முக்கியம். இஸ்லாமியர்களும் தங்கள் தொழுகை நேரம் மற்றும் ரமதான் வழிபாடு போன்றவற்றை பல்லாண்டுகளாக சந்திரனின் சுழற்சியைச் சார்ந்து கணக்கிடுகிறார்கள்.
இவ்வாறு, நம்மில் பலரும் நேரத்திற்காக ஏங்கும் அதே நேரத்தில், நேரம் ஏன் மெதுவாக நகருகிறது என்றும் குறைபடுகிறோம். பல சமூக, மத விஷயங்கள் நம்முடைய நேர அளவிடல்களை பாதிக்கின்றன.
என் பிறப்பின் ஆண்டுகள்
நான் பேச இயலாமல் உறைந்து போய் ஊமையாய் நின்றேன். பெட்டி கடுமையாக அழத் தொடங்கினாள். முழங்கையால் தன் முகத்தை துடைத்துக் கொண்டாள். நான் உடைந்த துகள்களை பெருக்கச் சென்றபோது, உடைந்த குரலில் என்னைப் போகச் சொன்னாள். நான் ஷெரிலைத் தேடிச் சென்றேன். அவள் வழக்கமாக ஒளிந்து கொள்ளும் தூரத்துக் கோழிப் பண்ணையில் இருந்தாள். என் மீது ஏன் பழி சுமத்தினாய் என்று கேட்டதற்கு, என்னை வன்மத்துடன் ஒரு கூர்மையான பார்வை பார்த்துவிட்டு, “ஏனென்றால் நீ வெள்ளையாக இருக்கிறாய்,” என்றாள்.
ஒரு மாதத்திலேயே குழந்தை பிறக்க வைப்பது எப்படி?
ஆனால், ஒபாமா நலத்திட்ட வெளியீட்டில் இலக்கு தெள்ளத்தெளிவாக இருந்தது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் எல்லோரும் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். டிசம்பர் பதினந்து முதல் இன்னும் பல வசதிகள் வேண்டும். மார்ச்சில் மொத்தமும் முடித்திருக்க வேண்டும். கால தேச வர்த்தமானப்படி சொவ்வறை செயலாளர்கள் சௌகரியத்திற்காகத் திருத்தியமைக்கக் கூடிய உரிமையில்லா கெடு வைக்கப்பட்ட திட்டம். கழுத்திற்கு மேல் கத்தி தொங்கும் கம்பி மேல் நடக்கும் திட்டம்.
நாக்கு
வள்ளிநாயகம் சொல்வது திருநவேலிக்கும் மட்டும் பொருந்தாதுதான். சுவையான உணவைத் தேடி அலைகிற மனதுடைய மனிதர்கள் எல்லா ஊர்களிலும்தான் இருக்கிறார்கள். வீட்டில் என்னதான் ருசியாகச் சமைத்தாலும் வெளியிடங்களில் சாப்பிட மனம் கிடந்து அலைந்து கொண்டேதான் இருக்கிறது.
“விசேஷ வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சுங்கெ! ஆடிமாசத்துல மூர்த்தம்தான் வைக்க மாட்டானுவொ. ஒரு சடங்கு வீடு வரப்பிடாதாய்யா!”
சென்னையில் நடக்கும் விசேஷ வீடுகளில் போடப்படும் சாப்பாட்டைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்போது உள்ள நடைமுறையில் போடப்படும் சாப்பாட்டில் வகைகள் என்னவோ விதவிதமாகத்தான் உள்ளன. கைகளில் பிளாஸ்டிக் க்ளவுஸும், தலைக்கு குளியல் கவரும் போட்டு, சீருடையில் கேட்டரிங் ஊழியர்கள் பரிமாறும் சாப்பாட்டில் சுவை இல்லாமலில்லை. ஆனாலும் திருநவேலி விசேஷ வீடுகளில் கைநனைத்த எந்த ஒரு மனிதனையும் பெருநகர நவீனப் பந்திகள் திருப்திப்படுத்தி விடமுடியாது.