ஃபாத்வா மீறுதல்: இந்திய இஸ்லாமியர்களில் புகைப்பட பெண்கள்

”இஸ்லாமில் புகைப்படம் எடுப்பது பாவச்செயலாகும். முஸ்லீம் சட்டப்படி குற்றமாகும். புகைப்படம் எடுப்பதற்கு எதிராக ஹதீதுகளில் எச்சரிக்கை இருக்கின்றது” என தாரூல் உலூம் பத்வா விதித்திருந்தது. இதை மீறி இஸ்லாமியப் பெண்களுக்கு புகைப்படக் கலையைக் கற்றுக்கொடுப்பதில் ஆவாஸ்-இ-நிஸ்வான் அமைப்பு முனைப்புடன் ஈடுபடுகிறது. வீட்டிற்க்குள்ளே முடங்கிக் கிடக்கும் முஸ்லீம் பெண்கள் வெளியில் “ஃபாத்வா மீறுதல்: இந்திய இஸ்லாமியர்களில் புகைப்பட பெண்கள்”

இரு ஓவியர்களின் உரையாடல்கள்

ஓவியர்கள் அல்லவா? அழகு பற்றி, அலங்காரங்கள் பற்றி பேசுகிறார்கள். அலங்காரங்கள் அழகுக்காகவும் தான். ஓவியமும் சிற்பமும் அழகானவை தான். அலங்காரங்கள் ஏதுமற்ற புத்தர் சிலையும் நடராஜரும் அழகானவை மட்டுமல்ல. அதை மீறி படைப்பாகவும் உயர்வு பெறுகின்றன. படைப்பு எது. அலங்காரம் எது? அழகு எது? எப்போது அழகு படைப்பாக ஒரு சிருஷ்டியாக உயர்கிறது என்றும் சர்சிக்கிறார்கள். எதுவும் ஒரு பொருள் பற்றி என்று திட்டமிட்டுப் பேசுவதில்லை. பேச்சு அன்றாட வாழ்க்கையின் எது பற்றியும் பேசத் தொடங்கினால், சூழல் அடைந்து வரும் சீரழிவு பற்றிப் பேச்சு செல்வது நிர்ப்பந்தமாகிறது. அச்சூழல் ஒவியர்களாக அவர்களைப் பாதிக்கும் சூழல் அது.

நார்வே பயணம் – 2

ஐரோப்பாவின் ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போது சரித்திரத்தின் நிழல் எந்தளவு நீண்டுள்ளது எனத் தெரிகிறது. கால்களுக்குக் கீழே நகரும் பூமித்தட்டுகள் போல ஒவ்வொரு மனித வளர்ச்சி யுகமும் பலவற்றை நினைவில் வைத்திருக்கும் அதே நேரத்தில் சிலதை மறக்க முயல்கிறது. ஆனால் மீண்டும் மீண்டும் நகரங்கள் புத்துயிர்ப்பு பெற்று எழும்போது, நமது ஞாபகங்கள் நம்மை ஏமாற்றுகின்றன என்றே தோன்றுகிறது. கண்ணுக்குள்ளே இருக்கும் குருட்டுப்புள்ளியைப் போல சில காட்சிகளை நம் நினைவு ஓரங்கட்டிவிடுகிறது போலும்.

From Atlantis to Noah’s Ark, we have long been drawn to stories of submerged lands. What lies beneath the flood myths?

மகரந்தம்

இது ரஷ்யாவில் மட்டும் நடக்கும் கொடுமை இல்லை. அங்கு கட்டாய ராணுவப் பணி என்பது இருப்பதால் இளைஞர்கள் இரண்டு வருடமாவது ராணுவத்தில் சிக்கிக் கொள்ளும் பயங்கரம் இருக்கிறது. மாறாக அமெரிக்க ராணுவமோ மக்கள் தாமாக விரும்பிச் சேரும் வகைப் படை. இதில் சேர்பவர்கள் அனேகமாக கீழ் மத்திய நிலை குடும்பத்து இளைஞர்கள், விவசாய நிலப்பகுதிகளிலிருந்தும், சிற்றூர்களிலிருந்தும், மத நம்பிக்கைகள் அதிகமாக உள்ள சமூகஙகளிலிருந்தும் வருபவர்கள். அனேகமாக உயர்நிலைப் பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்தவர்கள். நகர்ப்புறங்களில் இருந்து சேர்பவர்கள் சிறுபான்மை இனத்தவராகவோ, வறுமைக் கோட்டுக்கு அருகில் உள்ள குடும்பத்தினராகவோ, மத நம்பிக்கை அதிகம் உள்ளவராகவோ இருக்கிறார்கள். அமெரிக்க ராணுவத்தில் சில வருடங்கள் பணி புரந்தால் குடியுரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சேரும் குடியேற்றக் குடும்பத்தினரும் இதில் உண்டு. இதனாலோ என்னவோ அமெரிக்க ராணுவத்தில் மோசமான வன்முறை அத்தனை அதிகம் இல்லை, என்றாலும் இங்கும் பெண்கள்,சிறுபான்மையினர் மீது அடக்கு முறை அல்லது பால் வன்முறை ஆகியன செலுத்தப்படுகின்றன. உலகில் பல ராணுவங்களிலும் இந்த வகைக் கொடுமை நுழைவு நிலைப் பயிற்சியாளர்கள் மீது பாய்கிறது என்றே தெரிகிறது.

'டிசம்பர் பத்து' – ஜ்யார்ஜ் சாண்டர்ஸ்

அவரின் மற்றப் படைப்புக்களை படித்து விட்டு ஸாண்டர்ஸ் பாணி என்று இரண்டு விஷயங்களைச் சொல்லலாம். ஒன்று சமகாலத்திய அரசியல்/சமூகப் போக்குக்களைக் கூர்ந்து கவனித்து அவற்றைப் பற்றிய அவதானிப்புக்களைத் தன் கதைகளின் கருப்பொருட்களாக (themes) பெரும்பாலும் வைத்துள்ளது. இன்னொன்று இந்தக் கருப்பொருட்களை குறியீடுகளாகக் கொண்ட கதைகளாக மாற்றி, ஒரு புதிய உலகை உருவாக்கும் அவருடைய அசாதாரணமான கற்பனைத் திறன்.

ஸியாட்டிலில் சில நாட்கள்

ஸியாட்டில் இருக்கும் வாஷிங்டன் மாநிலம் 4000 வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவின் பழங்குடி இந்தியர்கள் வாழ்ந்த இடம். அதனால் இன்னும் பல ஊர்களின் பெயர்கள். ஸமாமிஷ், இஸ்ஸாகுவா, ஏனும் க்ளா, ஸ்னோக்வால்மீ, புய்யால்லுப், ட்யூலலிப் என்பதுபோல் அவர்களின் மொழியிலேயே இருக்கும். ஸ்னோக்வால்மீ என்ற இடத்தில் நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் ஒரு ஹோட்டலுக்குள். போனால் நம்ம தமிழ் மாமாவும் மாமியும் அவியல், தோசை, தயிர்சாதம் என்று மெனு கொடுக்கிறார்கள்.

வெளவால்கள் உலவும் வீடு

திண்ணையும், திண்ணையின் முனையில் நிறுத்தப்பட்டிருந்த‌ முன்பைவிட அதிகம் ஆங்காங்கே உடைந்திருந்த சாயம் போன‌ தடுப்பு தட்டியை அன்னிச்சையாக‌ கவனிக்க‌ இந்த வீட்டைப் பற்றிய நினைவுகள் மன‌தில் அலைமோதின‌‌. அம்மா வெத்தலை மென்றப‌டி காலை நீட்டி இந்த‌ திண்ணையின் முனையில் அமர்ந்திருப்பாள். பள்ளிகூடம் விட்டதும் ஓடிவந்து அம்மாவின் கால்களில் சாய்ந்துகொண்டு இடுப்பை பிடித்துக் கொள்வான். வந்துட்டான், இவன் ஒருத்தன் ஹஹ என்றுவிட்டு சற்று தூக்கிய வெத்தலை மென்ற வாயுடன் சிரித்தபடி அவனுக்கே கேட்டு அலுத்துப்போன‌ அவனின் சிறுவயது பராகிரமங்களில் ஒன்றை பேசிக்கொண்டிருக்கும் பக்கத்துவீட்டு பெண்ணிடம் சொல்லாமல் அவளால் இருக்க முடியாது.

அதில் ஒரு பெருமையும் அலாதி அன்பும் இருப்பது தெரியும் பக்கத்துவீட்டு பெண்மணி ஒவ்வொருமுறையும் புதிதாக கேட்பதுபோல ஆர்வத்துடன் கேட்டுகொள்வாள். மூன்று மகன்கள் மேல் அதீத கற்பனைகள் அவளுக்கு. ஆனால் எப்போதும் கம்னாட்டி, கழிச்சாலபோறவனே என்று திட்டிக்கொண்டே தான் இருப்பாள்

ஆறு பேர் ருசிக்கிறார்கள் – காஃபி

காப்பி என்றாலே என் நினைவில் வருவது சிறுவயதில் என் பாட்டி வீட்டில் பார்த்ததுதான். பீபெரிக்கொட்டையை வாங்கி வைத்துக்கொண்டு, வாரம் ஒரு முறை காப்பிக்கொட்டையை வறுத்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் நிரப்பி வைத்துக்கொள்வாள். மதியம் சரியாய் 2 30 மணிக்கு அதில் ஒரு கையளவு எடுத்து ஒரு காப்பிக்கொட்டை அறைக்கும் யந்திரத்தில் போட்டுப் சக்கரம் போன்ற ஒரு கைப்பிடியை சுற்றி அதைப் பொடி செய்வாள். நாங்கள் அதைச் செய்யப் போட்டி போடுவோம்.

அ.முத்துலிங்கத்தின் மகாராஜாவின் ரயில் வண்டி

அனுபவங்களின் சேகரத்துக்குப் பிறகே அது இலக்கியம் ஆகிறது . இலங்கைத் தமிழர்களின் கூட்டு அனுபவம் தமிழ் இலக்கியத்திற்கு சமகாலப் போர் அவலங்கள், புலம் பெயர் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்கள், அனுசரிப்புகளையும் பற்றிய புது முன்னோக்கிலான படைப்புகள் வந்தடையக் காரணமானது. உலகமயமாக்கலும் சர்வதேச கண்ணோட்டத்தில் கதைகள் புனையப்பட இன்னொரு காரணம்.

இந்தியக் கவிதைகள் – தெலுங்கு, மராத்தி

அவள், ஆறு
அவன் கடல் :
சொன்னாள்
வாழ்க்கை முழுவதும்
என்னை கரைத்துக் கொண்டிருக்கிறேன்
உன்னை நோக்கிப் பாய்கிறேன்

நேரம் சரியாக… – 1

அன்று நாள் முழுவதும் 7 நொடிப் பேச்சுதான். இதை, விஜய் டிவியில் ‘நொடிப் பேச்சு, எங்கள் உயிர் மூச்சு’ என்று சீரியலாகக் கூட போட்டு விடலாம்! முழு கட்டமைப்பையும் மாற்றினால் கூட, 3 நொடிகள்தான் குறைக்க முடியும் என்று ஒரு கணினி நிரலர் (programmer?) சொல்ல, மற்றொருவர், என்னால் கட்டமைப்பை மாற்றாமல் 5 நொடிகள் குறைக்க முடியும் – ஆனால், அதற்கு 4 வாரங்கள் தேவை என்றார்.

ரிச்சர்ட் நிக்சன் பிரைஷுட்ஸ் ராக்

-லிமுஸீன் டிராகன் மாளிகையில் நின்றது. ரிச்சர்ட் நிக்சன் வெளியேறினார். வீரக் குடிகளின் தொண்டர்ப் படைக் காவலர்கள் உருவமைதியுடன் நிமிர்ந்து நின்றார்கள். உள்ளே முற்றத்தின் சுவர் மீதிருந்த நான்கு உயரமான சுவரொட்டிகள் ரிச்சர்ட் நிக்ஸனின் கண்ணைப் பறித்தன.
– அது மார்க்ஸ், சுட்டிக்காட்டிக் கொண்டே அவர் கூறினார்.
– மார்க்ஸ், மார்ஷல் ஏ ஒப்பித்தார்.
-அது எங்கல்ஸ்
– எங்கல்ஸ்
– அது லெனின், அப்புறம் அது ஸ்டாலின்.
-துல்லியமாகச் சொன்னீர்கள், மார்ஷல் ஏ பதிலளித்தார்.
ரிச்சர்ட் நிக்சன் இரண்டாவது சுவரொட்டிக்குத் திரும்பிச் சென்று, கையுறை அணிந்த கையால் சுட்டிக் காட்டினார்.
– இது எங்கல்ஸா ?
– எங்கல்ஸ், மார்ஷல் ஏ கூறினார், கண்களில் கவலையும், மிகுதியான பணிவும் கலந்த பார்வையுடன்.
-அமெரிக்காவில் எங்கல்ஸின் படங்களை அதிகமாகப் பார்க்க முடியாது, ரிச்சர்ட் நிக்சன் விளக்கினார்..

மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு – முன்பதிவுத் திட்டம்

அவர்கள் அனைவரும், (கோக்கப்பட்ட) நூல் அறுந்த ரத்னங்கள் போலவும் சிறகுகள் வெட்டப்பட்ட பக்ஷிகள் போலவும் மகிழ்ச்சியற்ற மனமுள்ளவரானார்கள். புகழத்தக்க செய்கைகளை உடைய அந்த அர்ஜுனனால் விடுபட்ட அந்த வனமானது, குபேரனால் விடுபட்ட சைத்ரரதமென்னும் உத்யான வனம் போலாயிற்று. ஜனமேஜயரே! ஆண்மையிற் சிறந்தவர்களான அந்தப் பாண்டவர்கள் அந்த அர்ஜுனனை விட்டுப் பிரிந்ததனால் ஸந்தோஷத்தை அடையாதவர்களாவே காம்யக வனத்தில் அப்பொழுது வஸித்து வந்தனர். பரதர்களுள் சிறந்தவரே! பிராம்மணர்களுக்காகப் பராக்கிரமம் செலுத்துபவர்களும் மஹாரதர்களும் புருஷ ஸ்ரேஷ்டர்களும் பகைவரை அடக்குகிறவர்களுமான (பாண்டவர்கள் கானகத்தில்) மிக அலைந்து சுத்தமான பாணங்களால் யாகத்துக்குத் தக்கவையான பலவித மிருகங்களைக் கொன்று வனத்தில் கிடைப்பதான (அந்த) ஆகாரத்தைக் கொண்டுவந்து நாள்தோறும் பிராம்மணர்களுக்குக் கொடுத்தார்கள்.

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் – ஆர். எஸ். நாராயணன்

நம்மாழ்வாரை நான் சந்தித்தபோது எனக்கு தாடி இல்லை. நான் வேட்டியும் அணிவது இல்லை. அரசு அலுவலர் பாணியில் பேண்ட், ஷர்ட், கிராப்புத் தலை வைத்திருந்த என்னோடு நம்மாழ்வார் நட்பு பாராட்டினார். அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களிலும் நடத்தும் மாநாடுகளிலும் என்னை முதல் பேச்சாளராகப் பேச அனுமதித்தார். அவர் ஏன் சிகை வளர்க்கிறார், தாடி வைத்துள்ளார் என்று எனக்குத் தெரியாது.