வாசகர் மறுவினை

தற்போது இந்தக்கலை முற்றிலுமாக அதன் தொன்மையை இழந்து நிற்கிறது. எல்லா வகை ஒலிகளையும் CD, DVD மற்றும் கணினியில் ஏற்றி கொண்டு வந்துவிடுகிறார்கள். அன்று காட்சிக்கு தேவையான ஒரு குறிப்பிட்ட ஒலியை ஒலிக்கலைஞன் ஏதோ ஒரு வழியில் உருவாக்கி தந்துவிட்டால் அவனுக்கு அந்த படத்தின் இயக்குனரும், ஒலிப்பதிவாளரும் தரும் “வாசகர் மறுவினை”

6174 – நாவல் விமர்சனம்

சுஜாதா முன்னேற்றமும், குழப்பமும் நிறைந்த அறிவியல் சூழலில் மனிதனின் இடத்தை பிரபஞ்சத்தில் தேடும் கதைகள் என்று வகைப்படுத்துகிறார் (விஞ்ஞானச் சிறுகதைகள், ஜீனோ). ஜெயமோகன் மானுட ஆழ்மனமும் அறிவியலும் சந்திக்கும் புள்ளி அறிவியல் புனைகதை என்கிறார்.

விழியனின் சிறுவர் உலகம்

சிறுவர்களைப் பொறுத்தவரை ஒரு புத்தகமானது வெறுமனே நீதி போதனை செய்யும் ஆசானாக மட்டுமில்லாமல், அவர்களின் உலகத்துக்குள் எளிதாகச் சென்று ஒரு தோழனைப் போல் கதை பேசினால் அவர்களும் புத்தகத்துடன் ஒன்றி விடுவர். தொலைக்காட்சியில் கார்ட்டூன் சானலைப் பார்க்கும் ஒரு சிறுவன், தன்னை “சோட்டா பீமாகவோ”, “லிட்டில் கிருஷ்ணா”வாகவோ சுலபமாக உருவகப்படுத்திக் கொள்கிறான்.

பெர்லின் நகரின் இந்துக்கோவில்

எண்ணூறாயிரம் யூரோ செலவில் ஜெர்மனியின் தலைநகரில் கட்டப்பட்டிருக்கும் ஹிந்துக் கோவில் குறித்த புகைப்படத் தொகுப்பு: http://www.spiegel.de/fotostrecke/photo-gallery-berlin-s-celebrates-its-first-hindu-temple-fotostrecke-101197.html

ஃபின்லாண்டியா

ரயில் நின்றதும் கீழிறங்குகிறீர்கள், அல்லது கப்பல் கரை சேர்ந்ததும், இறங்குவதற்குப் போடப்பட்ட மரப்பாதை வழியே கீழிறங்குகிறீர்கள், அல்லது விமானம் கீழே இறங்கித் தரை தொடுகிறது, உங்கள் கால்கள் எங்கே நியாயமாக இருக்க வேண்டுமோ, அந்தத் தரையில் மறுபடி பதிகின்றன, ஆனால் அங்கெல்லாம் வெறுமைதான் இருக்கிறது. நீங்கள் வந்து சேர்ந்தாயிற்று, ஆனால் நீங்கள் எங்குமே சேரவில்லை. அந்த நகரத்தின் பெயர் வரைபடத்தில் இருக்கிறது. ரயில் நிலையத்தில் பெரிய எழுத்துகளில் அந்தப் பெயர் இருக்கிறது. நாம் ரொட்டி வாங்கக் கொடுக்கிற புதுக் காசுகளில் அந்த நாட்டின் பெயர் பொறித்திருக்கிறது, ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருப்பது எங்குமில்லை, மேன்மேலும் வேறு இடங்களுக்கு நீங்கள் போகப் போக உங்களுக்குப் புரிவதெல்லாம், மனிதனுக்குச் சேருவதற்கு பூமியில் ஒரு இடமும் இல்லை என்பதே.

நீலப்பனியைத் தேடி – 1

பக்கத்து வீடு ஐம்பது மைல்கள் என்பதைப் போல அருகில் மலைகளைத் தவிர எதுவும் இல்லை. அரைவிழிப்பு நிலையில் சத்தம் வந்த திசையைக் கண்டுபிடிக்கச் சிறிது நேரம் ஆனது. தூரத்தில் தெரிந்த மலையிலிருந்து கார் அளவிலான பனிப்பாளங்கள் உடைந்து விழுந்தபடி இருந்தன. நாங்கள் சென்றிருந்த பருவம் அப்படி. எங்குத் திரும்பினாலும் மண் நிறத்திலான மலைகள் பனிப்போர்வையை உதறியபடி இருந்தன.

மகரந்தம்

சீனா வேறென்னென்னவோ திசைகளில் மக்களை ஓரம் கட்டினாலும், உற்பத்தித் திறனைப் பெருக்குவதில் கவனம் செலுத்துகிறது. விளைவு இன்றைய தலைமுறைகளுக்கு நாசகரமாக இருக்கலாம். நாளைய தலைமுறைகளுக்குக் கொஞ்சமாவது வளர்ந்த நாடொன்றில் வாழ்வதான உணர்வைத் தர வாய்ப்பு இருக்கிறது. இந்த அமெரிக்கச் செய்தியறிக்கையில் சீனாவின் அதிவேக ரயில் பாதைகளின் நன்மைகள் (அதிகமானவை) தீமைகள் (குறைவு) எல்லாம் பேசப்படுகின்றன.

அந்தரங்கச் சுரங்கம்: ஸாங்க்டம்-டெனீஸ் மைனாவின் நாவல்

நாவலின் இறுதி முக்கிய முடிச்சு அவிழும் இடத்திற்கான முன்னெடுப்புக்களை(lead) இயல்பானதாக உருவாக்க மினா முயன்றாலும், சற்று அள்ளித்தெளித்த அவசர கோலம் போல் தோன்றுகிறது. ஆனால் நாவலை மொத்தமாக பலவீனமாக ஆக்கி இருக்கக்கூடிய சூழலை மினா மீட்டு விடுகிறார். அந்த முக்கிய வெளிப்பாடு (revelation) நடந்த பின், நாவல் இப்படித்தான் பயணிக்கும்/பயணிக்கமுடியும் என நாம் நினைத்தால் அதற்கு மாறாக செல்கிறார் மினா.

பெண்களின் படைப்புகளுக்கான ஆவணக்காப்பகம்- SPARROW Enters its Silver Jubilee Year

இது இந்தியப் பெண்களின் படைப்புகளைக் காக்கும் ஒரு அரிய கருவூலம். பல மாநிலத்தைச் சேர்ந்த அறிஞர்களும், படைப்பாளிகளும் தன்னார்வலர்களும், கலைஞர்களும் ஆதரித்து, தம் படைப்புகளை நன்கொடையாகக் கொடுத்து, உழைப்பையும் நல்கிக் கட்டமைத்த ஒரு ஆவணக் காப்பகம் இது. அம்பை அவர்களும் இந்த அரிய அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். இதன் 25 ஆண்டுகளிலும் அதன் கட்டமைப்புக்கும், பராமரிப்ப்புக்கும் மிக்க பாடுபட்டதோடு, தனது சலியா உழைப்பையும் இதற்கு நல்கியிருக்கிறார்.
இந்த ஆவணக்காப்பகத்தை நிலைநிறுத்தி அதன் தொடர்ந்த பராமரிப்புக்கும், தன் நடவடிக்கைகளை அது விஸ்திகரிக்கவும் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது இந்தியாவின் வரலாற்றை எழுத முற்படுவோருக்கு வருங்காலத்திலாவது நியாயமான ஆழமான முறையில் அதை எழுத, மிகுந்த உதவியாக இருக்கும்.
படிப்பறிவு பெற்ற ஒவ்வொரு இந்தியரும் இத்தகைய முயற்சிகளைத் தம்மால் ஆன வகைகளில் ஆதரிப்பது இந்தியாவின் எதிர்காலம் வளமாக அமைய நாம் செய்யக் கூடிய எளிய ஆனால் உருப்படியான செயலாக இருக்கும்.

எண்பதுகளில் தமிழ் இலக்கியம் – 2

கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களில் தான் (அதைக் கதை என்பதா, இல்லை சிறுகதை என்பதா, அல்லது குறிப்புகள் என்பதா, எந்த வகைப்படுத்தலுக்கும் இயைவதாக, ஆனால் அதே சமயம் முழுவதும் அந்த வகைப்படுத்தலுக்கு அடங்காததாக இருப்பவை), ஒவ்வாத உணர்வுகள் என்ற தொகுப்பில் அவற்றைப் பார்க்கலாம், அவருடைய நடையும், எழுத்து பெறும் வடிவமும், கிண்டலும், சுய எள்ளலும் தனி ரகமானவை.

வாசனை

உழுத நிலத்தை பார்த்தவனின் கண்களில் நிறைய புழுக்கள், பூச்சிகள் தெரிந்தன. பாதி அறுபட்ட புழுக்கள் தத்தளித்துக் கொண்டிருந்தன. பிப்பாலியின் கூரிய பார்வையில் பூச்சிகளுடைய வெளிர் மஞ்சள் ரத்தக் கறைகள் அங்கங்கு தென்பட்டன. வயலின் மேல் சில பறவைகள் வட்டமிட்டன. பிப்பாலி வானை நோக்கினான். சூரிய வெளிச்சத்தில் அவனின் கண்கள் கூசி, லேசாக இருட்டிக் கொண்டு வந்தது.

வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி

தன் மூதாதையர் நட்ட மரத்தில் இதுவரை
ஆசைக்கேனுமொரு பூப் பூக்கவில்லையென
தொலைவிலிருந்து வந்த புதுப் பேத்தியிடம்
கதை பகர்கிறாள் மூதாட்டி

சிதறால் குன்றம் – சிதறாத காலம்

சிதறால் மலை உச்சிக்கு செல்ல, கீழே இருந்து ஒரு கிலோ மீட்டர் நடை தான். ஆனால் புறவெளியை பார்த்தபடி ஏற ஏற மனவெளியில் ஏற்படும் மாற்றங்கள் அளவீடுகளின் பரிமாணங்களுக்கு அப்பாற்பட்டவை. தொடுவானைத் தூக்கிப் பிடித்தபடி தூரத்தில் தெரியும் மலை முகடுகளில் கண் வைத்தால், விசாலத்தின் உணர்வு மனது முழுவதும் ஊடுருவ, முதலில் நாம் அணிந்திருக்கும் நிகழ்காலத்தின் சட்டையை உரித்துப் போட்டு முன்னே நழுவுகிறது நமக்குள் இருக்கும் கால நாகம்.

பூனை

காலையில் எஞ்சியிருந்த நேரத்தில் செய்தித்தாள்களைப் படித்துக் கொண்டும், இசைத்தட்டுகளைக் கேட்டுக் கொண்டும், எப்போதும் போல சாதாரணமாகப் பேசிக் கொண்டுமிருந்தார்கள். அனால் எல்லா ஞாயிறுகளைப் போல் அல்லாது, சில சமயம் மட்டுமே உணரக்கூடியதாய், சொல்லாமலே அறியப்பட்ட ஒப்பந்தம் மூலமாக அழிய விடப்பட்ட ஒரு ரகசிய மின்னோட்டம் அவர்கள் இருவருக்குமிடையே ஓடியது. பூனை கட்டில் மீது இருந்து கொண்டிருந்தது. டியின் நண்பி ஞாயிறுதோறும் செய்வது போல், சூரிய ஒளி, சன்னல் வழியாக வந்து கொண்டிருக்கும் காற்றுடன் சேர்ந்து அவளைத் தொடும்படியாக தன்னை ஆடைகளால் மறைத்துக் கொள்ளாமல் படுக்கை மீது சோம்பலாக நீட்டிக் கொண்டிருந்தாள்.

அந்தப்புரம் இந்தப்புறம்

“ஏன், இந்தியால இதெல்லாம் இல்லன்னு நெனக்கிறியா. நம்ம ஊர்லையே இப்பெல்லாம் இது ஒரு பெரிய விஷயமே இல்ல. கொஞ்ச கொஞ்சமா இந்த மாதிரி மக்கள் எல்லாம் வெளில வர்றாங்களே. மூணு வருஷம் முன்னாடி டெல்லி ஹை கோர்ட்டே இது ஒன்னும் குத்தம் இல்லன்னு டீ-க்ரிமினலைஸ் பண்ணியாச்சே. உங்க நாகமல புதுக்கோட்டையிலேயே தெருவுக்கு நாலு பேரு இந்த மாதிரி தேடினா கெடப்பாதாண்டா. அங்க பெரும்பாலும் யாரும் வெளில சொல்றதில்ல. அவ்வளவுதான் வித்தியாசம்.”

மாடியில் ஒரு உணவுத் தோட்டம்

அடுத்த கட்டமாக பூந்தொட்டிகளுடன் சிமெண்டு சாக்கில் மண் நிரப்பி பயிர் எழுப்பும் யோசனை வந்தது. சிமெண்டு சாக்கு உயரத்தைக் குறைத்து – அதாவது, உட்புறமாக மடித்து பாதி சாக்காக மாற்றி, உள்ளே நிறைய காய்ந்த சருகுகளை அடைத்துவிட்டு அடிப்பாகத்தைச் சற்று கிழித்துவிட்டு போதிய மண் நிரப்பி இரண்டு செங்கல் வைத்து அதன்மீது வைத்தேன். நீர் வடியும். தளத்திற்கும் பாதிப்பு வராது. அவ்வாறு சிமெண்டு சாக்கில் மண் நிரப்பி பயிரிடும்போது மரப்பயிர்களைத் தேர்ந்தெடுத்தேன்.

ஜாய்லேண்ட் – ஸ்டீஃபன் கிங்

கிங்கின் வெற்றி நாஸ்டால்ஜியாவின் வெற்றி. அவரது கதையின் வெற்றி இன்பங்களை, கதாநாயகனின் இன்பங்களை மட்டுமல்ல, பிளாட், சஸ்பென்ஸ், த்ரில், க்ளைமாக்ஸ் போன்ற வாசக இன்பங்களையும் தள்ளிப்போடுவதில் கிடைக்கும் வெற்றி – பாதி கதைவரை நம்மால் இது பேய்க் கதையா, காதல் கதையா, குற்றப் புனைவா என்று எதுவும் தீர்மானிக்க முடிவதில்லை, நினைவுகளைத் தாண்டி கதை எங்கும் செல்வதில்லை.

வாயேஜர் என்கிற டீன் ஏஜர்

இந்த எல்லைக்கு வெளியே என்னதான் இருக்கிறது ? வெறும் சூனியமா ? இல்லை. ப்ளாஸ்மா என்ற மின்சாரத் துகள் மேகம் இருக்கிறது; எப்போதோ வெடித்துச் சிதறிய நட்சத்திர மத்தாப்பிலிருந்து சிந்திய பொறிகள் அவை. காந்தப் புலமும் உண்டு. இந்த ப்ளாஸ்மாவை அளந்து பார்த்தால் வாயேஜர் இருப்பது சூரிய மண்டலத்துக்கு உள்ளேயா வெளியேயா என்பது தெரிந்துவிடும்.