மழை மேகங்களை அனுப்ப ஒரு மனிதன்

பாதிரியார் பச்சை நிற நாற்காலியில் தளர்ந்து அமர்ந்தார், ஒரு பள பளப்பான சமயப் பரப்புப் பத்திரிகையை எடுத்தார். அதில் இருந்த குஷ்டரோகிகள், மேலும் கிருஸ்தவரல்லாத மனிதர்களின் படங்களைப் பார்க்காமல் வண்ணமயமான பக்கங்களைப் புரட்டினார். “லியான், என்னால் அப்படிச் செய்ய முடியாதென்று உனக்குத் தெரியுமே. முழு கிருஸ்தவச் சவ அடக்கமும் நடந்திருக்கவேண்டும், மேலும் குறைந்தது அடக்கத்தின் போது பிரார்த்தனையாவது செய்யப்பட்டிருக்கவேண்டும்.”

எண்பதுகளில் தமிழ் இலக்கியம்

நான் எண்பதுகளோடு வரம்பிட்டுக்கொள்கிறேன். இது எனக்கு சௌகரியமாகவும் இருப்பது சந்தர்ப்பவசம் தான். அதிர்ஷ்டவசமாக, இந்த எண்பதுக்களில் தான் தமிழில் சிருஷ்டி எழுத்துக்கள் புதிய பாதைகளில் பயணிக்க ஆரம்பித்தன. அந்த புதிய பாதைகள் இதுகாறும் கால் பதித்திராத பாதைகள். கால் பதித்திராத பாதைகள் என்றேன். காரணம் எதுவாகவும் இருக்கலாம்.

ஷேமஸ் ஹீனி (Seamus Heaney:1939-2013) – மண் கரைசலின் வாசம்

அயர்லாந்து நாட்டுக் கவிஞர் ஷேமஸ் ஹீனி தனது சிறுவயது அனுபவங்களைப் பற்றி சொல்லும்போது, ` இக்காலகட்டத்து நவீன உலகுக்கு என்னுடைய சிறு ஊரின் அனுபவங்கள் பழசானவை, தேவையற்றவை என நினைத்திருந்தேன். நான் எழுதத்தொடங்கியபோது சிற்றூர்களின் அனுபவ அறிவு கவிதை உலகுக்குள் நுழையத் தொடங்கிய காலம். டெட் ஹ்யூஸ், ராபர்ட் ஃப்ராஸ்ட் ஆகியோரின் கவிதைகளிலிருந்து இந்த நம்பிக்கையை நான் பெற்றிருந்தேன். அந்த அனுபவங்கள் அளவிடமுடியாத சொத்து என்பதை பின்னர் உணர்ந்தேன், ` என்கிறார்.

கனவுகள் மீதூரும் பாதை

நாடகம் நடந்துகொண்டிருக்க என் மனம் மீண்டும் மீண்டும் அரங்கின் வடிவை வியந்தபடி இருந்தது. சுற்றிலும் பிரம்மாண்ட சுவர்கள் கிடையாது, தடுப்புகளும், விளம்பர பட்டிகளும், ஒலிப்பெருக்கிகளும் இல்லை. மலை உச்சியிலிருந்து கடலைப் பார்ப்பது போல நாங்கள் எல்லாரும் உட்கார்ந்திருக்கிறோம். மலையைச் சற்றே கவிழ்த்தால் போதும் நாங்கள் உருண்டு கடலில் கலந்துவிடுவோம். அப்படி வழித்தெடுக்கப்பட்ட இடத்தில் அரைவட்ட வடிவில் ஒரு அரங்கை அமைக்க ரொவீனாவுக்கு எப்படி எண்ணம் வந்தது?

தளம் – இலக்கிய காலாண்டிதழ்

தீவிர இலக்கியத்தின் தாய்வீடு என்பது எப்போதுமே சிறுபத்திரிகைகளாகவே இருந்து வருகிறது. வணிகம் சார்ந்த இயக்கமாகவோ, வணிக உதவிகளை நம்ப வேண்டி இருக்கும்போதோ பெரும்பான்மையோரின் ரசனைக்கு தீனி போடவேண்டிய கட்டாயம் சஞ்சிகைகளுக்கு வந்துவிடுகிறது. வணிக நோக்கில் செயல் பட்டு வந்தாலும் ஓரளவிற்கு இலக்கியங்களையும் உடன் சேர்த்துக்கொள்ள முடியுமா என்ற தயக்கத்துடனே பத்திரிகைகள் இயங்கி வருகின்றன. கேள்விகள் கேட்பதும் உடைத்துப் பார்ப்பதும் ஆழமாக செல்வதும் இங்கே சாத்தியமில்லை. சிறுபத்திரிகைகளுக்கு அந்த சுதந்திரமும் பரப்பும் கிடைக்கிறது. தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலான பல சிற்றிதழ்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. தங்கள் குரலை எழுப்பி கொண்டே இருக்கின்றன. வெற்றுக் கற்பனைகள் அல்லது கேளிக்கைகளில் முயற்சிகளை செலவிடாமல் வாழ்வின் நிதரிசனங்களை முன்வைத்து நகருபவை சிற்றிதழ்கள். மூடி வைத்தபின் திறந்து கொள்ளும் கதவுகளை உடையவை அவை.

ஓநாய் குலச்சின்னம்– அனுபவமும் வாசிப்பும்

ஆனால் நாம் நம் சந்ததிகளுக்கு என்ன மாதிரியான சூழலை வழங்கப் போகிறோம்? இன்று நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற குறுகிய கருத்தாக்கத்தினால் முடிந்த அளவு, இந்த உலகத்தைச் சுரண்டி வாழ்கிறோம். இயற்கையை வெல்ல முடியாது என்று புரிந்து கொள்ள ஜென் சென்னிற்கு ஒரு ஓநாய் வளர்ப்பு போதுமானதாய் இருக்கிறது.

ஸெலிலோவிற்கு பிறகு

வெள்ளைக்கார சின்னஞ்சிறு பெண் பிள்ளைகளுக்கு அருகில் நிற்க ஆசைப்பட்டிருக்கிறேன். அவள் என்னைக் பார்த்து பயந்தால், அவளருகில் மேலும் நெருங்கி நிற்பேன், கண்களில் கண்ணீர் பொங்கி வரும் பொழுது அவளுடைய கையை இறுக்கமாக பிடித்து சிரிப்பேன். அசல் இந்தியர்கள் அருகில் நிற்பது பயத்தை தரவல்ல அனுபவம் தானே!

காவியக் கவிஞர் – 2

தகுதி வாய்ந்தவன் என்ற காரணத்தினால் அரசர் என்னை உன் தோழனாக நியமித்தார்; அவர் என்னிடம் வைத்த நம்பிக்கையை நியாயப்படுத்துவதற்காக உன்னிடம் பேச விழைகிறேன். நட்பின் பண்பு மூவகைப்பட்டது. நண்பனை இலாபமற்ற செயல்களில் ஈடுபடவிடாமல் தடுப்பது, இலாபம் தரும் செயல்களில் அவன் ஈடுபட தூண்டுகோலாக இருப்பது மற்றும் கஷ்டங்களின் போது கூடவே இருப்பது. நண்பனாக ஏற்றுக் கொண்ட பிறகு, என் கடமைகளில் இருந்து விலகி, உன் நலன்களைப் பேணாதவனாக இருப்பேனாயின், நட்பு விதிகளை வழுவினவனாக ஆவேன். உன் நண்பனாக இருக்கும் காரணத்தால் நான் இதை சொல்வது அவசியமாகிறது; இப்பெண்களுக்கு உரிய கவனத்தை நீ தராமல் இருப்பது, இளைஞனாகவும் சுந்தரனாகவும் இருக்கும் உனக்கு பெருமை தரக் கூடியது அல்ல.

'சச் நாமா'

தஹார் ஒருநாள் தனது நாட்டிலிருக்கும் ஒரு அற்புதமான சோதிடரைக் குறித்து கேள்விப்படுகிறான். அவரைக் காண தனது பட்டத்து யானையின் மீதேறிச் செல்கிறான் தஹார். அவரது எதிர்காலத்தைக் கணித்த சோதிடர், தஹாருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகக் கூறுகிறார். அதே சமயம் அவரது சகோதரியால் அவருக்கு உண்டாகக் கூடிய ஆபத்துக்களைக் குறித்தும் தஹாருக்கு விளக்கிச் சொல்கிறார். எதிர்வரும் காலத்தில் யார் தஹாரின் சகோதரியை மணக்கிறார்களோ அவரால் தஹாருக்கு பேராபத்து நிகழவிருப்பதாகவும், அவனே தஹாரைக் கொன்றுவிட்டு இந்த நாட்டை ஆள்வான் என்கிறார் சோதிடர்.

ஸ்னோடென் அறியாத ரகசியம்

உங்களின் கடவுச் சொல் உங்களுக்கு மட்டும்தான் தெரியும். யாஹுவிடம் அந்தக் கடவுச்சொல் 84bd1c27b26f7be85b2742817bb8d43b என்பது போல் விநோதமாக உறைந்திருக்கும். அந்த மந்திரச் சொல்லும், மந்திரச் சொல்லை மறைத்து வைத்திருக்கும் வினைச்சரத்தின் மூலமும் யாஹூ-வோ, ஜிமெயில்.காம்-ஓ தெரிவிக்காவிட்டால், உங்கள் அடையாளத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து உள்ளே நுழைய முடியாது. உங்கள் அடையாளத்தில் நீங்களாக நுழைந்து, நீங்கள் சொன்னது போலவே, உங்கள் தோழர்களிடம் பொய்த்தகவலை அனுப்பி, நிஜ விஷயங்களைக் கறக்க மைரோசாஃப்ட் ஹாட்மெயில், ஸ்கைப் உதவ வேண்டும்.

ராக் தர்பாரி

வைத்யஜி தன் குடும்பத்தினரை மட்டும் நன்றாக கவனித்துக் கொள்கிறவர் என்று நாம் அவரைத் தவறாக எடை போட்டுவிடக் கூடாது, அவர் தன் விசுவாசிகளின் நலனிலும் அக்கறை கொண்டவர். அரசியலில் தலைவருக்கு விசுவாசமாக இருப்பதைப் போன்ற பணம் கொழிக்கும் தகுதி வேறு எதுவும் இல்லை, விசுவாசத்தை மட்டும் வெளிப்படுத்தத் தெரிந்தால் போதும், வேறெந்த திறமையும் தேவையில்லை. விசுவாசம் என்று சொன்னால், கட்சி, கொள்கை என்று குழப்பிக் கொள்ளக்கூடாது – தலைமைக்கு விசுவாசமாக இருந்தால் மட்டும் போதும். வைத்யஜியின் வீட்டில் இப்படிப்பட்ட ஒரு விசுவாசமான வேலைக்காரன் இருக்கிறான்.

மகரந்தம்

சீனாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத்திற்கு சென்று அங்கிருக்கும் புத்த மடாலயங்களில் தங்கிய அனுபவத்தை ஜெஃப்ரி பதிவாக்கி இருக்கிறார். உயிர் வதையே கூடாது எனும் கொள்கையில் நம்பிக்கையுடைய புத்த பிக்குகள் ஏன் தீக்குளிக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் ஆராய்கிறார்.

ஒலிக்கலைஞனின் உதவியாள்

ஒரு குடை – அதைத் திறந்து மூடினால் பறவையின் சிறகடிப்பு கேட்கும்.
இரு கைகளில் அரைக்கோளத் தேங்காய் ஓட்டு மோதல்கள், விரைந்தோடும் புரவியின் குளம்பொலியாகும்.

சுரபாலரின் விருட்சாயுர்வேதம்

நிலத்தின் அடிப்படை வேற்றுமைகள் மூன்று. சதுப்பு நிலம், வறட்சி நிலம், சாதாரண நிலம் என்று பிரித்துள்ள சுரபாலர் மண்ணின் நிறம் மற்றும் ருசியைப் பொருத்து 12 வகைகள் என்கிறார். முவ்வகை நிலத்துக்கு ஏற்றாற்போல் மொத்தம் 36 வகைப்பட்டதாக மண்வளத்தைப் பிரிக்க முடிகிறது. மண்ணின் ஆறு நிறங்களாவன : கருப்பு, வெள்ளை, வெளிர், கரிநிறத்துக் கருமை, செம்மை, மஞ்சள். அறுசுவையான இனிப்பு, புளிப்பு, உப்பு, உரைப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகியவை மண்ணின் குணங்கள்.

கதிர்மதியம் போல் முகத்தான்

மூலவர் ‘கதிர்மதியப் பெருமாள்’. “ஆண்டாள் ‘கதிர்மதியம் போல் முகத்தான்’ என்று பாடிய பெருமாள்” என்பார் அர்ச்சகர் ரங்கசாமி. கிருஷ்ணதேவராயர் ஒரு முறை இந்தக் கோயிலுக்கு வந்த போது நிறைய காணிக்கை தந்தார் என்பதால் பெருமாள் பெயருக்குக் கடைசியில் ‘ராயன்’ தொற்றிக்கொண்டு உற்சவர் ‘ஸ்ரீரங்கராயன்’ ஆகிவிட்டான்.