விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி – 3

நம்முடைய இன்றைய பொது விஞ்ஞானப் புரிதலுக்கு 20-ஆம் நூற்றாண்டின் கடைசி 30 ஆண்டுகள் ஒரு காரணம். சந்திரனில் கால் வைத்த மனிதன், சிலிகான் சில்லு விந்தைகள், இழை ஒளியியல் (fibre optics), லேசர்கள், இணையம் மற்றும் கணினிகள் நம் வரலாற்றுப் பார்வையை மிகவும் மழுங்கடிக்கும் தொழில்நுட்பங்கள். இவை அனைத்திற்கும் பின்னுள்ள பெளதிகம், குவாண்டம் இயக்கவியல்தான். அது ஏற்கப்பட்ட அறிவாகி 60 ஆண்டுகள் கழித்துத்தான் மேற்படிப் பயன்பாடுகள், தொழில்நுட்பங்கள் எல்லாம் உருவாயின என்பதை மறந்துவிடக் கூடாது.

இயந்திர தற்கற்றல்: சொல்லித் தெரிவதில்லை பிழைக்கும் கலை

பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுத்த அன்னப்பறவை போல் கூகுள் மின்னஞ்சலுக்கு எது முக்கியமான மடல், எது என்னால் படிக்க விரும்பாத மடல் என்று பிரித்துக் கொடுக்க தெரிந்திருக்கிறது. மின்னஞ்சல் வந்தவுடன் நான் திறக்கும் அஞ்சலின் அனுப்புநர், வார்த்தைகள் போன்றவற்றை வைத்து தானியங்கியாக அவசியமானவை, அவசியமில்லாதவை என இரண்டாக வகுத்து விடுகிறது.

தீஸியஸின் கப்பல்: திரைப்படமும் தத்துவமும்

“பழுதடைந்த ஒரு கப்பலின் பாகங்கள் ஒவ்வொன்றாக மாற்றப்பட்டு, இறுதியில் அனைத்து பாகங்களும் மாற்றப்பட்டால், அது அப்பழைய கப்பலேதானா? அப்படி பழைய கப்பலிலிருந்து அகற்றப்பட்ட பாகங்களைக் கொண்டு இன்னொரு கப்பல் உருவாக்கினால், அது புதிய கப்பலாகுமா? இல்லை, அது முதல் கப்பலேதானா?”

இந்த முரண்பாட்டு வாக்கியங்களுடன் தொடங்குகிறது படம். மூன்று கதைகளாக மூன்று மனிதர்களின் உலகில் பயணிக்கிறது.

ஓவியமாகத் தீட்டப்பெறும் நிலவெளி

கோடு வந்ததும் ஓவியம் வந்ததா? ஓவியம் வரைந்ததால் கோடுகள் உருவானதா (கொடி அசைந்ததும் காற்று வந்ததா மெட்டில் பாடிக் கொள்ளவும்). இவை மிக எளிமையானப் புகைப்படங்கள். தீட்டப்பட்ட ஓவியங்கள் போல் காட்சியளிக்கின்றன. எல்லாமே ஜெருமானிய புகைப்படக் கலைஞர் டோபியால் ஹஸ்லரின் கைவண்ணத்தில் எடுக்கப்பட்டவை. நிலப்பரப்பில் காணப்படும் மிக நீளமான “ஓவியமாகத் தீட்டப்பெறும் நிலவெளி”

2013 நேஷனல் ஜியாகிரபி பயணியர் புகைப்பட போட்டி

இருபத்தைந்தாவது ஆண்டுகளாக நடக்கும் பயணப்புகைப்படங்களுக்கான நேஷனல் ஜியாகிரபியின் போட்டி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, 15,500 ஒளிப்படங்கள் பங்குபெற்றன. பிரேசில், கென்யா, இந்தியா என உலகமெங்கும் சுற்றிய படக்கருவிகளின் சஞ்சாரத்தின் இறுதியில் எந்தப் படம் வெற்றி பெற்றது என்பதை இங்கே பாருங்கள். கீழே இருப்பது இரண்டாம் பரிசை வென்ற “2013 நேஷனல் ஜியாகிரபி பயணியர் புகைப்பட போட்டி”

யட்சி – குறும்பட அறிமுகம்

ஒரு பெரிய பாலைவனத்தில் ரெண்டே ரெண்டு ஒட்டகம் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்ததாம். ஒண்ணு பெரிய ஒட்டகம், இன்னொன்னு அதன் குட்டி ஒட்டகம். திடீரென அங்கு வெப்பம் அதிகமானதால், இரண்டு ஒட்டகமும் சேர்ந்து வேறு இடத்திற்கு இடம்பெயர முடிவெடுக்கின்றன. பெரிய ஒட்டகத்திற்கு காலில் அதிகமான காயங்கள் இருந்ததால் வேகமாக முன்னேறி நடக்க முடியவில்லை. ஆகவே சின்ன ஒட்டகத்திடம் “நீ மட்டும் தனியா போயிடு” –ன்னு சொல்லுச்சாம்.

மேல்வீடு

இந்த வீட்டுக்கு அவர்கள் குடிவந்து பத்து நாள்தான் ஆகிறது. சங்கரிக்கு சென்னையே பிடிபடவில்லை. சென்னை மக்களின் முக அமைப்பே அவளுக்கு விநோதமாகத் தெரிந்தது. மதுரைக்குத் தெற்கே உள்ளவர்கள் என்று தெரிந்த பின்புதான், அவர்கள் முகம் மனித முகமாகப் பட்டது. ‘போகப் போக பளகிரும்ட்டி’ என்றான் மாசாணம். ‘மொதல்ல அப்படித்தான் இருந்துச்சு, அப்புறம் பளகிட்டுன்னு நம்ம முருகன் சொன்னாம் கேட்டேல்லா.’

மீனாட்சி கொலு

சொல்லப் போனால் தர்மு மாமியே அந்தத் தெருவுக்கு அந்நியம்தான். ஹரிஹரசுதன் வீட்டு மாடியில் நடக்கும் தையல் பள்ளியில் ஆசிரியை. பொத்தி வைத்தாற்ப் போல், அவர் தெருவில் போவதும் வருவதும் தெரியவே தெரியாது. நவராத்திரி சமயத்தில் மட்டும் விதிவிலக்காக வைத்தி தாத்தா வீட்டுக் கொலுவில் அதிகம் தெரிவார். கௌரிக்கு பூ தைக்கிறேன், விச்சுவிற்கு கிருஷ்ணர் வேஷம் போடுகிறேன் என்று ஏதோ ஒரு சாக்கு. அந்த பத்து நாட்களும் வைத்தி தாத்தா வீட்டில் ‘மாமி, மாமியென’ எல்லாருக்கும், எல்லாவற்றுக்கும் தர்முதான்.

மழைக் காளான்

“யாரும் வர வேண்டாம்… நானே வெளாண்டுட்டு வாரேன்” என்று தலைக்குப் போட்டிருந்த பிளாஸ்டிக் கொங்காணியை கனகுவிடம் கொடுத்துவிட்டு மழையில் நனைந்தபடி தண்ணிக்குள் இறங்கினார். அவர் ஆவாரங்குச்சியை ஒடித்து அணையை உடைத்து அருகில் இருந்த செங்களை வைத்து அதன் மேல் செம்மண்ணை அள்ளி வைத்து பாலம் கட்டி விளையாட ஆரம்பிக்க… ஒவ்வொருவராய் தண்ணீருக்குள் இறங்கி வழி நெடுகிலும் பாலம் கட்டிய படி தெப்பலாக நனைந்தனர்.

தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – பகுதி 3

தங்கர் பச்சான் என்னை மிகவும் பரவசப் படுத்தும் ஒரு எழுத்தாளர். தமிழ் சினிமா உலகில் வெற்றியும் புகழும் மிகப் பெற்ற, எல்லோரின் பாராட்டையும் பெற்ற சினிமா புகைப்பட வல்லுனர் அவர். ஆனால் அவரது படைப்பெழுத்துக்களைப் பார்த்தால், தன் பிறந்த கிராமத்து மண்ணிலும் வாழ்க்கையிலும் ஆழக் கால்பதித்துள்ள ஒரு சாதாரண விவசாயியாகத்தான் அவரைக் காண்கிறோம். இந்த நவ நாகரீக காலத்தில் வாழும் ஒரு மனிதர் என்பதையோ, ஏன், அவர் வெற்றியும் புகழும் பெற்று வாழும் சினிமா உலகப் பகட்டின் மினுமினுப்பின் அடையாளம் எதையுமோ சிறிதளவு கூட அவர் எழுத்தில் காண முடிவதில்லை.

கணக்கும் க.நா.சுவும்: ஓர் இலக்கியச் சந்திப்பு

அந்த காலத்தில் ஏதோ காரணத்தினால், கணிதத்தை விருப்பப் பாடமாக எடுப்பவர்கள் மிகவும் புத்திசாலிகள் என்ற தவறான எண்ணம் எனக்கு இருந்தது. கணிதம் நன்றாக வந்தால்தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அது எவ்வளவு முட்டாள்தனமான எண்ணம் என்பதை பிறகு தான் தெரிந்து கொண்டேன்.

மகரந்தம்

நார்வேயை சேர்ந்த பெண்மணிக்கு பதினாறு மாதம் கடுங்காவல் தண்டனையை துபாய் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. வேலை விஷயமாக மார்ச் மாதம் துபாய் வந்திருக்கிறார். உடன் பணியாற்றுபவரின் பாலியல் வல்லுறவில் இருந்து தப்பியோடி உதவி கேட்டிருக்கிறார்.

மண்புழு உறவு – நம் வழி வேளாண்மை

ஒரு காலகட்டத்தில் நன்கு வளர்ந்த ஒரு மண்புழு ஒரு ரூபாய் என்ற விலைக்கு விற்கப்பட்டது. எனக்கு இந்த விவரமெல்லாம் தெரியாது. எல்லாருக்கும் இலவசமாக வழங்கினேன். 2001-ல் சத்தியமங்கலம் சுந்தரராமன் என் வீட்டுக்கு வந்தார். என்னிடமிருந்து புழுக்களைப் பெற்றுக் கொண்டு யாருக்கும் புழுக்களை இலவசமாக வழங்காதீர்கள், அவர்கள் அதன் மதிப்பும் தெரியாமல் வளர்க்கவும் தெரியாமல் அவற்றை சாகடித்து விடலாம் என்றுகூறி எனக்கு பணம் தர முன்வந்தார்.

தேவைகள்

இப்படி ஏதாவது சிறுமையாகச் சொல்லி வைப்பது இருபத்தி ஏழு வருடங்களாக அவரது வழக்கம். அது ஒரு குழாய் ரிப்பேர்க்காரரின் அடைப்பு நீக்கும் வளைகம்பி போல என் காதுகள் வழியே தொண்டைக்குள் இறங்கி என் இதயத்துக்குப் போகிற வழியில் பாதி தூரம் வரை போய்விடும். அப்போது அவர் போயிருப்பார், நானோ தொணடையை அடைத்து மூச்சுத் திணற வைக்கும் கருவியோடு அமர்ந்திருப்பேன்.

கொர்த்தாஸாருடன் பாண்டியாடுதல் – அவரது சிறுகதைகளுக்கு ஒரு சிறு அறிமுகம்

இவ்வளவு எளிமையான, திறந்த அமைப்பு கொண்ட கதையாக இருப்பதால் ‘எடுத்துக் கொள்ளப்பட்ட வீடு’ பல்வேறு வாசிப்புகளுக்கு இடம் தருகிறது. முறையற்ற கலவியைத் தண்டிக்கும் மூதாதையர், பணக்கார வர்க்கத்தை வெளியேற்றும் ஒடுக்கப்பட்ட, கண்ணுக்குத் தெரியாத வர்க்கம், வேற்றுக் கிரகவாசிகளின் படையெடுப்பு என்று இன்னும் பலவற்றைக் அடையாளம் சொல்லப்படாததாகக் கற்பனை செய்து கொள்ளலாம்.

காவியக் கவிஞர்

அசுவகோசரின் மேதைமை பல துறைகளில் ஒளிர்ந்திருக்கிறது. பௌத்தக் கருத்துகளில் அடிப்படையில் அவர் பல நாடகங்களை புனைந்திருக்கிறார். ஷாரிபுத்ர ப்ரகரணம் என்கிற ஒரு நாடகத்தை தவிர வேறு எந்த நாடகமும் நமக்கு கிடைக்கவில்லை. மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றிய மகாகவி காளிதாசரின் காலம் வரை சமஸ்கிருத நாடக இலக்கியத்தின் தந்தையாக அசுவகோசர் போற்றப்பட்டார்.

வெயில் நதி – சிற்றிதழ் அறிமுகம்

முதல் இரண்டு இதழ்களைவிட மூன்றாவது இதழில் சிவம் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதை வாசிக்கும்போது உணர முடிகிறது. சிற்றிதழ்களுக்கே உரிய க்ளாசிக் உலக சிறுகதைகள் இடம்பெறாமல் இருந்தாலும் உள்ளடக்கத்தை ரசிக்க முடிகிறது. புதிய படைப்பாளிகளுக்கு தொடர்ந்து இடமளித்து வருவதை நியாயப்படுத்தும் வண்ணம் தேர்ந்த எழுத்தாளர்களிடமிருந்து அவர்களை சிறிதளவும் பிரித்து இனம் காண்பதற்கு இயலாத வகையில் படைப்புகள் சிறப்பாகவே பிரசுரப்படுத்தப்படுகிறது.

இயற்பியலும் தத்துவமும்

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரு புதிய கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கொள்கை. இரண்டாவது குவாண்டம் கோட்பாடு. கரும்பொருள் நிறமாலையை (Spectrum of Blackbody Radiation) கிளாசிக்கல் அறிவியல் கொண்டு விளக்கமுடியவில்லை. நியூட்டனின் இயக்கவியல், தெர்மோடைனாமிக்ஸ், மின் காந்தக் கொள்கை எதுவும் இந்த நிகழ்வை விளக்க உதவவில்லை. புது கருத்தாக்கங்கள் தேவைப்பட்டன. மாக்ஸ் பிளாங்க் என்பவர் குவாண்டம் ஆற்றல் என்ற புது கருத்துருவைக் கொண்டு விளக்கினார்.

பாரதீப்

1947ல் போர் கப்பல்களின் இஞ்சின் மெயின்டனன்ஸில் இருந்தேன். இந்தியா சுதந்திரம் அடைந்து ஹிந்துஸ்தான், பாகிஸ்தானாக பிரிவினையானபோது, பாதுகாப்பு படை இலாகாவைச் சரியாக எப்படி கையாள்வது என்று யாருக்குமே தெரியவில்லை. அதனால் லார்ட் மௌன்ட்பேட்டன் பிரிவினைக்கு முன்னர் பாதுகாப்பு இலாகாவுக்கு இரண்டு வாரம் கெடு கொடுத்தார். அந்த இரண்டு வாரங்களில் சுதந்திர இந்திய படையில் யாருக்கு சேர விருப்பம், சுதந்திர பாகிஸ்தான் படையில் சேர யாருக்கு விருப்பம் என்று ஒவ்வொருவரையும் கேட்டுப் பிரிக்கச் சொன்னார். என்னிடமும் கேட்டார்கள்