விளையாட்டு, வினை, வினாக்கள்

இதையெல்லாம் விட பெரிய விஷயம்: இது தனித்த சம்பவம் அல்ல. மூன்று ஆட்ட வீரர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். இன்னும் பலர் தப்பித்துவிட்டார்கள். ஒரு கூடையில் சில அழுகிய ஆப்பிள்கள் என்ற கதை இல்லை இது, பெரிய பனிப்பாறையின் நுனி என்கிற கதை. இதை BCCI நிர்வாகமும் மேலிடமும் உள்வாங்கிக்கொண்டால், இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வது எளிது.

பாட்டும் நானே பாவமும் நானே

ஒரு காலகட்டத்தில் எம்ஜியாருக்கு இவர் பாடுவது நின்றுபோனாலும், இன்றும் எம்ஜியாரின் முத்திரைப் பாடல்களாய் ஒலிப்பவை இவருடைய ‘ நான் ஆணையிட்டால்’ , ‘புதிய வானம் புதிய பூமி’, ‘ தூங்காதே தம்பி தூங்காதே’ போன்ற பாடல்கள்தான். கட்சிக் கொள்கைகளை மக்களிடையே பரப்ப அந்த அதிரடிக்குரல் அவருக்குத் தேவைப்பட்ட்டது.

பிறக்கும் முன்னே இருந்த உள்ளம்

“இப்போ நான் பாடப் போற பாட்டு, முருகன் அருள் இருந்தால் மட்டுமே பிழையில்லாம பாட முடியும்” என்று சொல்லி விட்டு ஆரம்பித்தார் “முத்தைத்திரு பத்தித் திருநகை…”. அருவிக்கு படிகள் அமைத்து அதன் மீது தண்ணீரை இறங்கி வரச்சொன்னால் எப்படியிருக்குமோ அப்படி தமிழ் பெருகி தடதடவென்று அருவியென வருவது போல ஒரு அற்புதத்தை அர்த்தம் புரியாத பொழுதிலும் உணர்ந்தேன் நான். ஆகாய அகலத்தின் ஒரு பகுதியை பெயர்த்து வைத்தது போன்று நீண்டு அகண்டிருந்த‌ ஆடி வீதியில், ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கிகளிலிருந்து வெளிப்பட்டு கோயில் முழுவதும் பிரவாகமாக பெருக்கெடுத்தோடியது அந்தப் பாட்டு.

வேலை சிதைக்கும் மனிதர்- ஜாஷுவா ஃபெர்ரிஸின் நாவலில் அலுவலகம்

தொண்ணூறுகளின் மத்தியில்/இறுதியில் வேலைக்கு சேர்ந்து விட்டவர்களுக்கு, 95 முதல் 2000 வரையிலான ஆண்டுகளை ‘It was the best of times, it was the worst of times,’ என்று குறிப்பிட்டால் புரியும். அதற்கு முன் நினைத்தே பார்த்திராத சம்பளம், அதைத் தவிரவும் பல சலுகைகள், என அவர்தம் பெற்றோர் பல பத்தாண்டுகள் வேலை செய்து ஈட்டிய ஊதியத்தை வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்திலேயே பார்த்த காலம். 2000இல் உலக பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டு, வேலை சூழல் முற்றிலும் மாறியது. கனவுகள் துர்சொப்பனங்களாக மாறின, மிக அதிக சம்பளம் என்பது போய், வேலை நிலைத்தால் போதும் என்ற நிலை.

கார்ல் சேகனின் கட்டுமரங்கள்

பன்னிரண்டு வயதில் கார்ல் ஸேகனின் தாத்தா “நீ பெரியவனானதும் என்னவாக வேண்டும்?” எனக் கேட்ட போது விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும் எனப் பதிலளித்தார். அதையே தன் லட்சியமாக கொண்டு கார்ல் ஸேகன் புகழ் பெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளராகவும், மக்களிடத்தில் அறிவியலை எடுத்துச் செல்லும் மிகச் சிறந்த தொடர்பாளராகவும் வாழ்ந்தார். 1960 – 70களில் அமெரிக்காவில் வேற்று கிரக உயிர்கள் பற்றிய ஆர்வம் அறிவியலாளர்கள் மற்றும் மக்களிடையே மேலோங்கி இருந்தது. வேற்று கிரகவாசிகள் இங்கே தரையிறங்கி மனிதர்களைப் பிடித்துக் கொண்டு போய் ஆராய்ச்சி செய்கிறார்கள் என்று “பிடிபட்டவர்கள்” பலர் வாக்குமூலம் கொடுத்தனர். வானில் அடையாளம் கண்டுகொள்ள இயலாத பறக்கும் பொருட்களைப் (UFO) பற்றிய செய்திகள் தினமும் வந்து கொண்டேயிருந்தன.

பேய், பிசாசு, ஏலியன்கள்: அறிவியலா புரட்டா?

பேய் பிசாசுகள் மனிதர்கள் இல்லை என்பது திண்ணம். அவைகளை உலகில் அநேகர் தினநிகழ்வாய் பார்க்காதிருக்கையில், நான் பார்த்தேன் என்றால், அது அசாத்தியமான நிகழ்வு. அதற்கான நம்பகத்தன்மையை உயர்த்த அசாத்தியமான சாட்சியங்கள் வேண்டும். இதுவரை நமக்குக் கிடைக்கக்கூடிய சாட்சியங்கள் அவ்வளவு அசாத்தியமானது அல்ல என்று நிரூபிக்கமுடிகிறது. பேய் பிசாசுகளை பார்த்ததற்கான தருணங்களை வேறு எளிய காரணங்களால் விளக்கமுடியும் என்று தெரிகிறது.

நா.ரகுநாதன் – சில நினைவுக் குறிப்புகள்

எத்தனையோ புத்தகங்கள் மதிப்புரை பெறுகின்றன, அவை மறக்கப்பட்டும் விடுகின்றன. ஆனால் ரசிகன் என்னும் சிறுகதைக்காரர், பேசப் படவே இல்லை. அதற்கான காரணங்களை இது பற்றியெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பவராயும் என்னுடன் சினேகபாவத்துடனும் ஒரு கால கட்டத்தில் இருந்த வல்லிக்கண்ணனிடம் கேட்டேன். ”ஆமாம் அப்படித் தான் ஆயிற்று. ஆனால் நான் ஒரு மதிப்புரை எழுதியிருக்கிறேன்” என்று அவர் சொன்னார் என்பதைத் தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை.

எக்ஸ் பாக்ஸ் ஒன் – மைக்ரோசாஃப்டின் புதிய பாதை

விளையாட்டு மட்டுமில்லை எக்ஸ் பாக்ஸ். இப்பொழுது அதன் மூலமாகத்தான் என் மொத்த தொலைக்காட்சியும் உயிர் பெறுகிறது. ஆயிரங்கோடி திரைப்படங்கள் நிறைந்த நெட்ஃப்ளிக்ஸ் வாயில் மூலமாக ஹாலிவுட்டும் பாலிவுட்டும் கோலிவுட்டும் டிவியில் கிடைக்கிறது. சில காலம் முன்பு வரை இணையத்தைப் பார்க்க ஒரு கணினி, தமிழ்க் கன்னல்கள் பார்க்க இன்னொரு பொட்டி, அதெல்லாம் இணைக்க இன்னொரு பொட்டி, என்று டிவியைச் சுற்றி இடைதடை ஓட்டப் பந்தயத் தடங்கல்களாக இருந்த கம்பிகளும் டப்பாக்களும் கழன்று அவற்றுக்கெல்லாம் ஒரேயொரு நிவாரணியாக எக்ஸ் பாக்ஸ் இருந்தது. அதை புதிய எக்ஸ் பாக்ச் ஒன் மேலும் விரிவாக்குகிறது.

தாகூரின் பேரன்

சொல்லிவைத்தாற்போல அநேகமாகத் தன்னுடைய எல்லா படங்களுக்குமே தேசிய விருது பெற்றவர் ரிதுபர்ண கோஷ். இந்திராணி ஹல்தார், ரிதுபர்ண சென்குப்தா, கிரண் கேர், சுதிப்தா சக்ரபர்த்தி, ராக்கி என ரிதுபர்ண கோஷின் படங்களில் நடித்த நடிகைகளுக்கும் தேசிய விருது தேடி வந்தது. வங்காள சினிமாவின் பெருமைமிகு கலைஞர் அவர்.

மாதொருபாகன் – மனிதன் இழந்து கொண்டிருக்கும் இன்னொரு பாகம்

‘மாதொருபாகன்’, ‘பெண்ணிற்கு தன் இடபாகத்தைக் கொடுத்து ஆண் பாதி பெண் பாதி எனக் காட்சி தரும் அர்த்த நாரீஸ்வரர் வடிவத்தைக் குறிக்கும் பெயர்’ என்று ஆசிரியர் இந் நாவலின் தலைப்பை அறிமுகப்படுத்துகிறார். இக்கதையும் காளியும் பொன்னாவும் தம்பதி என இணைந்த ஒரு அலகாக, சமூகத்தை எதிர்கொள்வதைப் பற்றியதுதான். ஆணானாலும் பெண்ணானாலும், அவர்களுக்கான சமூக பாத்திரங்களை ஏற்க கடமைப்பட்டிருக்கிறார்கள். அந்த விதத்தில், இருவரும் ஒரு உருவத்தில் பிணைக்கப்பட்டவர்களே.

தேடல்

கணிணிகள் பொய் சொல்வது இல்லை. மறைமுகமாகப் பேசுவது இல்லை. அதனால் அவைகளுடன் தர்க்கம் செய்வது சுலபம். அதே நேரம் அவைகளுக்கு மனிதரின் எந்த உணர்ச்சியும் இல்லை. வஞ்சகமும் இல்லை. நேர்மையும் இல்லை. கருணையும் இல்லை, முதுகில் குத்துவதும் இல்லை. நீங்கள் மனிதர்களையும் கணிணியைப் போன்று இருக்க எதிர்பார்த்து விட்டீர்கள். அதுவும் ஒரு பாரபட்சமான கோணத்தில். மனிதன் கருணை காட்டினால் அதை நீங்கள் பெரிதாக எடுத்துகொள்வதில்லை என நினைக்கிறேன். ஆனால், நேர்மை, சரி என்று நீங்கள் நினைப்பவற்றில் இருந்து அவன் இம்மி விலகினாலும் உங்களுக்கு அது உறுத்திக் கொண்டு தெரிகிறது. கோபம் வருகிறது.

உங்களுக்குக் கேட்டதா?

எம்.ஜி.ஆருக்குப் பின்னர் லியான்னல் மெஸ்ஸி வந்தார். கடந்த வருடம் சென்று வந்த ஸ்பானிஷ் கிளாசிலிருந்தே மெஸ்ஸியை எனக்குத் தெரியும். அவருக்குப் பின் தூக்கு போட்டுக் கொண்ட என் தாத்தாவின் மூத்த மனைவி, ஸ்டீவ் ஜாப்ஸ் என்று ஆளாளுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். இதற்கு நடுவில் பசித்தது. ப்ரெட்டை தண்ணீரில் நனைத்துச் சாப்பிட்டேன். அடுத்த விளையாட்டாக எனக்குப் பிடித்த படங்களை காட்சி பை காட்சியாக என் மனத்திரையில் ஓட்டிப் பார்த்தேன். மெளன ராகம், இயற்கை, எங்கள் வீட்டுப் பிள்ளை என்று ஒவ்வொன்றாய்.

மகரந்தம்

நாய் வளர்ப்பவரா நீங்கள்? என்ன வகை நாய் உங்களுக்குப் பிரியமானது என்பதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? சின்ன உருவுள்ள நாய்கள் வாழும் காலம் கொஞ்சம் அதிகம். பெரிய நாய்களின் ஆயுள் காலம் குறைவு. இதை மட்டும் கருதாமல், வாழும்போது வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறது என்றும் கருதினால் என்ன ஆகும்? சிறு நாய்கள் ஆரோக்கியமாக வாழும் இடைவெளி பல வருடங்கள் கூடுதல். பெரிய உரு நாய்களின் ஆரோக்கியம் தொடர்ந்த நிதானமான சரிவாக உள்ளது.

வாசகர் மறுவினை

வைரம் பட்டை தீட்டப் படுவதைப்போல் என் கட்டுரையும் சிறப்பாக படங்கள் சேர்க்கப்பட்டு மிக அழகாகிவிட்டது.
முகப்பில் அந்த டிராகனின் கோர முகமும், முடிவில் அந்த சதுரங்கப் பலகையில் எதிரெதிராக நிற்கும் குதிரைகள் படமும் அருமை.
ரசனை மிக்க ஆசிரியர் குழுவுக்கு என் வந்தனங்கள்.

பாதரசம் என்னும் உயிர்க்கொல்லி

குழந்தைப் பருவம் மட்டுமே வாழ்வின் அற்புதங்கள் நிரம்பிய காலம். அதில் சேட்டைகளும், சுறுசுறுப்பும், குறும்புகளும் தான் பிரதானம். எல்லா பிள்ளைகளுமே இந்தத் தன்மைகளுடன் பிறந்து, தன்முனைப்புடன் வளர்ந்து விடுவதில்லை. சில பிள்ளைகள் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (ASD) என்ற குறைபாட்டுடன் பிறக்கின்றன. அதற்கான தெளிவான காரணங்களும் கண்டறியப் படாமலே இருக்கின்றன. இதுபோன்ற குழந்தைகளை வளர்ப்பதும், பராமரிப்பதும் சவால் நிறைந்த பணி. ஏறக்குறைய 90 பள்ளிகள் இதற்கெனத் தமிழகம் முழுவதும் செயல்பட்டாலும், அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகள் ஒன்றோ இரண்டோ தான். மற்ற எல்லாத் தனியார் பள்ளிகளும் மிகுந்த சிரமத்திற்கு இடையில்தான் நடத்தப்படுகின்றன. வறுமைக் கோட்டில் வாழும் மனிதர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் இதுபோன்ற சிறப்புக் குழந்தைகள் இருந்தால் முறையான வழியில் பயிற்சி கொடுத்துப் பராமரிப்பது சிரமத்திலும் சிரமம் தான்…..
…தன்முனைப்புக் குறைபாட்டுடன் ஒரு குழந்தை பிறக்கிறது எனில் அதற்கு இதுதான் காரணம் என்று உறுதியாகக் கூற முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் குழம்பித் தவிக்கிறார்கள். என்றாலும் சில வேதிப் பொருட்களின் நச்சுத்தன்மை தான் மூளைக் குறைபாடு மற்றும் நரம்பியல் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கலாம் என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்கள்.

வெடிக்கும் நொடி

அதி வேக புகைப்படக்கலையில் பல்வேறு பரீக்ஷார்த்தங்கள் செய்துவரும் ஜான் ஸ்மித், இங்கு பலவேறு பொருட்கள் திணிக்கப்பட்ட ‘பல்பு’களை தன் காமிரா முன் வெடிக்க வைத்து, சரியாக அவை வெடிக்கும் நொடிகளைப் பதிவு செய்திருக்கிறார்!