மணியம் செல்வன்

தேவைக்கு அதிகமாக வெட்டிவிட்ட சுண்டுவிரல் நகம் போல உறுத்தியும் உறுத்தாமலுமான தூறல் மாலையில் மைதிலியின் கேட்டதற்காக நான் அன்று உமாவை, நனைந்த ம.செ. ஓவியத்தை என் பைக்கில் அவள் மாம்பலம் பெரியப்பா வீட்டில் கொண்டுவிட்டேன்.

பால் ஆஸ்டரின் தி ந்யூ யார்க் ட்ரிலொஜி

மனிதனின் சுயம்/அடையாளம் (identity) பற்றிய கேள்விகள் நேரடியாகவும், குறியீடுகளாகவும் மூன்று கதைகளில் முழுதும் உள்ளன. பெயர் மட்டுமா ஒரு மனிதனின்/பொருளின்/இடத்தின் அடையாளம் என்ற கேள்வியும், பெயர் மாற்றினால் அந்த அடையாளமும் மாறி விடுமா என்ற கேள்வியும் மூன்று கதைகளிலும் எழுப்பப்படுகின்றன.

ஆடியில் கரைந்த மனிதன்

நள்ளிரவில் ஒரு சிறிய அறையில் அகல் விளக்குகள் மட்டுமே மினுங்கும் வெளிச்சத்தில் மஞ்சள் சேலை மஞ்சள் ஜாக்கட்டில் பளீரென்று மஞ்சள் பூசிய முகத்தோடு எஸ் ஜானகி மாதிரி என்னா என்று விழித்துப் பார்க்கும் வண்டிச் சக்கரப் பொட்டு -சீவல் சேர்த்த வெத்திலை போட்டு போட்டுச் சிவந்த நாக்குடன் அந்த அம்மாவே காளியின் ப்ரோடோ டைப் போல இருந்தாள் .மிக கவனமாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஒப்பனை.அந்தக் கண்கள் மட்டும் எதோ ஒரு போதையில் அமிழ்ந்தது போலிருந்தன .நீரில் மிதக்கும் விளக்குகள் போல..அவள் இதழ்களே மீண்டும் கண்கள் ஆனார் போல .

விருந்தோம்பல்

பேராசிரியர் சாப்பிட்டு விட்டு வந்து, தாம்பூலம் தரிக்க ஏற்பாடு செய்தார். தான் எழுதிய புத்தகங்களை எடுத்து வந்து கையெழுத்திட்டு எங்களுக்குக் கொடுத்தார். எனக்குக் கொடுக்கும் போது மட்டும், அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. காரணம், ஏற்கனவே எனது ’தாயார் சன்னதி’ புத்தகத்தை அவருக்கு நான் கொடுத்திருந்தேன். பழிக்குப் பழி வாங்கிவிட்ட திருப்தி, பேராசிரியரின் முகத்தில் தெரிந்தது. ‘இனி நீங்க தப்பிக்க முடியாது’ என்றார். ‘ஏன்? அதான் குடுத்துட்டீங்களே! எப்படியும் வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிருவேன். நம்புங்க’ என்றேன். ‘அதெல்லாம் அவ்வளவு லேசுல தட்டிக்களிச்சுர முடியாது. ரெண்டு நாளைக்கு ஒருக்க ஃபோன் பண்ணி அந்தந்த புஸ்தகத்துல இருந்து கேள்வி கேப்பேன்’ என்றார்

அம்புலி மாமாவும் செம்புலி மாமாவும்

சமீப காலம் வரை விண்வெளிப் பயணம் என்பது, காசு கொழுத்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு மட்டுமே கட்டுப்படி ஆகும் என்ற நிலை இருந்தது. இப்போது பல தனியார் நிறுவனங்களும் துணிந்து இறங்கிக் கலக்குகிறார்கள். கோடீசுவரர் எலான் மஸ்க் போன்றவர்கள் அமைத்த ராக்கெட் நிறுவனங்கள் நம் கிங்ஃபிஷர் விமானக் கம்பெனியைவிட லாபகரமாக இயங்குகின்றன. நாசாவிடம் ஒப்பந்தம் போட்டு அவர்களின் விண்வெளி நிலையத்துக்கு வேண்டிய சாதனங்கள் சுமந்து செல்வதற்கு, சரக்கு லாரி போல லோடு அடித்துத் தருகிறர்கள்.

முப்பரிமாண நகலி – எதிர்காலத்தின் ஊடறுக்கும் தொழில்நுட்பம்

நம்மை சுற்றிக் காணப்படும் எல்லா பொருட்களும் ஏதோ ஒரு தனி வடிவமைப்பாளரின் அல்லது வடிவமைப்புக் குழுவின் கற்பனையில்தான் முதலில் உருவாக்கப்பட்டவை. இயந்திர வழி உற்பத்தியின் காலத்திற்கு முன்னால் வடிவமைப்பாளனே ஒரு பொருளை உருவாக்கினான். இயந்திர உற்பத்தியின் அறிமுகத்திற்கு பின் வடிவமைப்பாளனின் பொறுப்பு மாதிரிகளை உருவாக்குவதில்தான் கோரப்பட்டது.

வாசகர் மறுவினை

சி. சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு- பகுதி 8 இளைய தலைமுறைக்கு நல்ல வழிகாட்டிகள் ஆசிரியருக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் அதே போன்று புதிய கண்டுபிடிப்பாளர்களை திறமையான இளைஞர்களை அறிமுகம் செய்து அவர்களையும் ஊக்கப் படுத்துங்கள்

சமயங்கள், சமயமற்ற இந்துக்கள், சமயசார்பற்ற அரசுகள்

சமூக விஞ்ஞானியாகவும், சுதந்திரச் சிந்தனையாளராகவும், பண்பாட்டு ஆய்வாளராகவும் வகைமைப்படுத்தி நான் அறிந்திருந்த பாலகங்காதராவின் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அவரை இந்துத்துவ சார்புச் சிந்தனையாளராகவும் நினைத்திருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் எதுவுமில்லை, அவர் செமிட்டிய சமயங்களையும் காலனியாதிக்கத்தையும் எதிர்மறை விமரிசனத்துக்கு உட்படுத்துக்கிறார் என்ற அளவில் அவரது சிந்தனைகள் இந்திய சிந்தனையை நவீன காலத்தோடு உரையாடும் சுதந்திர சிந்தனையாக மீட்டெடுக்க விரும்புவோருக்கு உதவலாம். மேற்குலகின் சமூக ஆய்வுத் துறைகளின் அணுகல்களின் அடிப்படைகள் பல நிலப்பகுதிகளின் சிந்தனையாளர்களாலும், மக்களாலும் விமர்சனம் செய்யப்பட்ட பின்னும், மறுபரிசீலனை செய்யப்படாது,‘உண்மைகளாக’க் கருதப்பட்டுப் பயன்படுத்தப்படும் முறைமையைக் கண்டனம் செய்வது கொஞ்சம் சாதகமான விஷயமாக இருக்கலாம். ஆனால் உலகின் அதுவரை சமயமற்றிருந்த பிற மக்கள் அனைவரையும் வெவ்வேறு சமயங்களாக செமிட்டியமும் அதன் வெளிப்பாடான காலனியாதிக்கமும்தான் திரட்டின என்று அவர் சொல்வது நிச்சயம் இந்துத்துவர்களுக்கோ, இந்திய சிந்தனையைப் புனருத்தாரணம் செய்ய விரும்புவோருக்கோ உதவாது. அதே சமயம், கருத்துலகில் முரணியக்கத்தை பாலகங்காதரா நிராகரிப்பது எதிர்பாராத ஒரு கொடையாக இருக்கலாம்.

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்

இன்று காலை அவரது எண்பத்து இரண்டாவது வயதில் P.B.ஸ்ரீனிவாஸ் இறந்துவிட்டார் எனும் செய்தியை இணையத்தில் பார்த்து அறிந்துகொண்டேன். பலவிதமான நினைவுகள். யூடியூப்பைத் திறந்துவைத்து அவரது எந்தப் பாடலைக் கேட்கலாம் என குழம்பியபடி ஒரு நிமிடம் உட்கார்ந்திருந்தேன். நெடுங்காலம் பல அற்புதமானப் பாடல்களைப் பாடியிருந்தாலும், பாடல் வரிகளைத் தாண்டி அவரது குரல் இன்றும் மறக்க முடியாததாக இருக்கிறது.

மகரந்தம்

கடவுள் மன்னிக்கட்டும், தற்போது இந்தியா யுத்தத்தில் பங்கேற்க நேரிட்டால் அஸ்வினும் ஹர்பஜனும் போர் முனைக்கு செல்லுவார்களா என்பது சந்தேகமே.
ஆனால் இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆஃப் ஸ்பின் பௌலர் யார்க்ஷையரின் ஹெட்லி வெரிட்டி (Hedley Verity) இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் தன்னிச்சையாக சேர்ந்தார்.

மயக்கம்

அப்பாவிடம் பலமுறை திரும்பத்திரும்ப சொல்லச்சொல்லி கேட்டது தான். சுந்தாச்சுச் சித்தப்பா யானையின் பின்னால் ஓடிப்போன கதை. எத்தனை முறை கேட்டாலும் ராமனுக்குச் சலிக்காது, அவன் அப்பாவிற்கும் சொல்லிச் சலிக்காது. ஒவ்வொரு முறையும் அவரின் மனநிலையைப் பொறுத்து பல கிளைக் கதைகளுடன் வளர்ந்துகொண்டே வந்தது.

பேச்சிப்பாறைகளும் பண்பாட்டுப் படுகைகளும் – பாலகங்காதரா நூல் அறிமுகம் குறித்துச் சில எதிர்வினைகள்

நம் பண்பாடோ, பெரும் சிவத்தை, பரம சிவனையே பித்தன் என்று கொண்டாடுகிற ஒரு பண்பாடு. அதை பெருவாரி மக்கள் கேள்வி கேட்டதாகவோ, எள்ளி நகைத்ததாகவோ எனக்குத் தெரியவில்லை. பித்தனிடம் உள்ளது கருவி நோக்கங்களை எல்லாம் தாண்டிய ஒரு பெருந்துலக்கமான அறிவு என்று நம் பண்பாடு வெகுகாலமாக அறிவதோடு, அங்கு பெறக்கூடியதை ஞானமாகவும், விடுபெற்ற அறிவாகவும் ஏற்றுக் கொண்டாடி வருகிறது.

பெருவெடிப்பும் பிரபஞ்ச நுண்ணலை பின்புல கதிர்வீச்சும்

ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் அணுக்கரு துகள்களும் எலக்ட்ரான்களும் இணைந்து அணுக்கள் உருவாகின. அதன் பிறகு இந்தப் பிரபஞ்சம் ஒளி ஊடுருவிச் செல்லும் வெளியாக ஆனது. அதற்கு முன் ஒளி மீண்டும் மீண்டும் (பருப்பொருள்) துகள்களினால் சிதறக்கடிக்கப்பட்டது. அவை துகள்களுடன் பிணைக்கப்பட்டிருந்தது போன்ற ஒரு நிலை. பெருவெடிப்பில் இருந்து 380000 வருடங்கள் வரை பிரபஞ்சம் இந்த நிலையில் இருந்தது. எந்தப் புள்ளிகளிலிருந்து ஒளி வெளியை சுதந்திரமாக ஊடுருவ ஆரம்பித்ததோ அந்தப் புள்ளிகளை இறுதி ஓளிச்சிதறல் பரப்பு என்று கூறலாம். இந்தப் பரப்பிலிருந்து வெளியை ஊடுருவ ஆரம்பித்த ஆதி ஒளித்துகள்கள்தான் இன்று வெளியெங்கும் பரவியுள்ளது.

அல் அல்வரெஸ் – ஒரு நேர்காணல்

இங்கு, Granta இதழின் டெட் ஹாட்கின்ஸன்-உடன் (Ted Hodgkinson) , எப்படி வசிக்கும்-பள்ளி, அவருக்கு தெரியாதவனவற்றை எதிர்கொள்ளும் சுவாரஸ்யத்தை அளித்தது, ஏன் பெக்கெட் முதுமையைப் பற்றி சொன்னவை தவறு, எப்படி காலமும், நாட்குறிப்பு எழுதுவதும் சில்வியா ப்ளாத் மற்றும் டெட் ஹ்யூஸ் பற்றிய அவரது பார்வையை மாற்றின எனப் பேசுகிறார்.

இந்தியாவின் பாரம்பரியக் கோவில்கள்

தமிழரின் பெருமைகளில் ஒன்றான 1000 ஆண்டு பழைமையான தஞ்சைப்பெரிய கோவிலின் கட்டுமானத்தை, சோழர் பாணி ஐம்பொன் நடராஜர் சிலை உருவாக்கத்தை, பெரியகோயிலின் உள்ளிருக்கும் பெரிய சுவரோவியத்தை, மகாபலிபுரம், ஸ்ரீரங்கம், என இந்திய கட்டட, சிற்பக்கலையை விளக்கும் ஆவண படம்.

பிஹு

அஸ்ஸாமிய புது வருடத்தையும் வசந்தத்தையும் வரவேற்கும் ரொங்காலி பிஹு கொண்டாட்டங்கள். பெங்கால், ஒரிசா, கேரளா, நேபால், பஞ்சாப், மணிப்பூர், தமிழ்நாடு என்று வெவ்வேறு மாநிலங்களில் இந்த புது வருட பிறப்பு வெவ்வேறு பெயர்களில் கொண்டாட படுகிறது. தமிழ்நாட்டில் இது சித்திரை முதல் தேதியில் தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடப் “பிஹு”

புண்ணாக்கிய மண்ணைப் பொன்னாக்கும் விவசாயம்

கி.பி.2012-ல் வாழும் நாம் மண்ணை நேசிப்பதனை மறந்து மண்ணை மாசுகளால் புண்ணாக்கி விட்டோம். ரசாயனங்களைக் கொட்டி மலடாக்கிவிட்டோம். விஷ உணவை உற்பத்தி செய்து விஷத்தை உண்டு உடலும் மனமும் விஷமான மனிதனுக்கு வாழ்க்கைப் பார்வையும் போய் கருத்துக்குருடன் ஆகிவிட்டான். விஷமான மனிதர்கள் வாழ்கைப் பார்வை இல்லாததால்தான் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளைப் புறக்கணிக்கின்றனர். செலவு குறைந்த இயற்கை விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டுச் செலவை உயர்த்தும் ரசாயனத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கபட்டு வருகிறது.

நல வாழ்வுக்கு விவசாயம்

முற்காலத்தில் நோய் என்றால் தொற்றும் தன்மையுள்ள பிளேக், அம்மை, க்ஷய ரோகம் ஆகியவற்றுக்கு மட்டுமே அஞ்ச வேண்டியிருந்தது. அவற்றுக்கெல்லாம் கூட மருந்துண்டு. ஆனால் தொற்றிக் கொள்ளாத நோய்கள் இன்னும் பயங்கரமானவை. இவை 19, 20 ஆம் நூற்றாண்டில்தான் அதாவது விவசாயத்தில் ரசாயனப் பயன்பாட்டுக்குப்பின் தோன்றியவை.

புத்தக அறிமுகம் – தலையணை மந்திரோபதேசம்

“இன்றிரவு சாப்பாடு நன்றாயில்லை! நாளை நானே நன்றாயில்லை என்பீர்கள்!! இப்பொழுது இந்த வீட்டில் உங்களுக்கு எதைப் பார்த்தாலும் நன்றாகப் புலப்படவில்லை! நான் நாளைப்போழுது விடிய வேண்டுமே என்று காத்துக் கொண்டிருக்கிறேன். என் குழந்தைகளை அழைத்துக் கொண்டு நான் வெளியே போய் விடுகிறேன். உங்களுக்கு யார் சமையல் செய்தால் நன்றாக இருக்குமோ அவர்களை அழைத்து வந்து ருசியாக சமையல் செய்யச் சொல்லி சுகமாக சாப்பிடுங்கள்”