வத்தலக்குண்டுக்கு அழிந்த சரித்திரம் இன்னும் பல உண்டு. அவற்றையெல்லாம் தான் சுதந்திரப் போராட்டத்தின் போது வாழ்ந்த மனிதர்களையும் நிகழ்வுகளையும் அவர் நினைவு கொள்கிறார் சுதந்திர தாகம் நாவலில். அவர் நினைவு கொள்ளும் அந்த மனிதர்களும் இல்லை. அந்த சூழலும் இல்லை. வத்தலக் குண்டும் அந்த பழைய பிள்ளைப் பிராய வத்தலக்குண்டு இல்லை.
Category: இதழ்-83
வாடிவாசல் – அதிகாரம் எனும் பகடைக்காய்
மிருகமும் மனிதனும் ஒருவரையொருவர் நிரப்பிக்கொள்ளும் தருணம் தான் வாடிவாசல்.அங்கு ஒரு கணமேனும் மனிதன் மிருகமாகிறான், மிருகம் மனிதனாகிறது. பிச்சிக்கு, அக்காரியின் கொம்புகளில் தன் தந்தையின் ரத்தம் இன்னும் சிவப்பாக இருப்பது போல தோன்றும் போது, அக்காளைக்கும் அவனது கண்களில் அவன் தந்தைக்காக வந்திருக்கும் வஞ்சம் தெரிந்திருக்கலாம். அச்சமயம், தான் ஒரு மனிதனுக்கு முன் நிற்பது போலவே பிச்சி உணர்கிறான்.
'டூடில்பக்' – க்ருஸ் நோலனின் குறும்படம்
ஒரு மனிதன், தன் அறையில் ஓடும் ஒரு பூச்சியை பிடிக்க பார்க்கிறான். தன் ஷூ-வை கழட்டி அதை அடிக்க முயல்கிறான். ஒருவழியாக அப்பூச்சி அகப்படுகிறது, ஆனால் அவன் தொடர தொடர காட்சி விபரீதமாக மாறுகிறது…
ஹோலி! – வண்ணங்களின் கொண்டாட்டம்
வசந்தத்தை வண்ணங்களைக் கொண்டு வரவேற்கும் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களின் படங்கள் இங்கே.
கவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில
கவிதையைக் கலையின் அரசி என்பார்கள். கல்லாத கலை என்பார்கள். கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்து விட்டால் கவியாகுமா? கவிதையின் இலட்சணங்கள் என்ன? கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு, ஆனால் அவற்றின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்டாக்கி விடாது. கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவ சக்தி. அது கவிஞனது உள்மனத்தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொருத்துத்தான் இருக்கிறது.
தங்கத்தின் மறுபக்கம்
உற்பத்தி இல்லாமல் லாபம் மட்டும் வருகிறதென்றால் எங்கோ யாரோ நட்டப்படுகிறார் என்பது எளியமொழி. உண்மைதான் 1971ல் 200ரூபாய்க்கு விற்ற தங்கம் 2011ல் 25000ரூபாய்க்கு உயர்ந்துள்ளது என்றால் நாற்பது ஆண்டுகள் 125 மடங்கு லாபம் என்று பொதுபுத்தியில் எட்டலாம். ஆனால் 1981ல் 10000 ரூபாய் முதலீட்டில் ஒரு நிறுவனம் 2011ல் 7 பில்லியன் டாலர் மதிப்புடையதாகிறது(இன்ஃபோசிஸ்) என்றால் காரணம் முதலீடு உழைப்பு சார்ந்த, உற்பத்தி சார்ந்த துறையில் அமைந்துள்ளதே காரணம். மாறாக 10000 ரூபாயை 1981ல் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் அதிகபட்சம் 3ஆயிரம் டாலர் 2011ல் கிடைத்திருக்கும். அந்த உற்பத்தி மூலம் எத்தனை பேர் வருமானம் ஈட்டிருப்பார்கள்? அரசுக்கு எத்தகைய லாபம்? என்று யோசித்தால் இது எவ்வளவு பெரிய நட்டம் என்பது புலப்படும்.
தற்செயலாய் உருவான பிரபஞ்சம்-பகுதி 2
இதமான வாழ்வுக்குத் தேவையான பிராணவாயு, தண்ணீர் (அதன் உறை நிலை பூஜ்யம் டிகிரியாகவும் ,கொதி நிலை நூறு டிகிரியாகவும் இருப்பது) போன்ற எத்தனையோ நல்ல அம்சங்களைக் கொண்ட இந்த பூமியில் நாம் ஏன் வாழ நேர்ந்தது என்று கேட்டாலும் , இதே போன்ற பதில் தான் கிடைக்கும் . இது தற்செயலா? நம் அதிர்ஷ்டமா? இறையருளா? வேறெதுவோ?
ஒரே தீர்வு
அவனுக்கே சொந்தமான ஒரு மாபெரும் கனவை அவன் உருவாக்கினான். எல்லையற்ற சிக்கல்களாலான இக்கனவின் எல்லா நுணுக்கங்களும் , கடைசி புள்ளி வரையிலும் கூட திட்டமிடப்பட்டது. அதனுள் அவன் தன் வாழ்வை புதுப்பித்துக் கொள்வான்.
வட்டங்களுக்கு வெளியே
அவரவருக்கு என்று ஒரு வட்டப் பாதையை ஏற்றுக் கொண்டு அந்த வட்டப் பாதையில் மற்றுமொரு குழு எதிர்ப்படுவதை எப்போதும் தவிர்ப்பதாகவே தோன்றியது. சூரியனைச் சுற்றி பல கோள்கள் தமக்கிட்ட பாதையில் சுற்றி வருவதைப் போல ஆசானைச் சுற்றியும் இப்படி பலக் குழுக்கள் இருக்கக் கூடும். ஆசானைப் போல இன்னும் பல ஆசான்கள் அவரவர் குழுக்களில் தனித்தனி வட்டப் பாதைகளில் பயணிக்கிறார்கள். மேலும் பார்த்தால் ஆசான்கூட ஒரு வட்டப் பாதையில்தான் பயணிக்கிறார். பல ஆசான்கள் ஒரு குழுவாக சார்ந்து ஒரு வட்டப் பாதையில் பயணிப்பதாகவும், மற்றவர்களுக்கு அந்தப் பாதையில் இடமில்லை என்றும் தோன்றியது.
நடனம் ஆடுவீர்களா?
இளைஞனும் பெண்ணும் ஒருவருடன் ஒருவர், ஒரு கரம் கோர்த்து இன்னொரு கரத்தால் அணைத்து உடல்கள் அழுந்தி உரச மெல்ல நடனம் ஆடினார்கள். இணைந்து ஆடியபடியே அந்த முற்றத்தில் இங்கும் அங்கும் நகர்ந்தார்கள். அந்த இசைத்தட்டு ஓடி முடிந்ததும், அதையே மறுபடியும் சுழல விட்டு தொடர்ந்து ஆடினார்கள்.
கவிதைகள்
இரவும் அல்லாத பகலும் அல்லாததொரு வெளியிலிருந்து
மெள்ள மெள்ள அவிழ்ந்து கொண்டிருக்கிறேன்
இந்தியக் கவிதைகள் – ஹேமந்த் திவதே (மராத்தி)
காம்ப்ளக்ஸின் தோட்டத்தில் உலாவியபடி
சகஜமாக நண்பனிடம் சொன்னேன்,
இப்போதெல்லாம் அந்த சிறிய
மஞ்சள் நிற பட்டாம்பூச்சிகளைக்
காணமுடிவதில்லையென
புதுமைப்பித்தன் கவிதைகள்
“புதுமைப்பித்தன் தன் கிண்டலுக்கும் கேலிக்கும் வாகனமாக, சித்தர் பாடல்களில் ஆதாரம் தேடிய ஒரு செய்யுள் உருவத்தைக் கையாண்டு பார்த்தார். எழுதியுள்ள அளவில் அவர் வெற்றிகண்டார் என்றே சொல்ல வேண்டும். மாகாவியம் என்ற அவருடைய கவிதை முயற்சி பாரதியாருக்குப் பிந்திய கவிதை முயற்சிகளிலே சிறந்தது என்பது என் அபிப்ராயம்.” – க.நா.சு
மகரந்தம்
ஒரு புறம் ஆழ்கடலில் உள்ள மீன்களை கப்பல் கப்பலாக வாரி எடுத்து மாகடலில் உள்ள மீன் எண்ணிக்கையையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். கிட்ட உள்ள கடலேல்லாம் காலியான பின் பஸிபிக் மாகடல், இந்து மாக்கடல் என்று படையெடுக்கக் கிளம்பி இருக்கிறார்கள். இதன் நடுவில் யாரோ இரண்டு மூன்று அறிவியல் ஆய்வாளர்கள், நகர்களில் இருந்து நீர்நிலைகளில் கலக்கும் கழிவு நீரில் மனிதர் உட்கொண்ணும் மன அழுத்த நோய்க்கான மருந்துகளின் எச்ச சொச்சம் கலப்பது மீன்களைப் பாதிக்கிறது என்று அந்த மருந்துகளின் எச்சங்களை கழிவு நீரில் இருந்து அகற்ற வழி காண்கிறார்கள்.
வாசகர் மறுவினை
திரு பிரகாஷ் சங்கரனின் கட்டுரை தெளிவான மொழியில் மிகக் கடினமான ஒரு பொருளை திறமையுடன் தந்திருக்கிறது.
தமிழில் இத்தகைய கட்டுரைகள் தேவைகள் அதிகம், ஆனால் அரிதாகவே வருகின்றன. சமீபத்தில் ஒரு புத்தகத்தில் moving bodies என்ற ஆங்கிலச் சொற்கள் ‘இயங்கும் உடல்கள்’ என மொழிபெயர்க்கப்பட்டிருந்தன!
‘அடியிலிருந்து ஒளியூட்டுவது’ என்பது மிகப் பொருத்தமான சொற்றொடர். மொழிக்கும் அடியிலிருந்து ஒளியூட்டுவது மிகவும் அவசியம்.
முடிவிலாச் சுழல்
“பிரதீத்ய சமுத்பாதம்” பௌத்தத்தின் முக்கியமான பிரத்யேகமான தத்துவம். பாலி நெறிமுறையின் எண்ணற்ற பத்திகளில் புத்தர் இத்தத்துவத்தை இயற்கையின் நியதி என்றும் அடிப்படை உண்மை என்றும் விவரித்திருக்கிறார். ஞானமடைந்த மனிதர்களின் பிறப்பைச் சாராத உண்மையிதுவென்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
நூல் அறிமுகம் – வாழ்வு தரும் மரங்கள் – ஆர்.எஸ்.நாராயணன்
மரங்கள் குறித்த நூல் என்றால் ஏதோ நாம் பள்ளி, கல்லூரி காலங்களில் படித்த பாட்டனி பாட நூல்கள் போல கடினமாகவும் வறட்சியாகவும் இல்லாமல் மிகவும் சுவாரசியமான நடையில் ஒவ்வொரு மரம் குறித்தும் முழுமையான தகவல்களுடனும் ஏராளமான சுவாரசியமான உப தகவல்களுடனும் இந்த நூலை எழுதியுள்ளார். அரச மரம், ஆல மரம் துவங்கி கோங்கு மரம் வரையிலான 78 மரங்கள் குறித்தான முழு விபரங்கள் அடங்கிய சுவையான கட்டுரைகளின் தொகுப்பே வாழ்வு தரும் மரங்கள்
இந்தியக் கவிதைகள் – ஆருத்ரா (தெலுங்கு)
நீ பயணம் செய்ய நினைத்திருந்த ரயில் வர
ஆயுட்காலம் தாமதமாகும்.
கணக்கற்ற வருடங்கள்
நீ காத்திருக்க முடியாதென்பதால்
எந்த ரயில் வந்தாலும் அதில் ஏறிக்கொள்.
ஒரு அப்பா, ஒரு அம்மா, ஒரு அம்மம்மா
ஒரு செல்லுக்குள் புகுந்து பார்த்தால், அங்கே ஒரு மாபெரும் கெமிக்கல் தொழிற்சாலையே இயங்குகிறது. ஏகப்பட்ட மாலிக்யூல்கள் (மூலக் கூறுகள்) இணைந்தும் பிரிந்தும் சங்கிலி நடனம் ஆடுகின்றன. ஆக்டின் இழைகள் தமக்குத் தாமே பிணைந்து வயர் கூடை பின்னுகின்றன. இரண்டு சின்னஞ் சிறிய கால்களால் அடி மேல் அடி வைத்து பலூன் வியாபாரி மாலிக்யூல் ஒன்று நடந்து போகிறது. கொழுப்புக் கடலில் ஒரு லிபிட் தெப்பம் மிதந்து வருகிறது. அதன் மீது ஒரு தொண்டர் கோஷ்டியே அலப்பறை செய்துகொண்டு ஏதோ கட்சி மாநாட்டுக்குப் போகிறது.
செல்லின் நடுவில் வட்டமாக மெத்தை போட்டு, திண்டு வைத்துக்கொண்டு முகலாயச் சக்ரவர்த்தி போல உட்கார்ந்திருப்பதுதான் மையக் கரு. அதற்குள் சுருட்டிய இரட்டை வடச் சங்கிலி போன்ற டி.என்.ஏ. இதில்தான் நம் பாட்டன், முப்பாட்டன் கொடுத்த மரபு வழிச் செய்திகள் அனைத்தும் பதிவாகி இருக்கின்றன. நம் சைடு வழுக்கை, சப்பை மூக்கு எல்லாவற்றுக்கும் ஆதி காரணம் டி.என்.ஏ.
புதுமைப்பித்தன் கவிதைகள் – ஒரு சமகாலப் பார்வை
புதுமைப்பித்தனின் கவிதை பாணியின் இன்றும் புதிதாய் வாசிக்கப்படும் சாத்தியங்களுக்குண்டான சமிக்ஞைகளை ரகுநாதன் தொகுத்து 1954ஆம் ஆண்டு ஸ்டார் பிரசுரத்தால் பதிப்பிக்கப்பட்ட இந்தச் சிறு நூல் முதல் பார்வைக்கும்கூடத் தந்துவிடுகிறது – ஒரு சிறு தாவலில் இவற்றின் கருப்பொருளையும் வடிவ அமைப்பையும் சொற்தேர்வையும் சமகாலத் தமிழுக்குக் கொண்டு வந்துவிட முடியுமே என்று ஆசையாக இருக்கிறது.
திருநவேலியும், திருநெல்வேலியும்…
முன்பெல்லாம் தெரிந்த ‘திருநவேலி முகங்கள்’ ஒன்றிரண்டாவது கண்ணுக்குத் தென்படும். இப்போது சமீபகாலமாக அப்படி நடப்பதில்லை. அடுத்தடுத்த தலைமுறையினரின் முகங்கள் நான் அறியாத காரணமா, இல்லை எனக்குத் தெரிந்த, ஆனால் நான் பழகியேயிராத முந்தைய பழைய மனிதர்கள் இப்போதெல்லாம் பயணம் செய்வதில்லையா, அறியேன். திருநவேலி ரயில்வே ஸ்டேஷனில் போய் இறங்கியபோது, ரயிலுக்குள் இருந்த திருநவேலியைப் பார்க்க முடியவில்லை.
பிரமீள்- மேதையின் குழந்தைமை
விமர்சனத்தை ஒரு கலை வடிவாக அமைத்தவர் பிருமீள். அழகியல் ரீதியிலான அனுபவத்தை சொல்லும் ஒரு தோரணையாக விமர்சனத்தை மாற்றினார். சுயமான விமர்சனச் சித்தாந்தத்தை உருவாக்கிக் கொடுத்தார்.