வாசகர் மறுவினை

உயிரின் அடிப்படை அலகான செல்கள் புதிய செல்களைத் தோற்றுவிப்பதற்காகப் பிளந்து பெருகுவது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. புற்றுநோய்களில் செல்கள் இந்த ஆதாரமான கட்டுப்பாட்டை மீறி முடிவற்று பிளக்க ஆரம்பிக்கின்றன. இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களில் இந்த கட்டற்ற செல் பிளவு உண்டாகும் போது அது இரத்தப் புற்றுநோய் எனப்படுகிறது.

சி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாதார நிகழ்வு – பகுதி 6

செல்லப்பா எழுத்துக்கு வகுத்துள்ள எல்லைக்கோட்டுக்குள் நான் எழுத ஆரம்பித்த எந்த கட்டுரையும், எல்லாக் கலைகளையும், இலக்கியத்தை பாதிக்கும் அறிவுத்துறைகளையும் உள்ளடக்கிய ஒரு பார்வை, எதையும் தனித்துப் பார்க்க இயலாது என்ற பார்வை, ஒன்றின் வறட்சியோ, வளமோ தனித்து எந்தத் துறையிலும் வரம்பு கட்டிக்கொண்டு இருப்பது சாத்தியமில்லை என்பது போன்ற அணுகுமுறை எல்லாமே எழுத்து பத்திரிகைக்கு அப்பாற்பட்டது. ஆனால் அதை செல்லப்பா வரவேற்றார்.

காலம், தேசம், புகைப்படம்

தினம் ஒரு புகைப்படமென்ற கணக்கில் உலகின் பல நாடுகளின் சுவரஸியமான தருணங்கள் இந்த பக்கத்தில் கிடைக்கின்றன. காலம், தேசம் கடந்த மக்களின் வாழ்க்கை இதில் பதிவாகியுள்ளது.

கடைசி Kodachrome படச்சுருளும், ஸ்டீவ் மக்கரியும்

தற்போதைய டிஜிடல் புகைப்படக்கருவிகளின் மூதாதைகளை நாம் அறிந்திருப்போம். அந்த மூதாதைகளை உயிர்ப்புடன் வைத்திருந்தவை Kodachrome படச்சுருள்கள். Kodak நிறுவனம் இந்த Kodachrome படச்சுருள்களை தயாரிப்பை கைவிடுகிறது. தன்னுடய தொழிற்சாலையில் தயாரான் இத்தகைய படச்சுருளின் கடைசி சுருளை உலகின் பிரபலமான புகைப்படக் கலைஞரான ஸ்டீவ் மக்கரியிடம் அளித்து, அந்த கடைசி “கடைசி Kodachrome படச்சுருளும், ஸ்டீவ் மக்கரியும்”

விஞ்ஞான முட்டி மோதல் – பகுதி 7-8

ஒவ்வொரு முறை, ஒரு புதிய அணுத்துகள் வேகப்படுத்தும் எந்திரத்தை உருவாக்கினாலும், முதலில் விஞ்ஞானிகள் செய்யும் வேலை, நியமான அணு அமைப்பு மாடல் இன்னும் சரிப்பட்டு வருகிறதா என்று பார்ப்பதுதான். பல முறை இந்த சோதனைகளைக் கடந்த 40 ஆண்டு காலமாக செய்து, இதுவரை சரியாகத்தான் உள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள். இத்தனைக்கும் இந்த ஆண்டு வரை ஹிக்ஸ் போஸான் தண்ணி காட்டியது.

யாகாவாராயினும் நாகாக்க

மனதில் பட்டதை வாயைக் கட்டுப்படுத்த முடியாது அவனறியாமல் சொல்லிவிடுவது வழக்கம். யோசித்து சொல்லலாமா சொல்லக்கூடாதா என்று யோசித்து ஓரளவிற்கு கட்டு்ப்படுத்தி வைப்பான். ஆனால் அடுப்பில் பாலை வைத்துவிட்டு எதையோ யோசித்துக்கொண்டிருக்கையில் கண் முன்னாலேயே பால் பொங்குவது மாதிரி சொல்வது தெரிந்தே கட்டுப்படுத்த முடியாமல் சொல்லிவிடுவான்.

இசைபட வாழ்…

செந்தில் குமார் என்னிடம் பேசிய முதல் வரி, “நான் சொல்வதை மட்டும்தான் எழுதவேண்டும்.எனக்கு உதவுகிறேன் என்று நீங்களாக எதுவும் எழுதுவது எனக்கு பிடிக்காது”. எனக்கு அவரை உடனே பிடிக்கத் துவங்கியது. இவரின் ஒன்பது தேர்வுகளை இரண்டாண்டுகள் நான் எழுதினேன். தேர்வு முடிந்து, அந்த வேப்பமரம் நிறைந்த, வேப்பம்பழங்கள் இறைந்த பள்ளியின் சாலை வழியே நாங்கள் பசுமலை பேருந்து நிறுத்தம்வரை நடந்து வருவோம். சரியான இடங்களில், தேவைக்கு ஏற்றவாறு வளைந்து, மேடுபள்ளங்களில் சரியாக கால் வைக்கும் அவரின் புலன்களின் நுண்ணறிவு என்னை வியக்க வைக்கும். இவர், பெரும்பாலும் ஏதேனும் ஒரு பாடலை “ஹம்” செய்வார். அதில் பெரும்பான்மை இளையராஜாவுடையதாக இருக்கும்.

மிலிந்தனின் கேள்விகள் – 2

“ஒரு மனிதன் சிறு கனலை ஊதி தன்னை வெப்பப்படுத்திக் கொண்டபிறகு, அக்கனலை அப்படியே எரியவிட்டு அவ்விடத்திலிருந்து அகல்வது போன்றது இது. அக்கனல் பரவி அண்டை வயலொன்றின் விளைச்சலை எரித்து சாம்பலாக்கிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நிலத்தின் உரிமையாளன் இம்மனிதனை பிடித்து, அரசன் முன்னால் விசாரணைக்குக் கொண்டு வந்தானென்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அம்மனிதன் “இந்த ஆளின் வயலுக்கு நான் தீ வைக்கவில்லை. நான் அணைக்காமல் விட்டுப் போன தீயும் வயலை எரித்து சாம்பலாக்கிய தீயும் வேறு வேறானவை. எனவே நான் குற்றவாளியல்ல” என்று சொல்கிறான். அம்மனிதன் தண்டிக்கப்படத்தக்கவனா?”

உப்பு நாய்கள் – லக்ஷ்மி சரவணகுமார்

சென்னை வாழ் நடுத்தர மக்களின் இருப்பு சார்ந்த பிரச்சனைகளையும், உளவியல் சிக்கல்களையும் ஆழமாக அலசி முன்வைக்கப்பட்ட ஏராளமான படைப்புகள் நம்மிடம் இருக்கின்றன. என்றாலும், அடித்தட்டு மக்களின் அகச்சிக்கல் மற்றும் அறியாமை சார்ந்து பொலிவிழந்த முகங்களை முன்வைத்த பதிவுகள் மிகக் குறைவுதான். அந்த வகையில் “உப்பு நாய்கள்” நாவலானது மனதாலும், உடலாலும், இருப்பாலும் வாழ்வின் சுழலில் வதைபடும் எளிய மனிதர்களைப் பற்றி நிறையவே பேசுகிறது.

சென்னையில் வாலி வதம் – தோற்பாவைக் கூத்து

Kalari Heritage and charitable Trust சார்பில் மணல்வீடு இதழின் ஆசிரியரும் நண்பருமான ஹரிகிருஷ்ணன் .6.1.2013 அன்று எலியட் பீச் அருகில் சந்திரலேகா ஸ்பேசஸ் என்ற இடத்தில் அம்மாபேட்டை கணேசன் குழுவினரின் வாலிவதம் தோற்பாவைகூத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.[…]கூத்தின் முதல் சுவாரசியம் கட்டியக்காரன்தான். கட்டியக்காரன் நிகழ்ச்சிக்கு மக்களிடம் வரவேற்பை பெற்றுத் தருவான். ஊர்பிரமுகர்கள் பற்றி, சுற்று வட்டாரத்து சம்பவங்கள் குறித்து நிறைய நகைச்சுவையுடன் பேசத் துவங்கி மெல்ல கூத்திற்கு வருவான். கூத்து துவங்கும்.

ஹிக்விட்டா எனும் புதிர்

எந்த ஒரு புனைவும் ஒரு புதிர். அவரவர் சார்பு நிலைகளுக்கு ஏற்ப அதைப் புரிந்து கொள்கிறோம், அதன் படிப்பினையை எடுத்துக் கொள்கிறோம். எது சரி எது தவறு எது பொருத்தம் எது பொருந்தாது என்று யோசிக்கும்போது குழப்பம்தான் மிஞ்சுகிறது. கதையை முழுமையாய் புரிந்து கொள்ள முற்பட்டு வெவ்வேறு கோணங்களில் அதை அணுகியும், ஹிக்விட்டா ஆட்டத்தை அணுகிய முறை வாழ்வில் பின்பற்றக்கூடியதா, கீவர்கீஸ் லூஸியின் பிரச்சினையைத் தீர்க்க தெரிவு செய்த வழிமுறை சரியானதா என்பது பற்றிய ஒரு நிச்சயமற்ற நிலையைத்தான் அடையமுடிகிறது.

ஆயிரம் தெய்வங்கள் – ஈராஸ் – சைக்கே காதல்

கிபி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த தெய்வக்கதை மற்ற கிரேக்க புராணங்களிலிருந்து மாறுபட்டு விளங்குகிறது. அபூலியஸ் பிளாட்டோவின் சீடர். பிளாட்டோவை ஒரு பகுத்தறிவாளராகக் கருத இயலாது. அவர் புறப்பொருட்களுக்கு முக்கியத்துவம் தரும் உயர்ந்த குறிக்கோள்வாதி என்றாலும், உயர்ந்த குறிக்கோளின் உன்னத நிலையை அழியாத ஆன்மாவாக ஏற்றுக் கொண்டவர். மேலோட்டமாகப் பார்த்தால் பிளாட்டோவோ, அபூலியஸோ கண்ணால் பார்க்க முடியாத இரவுப் பிராணியுடன் மானுடப் பெண் உறவு கொள்ள முடியும் என்பது அறிவுக்குப் பொருந்தாது என்றாலும் சில உண்மைகளை மனித உணர்வுகளுடன் வெளிப்படுத்த தெய்வங்களைக் கையாள்கின்றனர்.

சிற்றிலக்கியங்கள் – மாலை – பகுதி 1

‘பனுவல் போற்றுதும்’ தொடரில் பழந்தமிழ் இலக்கிய வகைகளை பற்றி அறிமுகம் செய்யும் நாஞ்சில் நாடன், இம்முறை சிற்றிலக்கிய வகையான ‘மாலை’ வகை இலக்கியங்களை பற்றி பேசுகிறார் : “சிற்றிலக்கிய வகையினதாகப் பேசப்படும் 96 பிரபந்தங்களுக்குள் மாலை என்று முடியும் நூல்கள் 28 வகைகள் ஆகும். அங்க மாலை, அநுராக மாலை, இரட்டைமணி மாலை, இணைமணி மாலை, நவமணி மாலை, நான்மணி மாலை, நாம மாலை, பலசந்த மாலை, கலம்பக மாலை, மணி மாலை, புகழ்ச்சி மாலை, பெருமகிழ்ச்சி மாலை, வருத்த மாலை, மெய்கீர்த்தி மாலை, காப்பு மாலை, வேனில் மாலை, வசந்த மாலை, தாரகை மாலை, உற்பவ மாலை, தானை மாலை, மும்மணி மாலை, தண்டக மாலை, வீர வெட்சி மாலை, காஞ்சி மாலை, நொச்சி மாலை, உழிஞை மாலை, தும்பை மாலை, வாகை மாலை என்பன அவை”.

க.நா.சு.வும் சி.ஐ.ஏ.வும்

(க.நா.சு.)உலக இலக்கியவாதிகளை தமிழ்நாட்டில் உலவவிட்டவர். நாங்கள் அவருடைய உலக இலக்கிய வரிசை நூல்களைத் தேடித்தேடிப் போட்டிபோட்டுக் கொண்டு படித்தோம். (உபயம் – கோணங்கி). மிகப் பரந்த வாசிப்பும், மிகச் சிறந்த ரசனையும் கொண்ட, இலக்கியத்துக்காகவே வாழ்ந்து தீர்த்த க.நா.சு.வை இங்ஙனம் செய்யும்படி எது இயக்கியது? கடைசி காலம் வரை அவருடைய ஒரே துணையான அந்த டைப்ரைட்டர் அவரிடம் என்ன சொல்லியிருக்கும்? தன்னை விளம்பரப்படுத்தும் கலைநுட்பம் மலிந்த இன்றைய இலக்கிய உலகில் அவருடைய படைப்புகளின் மதிப்பீடு என்ன? காற்றில் அலையும் கேள்விகள்!

முகம்மது ஆல்வியின் உருது கவிதைகள்

வெள்ளிச்சிறகுகளை அகல
விரித்தொரு பறவை
தனதேயானப் பரவச அலையில்
மிதக்கிறது,
நீலக் கடலலைகளின் மேல்.

வாழ்வெனும் வரம்

தென்னமெரிக்க கடற்கரையில் நல்ல வெளிச்சமும் வெப்பமும் உள்ள ஒரு பகல் பொழுது. கடல் அலையின் ஆர்ப்பரிப்பைத் தவிர அந்த வெளியை நிரப்பிய ஒருவித மௌனம் மட்டும். திடீரென்று வெண்மையான கடற்கரை மணல் ஆங்காங்கே அசைந்து மொட்டுவிடுவது போல சிறிய குமிழாக வளர்ந்து விரிசல் விடுகிறது. உள்ளிருந்து கரிய ஆமைக்குஞ்சுகள் முட்டையை உடைத்துக்கொண்டு தலைநீட்டுகின்றன. தலையை இருபுறமும் அசைத்து, பிஞ்சு துடுப்பை விரித்து முட்டையின் ஓட்டைக் கிழித்துக் கொண்டு மிகுந்த சிரமப்பட்டு ஆமையாக விடுபடுகின்றன. அந்த நொடியிலேயே கடலை நோக்கி சின்னஞ்சிறிய கால்களையும், துடுப்புகளையும் வீசியபடி, முதுகில் ஓட்டைச் சுமந்துகொண்டு அடித்துப் புரண்டு கொண்டு ஓடுகின்றன.

யாருக்குத் தெரியும்

சற்று நேரம் கழித்து அவள் மீண்டும் கூறினாள்: “ஒரு ரட்சகன் பெருமையோடல்லவா வரவேண்டும். அந்தக் குழந்தை இந்த ரத்தத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாமா? எப்படி இந்தக் கடனைத் தீர்க்கப் போகிறது அது?”
படைவீரன் சொன்னான்: “அவன் பிழைத்திருந்தாலல்லவா?”
இருவரும் மீண்டும் மௌனமானார்கள்.

அமைதியின் சத்தம்

ஒரு மயான அமைதி குடிகொண்டிருந்த அந்த வீட்டில் ஏதோ மெல்லிய சத்தம் வந்து கொண்டிருந்ததை உணர்ந்தோம். என்னவென்று திரும்பிப் பார்த்தால், அந்த வீட்டின் மூலையில் ஒரு பாட்டி சாய்வு நாற்காலியில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த டிவியின் ஓசைக்கூட கேட்கவில்லை. இப்படி ஒரு சூழலில் என் குழந்தைகள் குதித்தால் மட்டும் இல்லை, வாயு பிரித்தால் கூட ராக்கெட் ஏவும் சத்தம் கேட்கும் அந்த வீட்டில்.

மகரந்தம்

பல நூறாண்டுகளாக உலகில் பல வெள்ளையரல்லாத மக்களைக் கொன்று, மதம் மாற்றி, அடிமைகளாக்கி, கொடுங்கோல் ஆட்சி நடத்தி, எத்தி, சுரண்டிச் சேர்த்த பெரும் செல்வம் யூரோப்பியரைப் பாதுகாக்கவில்லை. உலகெங்கும் ஏகாதிபத்தியத் திமிரில் போர்களை நடத்தி, லத்தீன் அமெரிக்க மக்களைக் கொடுங்கோலர் ஆட்சியில் ஆழ்த்தி அந்நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டிச் சேமித்த பெருந்தனம் அமெரிக்கர்களைப் பாதுகாக்கவில்லை. சீனாவிலோ இன்று வேலையில்லாத் திண்டாட்டம் அல்ல பெரும் பிரச்சினை. அங்கு ‘Sectoral imbalance’ என்று பொருளாதாரத்தில் சொல்வார்கள். அதை ஒரு பிரச்சினையாகப் பார்க்க முடிகிறது.