குழலினிது யாழினிது என்பார்… (2012 மார்கழி இசை விழா அனுபவம்)

இசை விழாவில் பல காலிப் பெருங்காய டப்பிகள் கேட்கின்றன. என்றுமே இவ்வாறுதானா என்பது இருபது வருடங்கள் மட்டுமே இசைப் பரிச்சயம் உள்ள எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் ஒன்று மனதில் சுடுகிறது. அகடெமியும் இன்னசில சபாக்களும் முடிந்தவரை பல மாவட்டங்கள், மாநிலங்கள் என்று கூட்டிவந்து கலைஞர்களை மேடையேற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் ‘வருடத்தில் ஒருமுறை’ போதாது என்பது கோலப்பன் நேரிடையாக தமிழ்நாட்டின் உள்ளே பலபகுதிகளுக்குச் சென்று, வருடா வருடம் மார்கழி இசைவிழா சமயத்தில் பேட்டி எடுத்துப் போடும் கலைஞர்களின் வாழ்க்கை நிலையை கவனிக்கையில் தெரிகிறது. அகடெமியில் ஒரு நாள் ஸ்பெஷல் பாஸிற்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுப்பவர்கள், சொந்த ஊரில், அருகிவரும் ‘குந்தளம்’ போன்ற வாத்யங்களை வாசிக்கும், வறுமையால் மதம் மாறும் கலைஞர்களை ஆதரிக்க அதை அளிக்கலாம்.

கவிதைகள் – ஒடிஷாவிலிருந்து

திரும்பிவரும்வரை மலர்ந்திரு
என்று நீ அந்தப் பூவிடம் சொல்கையில்
நான் முதல்முறை அழுவேன்..
வசந்தக்காற்றில் அதிரும் பூ
பூத்திருக்கையிலே வாடும் ஒரு நினைவைப் போல்
நீ இல்லாத வெம்மையில் வாடிப் போகும்.

தேவதேவனுக்காக இளையராஜாவுடன்

கார் நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்துக்குள் நுழையும்போதே, பெரும் கூட்டம் வாசலில் காத்து நிற்பதைப் பார்க்க முடிந்தது. இளையராஜாவால் கீழே இறங்கவே முடியவில்லை. மொய்த்துக் கொண்டார்கள். ஒரே சத்தம். ஒரு சில அழுகையொலிகளும் கேட்டன. ஒருசில நொடிகளிலேயே கூட்டத்துக்குள் நான் தொலைந்துப் போக இருந்தேன். நல்ல வேளையாக முகம் தெரியாத அரங்கசாமியின் நண்பர்கள் வந்து என்னை மீட்டு அழைத்துச் சென்றனர்.

ஹில்பர்டின் பத்தாம் கணக்கு

ஹில்பர்டின் இந்தக் கணக்கின் தீர்வுக்கும் ஆலன் ட்யூரிங் இயந்திரம் எண்களைக் கணிப்பதற்கும் தொடர்புள்ளது. கணிப்பது என்றால் என்ன என்ற கேள்வி இங்கேஎழுகிறது, பல நூறு ஆண்டுகளாக “கணிப்பது” பற்றி மனித சமுதாயத்திற்குத் தெரிந்திருந்தாலும், அதை அறிவியல்பூர்வமாக1935ஆம் ஆண்டில் நிறுவிய பெருமை இங்கிலாந்தைச் சேர்ந்த கணணியியலின் தந்தை என அழைக்கப்படும் ஆலன் ட்யூரிங்கைச் சாரும். கணிப்பின் இயல்பை “ட்யூரிங் இயந்திரம்” என்பதைக் கண்டறிந்ததின் மூலம் ட்யூரிங் விளக்கினார்.

அனுபவமாவது எது?

கீழே மண்டிக்கிடக்கும் லட்சக்கணக்கான மரங்களின் கோடிக்கணக்கான கிளைகளில் முளைத்து உதிர்ந்தபடி இருக்கும் எண்ணிக்கையில் அடங்காத இலைகளில் ஏதோ ஒரு இலையின் நரம்புகளில் ஒரு பக்கவாட்டு நுண் இழையின் நுனி மட்டும்தான் நான் என்று எண்ணிக் கொண்டதும் ஒரு விடுதலை உணர்வு. இங்கு நடக்கும் எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை. நான் ஒன்றுமே இல்லை -ஆனால் நான் இல்லாமல் இந்தக் காடு முழுமை பெறாது.

ஆயிரம் தெய்வங்கள் – கிரேக்க சோகக்கதை ஆடிப்பஸ்

தம் வளர்ப்புப் பெற்றோர்கள்தான் தன் தாய் தந்தையர் என்று நம்பி வளர்ந்து ஆளாகிறான் ஆடிப்பஸ். ஆனால் ஒரு குடும்பத் தகராறில் அவனது பிறப்பின் ரகசியம் வெளிப்பட்டு விடுகிறது. ஆடிப்பஸ் தன் பெற்றோரைத் தேடிச் செல்கிறான். கொரிந்த் நாட்டை விட்டு வெளியேறும் ஆடிப்பஸ் ஒரு நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு பல கிராமங்கள் நகரங்கள் தேசங்கள் என்று தன் தேடலைத் தொடர்கிறான். தன் பயணங்களில் டெல்ஃபி என்ற ஊர் வந்து, அங்கு அருள்வாக்கு கேட்கும்போது “விரைவில் நீ உன் தந்தையைக் கொன்று தாயைத் தாரமாக்கிக் கொள்வாய்” என்று பதில் வந்தது.

ஒழிமுறி – உறவெனும் புதிர்

தொழில்நுட்ப உத்திகள் மலிந்த இன்றைய திரை உலகிலும் கூடக் கதையும், திரைக்கதை அமைப்பும், கூர்மையான உரையாடல்களும் வலுவாக இருந்தால் ஒரு படத்தால் மொழி கடந்தும் ஒரு பார்வையாளனைக் கட்டிப்போட முடியும் என்பதை மெய்ப்பித்திருக்கும் ஒழிமுறி, ஒரு கதையின் படம்; ஒரு கதாசிரியனின் படம்; உரையாடல்களாலும் அவை முன் வைக்கும் எளிய தருக்கங்களாலும்,வாழ்வியல் உண்மைகளாலும் தொடுக்கப்பட்டிருக்கும் படம்.

மிலிந்தனின் கேள்விகள்

பாலி மொழியில் புதைந்திருந்த பல பொக்கிஷங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நவீன உலகிற்கு ஈந்த டி.ரீஸ் டேவிட்ஸ் “மிலிந்த பன்ஹா” பற்றி இவ்வாறு குறிப்பிட்டார் : “இந்திய உரைநடையின் தலைசிறந்த படைப்பு “மிலிந்த பன்ஹா” என்று நான் நினைக்கிறேன். இலக்கிய கண்ணோட்டத்தில், உலகின் எந்த நாட்டிலும் படைக்கப்பட்ட இவ்வகைக்கான புத்தகங்களில் ஆகச்சிறந்த புத்தகம் இது”

காட்டோடைகளும் கங்காணிகளும்

என் மகனுக்கு, ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு பெரும் சூப்பர் ஸ்டார். எனவே அவன் பிறந்த நாளுக்கு, வால்டர் ஐசக்ஸன் எழுதிய ஸ்டீவ் ஜாப்சின் சரிதத்தை வாங்கிப் பரிசளித்தேன். அதன் தடிமனைப் பார்த்ததும், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆக வேண்டுமென்ற ஆசையையே விட்டு விட்டான். எனவே, வாங்கி விட்ட பாவத்துக்குப் படிக்கத் துவங்கினேன். ஆனால், அது ஜெயமோகன யட்சி போலப் பிடித்துக் கொள்ளும் என்று அப்போது தெரியவில்லை.

விஞ்ஞான முட்டி மோதல் – 5

பல வித அணு சோதனைகளுக்கும் அடிப்படை ஹைட்ரஜன் வாயு. ஹைட்ரஜன் அணுவில் சுழலும் ஒரு எலெக்ட்ரான், அணுக்கருவினுள் உள்ள ஒரு ப்ரோட்டானைச் சுற்றுகிறது. இதில் நியூட்ரான் கிடையாது. 1930 –களில் உருவாக்கப்பட்ட முதல் அணு வேகப்படுத்தும் கருவியான சைக்லோட்ரானிலிருந்து (cyclotron) இன்று ராட்சச உருவில் அணு ஆராய்ச்சிக்கு உதவி வரும் LHC-வரையில் அடிப்படை மூலப்பொருள் ஹைட்ரஜன் வாயுதான்.ஹைட்ரஜன் இயற்கையில் சேர்மங்களாகத் (compounds) தான் தோன்றுகிறது.

பனுவல் போற்றுதும் – குறம்

திருவைகுண்டத்தில் வேளாளர் மரபில் சைவ சமயக் குடும்பத்தில் 350 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் குமரகுருபரர். பிறந்து ஐந்து வயது வரை வாய்பேசாது வளர்ந்தார். பெற்றோர் அவரையும் கூட்டிக் கொண்டு போய், திருச்செந்தூர் முருகன் மீது கசிந்துருகி வேண்டியபோது குழந்தை ‘அம்மா’ என்றழைத்து ‘கந்தர் கலிவெண்பா’ எனும் நூலைப் பாடினார் என்பர். மதுரையைத் திருமலை நாயக்கர் ஆண்ட காலத்து, அவர் முன்னிலையில், அங்கயற்கண்ணி சந்நிதியில் ‘மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்’ பாடினார்.

[குறுநாவல்] ஒற்றாடல் – பகுதி 1

நான் தஞ்சாவூரில் இருந்து கிளம்பி ஒரு மாதமாகிறது. என்னுடைய அண்ணன்மார்களும், மாமன்மார்களும் அராபியக் குதிரைகளில் ஏறி போர்க்களத்தில் வீரசாகசங்கள் பல புரியும் நேரத்தில், மாட்டு வண்டியிலும், ஓடத்திலும், சில சமயம் நடந்தும் காட்டூர் வந்து சேர்ந்திருந்தோம். குதிரை வாங்கக் காசில்லை என்பது வழுதியின் விளக்கம். ஆனால் சென்றவிடமெல்லாம் பரத்தையர் சமூகத்திற்கு அபரிமிதமாகவே அவனுடைய பங்களிப்பு இருந்தது.

துயர்களில் இருந்து மீட்பு – மிஹாய் சீக்சென்ட்மிஹாயி

இது ஒரு செயலை முழு கவனத்துடன் வேறு சிந்தனைகளே இல்லாது செய்யும் போது உருவாகக் கூடிய ஒரு ஆனந்த நிலை. ஒவ்வொருவருமே இந்த நிலையை ஏதாவது ஒரு தருணத்தில் உணர்ந்திருப்போம். ஒரு வேலையில் மூழ்கி இருக்கும்போது நேரம் போவதே தெரியாமல் இருப்பது, மற்றும் அந்த வேலையை முடிக்கும்போது வரும் உற்சாகம் போன்றவை. கலைஞர்கள், ஓவியர்கள்,அறுவை சிகிச்சை நிபுணர்கள், மலையேறிகள்,விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் இந்த நிலையை அதிகமும் அடைகின்றனர் என்கிறார் மிஹாய்.

ஹிக்விட்டா

ஃபாதர் கீவர்கீஸ் மற்ற கோல்கீப்பர்களை ஒதுக்கிவிட்டு ஹிக்விட்டாவை மட்டும் கவனிக்கத் தொடங்கியது அவன் பெனல்டி கிக்கை எதிர்கொள்வதை முதன் முதலில் பார்த்தபோதுதான். இரண்டு கைகளையும் காற்றில் வீசி, ஒரு அர்க்கெஸ்ட்ரா கண்டக்டர் மாதிரி, பிறைபோல வளைந்து கிடக்கும் ஸ்டேடியத்தில் பார்வையாளருக்காக கேட்கமுடியாத சங்கீதத்தின் உச்சஸ்தாயிகளை ஹிக்விட்டா சிருஷ்டித்தான். பந்தை உதைக்க நிற்கும் வீரர்களுக்கு அவனுடைய வாத்ய கோஷ்டியில் முதல் வயலின்காரனின் முக்கியத்துவம் மட்டுமே இருந்தது. கடைசியில் ஒருநாள் அது நிகழ்ந்துவிட்டது.

கவிதைகள்

அந்த நாளை
அந்த கணத்துடன்
மடித்து வைத்திருந்தேன்,
ஒரு பாடலுக்குள். – அது
இனிய நினைவுகளைப் போல
பொலிந்துகொண்டிருந்த
ஜன்னலருகே நின்றிருந்தது.

மகரந்தம்

திராட்சைத் தோட்டங்களில் இருந்து உயர்தரத் திராட்சைகளைத் திருடுகிறார்கள். இவை மிக உயர்தர மது தயாரிக்கவென அரும்பாடுபட்டு வளர்க்கப்படுபவை. தவிர தேன் கூடுகளைத் திருடுகிறார்கள். அது தேனுக்காகவா? இல்லை. தேன் கூடுகளில் உள்ள தேனீக்களை அமெரிக்காவில் வாடகைக்கு விடுவார்கள். பழத் தோட்டங்களில் மகரந்தச் சேர்க்கை இல்லாது மரங்களில் பழங்கள் விளையாதாமே, அதற்கு தேனீக்கள் தேவை.

[குறுநாவல்]ஒற்றாடல் – பகுதி 2

வயலூருக்கு அடுத்து உள்ள சிறு படைவீட்டை அவன் வென்றான் என்று சொன்னார்கள். எனக்குப் பெரும் சந்தேகம் கிளம்பியது. பல நாட்களுக்குப் பின்னால், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்தப் படை வீட்டைப் போய்ப் பார்த்தேன். அதன் பிளந்த சுவர்களுயும், உள்ளே இருந்த இடிபாடுகளும் உண்மையை உடனே எனக்கு உணர்த்தின. சுக்ரேசுவரன் நரசிம்மாஸ்திரத்தை போர்க்களத்தில் பயன்படுத்தத் தொடங்கி விட்டான் என்று எனக்குப் புரிந்தது. இந்த ஆயுதத்தின் முன்னால் யாரும் நிற்க முடியாது என்பது எனக்குத் தெரியும். சொல்ல முடியாத துக்கம் என்னை ஆட்கொண்டது.

சி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத வாமனாவதாரம் – பகுதி 5

இந்த சூழல் மாற்றமெல்லாம் 12 ஆண்டுகள் விடாப்பிடியாக சில நூறு பிரதிகளுக்குள் சுருங்கி விட்ட ஒரு எளிமையிலும் எளிய முன்னுதாரணம் ஏதுமற்ற ஒரு பத்திரிகையின் விளைச்சல்கள். அது கொணர்ந்த மாற்றங்கள். இன்று மரபுக் கவிதை சென்ற இடம் தெரியவில்லை. இன்று மரபுக் கவிதையை கருணாநிதியும் மறந்தாயிற்று. வைரமுத்து, அப்துல் ரஹ்மான், கனிமொழி எல்லாருமே மறந்தாயிற்று.

சுவாமி விவேகானந்தர் – 150 வருடங்கள்

சென்ற 12-ஆம் தேதி (12-1-2013) அன்று சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்தநாளாகும். விவேகானந்தர் குறித்ததொரு அரிய ஆவணப்படத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.

அகச்சிவப்பு ஒளிப்படங்கள்

David Keochkerian என்பவர் எடுத்திருக்கும் அசாத்தியமான வண்ணச்சேர்க்கையை வெளிப்படுத்திய அகச்சிவப்பு ஒளிப்படங்களின் தொகுப்பை ஸ்லேட் இணைய இதழ் வெளியிட்டிருக்கிறது. அவற்றை இங்கே பார்க்கலாம்.