பாடலின் மைய மெலடிக்கு இணையான முக்கியத்துவத்தை பாஸ்கிடாருக்குக் கொடுத்தார் இளையராஜா. இத்தனைக்கும் பாடல்களில் பாஸ்கிடாரின் உபயோகத்தைக் கவனித்துக் கேட்டு ரசிப்பவர்கள் வெகு சொற்பமானவர்களே. இன்று இணையதளங்களில் கிடார் வாசிக்கத்தெரிந்தவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னதாலும், ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெறும் பல இசைக்கலைஞர்கள் வெகுவாகப் பரிந்துரைத்ததாலுமே ஓரளவுக்கு இளையராஜாவின் பாஸ்கிடார் பகுதிகளைப் பலர் கவனிக்க ஆரம்பிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் இன்னும் வெளியே தெரியாமல் ஒளிந்திருக்கும் பாஸ்கிடார் பகுதிகளுக்குக் கணக்கேயில்லை.
Category: இதழ்-79
நிசப்தத்தில் பிறந்த இசை
மண்ணில் புரட்டியெடுக்கப்படும் காந்தத் துண்டு மற்ற அனைத்தையும் உதறி இரும்புத் தூசியை மட்டும் உடலெங்கும் அப்பியெடுத்துக் கொண்டு வருவது போல, இரைச்சலான ஓசைகள் மிகுந்த புற உலகில் இருந்து இனிய இசைக்கான தூய ஒலிக்குறிப்புக்களை மட்டும் தனியாகப் பிரித்து எடுக்கும் நுண்மையான செவித் திறன் கொண்ட குர்ஷித்தின் இசை எப்படி நிசப்தத்தில் இருந்து பிறந்த இசையாக இருக்க முடியும்?
பலாத்கார விளையாட்டு
ஒருபுறம் குழந்தைகள் விளையாடும் குரூர விளையாட்டுக்கள், மற்றொரு புறம் அவர்களே வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் விளையாடக் கூடிய ஆபாச விளையாட்டுக்கள். இதன் இணைகோடு போல, சக மாணவியிடம் தோழமையுடன் பேசுவதையே கள்ளத்தனமாக யாரும் பார்க்காதபோது செய்ய வேண்டிய நிர்பந்தம், என சிறுவர்களையும் இளைஞர்களையும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறோம். இந்தியாவில் மட்டும் வருடத்தில் ஏறக்குறைய இரண்டரை லட்சம் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என புள்ளிவிவரம் தருகிறார்கள். கணக்கில் வராமல் இதுபோன்ற பத்து மடங்கு அதிக அளவில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு மன உளைச்சலில் வாழ்வார்கள் என்பதுதான் நிதர்சனம். இதோ சென்ற வாரம் டெல்லியில் நடந்த பலாத்காரத்தை இந்தியாவே கூர்ந்து கவனிக்கிறது. ஜனாதிபதி மாளிகை முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக நீதிகேட்டு போராட்டம் நடத்துகிறார்கள். அந்த சகோதரியைப் பற்றிய தற்போதைய நிலவரங்களை நாளேடுகளும் தொடர்ந்து பிரசுரம் செய்து வருகின்றன.
கவிதையும், கருணையும் – தேவதேவனின் படைப்புலகம்
தனிமனிதன் தன்னை மையமாகக் கொண்டு உலகை மதிப்பிடும்போது உண்டாகும் ஏமாற்றம், அவநம்பிக்கை, உளவியல் நெருக்கடி அதனால் ஏற்படும் துக்கம் மற்றும் இழப்புணர்வு போன்றவை நவீனத்துவ ஆக்கங்களின் சில பொதுப் பண்புகள். இன்றளவும் தமிழ்ப்புதுக் கவிதைகளில் இப்பண்புகளை பேரளவு காணலாம் ஆனால் தேவதேவனின் கவிதைகள் இத்தன்மைகளினின்றும் வெகுவாக மாறுபட்டவை.
கணிதமேதை
ராமானுஜன் மையச் சதுரம், பையின் மதிப்பைக் கண்டறிதல், எண்ணின் பிரிவினைகள், முடிவில்லா தொடர்கள் என பல பிரிவுகளில் தன் ஆராய்ச்சி முடிவுகளை கொடுத்துச் சென்றுள்ளார். அவரின் இந்த 126 பிறந்த நாளில் அவரை இந்தியரும், தமிழரும் இன்னும் நினைவு வைத்திருப்பதைப் பற்றி நாம் மகிழ்ச்சி கொள்ளலாம்.
இரு ராஜஸ்தானி கவிதைகள்
வேப்பமரம் பேசாமலிருக்கிறது
அது துளிர்க்கிறது
வளர்கிறது
பூக்கிறது
பழங்களால் நிறைகிறது
காய்ந்து போகிறது
எக்ஸிஸ்டென்சலிசமும் எமனின் அழைப்பும்
எழுத்தாளன் என்பவன் களவும் கற்று மறக்க வேண்டும். வாழ்வின் அத்தனை சூழ்நிலைகளையும் அனுபவித்து உணர வேண்டும் என்று ஆசைப்பட்டோம். பாரதி தொடங்கி ஜி.நாகராஜன் வரை எல்லா ஆளுமைகளின் வாழ்வனுபவங்களும் எங்களுக்கு பொறாமையூட்டின. அது மட்டுமல்ல அப்போது எதை எழுதினாலும் இது உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கிறதா நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? என்றெல்லாம் கேள்விக்கணைகளை எதிர் கொள்ள வேண்டியதிருந்தது.
தூக்கி எறியப்படும் தூக்குக்கயிறுகள்
பலவித மின்னணு உபகரணங்கள் புழக்கத்தில் வந்துவிட்டன. கைபேசியின் வசீகரம் மக்களை அடைந்த அளவிற்கு அதன் பயன்பாட்டு முறைகள் மக்களை அடையவில்லை. இன்னும் சொல்லப் போனால் எப்படி அதன் கழிவுகளைக் கையாளுவது என்று தெரியாமலேயே இந்தியச் சந்தைக்குள் இவை வந்துவிட்டன. ஒரு கைபேசியோ, மின்கலமோ அல்லது மின்னணு உதிரிபாகங்களோ உபயோகமற்றுப் போகும்போது அதனை சாதாரணக் குப்பையுடன் போடக்கூடாது. இவைகள் குறிப்பிட்ட ஈரப்பதத்திலோ, வெப்பத்திலோ எளிதில் விடத்தைக் கக்கும் அபாயம் கொண்டவை.
வீழ்த்தப்பட்ட வரலாறு: தமிழ்மகனின் வெட்டுப்புலி
ஒரு நேர்மையான, மேலான இலக்கியப் படைப்பின் பணி என்பது காலங்காலமாக முன்வைக்கப்படுகிற வரலாற்றின் உள் அடுக்குகளில் மறைந்து கிடக்கும் உண்மைகளைக் குறித்த தேடல்தான். இதுவரையில் அறியப்படாத உண்மைகளின் மீது வெளிச்சம் பாய்ச்சுவதே அதன் இலக்காக இருக்கும். ‘வெட்டுப்புலி‘ கதையின் வேர்களை நோக்கி மிக வலுவாக நகரும் ஒரு சரடு உண்மைக்கு மிக அருகில் சென்றுள்ளது என்பதை முன்னுரையில் வாசக சுதந்திரத்திற்கு விடப்பட்டுள்ள பகுதியிலிருந்து நம்மால் உத்தேசிக்க முடிகிறது.
பாரதியின் ஆறிலொரு பங்கு – தமிழின் முதல் சிறுகதை
இந்தக் கதையை பாரதி எழுதிய காலகட்டத்தில் அவர் தாகூரின் கதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார், இதன் தாக்கத்தில் எழுதப்பட்ட கதையே “ஆறில் ஒரு பங்கு” என்று குறிப்பிடும் செல்லப்பா, இந்தக் கதையின் தனித்தன்மைகளை நிறுவும் ஆய்வுக் கட்டுரையாக இதை வடிவமைத்திருக்கிறார். மிக நீண்ட கட்டுரையாதலின் சுருக்கித் தருகிறேன்.
கவிமொழியைக் கைமாற்ற முடியுமா? டெப்ரா ஏய்கர் கவிதையை முன்வைத்து…
கவிதை மொழிபெயர்ப்பு இன்னும் சங்கடமானது. கட்டுரைகளிலும், கதைகளிலும் அதன் படைப்பாளி சொல்ல வருவதை புரிந்துகொள்ள நமக்குக் கிடைக்கும் ஒரு விரிவும், பரப்பும், கவிதையில் இல்லை. வெகுசில வரிகளிலேயே சொல்லவருவதை சொல்லியும் சொல்லாமலும் குறிப்பது கவிதை. இதனாலேயே கவிதையை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியில் சொல்வது இயலாத விஷயம் என்று வாதிடுபவர்கள் உண்டு.
விஞ்ஞான முட்டிமோதல் – தொடர்கிறது
எலெக்ட்ரான் மிகவும் சன்னமான துகள். எவ்வளவு சன்னம் என்று விளக்க, ஒரு கிலோ எடையுள்ள சர்க்கரைப் பை ஒன்றை எண்ணிப் பாருங்கள். ஒன்றரைக் கோடி பூமிகளுடைய எடையுடன் ஒப்பிட்டால், சர்க்கரைப் பை எவ்வளவு சன்னமானது என்று எண்ணிப் பாருங்கள். ஒரு கிலோ சர்க்கரைப் பையுடன் ஒப்பிட்டால் எலெக்ட்ரான் அதே அளவு சன்னமானது! இதைச் சரியாகப் புரிந்து கொண்டு, சில பல கோடி எலெக்ட்ரான்களை வேண்டியபடி நாம் கட்டுப்படுத்தத் தெரிந்து கொண்டதன் விளைவு, நீங்கள் இக்கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்!
சச்சினுடன் வளர்ந்தோம்
ஸிட்னியில் டெண்டுல்கர் ப்ரெட் லீயை இரக்கமில்லாமல் வருத்திக்கொண்டிருக்கிறார். ஒரு மேலே பறக்கும் கவர் டிரைவ். பின் பந்து வீச்சாளரைத் தாண்டி புல்லட் போல் செல்லும் அடி. லீ ஒரு தெய்வீகமான புன்னகையை உதிர்க்கிறார். டெண்டுல்கர் அசைவில்லாமல் நிற்கிறார். ஜென் துறவி போல, கடந்ததும் வருவதும் பற்றிய சிந்தனையற்று, அந்தக் கணத்தில் அமிழ்ந்து போய்.
கொன்று தீர்க்கும் நுண்ணுயிர்கள் – வரமும், சாபமும்
உலகிலேயே முதல் குழந்தை, முதல் தடவை இப்படிப் பட்ட சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டவளும் இந்தப் பெண். இது புற்று நோய் சிகிச்சையில் மனிதருக்குச் சமீப காலத்தில் கிடைத்து வரும் சில வெற்றிகளின் துவக்கம். இங்கிருந்து மனித குலம் பல வகைப் புற்று நோய்களைத் தோற்கடிக்கும் காலத்துக்கான பாதை தெரியத் துவங்கி இருக்கிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
மும்மணிக்கோவை – இறுதிப் பகுதி
இருபத்தியோரு வயது இளைஞனின் வாக்குமூலம் இது. எனதாச்சரியம், ஒரு வாக்கியத்தில் அவர் கையாளும் கால்புள்ளிகள், அரைப்புள்ளிகள். இன்று அரைப்புள்ளி பயன்படுத்தி எவரும் எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. இலட்சத்துக்கும் பக்கம் ஊதியம் வாங்கும் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் எவரும் இன்று தொல்காப்பியத்தின் எழுத்து-சொல்-பொருள் அதிகாரங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து பத்து சூத்திரங்கள் மனப்பாடமாகச் சொல்வாரா?
இரு இலக்கிய விருதுகள் – 2012
மூத்த படைப்பாளிகளான நாஞ்சில் நாடன் அவர்களும், தேவதேவன் அவர்களும் முறையே கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ஆம் ஆண்டுக்கான இயல் விருதும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதும் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். நாஞ்சில் நாடன், தேவதேவன் இருவருக்கும் சொல்வனம் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. மூத்த படைப்பாளிகளைத் தொடர்ந்து கெளரவித்து வரும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் இரு அமைப்புகளுக்கும் சொல்வனத்தின் வாழ்த்துகள்.
சி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு – பகுதி 4
ராஜராஜ சோழன் விருது ஒரு லக்ஷமோ என்னவோ பெறுமான விருது அதை 20 பேருக்கு ஆளுக்கு ஐயாயிரமாக சமமாக பங்கிட்டுக் கொடுப்பது என்று தஞ்சை பல்கலைக்கழக விருது வழங்குவோர் தீர்மானித்துள்ளது கேட்ட செல்லப்பா, “இதென்ன புது வழக்கம். யாருக்காவது ஒருத்தருக்குக் கொடுங்கள். இல்லையெனில் எனக்கு வேண்டாம் இந்த பரிசு” என்று உதறியவர்.
வாசகர் மறுவினை
நான் இங்கிலாந்தில் பார்த்த கிளப் மாட்சுகளிலும் செம்ஸ்போர்ட் மைதானங்களிலும் இந்த மாதிரி காட்சிகள் ஏராளமாக காணக் கிடைக்கும். கையில் புத்தகங்கள், சூரிய ஒளி க்ரீம்கள் பூசிக்கொண்டு, வழிய வழிய பீர் கோப்பைகள், குடும்பத்துடன் மாட்ச் பார்க்க வருவார்கள். தாத்தாக்களும் பாட்டிகளும் மதிய உணவு இடைவேளை பின் ஆட்டத்தில் அரைக்கண் மூடி… கிரிக்கெட் பார்ப்பது என்பது ஒரு நாள் அனுபவம். இந்த கட்டுரையின் மூலம் சித்தார்த் வைத்தியநாதன் மிகவும் நெருக்கமாகிவிட்டார், அவருக்கு எனது அன்பைத் தெரிவியுங்கள்!
துக்கடா
வீட்டுக்கு வருபவர்கள் குழந்தையை பாட சொல்லி கேட்க “என்னமா பாடறா… இன்னும் கொஞ்ச நாளில் உன்னை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடுவா” என்பதை வெளியே புன்னகையுடன் எதிர்கொண்டாள். கூட அம்மவுடன் சேர்ந்து காத்தால சாதகம் செய்வாள். நிறைய பாட்டு கேட்பாள், என்ன பாடினாலும் ஸ்வரப்படுத்துவாள்.
கவிதைகள்
கால்களும் நிழல்களும்
வலை பின்னி
பந்துதைத்துத் திரிய
நான் மட்டும்
அசைந்தேன், நடந்தேன், ஓடித் தவித்தேன்.
2012-இன் சிறந்த இயற்கைப் படங்கள்
இயற்கையின் பல்வேறு இழைகளைக் காட்டும் அருமையான ஒளிப்படங்களின் அணிவகுப்பு இந்த இணைப்பில்!
பண்டிட் ரவிஷங்கர் (1920 – 2012)
சிதார் மேதை பண்டிட் ரவிசங்கர் இவ்வாண்டு டிசம்பர் 11ம் தேதியன்று தனது 92வது வயதில் காலமானார். இந்திய செவ்வியல் இசையை உலக அளவில் எடுத்துச் சென்று அதன் நவீன பரிமாணங்களும் வெளிப்படக் காரணமாக இருந்த இந்த தலைசிறந்த இசைக்கலைஞரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பெருஞ்சோகம். பண்டிட் ரவிசங்கரின் மறைவுக்கு “பண்டிட் ரவிஷங்கர் (1920 – 2012)”
மகரந்தம்
சீனாவில் இருந்து தேன் அமெரிக்காவுக்குக் கடத்தப்படுகிறதாம். அதுவும் அதை இந்தியாவிலிருந்து கொணரப்படும் தேன் என்று பொருளின் மூலத்தை மாற்றி, மறு முத்திரையிட்டு, கடத்தப்படுகிறது. எதற்கு, தேனை திறந்த சந்தையில் விற்கத்தான் அனுமதி இருக்கிறதே, இதிலென்ன கடத்தல்? சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா இப்போது வரி விதிக்கிறது. இறக்குமதி வரியைக் கொடுக்க அமெரிக்க வியாபாரிகளும் தயாரில்லை, ஏற்றுமதியின் விலையை இப்படி அதிகரிக்க சீனர்களும் தயாரில்லை. விளைவு இந்தியாதானே ஏமாளி, அதன் பெயரைப் பயன்படுத்தி இந்தியாவின் தேனாக அமெரிக்கச் சந்தையில் சீனத் தேனை விற்க ஏற்பாடு.
ரசிகன்
மங்களம் பாடி எழுந்த போது மிருதங்கத்தான் வயலினானைப் பார்த்துக் கண்ணடிப்பது தெரிந்தது. கேலி செய்கிறான்! அடி அடி யென்று மிருதங்கத்தை விளாசிவிட்டு என்னையே கிண்டல் செய்கிறான். கர்நாடகக் கச்சேரி உலகின் முதல் உண்மை எனக்குப் புரிந்தது. கச்சேரி தோற்றால் பழி பாடியவன் பேரில்தான்.
ஆறில் ஒரு பங்கு
வஸந்த காலம், நிலாப்பொழுது, நள்ளிரவு நேரம். புரசைவாக்கம் முழுமையும் நித்திரையிலிருந்தது. விழித்திருந்த ஜீவன்கள் இரண்டே. ஒன்று நான்; மற்றொன்று அவள். இன்பமான காற்று வீசிக் கொண்டிருந்தது. மேல் மாடத்தில் மீனாம்பாளுடைய அறையிலிருந்து, முறைப்படி வீணைத் தொனி கேட்டது. ஆனால் வழக்கப்படி குறட்டை கேட்கவில்லை. ராவ்பகதூர் குறட்டை மாமா ஊரிலில்லை. வெளியே ஒரு கிராமத்துக்குப் போயிருந்தார். நான் நிலா முற்றத்தில் எனது கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தேன்.