ஆங்கிலம் தெரியாத ஒருவர் படும் சிரமங்களை வைத்து முழுநீளப் படமாக வெளிவந்திருக்கிறது இங்க்லீஷ் விங்க்லிஷ். தெற்கில் பெரும் வெற்றி பெற்று வடக்கில் வாகை சூடிய நடிகை ஸ்ரீதேவி பல வருடங்களுக்குப் பின்னர் நடித்திருக்கும் படம், சீனி கம் மற்றும் பா படங்கள் மூலம் ஹிந்தியில் அழுத்தமாக முத்திரை பதித்த இயக்குனர் பால்கியின் தயாரிப்பு என்று நிறைய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கிறது படம்.
Category: இதழ்-77
தேவனின் கோயில்
‘அறுவடை நாள்’ திரைப்படத்தின் ‘தேவனின் கோயில்’ பாடல், வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து என்னைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது என்று சொன்னால் அது கொஞ்சமும் மிகையில்லை. நானாக அந்தப் பாடலைக் கேட்பது போக, டீச்சரைப் போல யாராவது ஒருவர் தேவனின் கோயிலுக்குள் இழுத்துச் சென்று விடுவர். சிலசமயங்களில் காரணமேயில்லாமல் சில பாடல்கள், நாள் முழுதும் நம் மனதைச் சுற்றி வருவது போல , ஒருநாள் ‘தேவனின் கோயில்’ பாடலைத் தொடர்ந்து நாள்முழுக்க முணுமுணுத்துக் கொண்டேயிருந்தேன்.
சி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு – பகுதி 2
ஒரு பல்கலைக்கழக பேராசிரியர், நாவலாசிரியர், சிறுகதைக்காரர் தில்லி எழுத்தாளர் கூட்டத்தில், “ஆசிரியப்பா, கலிப்பா போல இப்பொது ஒரு புது பாவகை தோன்றியுள்ளது. அது செல்லப்பா” என்றார். அவர் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது. அவர் கூட்டத்துக்கு தலைமை வகித்தவர். அவர் யாப்பிலக்கணம் படித்திருப்பார். பல்கலைக் கழகத்தில் வகுப்பும் எடுப்பார் தானே. சங்க கால அகவல் தொடங்கி புரட்சிக் கவி என்று புகழப்படும் பாரதி தாசனின் எண் சீர் விருத்தம் வரை மாற்றங்கள் வருமானால் அதை அவர் கேள்வி இல்லாது ஏற்றுக் கொள்வாரானால், இன்று ஏன் இன்னொரு மாற்றம் பாவகையில் நிகழக் கூடாது என்று எந்த தமிழ் பேராசிரியரும் யோசிக்கவில்லை.
சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – இறுதிப்பகுதி
திரு.நாஞ்சில் நாடன் சொல்வனத்தில் எழுதி வரும் ‘பனுவல் போற்றுதும்’ தொடரில் ‘சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்களி’ன் இறுதிப்பகுதி இது. நவீன இலக்கியம், மரபிலக்கியத்தின் அறியப்படாத பல முக்கியமான ஆக்கங்கள், தாவரங்கள், மீன்கள் குறித்த முக்கியமான புத்தகங்கள் எனப் பல்வேறு பட்ட நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்திய இத்தொடரின் முதல் பகுதி, தமிழினி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்துள்ளது.
[…]
‘பனுவல் போற்றுதும்’ தலைப்பில் வேறு வகையான கட்டுரைகளை நான் தொடர்ந்து எழுதுவேன். படைப்பு இலக்கியமும் கை பற்றி இழுக்கின்றது. உங்கள் ஆதரவுடன் எல்லாம் சாத்தியமாகும். தமிழ் எமக்கு வாழ்நாளும் உடல்நலமும் வசதியும் தரும்!
– நாஞ்சில் நாடன்
அறிவியலும், சந்தை அறிவியலும்
என்னதான் பொதுமக்களிடம், முன்பு எப்போதுமில்லாத வகையில், உடனுக்குடன் பல அறிவியல் தளங்களில் நடக்கும் ஆராய்ச்சி முடிவுகளைக் கொண்டு சேர்க்கிறது என்றாலும், இவ்வகை மிகைகளும் சார்ந்த மீள்-மிகைகளும் சந்தை அறிவியலின் முக்கியமான இடர். கைசொடுக்கும் நேரத்தில் ஒற்றை வரிச் செய்தி மிகைகளை வாசித்துத் ‘தெளிந்து’ தீர்க்கதரிசன மதிப்பீடுகளை கிடைக்குமிடத்தில் (இணையத்தில்) அரைபண்டித அறைகூவலாய் அழற்றுவதும் தவிர்க்க இயலாது.
கானுயிர் புகைப்படங்கள்
BBC நிறுவனமும் தேசிய வரலாற்று அருங்காட்சியகமும் கானுயிர் புகைப்படங்களுக்கான ஒரு சர்வதேச அளவிலான ஒரு போட்டியை அறிவித்தது. 98 நாடுகளிலிருந்து 48,000 புகைப்படங்கள் குவிந்தன. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 10 புகைப்படங்கள் இங்கே.
நொண்டிக் குழந்தை
ஓடி ஓடி விளையாடின குழந்தையின் விளையாட்டில் ஈடுபட்ட ஞானம் குதூகலமடைந்தான். துள்ளிக் குதிக்கும் பாதங்களைப் பார்த்துப் பரவசமடைந்து கொண்டே கண்களைத் தன் பாதத்தின் பக்கம் திருப்புவான். அவனுக்கே புரியாத ஒருவித சந்தேகம், தெளிந்து நிலைக்காத ஒரு வேதனை நிழல்போலத் தோன்றும். அடுத்த க்ஷணம் அந்த நினைப்பு அழிந்து விளையாட்டுக் கவனம் வந்துவிடும்.
பெட்டிக்கடை நாரணன்
நாரணன் பெட்டிக்கடையின்
நாமமே பரவலாச்சு.
இன்று கடன் இல்லை என்ற
எச்சரிக்கை எதிரே இருக்கும்
என் பேச்சு தேனாய்ச்சொட்டும்
குழைவிலே வாங்குவோர்கள்
தீபாவளி
தீபாவளி – நன்மைகளின் எழுச்சியும் திருவிழா. இந்திய கலாச்சார ஒற்றுமையின் சின்னங்களில் ஒன்று. வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மலைகள்
அந்த மலைகள் என்னை என்னவோ செய்தன. தினம் தினம் செய்து கொண்டிருக்கின்றன. அவைகளை தூரத்திலிருந்து பார்க்கும் போதெல்லாம் ராம லட்சுமணர்கள் மாதிரி, இரட்டையானைக் குட்டிகள் மாதிரி, வானை முட்டிக் கொண்டு நிற்கும் காளைக் கொம்புகள் மாதிரி இன்னும் என்னவெல்லாமோ தோன்றி மறையும். சில சமயங்களில் அவைகள் மனதில் விபரீதமான பாலுணர்ச்சிகளைக் கிளறி விடுவதையும் நான் உணர்கிறேன்.
பின்தொடரும் காலம்
பந்தி முடிந்து கைகழுவியபோது குறுக்கே வந்த அவரை மடக்கி முருகானந்தம் எங்கே என நான் நீண்டநேரமாக கேட்க நினைத்திருந்ததைக் கேட்டுவிட்டேன். ஒரு சிறுயோசனைக்குப் பின், அழைத்துச் செல்கிறேன் என்றார். அழைத்து வருகிறேன் என்று சொல்லாமல் அழைத்துச் செல்கிறேன் எனச் சொன்னதில் எழுந்த குழப்பம் கல்யாணம் முடியும் வரையில் இருந்தது.
ராஜேஷ் கன்னா
ராஜேஷ் கன்னாவை பள்ளி தொடங்கி இரண்டு மாதங்கள் கழித்துத் தான் நான் முதலில் கவனித்தேன். இத்தனைக்கும் எனக்கு உடனே முன்னால் இருந்த வரிசையில் தான் இருந்தான். மூன்று நாற்காலிகளும் மூன்று பெஞ்சுகளுமாக ஒவ்வொரு வரிசையும் இருக்கும். நான் நடைபாதையை ஒட்டிய நாற்காலி என்றால், அவன் என் முன் வரிசையில் சுவரை ஒட்டிய நாற்காலி. எங்கள் வரிசைகளே வகுப்பின் ஓரத்தில் இருந்தன. அவனுக்கும் இரு பெஞ்சுகள் முன்னாடி தான் ஜன்னல் இருந்தது என்றாலும், அங்கு பார்க்கும்போது கூட அவனை கவனித்தது இல்லை.
கிருஸ்த்மஸுக்குப் பிறகு மூன்றாவது நாள்
பையன் ஓவரால் அணிந்திருந்தான். அவனுடைய அப்பாவுடைய கட்டம் போட்ட மேல் அங்கி (கோட்) ஒன்றையும் போட்டிருந்தான். அவன் அப்பா வளர்ந்து அந்தக் கோட்டைப் போட முடியாமல் போன பின்பு இவனுக்கு வந்திருக்க வேண்டும், அது மட்டும் சரியாகப் பொருந்தினால் இவனுக்கு நல்ல மேல் கோட்டாக இருந்திருக்கும். அதன் கைகள் பையனுக்காக வெட்டப்பட்டிருந்தன, ஆனால் வேறேதும் செய்யப்படவில்லை.
உதயன் வாஜ்பாயி – அறிமுகமும், கவிதைகளும்
1960-இல் பிறந்த உதயன் வாஜ்பாய், ஒரு இந்தி கவிஞர், கட்டுரையாளர், சிறுகதை மற்றும் திரைக்கதை ஆசிரியர். இதுவரை இரண்டு கவிதைத் தொகுதிகளும், ஒரு சிறுகதைத் தொகுப்பும், இன்னும் பலவகையான ஆக்கங்களும்(அதில் மீட்டெடுக்கப்பட்ட நாட்டார்கதைகளின் தொகுப்பும், இயக்குனர் மணி கவுல்-உடனான நீண்ட உரையாடல்கள் தொகுதியும் அடங்கும்) வெளியிட்டிருக்கிறார். அவருடைய படைப்புகள் வங்காளம், தமிழ், ஒரியா, கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்சு, போலிஷ் மற்றும் பல்கேரிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஹிரோஷிமா, என் காதலே! – பகுதி 2 – பித்தும் போதமும்
இசையும், குரலும், ஒலிகளும் ஒரு இணைசித்திரமாகத் திரையைப் பின்தொடர்கின்றன. எடுத்துக்காட்டாக, அவள் தேனீர் விடுதியில் அவனுடன் தன் நுவெர்ஸ் கதையைப் பகிர்ந்து கொள்ளும்பொழுது இயக்குனர் பின்னணி இசையைக் கொண்டு காலத்தோடும் இடத்தோடும் விளையாடுகிறார். திரைக்கு வெளியிலிருந்து செயற்கையாய் ஒலிப்பது போல தோன்றும் இசையை(non-diegetic), ஒருவர் விடுதியில் இசைப்பெட்டியில் பணம் செலுத்தி ஒலிப்பதாய் இடையில் செருகுவார் (diegetic*). அவ்விசை, விடுதியின் குரல்கள், ஜன்னல் வழியே தெரியும் நதியிலிருந்து ஒலிக்கும் தவளைகள் எல்லாம் கலந்தொலிக்க, அவள் தன் கதையை ஆரம்பிக்கிறாள்.
இரவின் திவலைகள்
இதோ உடன் நடக்கும் உன் முகம்
நான் முன்பு அறியாதது,
இப்பாதையில் என்னுடன்
எது வரையிலும்
உடன்வருவாய் என்றும் தெரியாது
மகரந்தம்
கருத்துக் கட்டுப்பாடு (சென்ஸார்ஷிப்) கடுமையாய் உள்ள இரான் போன்ற நாடுகளிலும் இரானியத் தயாரிப்பாளர்கள் வேறு நாடுகளில் திரைப்படங்களை உருவாக்கி உலக அரங்கில் அவை காட்டப்படுவது பல வருடங்களாய் நடந்து வருகிறது. சமுதாய, அரசியல் மற்றும் கருத்து மாற்றங்களுக்கு ஒரு கருவியாய் தயாரிக்கப்படும் இத்தகைய திரைப்படங்கள் உலகப்பட விழாக்களில் பெரிதும் விவாதிக்கப்படுகின்றன.
வாசகர் மறுவினை
நீங்கள் எடுத்துப் பேசும் பொருள் தமிழ் மொழியில் அதிகப் புழக்கம் இல்லாதது. எல்லா பொருளியச் சிந்தனைகளையும் ஆங்கிலத்தில்தானே நாம் வெளிப்படுத்துகிறோம்! ஆனால் இதனை மிக அழகாகத் தமிழில் கையாண்டுள்ளீர்கள். பல புதிய மொழிபெயர்ப்புக்களைக் கற்றுக்கொண்டேன். “முதலாளித்துவம்” என்ற பயனீடு பொருத்தமற்றது என முன்பே அறிந்து கொண்டு “மூலதனத்துவம்” எனப் பயன்படுத்தி வந்தேன். உங்கள் “முதலியம்” மேலும் பொருத்தம்.
பாலையும், வாழையும் – முகப்புரை
சாமிநாதன் ஒரு ‘புரொவகேடிவ்’ விமர்சகர். ஆரம்பத்தில் சொன்னேனே, இந்தக் கட்டுரைகளில் பாலையின் உஷ்ணம் இருக்கிறது. நம்மைச் சுடவும் செய்கிறது. கசப்பான உண்மைகளை நாம் விழுங்க வேண்டி இருக்கிறது. தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் இரண்டிலும் மற்ற கலைத்துறைகளிலும் ஆழ்ந்த அக்கறை எடுத்து அவற்றின் போக்கு, நிலை, சாதனை பற்றி சுய விமர்சனம் செய்து, உரிமையுடன் குந்தகமானவற்றை கடுமையாகச் சாடும் சாமிநாதனது பேனா வரிகள். ‘புலிக்கு தன் காடு பிறகாடு வித்யாசம் கிடையாது’ என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும் கூர்மையிலே யார் யாருக்கோ, எங்கெங்கெல்லாமோ சுடக்கூடும்.
கலாமோகினியின் கடைக்கண்பார்வை
சிலசமயம் வண்ணதாசனின் கலைக்கமுடியாத ஒப்பனைகளைப் படித்து விட்டு அதன் அதிர்வுகளிலிருந்து மீளுமுன்னே கதை எழுதிப் பார்ப்பதுண்டு. அப்படியே வண்ணதாசன் கதை மாதிரியே இருக்கும். வண்ணநிலவனின் எஸ்தர் படித்து விட்டு அதன் உணர்ச்சி வேகம் அடங்குமுன்னே கதை எழுதுவோம். அப்படியே வண்ணநிலவன் கதை மாதிரியே இருக்கும்.