மூத்தோர்

வழக்கமாக தி.க.சி தாத்தாவைப் பார்க்கப் போகும் போது அவர் படித்துக் கொண்டிருந்தால் அருகில் சென்று, ‘தாத்தா’ என்பேன். எழுதிக் கொண்டிருந்தாரானால், அவர் எழுதி முடிக்கும் வரையிலும் சற்றுத் தள்ளியே நின்று கொள்வேன். அப்படி ஒருமுறை, வாசலில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த தாத்தா நிமிர்ந்து பார்க்கும் வரை, அந்த பெரிய வளவு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். கடிதம் எழுதிக் கொண்டிருந்தார் என்பது தெரிந்தது.

வீணையும் மீசையும்

வீணையைத் தவில் போலவும், தவிலை மிருதங்கம் போலவும், வாய்ப்பாட்டை நாகஸ்வரம் போலவும் வாசிக்கிறவர்கள் சிலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஒரு பிரபல வைணிகர் பல துறைகளில் தேர்ந்தவர். ஆனால் அவர் வீணையைக் கேட்கும்போது மீசை முளைத்த பெண் பிள்ளையைப் பார்ப்பது போலிருக்கிறது. ஆண்களுக்குச் சரிநிகர்தான் பெண்களும். அவர்களும் குதிரை ஏறலாம். ஆனால் மீசை முளைத்தாலோ வளர்ந்தாலோ நமக்கு அருவருப்பு வருகிறது; பயம் கூட உண்டாகிறது.

சி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு

எழுத்து தொடங்கிய போது பல லட்சங்கள் என வாசகர்களைக் கொண்டிருந்த பத்திரிகைகளுக்கு எதிரான ஒரு குரல், “எழுத்து 2000 பிரதிகளுக்கு மேல் அச்சிடப்படமாட்டாது” என்று பிரகடனப் படுத்திக்கொண்டு வந்த முதல் இதழே 700 பேருக்கு மேல் சென்றடையவில்லை. 104 இதழ்களோ என்னவோ வந்த எழுத்துவின் கடைசி இதழ் 120 பேருக்கு மேல் சென்றடையவில்லை. ஆனால் அதற்குள் அது ஒரு விமர்சன மரபை தமிழ் மண்ணில் ஸ்தாபித்துவிட்டது. தமிழ்க்கவிதையிலும் ஒரு புதிய மரபை ஸ்தாபித்தது. சிறு பத்திரிகை என்ற மரபையும் ஸ்தாபித்தது. இதையெல்லாம் கேட்க ஆச்சரியமாக இருக்கும். எழுத்து ஆரம்பித்த காலத்தில் இதையெல்லாம் அது சாதிக்கும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி – 16

ஏதோ ஒரு உந்துதலில் ‘செந்தமிழ் காப்பியங்கள்’ என்றொரு கட்டுரை எழுதி, சிறு காப்பியங்களை விட்டு வைப்பானேன் என்று, ‘ஐஞ்சிறு காப்பியங்கள்’ எழுதி, அதுபோல் சிற்றிலக்கியங்கள் பற்றியும் எழுதத் துணிய, அது நாஞ்சில் பிடித்த புலிவால் ஆயிற்று. வாலை விட்டு விட்டால், புலி அடித்துத் தின்றுவிடும் என்பதால், வாலை விடாமல், அது இழுத்த இழுப்புக்கு எல்லாம் ஓடிக் கொண்டிருந்தேன். அல்லது ஆங்கிலத்தில் சொல்வது போல, bear hug. அதற்காக ஆயுளுக்கும் வாலைப் பிடித்துக் கறங்கிக் கொண்டிருக்க முடியுமா?

சரக சம்ஹிதை

சரகர் கவிமனமும் உள்ளுணர்வும், தத்துவ நாட்டமும் கொண்ட ஆசான் அதன் காரணமாகவே சரகர் பிற ஆயுர்வேத ஆசான்களிடமிருந்து வேறுபடும் நுட்பமான தருணங்கள் பல உண்டு. சரகர் எனும் சொல் சர எனும் சம்ஸ்க்ருத வேர்சொல்லில் இருந்து உருவானது, சர என்றால் அலைந்து திரிந்தல் (சரியான சொல் நடமாட்டம், வழிதல் ) என பொருள் கொள்ளலாம், நாடெங்கும் தேசாந்திரியாக அலைந்து திரிந்ததால் அமைந்த காரணப்பெயர்தான் சரகர்.

விழி வழி மொழி, மொழி வழி விழி

திரு.அரவக்கோன் எழுதி சொல்வனத்தில் வெளியாகிய ‘20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்’ என்ற ஓவியத்தொடர் புத்தக வடிவம் பெறுகிறது. சதுரம் பதிப்பகம் வெளியீடாக விரைவில் வெளியாகவிருக்கும் இப்புத்தகத்துக்கு க்ருஷாங்கினி எழுதியிருக்கும் முன்னுரையை இங்கே வழங்குகிறோம். திரு.அரவக்கோன் அவர்களுக்கு சொல்வனத்தின் வாழ்த்துகள்.

ஹிரோஷிமா, என் காதலே!

இப்படத்தில் இறந்த காலமும் நிகழ் காலமும் ஒன்றினுள் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. நினைவுகளுக்கும் அனுபவங்களுக்கும் தனிச் சொந்தம் கொண்டாடத் துடிப்பவர்களே அதைப் பிறர் மீது சுமத்தவும் செய்கின்றனர். அவள் அவனது அனுபவங்களை, ஹிரோஷிமாவின் நினைவுகளைத் தனதாக்கிக் கொள்ள முயல்கிறாள்; ஹிரோஷிமாவின் இறந்தகாலத்தைத் தன் நிகழ்காலமாக அனுபவிக்கிறாள், அந்த அனுபவத்தையே தனது நுவெர்ஸ் அனுபவமாக மொழிபெயர்க்கிறாள்.

ஆயிரம் தெய்வங்கள் – மரக்குதிரையும் ட்ரோஜன் படுகொலையும்

ட்ராய் வெற்றிக்குப்பின் கிரேக்க வீரர்கள் கப்பல்களில் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தனர். கப்பல்கள் யூபோயோ தீவுக்கு வந்தபோது நாப்னையஸ் நள்ளிரவில் தன் நண்பர்களுடன் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தினான். அவற்றில் இருந்த கிரேக்க வீரர்களும் எரிந்து சாம்பலாயினர். ஆனால் மெனலாஸ், அகமெம்னான், ஒடிஸ்ஸஸ் மூவரும் ட்ராயில் தங்கிவிட்டதால் உயிர்தப்பினர். அவர்களை விதி வேறுவிதமாக தண்டித்தது.

பரிசு

பாட்னாவில் இருந்து கமிஷனர் வில்லியம் டெய்லர் துரை ஒவ்வொரு முறை லகிசராய் வரும்போதும் கங்கு சிங்குடன் வேட்டைக்குப் போவது வழக்கம். இருவருக்குமிடையே இருந்த வேட்டை ஆர்வம் ஆழமான நட்பை ஏற்படுத்தியிருந்தது. தேர்ந்த ஒவியராகவும் இருந்த டெய்லர் துரை வரைந்த கங்கு சிங்கின் உருவப்படம் வரவேற்பறையை இன்னும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. டெய்லர் துரையின் முயற்சியால் முங்கேர் நகரின் கமிஷனரின் கீழ் இருந்த லகிசராய் மற்றும் சுற்றியிருக்கும் இருபத்தி ஐந்து கிராமங்களில் வரி வசூலிக்கும் உரிமை கங்கு சிங்கின் குடும்பத்திற்கு கிடைத்தது.

ஒரு மாபெரும் தேடல்

இந்த நூல் பிரமிக்கத்தக்க புள்ளிவிவரங்கள் மற்றும் மேற்கோள்களின் தொகுப்பாக இருக்கிறது. பொதுவாகவே நம் அனைவருக்கும் கடந்துபோன பொற்காலத்தைக் குறித்த ஒரு மயக்கமும் நமக்குப் பின்னால் வருவது ஒரு பேரழிவே என்ற எண்ணமும் உண்டு. இந்த மனநிலையை மிகக் கறாரான புள்ளிவிவரங்களைக் கொண்டு நிராகரிக்கிறது இந்நூல். உதாரணமாக, 1776ல் ஆதாம் ஸ்மித், ஒரு சராசரி ஆங்கிலேயன் பண்ணைத் தொழிலாளி என்றும் அவனது வாழ்க்கைத் தரம் ஒரு ரோமானிய அடிமையின் வாழ்க்கைத் தரத்தைவிட உயர்ந்ததல்ல என்றும் குறிப்பிடுவது இந்நூலில் நினைவு கூரப்படுகிறது.

நாகரஹாவு

அந்த இருபது நிமிடங்களில் பக்கத்து வீட்டில் வேலை நின்று போய் அத்தனை ஆட்களும் இங்கே வேடிக்கை பார்க்க வந்துவிட்டனர். ரோட்டில் போவோரும் இந்தக் கூட்டத்துடன் சேர்ந்துகொள்ள வாசல் முழுவதும் ஒரே கூட்டம். ‘நாகப்பாம்பு இல்லை, சாதா எலி தின்னும் பாம்புதான்’ என்கிறான் ஒருவன். அது படம் எடுத்ததைப் பார்த்த இருவரும் ஐந்து விரல்களையும் அகல் விரித்து அதன் படம் எப்படி இருந்தது என்று விவரித்துக்கொண்டிருந்தார்கள். மறுபடியும் படம் எடுக்குமா என்று ஆசையாய் சிலர் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

மின் எரிபொருளைத் தரும் செயற்கை இலைகள்

ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனம், இந்த இரு செயல்பாடுகளையும் ஒன்றிணைக்க வல்ல மாதிரி ஒன்றினை வடிவமைப்பதில் ஈடுபட்டது. ஓர் குளிர்சாதனப் பெட்டியை விடவும் சற்று உயரமான பெட்டி போன்ற ஒன்று ; ஃபோட்டோ வோல்றிக் கலங்களால் மூடப்பட்டு அதன் உள்ளே ஓர் மின்பகுப்பான் பொருத்தப்பட்டது. இதன் மூலம் பெறப்பட்ட ஹைட்ரஜன் வாயுவை மின்கலத்தால் இயங்கும் கார்களை மீள மின்னேற்றுவதற்குப் பயன்படுத்த அந் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

உள்ளங்கையில் உலகம்

கூகுளின் அபாரமான சேவைகளில் முக்கியமானது கூகுள் எர்த். நினைத்த நேரத்தில் நாம் உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு உலகின் எந்த மூலைக்கும் பறந்து சென்று பார்த்து விட முடிகிறது. ஊர் நினைவு வருகிறதா உடனே மனவேகத்தில் ஊருக்குப் போய் கூகுள் எர்த் மூலமாக நமது தெருக்களில் நடந்து விட்டு வந்து விடலாம். உலகின் பல இடங்களுக்கும் சமீபத்திய செயற்கோள் படங்களை அளிக்கின்றன. சேவையைப் பொருத்து, உடனடியான நேரடியான படங்களை அளிக்கின்றது.

கவிதைகள்

கட்டங்களின் நிறம் அழிந்து
வாழ்க்கைச்சதுரங்கம் கனக்க,
சிகப்பு சாயத்தில் குளித்து
கருப்புமல்லாது வெள்ளையுமல்லாது
தனித்து நிற்கிறாள்
சதுரங்க ராணி.

வாசகர் மறுவினை

இன்று வெளியான சொல்வனத்தில் க.நா.சு. பற்றிய கட்டுரைகள் அனைத்தையும் ஒரே மூச்சில் படித்து விட்டேன். மைத்ரேயன் கட்டுரை படித்தவுடன் என் கண்களில் நீர் வழிந்தது. மிக நன்றாக எழுதி இருக்கிறார். அந்த தஞ்சை பிரகாஷ் மேற்கோள்கள் மிக அருமை. என்ன ஒரு ஆளுமை.

மகரந்தம்

மேதாவிகள், மேதாவிகளாகவே தான் பிறக்கிறார்களா? இல்லை, தாம் வளரும் சூழல், தமக்கு கிடைக்ககூடிய கல்வி அவர்கள் மேதமையைத் தீர்மானிக்கிறதா? மேதைமை அபாரமான படைப்பூக்கமாகவும் இருக்கலாம், ஒருவகை கிறுக்குத்தனமாகவும் இருக்கலாம். இல்லை, ஒருவரது பிறவி பலவீனத்தால் வாய்க்கும் அரிய திறனாகவும் இருக்கலாம். அதற்கென ஒரு பொதுவான சமன்பாடு இருக்கிறதா?

அப்பா

ராதிகாவின் பொறுப்பில் இருந்த ப்ரொஜெக்டில் பெரிய குளறுபடி ஒன்று ஏற்பட்டு அதனால் எங்கள் நிறுவனத்திற்கும் அந்த செல் போன் கம்பனிக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டது. ராதிகா முகம் சில நாட்களுக்கு பேய் அறைந்தது போல் இருந்தது. அந்த தவறுக்கு அவள் இந்தியாவிற்கு மீண்டும் அனுப்பப்படுவாள் என்று பரவலாக பேசப்பட்டது. ராஜ் எங்களுடன் மதிய உணவிற்கு வருவதை நிறுத்தினார். மிகுந்த சோர்வுடன் சென்று கொண்டிருந்த தினங்கள் அவை. குறிப்பாக ராதிகாவிற்கு.

ஒளிவழி ஒழுகும் உலகம்

இயற்கைசக்திகளை தம் அறிவால், ஞானத்தால் தமக்கு சாதகமாய் வளைத்திருப்பதாய் மனிதகுலம் இறுமாந்திருக்கையில், தாவரங்களும், சிறிய பாக்டீரியாக்களும் சூரிய ஒளியை உபயோகித்து இப்பூமியில் உயிரினம் உருவாக எப்படி வழி வகுத்தன, நம் முன்னோர் தோன்ற அவை எப்படி காரணமாய் இருந்தன என்பதை விளக்கும் அருமையான வீடியோத் தொடரின் முதல் விடியோ “ஒளிவழி ஒழுகும் உலகம்”

அகத்தின் அழகு

நம் வாழ்க்கை அனுபவங்கள் நம் மனதை மட்டுமன்றி புறத்தோற்றத்தையும் மாற்றும் வலிமிஅகொண்டவையா? இதோ ஆஃப்கானிஸ்தானத்தில் போரில் ஈடுபட்டுத் திரும்பிய ராணுவவீரர்களின் படங்கள் – போர் அனுபவத்துக்கு முன்பும், அதன் பின்பும். பனிரெண்டே மாதங்களில் அவர்கள் முகத்தின் மாற்றங்கள் என்ன சொல்கின்றன? அந்தக் கண்களில் என்ன தெரிகின்றன? http://www.slate.com/blogs/behold/2012/10/17/claire_felicie_s_photographs_marines_faces_before_during_and_after_afghanistan.html

ஏட்டுச் சுரைக்காயும், மெக்ஸிக அதிபரும்

ஒரு நிருபர் பென்யா நியதோவிடம் அவரது வாழ்வை மாற்றிய மூன்று புத்தகங்களைக் குறிப்பிடும்படி கேட்டார். அவருடைய தடுமாற்றமான பதில், பின்னால் யு ட்யூபில் வெளியிடப்பட்டுள்ளது, முள் முனையில் நிற்பது போன்ற துன்பம் தரும் நான்கு நிமிடங்கள் நீடித்தது. முதலில், அவர் தனக்குப் பிடித்த நாவல்களைப் பற்றி குழறினார், ஆனால் அவற்றின் தலைப்புகள் அவருக்கு நினைவில்லை. அவர் மொத்த பைபிளையும் படித்ததில்லை என்ற போதும், அதில் சில பத்திகள் அவரது இளம்பருவத்தில் மிக நம்பிக்கையூட்டுவதாக இருந்தன என்று யோசித்துச் சொன்னார்.

உங்க வேலைய பார்த்துக்கிட்டுப் போங்க

விடுமுறையிலிருந்து திரும்பியபோது, கெர்க்காவுக்கு ஏதோ படுமோசமாகி விட்டிருக்கிறதென்று தெரிந்தது. ஏதோ கசமுசாவின் பொறிகள் காற்றிலெங்கும் தெறித்தன. அவனுடைய தலைமுடி கூட நெட்டுக்குத்தாக நின்றது மின்சாரம் பாய்ந்தாற்போல, அவனுடைய கைகளோ காந்தத்தால் பாதிக்கப்பட்டது போல ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டன. கெர்க்காவுக்கு தப்பாமல் ஒன்று புரிந்தது, யுர்காதான் இந்த அழுத்தத்தின் மையம். என்ன நடந்தது என்பது குறித்து அவனுக்கு எதுவும் தெரிவதற்கு முன்னரே, ஏதோ மூடநம்பிக்கையில் அவன் அதிலிருந்து பின்வாங்கினான்.

அவர்கள் வந்தனர் எதிர்காலத்திலிருந்து

இன்றைய புனைவுகளில் தொழில் உற்பத்தி முறை குறித்து அத்தனை வருணிப்பு இல்லை என்றாலும் அது ஆங்காங்கே தொடர்ந்து பேசப்படுகிறது. பொருட்களின் வருணனையோ பக்கங்களெங்கும். அவற்றின் பயன்முறை, தாக்கம் போன்றனவே கதையின் எலும்புக் கூடு. மனித லாகவமும், தீர்மானங்களும் முன்னத்தனை கதைவெளியை நிரப்பவில்லை, மாறாக கருவிப் பயன்பாட்டின் விளைவுகள்- மனித உடலில், மனதில், அறிவில், சமூகத்தில், காலத்தில் என்று ஒவ்வொரு வெளியாக, ஒவ்வொரு ஊடகமாகத் தொட்டுச் செல்லுமிந்தக் கதைகள்- என்னவென்று காலில் தைக்கும் நெருஞ்சி முள்ளாகவோ, ஊனை ஒழிக்கும் அணு ஊசியாகவோ எழுதப்படுகின்றன.