நிறம்

பேச்சுவாக்கில் அவனுடைய அண்ணன் நான் என்று சொன்னதை அவர் நம்பவுமில்லை.மேற்கொண்டு என்னிடம் பேசுவதை விரும்பவுமில்லை.உலகநாயகன் கலரில் இருக்கும் அவன் எங்கே,தேமுதிக தலைவர் கலரில் இருக்கும் நான் எங்கே.என்னைப் போல ஓர் அண்டப் புளுகன் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது என்பதை அவர் வாயைத் திறந்து சொல்லவில்லையென்றாலும் அவர் என்னை பார்த்த ஓர் அற்பப்பார்வையே எனக்கு உணர்த்தியது.

அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் – பகுதி 2

அந்த அறிவுப்பசியே மனிதனுக்கு எந்த வகையிலான தடையையும் தகர்த்தெறிவதற்கான உந்துதலைத் தர முடியும். இல்லையென்றால் கும்பகோணத்தில் ஏதோ ஒரு மூலையிலிருந்த ராமானுஜன் ஹார்டிக்குக் கடிதம் எழுதியிருக்க முடியாது. சைவ உணவை மட்டுமே சாப்பிடும் இளைஞன் உடலை வாட்டும் குளிரைப் பொறுத்து உடல் நிலை தேயும் காலத்திலும் கணிதத்தைப் பற்றியே சிந்தித்தது எதிர்காலத்தில் பெரும் பணமோ புகழோ பெறப்போகிறோம் என்று நினைத்தல்ல.

வேலையற்றவனின் பகல்

அப்பாவின் பிணத்தை எரிக்கக் கொண்டுபோன போதும் இப்படித்தான் மழை பெய்துகொண்டிருந்தது. அவன் முற்றத்தில் இறங்கி சேற்றில் விளையாடிக் கொண்டிருந்தான். அம்மா அழுதழுது சடலம் கொண்டு செல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டே இருந்தாளே ஒழிய, முன்பு போல ‘மழையில் நனையாதே’ எனச் சொல்லி அவனை அதட்டவில்லை. அவனும் அந் நாளுக்குப் பிறகு மழையில் விளையாட இறங்கவில்லை. ஏனோ தடுக்க யாருமற்ற விளையாட்டு அவனைச் சலிக்கச் செய்திருக்க வேண்டும்.

விடுப்பு

அவளது மாமியார் ஏற்கனவே தனது கூச்சலால் அண்டைவீட்டார் பலரை கூட்டியிருந்தாள். ராதா அசையாமல் இருந்தாள். அவள் தண்ணீரை உற்றுப் பார்த்தபடி அமைதியாக இருந்தாள்.
புன்தி, பொஜுரி, காலிஷா, கஜோலி ஆகிய வகை மீன்குட்டிக் கூட்டமொன்று அவளது பாதங்களை மொய்த்தன. ‘ஓ, தயவு செய்து தூரப் போங்கள், இன்று நான் உங்கள் யாருக்கும் உணவு கொண்டு வரவில்லை.’ ஆனாலும் அவளின் பாதத்தை சுற்றி மகிழ்ச்சியாய் அவை பல்டியடித்துக் கொண்டிருந்தன. தங்களுக்கு அருகில் ராதா இருப்பது அவைகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவைகள் அதைவிட வேறெதுவும் கேட்கவில்லை.

முறுகல் தோசை மனிதன்

நான்தான் நடுத்தர வயதின் மண்ணாங்கட்டி ஆகிக் கொண்டிருக்கிறேன் என்பதல்ல. என் நண்பர்கள் பலரும் – அதில் பலர் அக்மார்க் அறிவு ஜீவிகள் என்றே சொல்லத் தக்கவர்கள் – தங்களுக்கும் இதே பிரச்னை இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். ஸ்காட் கார்ப் போன்ற வலைப் பூவினரும் இதையேதான் சொல்கிறார்கள். ‘நெட் வந்த பிறகு என் படிக்கும் பழக்கம் மாறிவிட்டது. அதுகூடப் பரவாயில்லை; ஆனால் என் சிந்திக்கும் விதமே மாறிவிட்டதே!’ என்று அங்கலாய்க்கிறார்கள். ‘இனிமேல் என்னால் ஒரு டால்ஸ்டாய் நாவலைப் படிக்க முடியாது. ஒரு ப்ளாக்கூட நாலைந்து பாராவுக்கு மேல் இருந்தால் வயிறு நிரம்பிவிடுகிறது. மேலோட்டமாக சாம்பிள் பார்த்துவிட்டு அடுத்த சுட்டிக்குப் போய்விடுகிறேன்’.

சிந்துவெளி: அண்மைக் கால முயற்சிகள்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மறைந்த அறிஞர் கமில் சுவலபில் (Kamil V. Zvelebil) செக்கொஸ்லொவாக்யா நாட்டில் பிறந்தவர். ப்ரேக் நகரின் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்தியவியலை முக்கியப் பாடமாகப் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். பின்னர், அதே பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் திராவிட மொழியியல் சொல்லித்தரும் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.

மொழியியல் மற்றும் இலக்கியம் பற்றி இவர் எழுதியுள்ள நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றின் எண்ணிக்கை 500க்கும் அதிகமாகும்.

சிந்துவெளி எழுத்துகள் பற்றி, 1983ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆய்வரங்கம் ஒன்றில் கமில் சுவலபில் வாசித்தளித்த கட்டுரையின் தமிழாக்கத்தை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.

வாசகர் எதிர்வினை

சாம்.ஜி.நேதனின் கட்டுரைகளை நான் விரும்பிப் படிக்கிறேன். சென்ற இதழில் அவர் கட்டுரை இடம் பெறாமல் போனது ஏமாற்றமளித்தது. தொடர்ந்து நல்ல படைப்புகளை, முக்கியமாக அறிவியல், இசை குறித்த கட்டுரைகளை வெளியிட்டு வாருங்கள்.

மகரந்தம்

மனத்தளர்ச்சி பரிணாமவியலோடு இணைந்த வாழ்வியலா? பாலில் தண்ணீர் கலக்கும் பால்காரர்கள் குறித்த நகைச்சுவைத் துணுக்குகள் பல வருடங்களாக நம் பத்திரிகைகளில் பவனி வருபவை. ஆனால் பிரபஞ்ச உயிரினங்களிலேயே மனிதர்கள் மட்டும்தான் பாலின் தேவையைக் கடந்து முழு வளர்ச்சியடைந்த பின்னரும் தொடர்ந்து பால் அருந்துபவர்கள், அதுவும் பிற உயிரினங்களிடமிருந்து! பிற உயிரினங்கள் குழந்தைப் பிராயத்தைக் கடந்த பின்னர் பாலைச் செரிக்கும் சக்தியை இழந்து விடுகின்றன. ஏன், வெகு சமீபம் வரை மனிதனாலும் வளர்ச்சியடைந்தபின் பாலைச் செரிக்க முடியாமல்தான் இருந்தது. பிறகு எப்படி வந்தது இந்த பால் குடிக்கும் பழக்கம்? ஏகபோகத்தைக் (monopoly) கடுமையாக எதிர்க்கும் இந்திய இடதுசாரிகள் சீனாவின் ஏகாதிபத்தியம் குறித்து என்னவிதமான எதிர்வினை புரிவார்கள்?

நியூஸிலாந்து – மவுரிகள் என்னும் முன்னோடிகள்

சிலசமயங்களில், கப்பல்கரையில் நின்றுகொண்டிருக்கும்போது, காட்டிலும் கரையிலும் வேட்டையாடிக் கொண்டிருந்த மாலும்கள் மவுரிப் பெண்களோடு தற்காலிகக் குடும்பம் நடத்துவதும் உண்டு. இத்தகைய உறவுகளால் கலப்பினக் குழந்தைகள் பிறந்தன. கப்பல் கரைகளை விட்டுத் தத்தம் நாட்டுக்குத் திரும்பியபோது, குழந்தைகளின் தந்தையரும் போய்விட்டனர். குழந்தைகள் மவுரித் தாய்மார்களிடம் மவுரிகளாகவே வளர்ந்தனர். மவுரிகளின் சமூக அமைப்பும் (Tribal Organaisation) மவுரிப் பெண்ணுக்கு இருந்த சில உரிமைகளும் கலப்பினக் குழந்தைகள் தந்தையின்றியும் வாழ வசதி அளித்தன.

மாய உறுப்புகள் நிறுவிய ஞான தரிசனம்

எதனை இந்த உலகத்தின் துயர் துடைக்காத தத்துவம் என்கிற மாதிரியாக ரூபர்ட் ஷெல்ட்ரேக்கும் எந்த தத்துவ சிந்தனையின் வெற்றியால் இந்தியாவில் அறிவியல் தேக்கநிலையை அடைந்தது என அவுட்லுக் கட்டுரையாளரும் கருதினார்களோ அதே தத்துவசிந்தனை துயர் துடைக்கும் செயல்முறையை உருவாக்கியதை நாம் காண்கிறோம். இந்திய தத்துவத்தின் ஒரு பெரிய கண்டடைதலே மாயை என்பது. இது உலகமே பொய் என்பதாக கடந்த இருநூறு ஆண்டுகளின் பொதுபுத்தியில் பதியவைக்கப்பட்டது. ஆனால் மாயை என்பது எப்படி நாம் புலன்களால் அடையும் ஒவ்வொன்றும் கட்டமைக்கப்படுகிறது என்பதை சுட்டுவது. அதனை தத்துவத்திலும் வாழ்க்கை முறையிலும் ஒரு கூறாக மாற்றியதன் மூலம் இந்திய ஞான மரபு ஒரு வலிமையான பண்பாட்டை உருவாக்கியது.

இசையும், கணிதமும் இணையும் புள்ளி – அக்‌ஷரம்

நம் இந்திய மரபிசையின் தாளங்கள் பல நுட்பங்களை உள்ளடக்கியது. இந்திய இசையை முதன் முதலில் கேட்க நேரிடும் எந்த ரசிகரையும் ஒரு கணம் திகைக்க வைக்கும் தன்மையுடயவை இவை. கடினமான கணித நுட்பங்களின் ஆச்சரியங்களை உள்ளடக்கிய தாளக்கணக்குகளை நாம் வெகு எளிதாகக் கடந்து வந்திருக்கிறோம். ஐந்து வெவ்வேறு தாள நடைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கூர்ந்து கவனிக்கும் எவரையும் அது நம் மரபிசை சேகரித்து வைத்திருக்கும் பல நூற்றாண்டு கால இசை அறிவைக் குறித்ததொரு மன எழுச்சிக்கு ஆட்படுத்தி விடும்.

ஆகஸ்ட் மாதப் பேய்கள்

அந்த மாளிகைக்கு ஒரு வயதான பாட்டி சரியான வழியைக் காட்டினாள். மாளிகையில் அன்று இரவைக் கழிக்கும் எண்ணமுண்டா என அந்தப் பாட்டி கேட்டாள். அங்கே மதிய உணவுக்கு மட்டும் செல்வதே எங்கள் நோக்கமெனக் கூறி பாட்டிக்கு விடைகொடுத்தோம். `அப்படியென்றால் சரி. ஏனென்றால் அது ஒரு பேய் வீடு` என பயங்காட்டினாள் பாட்டி.