கஹானி

வெறும் திரைக்கதையையும், தேர்ந்த நடிப்பையும் மட்டும் முக்கியமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் பெறும் வெற்றியும், ஷாரூக் கான் போன்ற சூப்பர் ஸ்டார்கள் கூட கோடிக்கணக்கில் செலவு செய்து படமெடுத்து, ஒரு வருடம் விளம்பரப்படுத்தி எடுக்கும் படங்கள் படுதோல்வியும் அடைவதைப் பார்க்கும்போது இவர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தப் பொய்யைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்று ஆச்சரியப்படவைக்கிறது.

சிறுகதை

ஓ!! அந்த வீட்டுக்குள் கதை நுழைந்தே விட்டது. போர்வையை நனைத்தது வியர்வை…வாய் ஒட்டிக் கொண்டது. பேய்க்குப் பயப்பட்டால் கூடத் தாயத்தோ, திருநீறோ, மந்திரமோ…கதைக்குப் பயப்படுவதை என்ன சொல்லிப் புரிய வைக்க.. என்ன செய்து தடுக்க முடியும்.

மதப்பிளவும் தேசப்பிரிவினையும்

சிறிய சிறிய மூட்டை முடிச்சுகளையும் கூட கீழே போட்டுவிட்டு வெறும் கூடான உடலில் உயிரை மட்டும் சுமந்து கொண்டு நடக்கிறார்கள். அதற்கடுத்து அவர் சொல்வது தான் இத்தனை ஆண்டுகள் தாண்டியும் கேட்கும் நம் நெஞ்சங்களை உலுக்குகின்றது. தாய்மார்கள் தாங்கள் நொந்து சுமந்து பெற்ற குழந்தைகளைக்கூட ஒரு கட்டத்தில் தூக்கமுடியாமல் துவண்டு, கதறி அழவும் தெம்பில்லாமல் உயிருடன் கீழே இறக்கிவிட்டுச் செல்கிறார்கள்.

ஒற்றை ரோஜாச்செடி

பூத்திருந்த ஒரு ஜோடி மலர் உதிர்ந்த பிறகே அடுத்த ஜோடி மலர் பூத்தது. ஒரே சமயத்தில் ஒரு ஜோடிக்கு மேல் பூப்பதில்லை. செடியில் மலர்கள் இல்லாத நாட்களில் வண்ணத்துப்பூச்சிகள் மொய்ப்பதில்லை. அத்தனை வண்ணத்துப்பூச்சிகளும் எங்கு போகின்றன, எப்படி ரோஜாக்கள் மலர்ந்தவுடன் தோன்றுகின்றன என்பது பெரும் புதிராக இருந்தது.

ஆபெல் பரிசு – கணிதத் துறைக்கான நொபேல்

ஆபெல் பரிசை இதுவரை 12 கணித மேதைகள் பெற்றிருக்கிறார்கள். இந்தப் பரிசுக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பணமுடிப்பு கொடுக்கப்படுகிறது. பரிசுத்தொகையை விட இந்தப் பரிசினால் கிடைக்கும் பெருமை அளவிட முடியாதது. முதல் ஆபெல் பரிசு ழான் பியர் ஸேர் (Jean-Pierre Serre) என்ற கணித மேதைக்கு 2003 ஆம் ஆண்டு வழங்கப்பப்ட்டது.

ரோமாக்கள் – அந்நியர்கள் ஆக்கப்பட்ட வரலாறு

சல்லடைக் கண்களாய் இருந்த வேலிகள் சிறைக்கம்பிகளாய் உருமாற்றம் பெற்ற வரலாறே ஐரோப்பிய தேசியவாதத்தின் வரலாறு என்றும் சொல்லலாம். வரலாற்றில் நவீனத்துவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியோடு தேசியவாதமும் பிணைந்திருப்பது தற்செயல் நிகழ்வல்ல – பெரும்பாலும் ஐரோப்பிய காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட தேசங்கள்தான் தமக்குள்ளும் வெளியும் தீவிரமான எல்லைப் போர்களைச் சந்திக்கின்றன. தேசியவாதத்தின் வேர்கள் நவீனத்துவத்தில் இருக்கின்றன. நாகரிகம் வளர்ச்சியுற்று தேசியமாக உருவாகி ஐரோப்பிய மண்ணில் எல்லைக் கம்பங்களை நட்டு அதன் வரைபடங்களில் எல்லைக் கோடுகளைக் கீறியது. தேசியம் நிலப்பரப்புக் கோட்பாட்டைத் தழுவி, ஒரே மொழி, ஒரே சமயம், ஒரே மக்கள் என்ற ஒருமைப்பட்ட பண்பாட்டைத் தோற்றுவித்தது.

அணு ஆற்றலின் அரசியல் – பகுதி 4

ஜப்பானியக் கல்வி அதிகாரத்துக்கு அடிபணிவதை வலியுறுத்துவதால், அதிகாரிகளின் உத்தரவுகள் நியாயமானவையோ இல்லையோ, அவற்றைத் தட்டிக்கேட்க ஜப்பானிய மாணவர்களுக்குப் பயிற்சி இல்லை. குழுவின் மற்ற அங்கத்தினர்களுடன் வேறுபடவும் அவர்களுக்குப் பயிற்சி இல்லை.

ஆயிரம் தெய்வங்கள் – 21

ஹீராக்ளீசின் தங்க வேட்டை சுயநலத்துக்கு இல்லையென்றாலும் இதில் பெற்ற வெற்றியின் முடிவு இருபதாம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட ‘மேக்கென்னாஸ் கோல்டு’ போன்ற பல ஹாலிவுட் படங்களுக்குரிய கதைக்கருவை வழங்கியுள்ளதாகவே கவனிக்கலாம். நீரியஸ் காட்டிய பாதை அப்படிப்பட்டது.

பழக்கம்

நம்முடைய மூளை/ மனம் இரண்டு நிலைகளில் இயங்குகிறது. ஒன்று பிரக்ஞைப் பூர்வமானது (conscious) மற்றொன்று ஆழ்மனம் (sub-conscious) சார்ந்தது. பிரக்ஞைப் பூர்வ மனதால் ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையை மட்டுமே செய்ய முடியும். ஆனால் அதே நேரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆழ்மனதின் கட்டுப்பாட்டில் பல வேலைகள் நடந்து கொண்டிருக்கும்.

வாசகர் மறுவினை

இது என்ன எல்லாரையும் போல சொல்வனமும் பின்னே ஞானும் என்று தலைப்புப் பஞ்சத்தைப் போக்கிக் கொள்ளத் தரம் தாழ்ந்து விட்டதே என்று ஒரு கணம் துணுக்குற்றேன். ஆனால் பார்த் சுயம் உட்பட அனைத்தையும் பிரதி வாசிப்பாகப் பார்த்தவர் என்று தொடங்கி, போர்ஹே அனைத்து பாத்திரங்களிலும் வாசகன் தன்னைப் பார்ப்பதான புரிதலைத் தருகிறார் என்று சொல்லி, டயர் பார்த் இருந்த இடத்திலிருந்து போர்ஹேவின நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார் என்பதை மைத்ரேயன் எவ்வளவு அழகாக விவரிக்கிறார்.

பிச்சி

சட்டென ஒரு எண்ணம் தோன்றியது. எழுந்து அவள் அருகே சென்று அமர்ந்தேன். இலேசாகத் திடுக்கிட்டு, என்ன வேண்டும் என்பது போல் பார்த்தாள். வியர்வையில் கலந்த மெல்லிய மல்லிகை மணம் அவள் மேல் இருந்து வீசியது. அது சுர்ரென நாசியில் ஏறி மூளைக்குள் புகுந்தது. தலை இலேசாகக் கிறுகிறுத்தது. நானும் அவளும் மட்டுமே தனியாக இருப்பது போன்ற ஒரு உணர்வு. என் உடலில் ஒரு நடுக்கம்.

அஷானி சங்கேத் – தொலைதூரத்து இடியோசை

1943யில் வங்காளத்தில் ஏற்பட்ட பிரம்மாண்டமான செயற்கைப் பஞ்சத்தின் பின்புலத்தைச் சித்தரிக்கும் இப்படம், ராயின் அரிதான வண்ணப் படங்களில் ஒன்று. பெரும்பாலும் கல்கத்தாவின் நகர வாழ்க்கையைக் கருப்பு வெள்ளையில் தீட்டிக் கொண்டிருந்த ராய், ஏறத்தாழ பத்தாண்டுகள் கழித்துத் திரும்பவும் நாட்டுப்புறச் சூழலுக்கு வண்ணங்களோடு திரும்பிய படம் இது.

மகரந்தம்

ரோபாட்களால் உடனடியாக என்ன பெரும் பயன் என்பதை நம்மால் காண முடியாதது, சில பத்தாண்டுகள் முன்பு கணினி எந்திரங்களால் என்ன பயன் என்று இந்திய அரசாலும், இந்திய அரசு அதிகாரிகளாலும், இந்திய முற்போக்குகளாலும் காண முடியாததை ஒத்ததே.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- தக்கயாகப் பரணி

ஒட்டக்கூத்தர் பிரபந்தம் பாடுவதில் வல்லவர் என்பதினால், ‘கோவை, உலா, அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர்’ எனப் புகழ் பெற்றவர். ஆனால் இவர் பாடிய அந்தாதி எதுவும் கிடைக்கப் பெற்றிலோம். ‘ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’ என்று கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு.

குறிக்கோளில்லாத பிரபஞ்சம்

நம் பிரபஞ்சமும், அதன் இயக்க விதிகளும் , தெய்வீக வழிகாட்டலோ, குறிக்கோளோ இல்லாமல், தன்னிச்சையாகத் தோன்றின என்பதற்கான நிரூபணமாகிவிடுமா? அல்ல, ஆனால் அப்படியும் நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதையே தெரிவிக்கிறது.

ஒன்றுமில்லாததிலிருந்து உருவாகிய பிரபஞ்சம்

இந்த சொல்வனம் இதழில் கோரா மொழிபெயர்த்திருக்கும் லாரன்ஸ் க்ரெளஸ் எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. லாரன்ஸ் க்ரெளஸ் தன்னுடைய பிரபலமான புத்தகமான ‘A Universe from Nothing’ இன் சாரத்தை ஒரு விரிவுரையாகப் பேசுகிறார். அவருடைய நுட்பமான நகைச்சுவையுணர்வும், தெளிவான, எளிமையான விளக்கங்களும் இவ்வுரையை வெகு சுவாரசியமான ஒன்றாக்குகின்றன. “ஒன்றுமில்லாததிலிருந்து உருவாகிய பிரபஞ்சம்”