அழிவிலிருந்து மீண்ட மிருணாள் சென்னின் திரைப்படம்

மிருணாள் சென்னின் படைப்புகள் திரையிடப்படமுடியாமல் போனதையடுத்து, பல கண்டனக்குரல்கள் எழுந்தன. அதையடுத்து இந்திய அரசு கிட்டத்தட்ட அழிந்த நிலையிலிருக்கும் முக்கியமான இந்தியத் திரைப்படங்களை மீட்கும் ஆணையைப் பிறப்பித்தது. அந்தத் திட்டத்தின் கீழ் சரிசெய்யப்பட்டுவரும் பல திரைப்படங்களில் மிருணாள் சென்னின் திரைப்படங்களும் அடக்கம். அவ்வாறு மீட்கப்பட்ட மிருணாள் சென்னின் திரைப்படங்களில் ஒன்றான “கண்டர்” திரைப்படம் 2010-ஆம் ஆண்டு கேன் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.

கர்ணனுக்கு வழங்கியவர்கள்

‘கர்ணன்’ திரைப்படத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு விஷயம் மனதைக் கவர்ந்து வந்திருக்கிறது. சிறுவயதில், ‘கர்ணன்’ திரைப்படத்தில் கர்ணனாக நடிக்கும் சிவாஜி கணேசன், தன் மாமனாரிடம் ‘கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று கர்ஜிக்கும் ஒரு இடத்துக்காகக் காத்திருந்து கைதட்டியது இன்னும் நினைவில் உள்ளது. அந்த ஒரு காட்சி போக, இந்திரன் மாறுவேடத்தில் வந்து கர்ணனிடம் கவச குண்டலத்தைக் கேட்டவுடனே, சிவப்பு, மஞ்சள் ஒளிவெளிச்சத்தில் சிவாஜி கணேசன் பற்களைக் கடித்து வலியைப் பொறுத்து சதையைப் பிய்த்துக் கொண்டு கவசகுண்டலங்களை அறுக்கும் போது உடம்பு பதறி அம்மாவின் மடியில் சாய்ந்திருக்கிறேன்.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 10

பரணிப்போர் என்பது சாதாரண சண்டை அல்ல என்பது நமக்குப் புரிகிறது. யுத்தம், WAR என்பனவற்றுக்குச் சமமான தமிழ்ச்சொல் போர் என்பதுதான். எனினும் பரணிப்போர் என்பது அதையும் நோக்க அதிபயங்கரமானதாக இவண் வருணிக்கப்படுகிறது. ‘ஆனை ஆயிரம் அமரிடை வென்ற’ என்ற தொடரின் அர்த்தம் புரிகிறது. நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், துப்பாக்கியும் பீரங்கியும் குண்டு வீசும் போர் விமானங்களும் கண்டுபிடிக்கப்பட்ட காலத்துக்கு எண்ணூறு ஆண்டுகள் முந்தைய கோரம் இது. அந்தக் கோரத்தை, கொடுமையை செயங்கொண்டாரால் சொற்களால் எழுப்பிக்காட்ட முடிந்திருக்கிறது என்பதோர் சொல் கடந்த அதிசயம்.

குற்றப்புனைவுகளின் எல்லையை விரிவாக்கிய இயன் ரான்கின்

1980களில் மேற்கு ஐரோப்பாவின் மிக மோசமான போதைப்பொருள் பிரச்சினைகளில் ஒன்றாக எடின்பரா இருந்தது. அது ஹெராயின் வர்த்தகத்தின் முக்கியமான அளிபாதையாக இருந்தது. அது தவிர எய்ட்ஸால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்களும் அங்குதான் இருந்தனர். யாரும் அதைப் பற்றிப் பேசுவதாக இல்லை. யாரும் அது குறித்து எதுவும் செய்வதாகவும் இல்லை. பிரச்சினைகள் பார்வைக்கு மறைவாக இருந்ததால் எல்லாரும் எல்லாமும் நன்றாக இருப்பதான பாவனையில் இருந்தனர். சரிதான், இந்த நிஜ உலக சமகால விஷயங்களை யாராவது நாவல்களில் எழுதியாக வேண்டும் என்று நான் நினைத்தேன். ஏனென்றால் அதை அப்போது எவரும் செய்து கொண்டிருக்கவில்லை

பர்த் டே

அந்த வருடத்தில் வந்த ஓவ்வொரு பிறந்தநாளின் போதும் ஓவ்வொருவரும் செய்த புதுமைகள், புதுமைகளாகக் காட்ட முனைந்த சிறுமைகள் என எல்லாம் அன்றைய இரவு சபையில் தாமனால் விவரிக்கப்படும். அதற்கு செவி சாய்ப்பது குடும்பத்தினரின் கடமை. அவன் விழிகள் விரிய ஓவ்வொன்றையும் சொல்லுவான். அதோடு அதனைப் பற்றிய தனது அடிக்குறிப்பையும் சேர்த்துக் கொள்வான்.

ஒரு ஐ-பேட் மேஜிக்

ஐரோப்பாவின் பல பெருநகரங்களுக்கு பல உத்திகளைக் கையாண்டு நிறைய பணம் செலவு செய்து விளம்பரங்கள் செய்கிறார்கள். அதன் மூலம் நிறைய வணிக முதலீடுகளும், உலகளாவிய கவனமும், சுற்றுலா வருவாயும் கிடைக்கின்றன. இது ஆப்பிள் யுகம். ஐ-பேட் கருவியைக் கொண்டே ஒரு மேஜிக் நிகழ்ச்சி மூலம் ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமுக்கு “ஒரு ஐ-பேட் மேஜிக்”

ராணுவ தருணங்கள்

அமெரிக்க ராணுவப் பயிற்சியின்போது அவ்வீரர்களின் மனநிலைகளை காட்சிப்படுத்தும் புகைப்படத் தொகுப்பு ஒன்று இங்கே. மனிதர்கள் மாறுபடலாம். உணர்வுகள் ஒன்றுதான்.

எட்டணாவில் உலக ஞானம்

மாற்றான் மனைவியை இச்சித்தல் கூடாது என்பது ராமாயணத்தின் சாரம். அதனால் அனைத்தையும் திருமணத்திற்கு முன்பே முடித்துக்கொள்ளவேண்டும். சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட் என்பது சார்லஸ் டார்வினின் பரிணாம தத்துவத்தின் சாரம். அதனால் மனிதருள் உஸ்தாதாய் இருப்பது அவசியமாகிறது. கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பது கீதையின் சாரம். இதை வியாஸரோ கிருஷ்ணரோ, யார் சொல்லியிருந்தாலும், நாம் மேற்படி உஸ்தாதாய் அனைவரிடமும் எடுத்துரைப்பது அவசியம். இல்லை கடமையைச் செய்யும் அனைவரும் பலனுக்கு ஆசைப்படுவார்கள்.

மொழியின் கடைசிப்பெண்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு ஆள் கண்ணில் படவில்லை. கடலில் படகுகள் இல்லை. கடல் நீளமாக இருந்தது. அதன் முடிவு வானம்தான் என்பதுபோல் இருந்தது. கடற்கரை மணலில் நடந்தேன். என்னுள் ஆயிரம் கேள்விகள். எதற்கும் பதில் கிடைக்கவில்லை. தூரத்தில் தென்னை மரத்தின் கிளைகள் தெரிந்தன. மணல் சூடேறியிருந்தது. மெதுவாக நடந்தால் கால்கள் பொசுங்கிவிடும் என்று வேகமாக ஓடினேன்.

ஆயிரம் தெய்வங்கள் – கிரேக்க இந்திரன்

டி.டி. கொஸாம்பி, ஏ எல் பாஷ்யம் போன்ற வரலாற்று அறிஞர்கள் யதுகுல வீரனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய சாகசங்களும் ஹீராக்ளீஸின் சாகசங்களும் ஒப்பிடத்தக்கவை என்று கூறினாலும் ஜனனக்கதை வேறுபடுகிறது. ஹீராக்ளீஸ் முதல் நிலை தெய்வமல்ல. சக்தி குறைவான தெய்வமே.

மகரந்தம்

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தொகுப்பு வருடா வருடம் அச்சிடப்பட்டுக் கொண்டிருந்தது. உலக மையமே பிரிட்டன் என்பது போன்ற, பிபிசி போன்ற செய்தி ஸ்தாபனங்களின் மமதை பிடித்த பார்வை இந்த புத்தகத் தொகுப்புக்கும் இருந்தது. இந்த புத்தகத்தை இனிமேல் அச்சிடப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். மரங்கள் கொஞ்சம் பிழைக்கும்.

ராஹுல் திராவிட் – முடி துறந்த டெஸ்ட் சக்ரவர்த்தி

ராஹுல் திராவிடின் ஓய்வினால் இந்தியா நம்பர் 3 பேட்ஸ்மேனை மட்டுமே இழந்திருக்கிறது, இந்திய கிரிக்கெட்டின் தூதுவரை இழந்து விடவில்லை. இந்திய கிரிக்கெட்டின் தூதுவர் என்று நான் அவரைச் சொன்னதன் காரணம் புரிய, சமிபத்திய ஆஸ்திரேலியத் தொடரின் போது அவர் நிகழ்த்திய பிராட்மேன் உரையை நீங்கள் முழுவதுமாகக் கேட்கவேண்டும். இன்றைய தேதியில், இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலதரப்பட்ட முகங்களை இந்த அளவுக்குத் துல்லியமாக எந்த பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும் முன்வைக்கவில்லை என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள்.

அன்புள்ள வாசகர்களுக்கு…

போக வேண்டிய தூரம் வெகு அதிகம் என்பதையும் நாம் அறிவோம். இப்பயணத்தில் தங்கள் உறுதுணையே எங்கள் பேராதரவு. சொல்வனம் தொழில் முறையில் இல்லாத, வியாபார நோக்கு அற்ற, மனிதரிடையே பிரிவினை செய்யும் எதையும் ஏற்காத, எளிமையும், உண்மைத் தேட்டமும் உள்ள, தங்களை முன்னிறுத்த முயலாத வெகு சிலரால் நடத்தப்பட்டு வருகிறது. சொல்வனத்தின் பல வேலைகளையும் இந்த சிலரே செய்கிறோம்.

அணு ஆற்றலின் அரசியல் – பகுதி 2

ஜப்பான் ஒரு ஜனநாயகம் என்றாலும், பல நாடுகளோடு ஒப்பீட்டில் அது செவ்வனே இயங்கும் ஒரு அமைப்பு என்றே தோற்றமிருந்தாலும், தொடக்கத்திலிருந்தே, ஜப்பானியக் குடிமக்களுக்கு ஃபுகுஷிமா பேரழிவைப் பற்றி நம்பகமான தகவல்கள் கிடைக்கவில்லை. இதற்கு டெப்கோதான் (TEPCO) முக்கியக் காரணம். ஃபுகுஷிமா டாயீச்சியை தாக்கக்கூடிய நிலநடுக்கம், சூனாமி ஆகியவற்றின் வலிமையை டெப்கோ குறைத்து மதிப்பிட்டிருந்ததால், அணு உலைகளைக் கண்காணிப்பதற்கான அமைப்பையும், ஃபுகுஷிமாவிலும் டோக்யோவிலும் உள்ள பணியாளர்களுக்கும் இடையான தொடர்பு வழிகளையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் எதையும் டெப்கோ மேற்கொள்ளவில்லை.

கவிதைகள்

அவள் கைகளில் இருக்கும் ஐந்து விரல்களையும்
ஒன்றிணைத்து என் கையில் வைக்கிறாள்
அது என் வலக்கரம்
என் வலக்கரத்தில் ஈச்சை மரம் ஒன்று பழங்களுடன்
நிற்பதைக் காணுகின்றேன்

கூந்தப்பனை – வேர்களின் நீரூற்று

சு.வேணுகோபாலைக் குறித்து என் மனதில் ஆழப் பதிந்திருந்த எண்ணம் இதுதான்: சமகால எழுத்தாளர்களில் அவர் மட்டுமே காமத்தின் உக்கிர அனுபவத்தை முழுமையாகத் தன் எழுத்தில் வெளிப்படுத்துகிறார் என்று ஒரு நண்பர் கூறியிருந்தார். கூந்தப்பனையை வாசிக்கும்போதும், அது குறித்து சிந்திக்கும்போதும் காமத்தை மையமாகக் கொண்டே இதிலுள்ள கதைகளை வாசித்துப் புரிந்து கொண்டிருந்தேன். ஆனால், காமத்துக்கு அப்பால், அதன் அறம் குறித்த அக்கறையும் மனித ஆன்மாவின் மெய்ப்பாடு குறித்த கவலையும் சு.வேணுகோபாலின் எழுத்தின் உள்ளார்ந்த (ஆனால் நேரடியாகப் பேசப்படாத) உணர்வாக இருக்கிறது என்று அறிகிறேன். […] இத்தொகுப்பில் உள்ள கதைகளை நீதிக் கதைகள் என்று சொல்ல முடியாது என்றாலும், இவற்றின் அடிப்படையில் உள்ள நீதி விசாரணையே இவற்றை இலக்கியமாக்குகிறது என்று நினைக்கிறேன். பிரபஞ்ச நியதியை மனித வாழ்வோடு பிணைக்கும் எழுத்து அபூர்வமாகவே காணக் கிடைக்கிறது. சு.வேணுகோபாலின் கூந்தப்பனை, அதன் அத்தனை குறைகளோடும், இன்றைய காலகட்டத்தில் அவ்வகைப்பட்ட எழுத்தின் உயர்ந்த சாத்தியங்களைத் தொடுகிறது என்று சொல்லலாம்.

வாசகர் மறுமொழி

திரு.லலிதா ராம் எழுதிய “துருவ நட்சத்திரம் – காலம் சென்ற பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கைக் கதை” என்ற புத்தகத்தை என் அபிமான புத்தகக்கடையில் காண நேர்ந்தது. அந்த இளம் எழுத்தாளரின் பெயரைக் கண்டவுடன் நான் புத்தகத்தைக் கையில் எடுத்துவிட்டேன். புத்தகத்தைப் படிக்கத் துவங்கிய இரண்டே மணி நேரத்தில் 224 பக்கங்கள் அனைத்தையும் படித்து முடிக்கும் வரை நேரம் போனதே எனக்குத் தெரியவில்லை.

சாமத்தில் முனகும் கதவு – சிறுகதை குறித்து…

காற்றில் சரியாக அண்டக் கொடுக்காத கதவின் ‘க்றீச்சிடலும்’ சம்போக உச்சத்தில் மனைவியின் முனகலும் ‘கற்பனை இன்பத்தில்’ சுகமாய் வாழும் கூத்தையனுக்கு ஒன்றாகப் போகின்றன. கற்பனையின் மீது ஓரளவாவது இருக்கும் ‘கன்ட்ரோல்’ அவனுக்குக் (யாருக்குமே) கனவு-நனவுக் கலப்பின் மீது இல்லை. கனவின் நடுவில் நிகழும் விழிப்புலகச் செயல் கனவில் ஒரு தர்க்க ரீதியான செயலாவதை நாமனைவரும் அனுபவித்து இருக்கிறோம். காலிங் பெல், தட்டப்படும் கதவு போன்றவை கனவுக் காட்சியின்சரியான இடத்தில் வேறாகத் தெரிந்து நாம் தெளிவது அனைவருக்கும் தெரிந்தது. அதை அருமையாகக் கொண்டு வந்திருக்கிறார்.

நாய்கள் பூனைகள்

தீர்ப்பு வந்த அதே மாலை, போலிஸ் வந்து அஷுவின் வீட்டை தட்டியது. குர்த்தா பைஜாமாவுடன் இருந்தவரை விலங்கிட்டு கைது செய்து சிறைக்கு கூட்டிக்கொண்டு போனது. நிறுவனத்திலிருந்து ஒரு மில்லியன் திர்ஹம் களவாடினார் என்று அஷுவின் மீது பொய்க்குற்றம் சாற்றியிருந்தார் சுலைமான்.

அழிந்து போன நந்தவனம்

திமிறி நாயனத்தின் ஒத்துச்சத்தமே – அதன் எச்சான ஒலி – மிக அருகில் நின்று கேட்க ராஜரத்தினம் சங்கடப்படுவதாக நான் உணர்ந்தது, கோவில்பட்டியில் அவர் வாசிக்க வந்த ஒரு திருவிழா ஊர்வலத்தின் போதுதான். ஒத்துவாசிப்பவனை, தள்ளிப் போய் நில் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். இது நடந்து பல நாட்களுக்குப் பிறகு ராஜரத்தினம் பல வகைப்பட்ட நாயனங்களை வைத்து வாசிப்பதாகக் கேள்விப்பட்டேன்.