இளையராஜாவின் ஜாஸ் வால்ட்ஸ்

‘உன் பார்வையில்’ என்ற பாடலும் இந்திய இசைக்கருவிகளில் உருவாக்கப்பட்ட ஜாஸ் வால்ட்ஸுக்கு உதாரணம். ஹார்மோனியத்தால் நிறைக்கப்பட்டிருக்கும் பாடலின் ஆரம்ப இசை ஜாஸ் வால்ட்ஸை கற்பனைக்கெட்டாத இடங்களில் பயன்படுத்துவதில் இளையராஜாவுக்கு இருக்கும் ஆளுமையைக் காட்டுகிறது. இப்பாடலின் ஹார்மோனியப் பகுதிகள் இளையராஜாவே வாசித்திருப்பவை. அருமையான ஹார்மோனியமும், தேர்ந்த குரல் வெளிப்பாடும் இப்பாடலின் இனிமையைப் பலமடங்கு கூட்டுகின்றன. இதைப் போலவே கேட்பதற்கு இனிமையான பாடலுக்கான இன்னொரு உதாரணம், எண்பதுகளில் வெளிவந்த ‘கீதம் சங்கீதம்’.

நாறும்பூமாலை

ஒவ்வொருவர் பேச்சிலுமிருந்து ஒவ்வொரு வரியை உருவி குத்துமதிப்பாகப் பேசி சமாளித்து விடலாம் என்ற யோசனையில் சிந்திப்பது போன்ற பாவனையுடன் அமர்ந்திருந்த என்னை அநியாயத்திலும் அநியாயமாக முதலிலேயே பேச அழைத்து விட்டார்கள். நான் உட்கார்ந்திருந்த இருக்கையிலிருந்து மைக் இருக்கும் இடத்துக்கு ஒருமாதிரியாக நீந்திச் சென்றடைந்தேன்.

ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்

முத்துலிங்கத்திடமிருந்து ஏதும் ஆவேசமும் உக்கிரமும் நிறைந்த உரத்த குரல் எதிர்ப்போ கண்டனமோ எழவதில்லை. சுபாவத்தில் மிகவும் அடங்கிய குரல்காரர். அவர் உரத்துப் பேசி யாரும் கேட்டிருக்க முடியாது. உரத்த வாய்விட்ட சிரிப்பு கூட அவரிடமிருந்து எழுவதில்லை. எதிலும் அமைதி. கொண்டாட்டமானாலும், கண்டனமானாலும் சரி. அறுபதுகளிலிருந்து எழுதி வருகிறார். இடையில் சில காலம் எழுதாதிருந்திருக்கிறார். எழுதத் தொடங்கியபோதும், இடைவெளி விட்டுப் பின் தொடர்ந்த போதும், அவர் எழுத்தும் அவரும் குணம் மாறவில்லை. இவ்வளவு நீண்ட காலமாக ஒரே குரலில் சன்னமான, ஒரு மெல்லிய புன்னகை உதிரக் காணும் குரல் கொண்ட சிறுகதைகளும் கட்டுரைகளும். ஆனாலும் எங்கும் எதிர்பாராத இடத்தில், இழப்பின் சோகத்தின் தாக்கத்தை நாம் பயங்கரமாக உணர்வோம்.

வால் மக்டர்மிட் – மரபை உடைத்த பெண்குரல்

பொதுவாகச் சமீப காலம் வரை, பெண்களும், பாலியல் சிறுபான்மையினரும் பொதுவெளியிலும், படைப்புத்துறையிலும் எள்ளலாகவே சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள். குறிப்பாக குற்றப்புனைவுகளில் பாலியல் சிறுபான்மையினர் ஒன்று குரூர மனம் கொண்டவர்களாக, குற்றவாளிகளாக இருப்பார்கள் அல்லது குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். ஆனால் மக்டர்மிட்டின் படைப்புகளில் பெண்கள் மற்றும் பாலியல் சிறுபான்மையினர், முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள். அவர்களுடைய பாலினம், பாலியல் தெரிவுகள் அவர்களுடைய தொழில்முறை வாழ்க்கையை அதிகம் பாதிப்பதில்லை.

ஒரு மகாராணியின் நினைவுக் குறிப்புகள்

மகாராணியும், அவர் குடும்பமும் வருடத்தின் பாதியை ஐரோப்பாவில் கழிக்கின்றனர். அவர்களது பேச்சுகள் முழுக்க Bentley கார்களும், சூதாட்ட விடுதிகளும், விருந்தினர்களுக்கான முடிவிலா கேளிக்கைகளும் நிறைந்திருக்கின்றன. ஐரோப்பாவில் அவர்களுக்கென்று விருந்தினர்கள் யாரும் இல்லாதபோது இந்தியாவிற்குத் திரும்பி இங்குள்ள விருந்தினர்களை உபசரிக்கின்றனர். தனி விமானத்திலோ அல்லது தங்களுக்கென்றே பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட P&O நிறுவனத்தின் கப்பலிலோ பயணிக்கின்றனர். இந்த களேபரங்களுக்கிடையே தங்கள் மக்கள் நலனில் அக்கறை கொள்ள அவர்களுக்கு எப்படி நேரமிருந்திருக்கும்?

என்று தணியும் இந்த எண்ணை தாகம்? – பகுதி 2

பெட்ரோலுக்கு ஒரு மாற்று மாயப் பொருள் என்று எதுவும் இல்லை. அதுவும் பெட்ரோலிடமிருந்து அனைத்து பயன்களிலும் மாற்று என்ற பேச்சுக்கு இடமில்லை. சக்தி உற்பத்தி மற்றும் சாதாரணப் பயண (எல்லா வகை பயணங்களும் அல்ல) உபயோகங்களுக்கு மாற்று வழி கண்டால் ஓரளவிற்கு சமாளிக்கலாம். சக்தி உபயோகத்தை கொஞ்சம் குறைக்க வழி இருந்தால் இன்னும் நல்லது. விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் இதை அவ்வளவு எளிதான பிரச்சனையாக நினைப்பதில்லை.

இடும்பைக்கூர் வயிறே…

இந்தியா கேட்.ராஷ்ட்ரபதி பவனைக் கேட்டுக்கு வெளியே இருந்து ஒரு பார்வை. நாடாளுமன்றம். வெளியே இருந்த குரங்குகள், உள்ளே போய்க் கொண்டிருந்த அரசியல்வாதிகள், வட்ட நீர்க் கொப்புளிப்பைச் சுற்றிப் பறக்கும் பறவைகள் ..எல்லாவற்றையும் பார்த்துவிட்டு நாங்கள் ரயில் ஏறும் போது தான் உறைத்தது குளிர் மட்டுமல்ல செலவும் நாங்கள் எதிர்பார்க்காததை விட அதிகம் ஆகியிருந்தது. அதிகம் என்ன ஒன்றும் இல்லாமல் ஆகி இருந்தது. ஆசிரியரிடம் போய்க் கடன் கேட்கலாம் என் நினைத்திருந்ததை ஏதோ தடுத்தது. கொஞ்ச நேரத்தில் பசி அந்த ஏதோவைத் தள்ளிவிட்டு அவரிடம் போய்க் கேட்டபோது அவரிடமும் பணம் இல்லை. பரிதாபமாக விழித்தார்.

மகரந்தம்

மணமாகாதவர்கள் மணம் புரிவதாலும், மணமானவர்கள் மணமுறிவு செய்து கொள்வதாலும் ஒரு இல்லம் இருக்கிற இடத்தில் இரண்டு உருவாகி, அதன்மூலம் புதிய வீடுகள், அவற்றுக்குத் தேவையான நுகர்பொருள் வர்த்தகம் மற்றும் செலவுகள் அதிகரித்து பொருளாதாரம் மேம்படும் என்பது ஒரு சுவையான முரண்நகை.

ஒற்றைப் புராணம் (Mono Myth)

நம் கல்விமுறை புராணங்களை எப்படி அணுகவேண்டும் என்று கற்றுக் கொடுத்துள்ளது. கிழக்கத்திய புராணங்களை ‘கட்டுக் கதைகள்’ என்றும், மேற்கத்திய புராணங்களை ‘விவிலிய உண்மை’ (bibilical truth) என்றும் அணுகச் சொல்கிறது. ஆனால் ஜோசப் கேம்பெல் எனும் புராணவியலாளர் புராணங்களை வெறும் கட்டுக்கதைகளாகவும், மூடநம்பிக்கைகளின் வெளிப்பாடுகளாகவும் மட்டுமே காணும் போக்கை “ஒற்றைப் புராணம் (Mono Myth)”

ஆயிரம் தெய்வங்கள் – 18

பாசிடான் ஸீயஸ்ஸின் அண்ணன். மண்ணுலகையும் விண்ணுலகையும் ஸீயஸ் ஆண்டான். ஆழி சூழ் உலகைப் பாசிடோன் ஆண்டான். சமுத்திரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அவன் பெற்ற விதிப்பயன். சிறுவனாயிருந்தபோது அவன் டெல்சைனஸ் பொறுப்பில் விடப்பட்டான். டெல்சைனஸ் உலோகங்களை வளைத்து ஆயுதங்களைச் செய்வதில் வல்லவன்.டெல்சைனஸின் தங்கை ஹலியாவைப் பாசிடான் மணந்துகொண்டு ஆறு புதல்வர்களையும் ஒரு புதல்வியையும் பெற்றுக் கொண்டான். அப்புதல்வியின் பெயர் ரோடஸ். அதே பெயரில் அவன் நினைவாக கிரேக்கத் தீவு உண்டு.

சமகால சீனக்கவிதைகள்

அரசியல் வணிக உறவுகள் நிமித்தம் சீனாவும் அமெரிக்காவுமிடையே மொழி மற்றும் கலாச்சார புரிதல்கள் அவசியமாகின்றன. இதனால் அந்த இரு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார பரிவர்த்தனை திட்டங்களின்கீழ் பல புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றிலொன்று சமகால சீனக்கவிதைகள் என்னும் தொகுப்பு. இதை கேன்யான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 49 கவிஞர்களின் 200 கவிதைகள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. கவிதைத் தொகுப்பைப் பற்றி பேசுமுன் சீனக் கவிதைகள் குறித்து சில விஷயங்கள்.

சில நேரங்களில் சில நுண்ணுயிரிகள் – 3

நச்சுயிர்கள், உயிருள்ள ஸெல்களின் மரபுக்கூறுகளைக் (genetic material) கையகப்படுத்தி அவற்றைத் தம் இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு செழிப்புறுகின்றன. விடாப்பிடியாக இனப்பெருக்கம் செய்துமுடித்து, அதிக ஸெல்களைக் கைப்பற்றப் பெரும்படையுடன் கடும்புயலெனப் பாய்கின்றன. வாழும் சூழலைத் தேடிக்கொள்ளும் நிர்ப்பந்தமில்லாததால், அவற்றிற்குக் கச்சிதமான வடிவே போதுமானது. மிக எளிய பாக்டீரியாவுக்கும் பல்லாயிரம் மரபீனிகள் தேவைப்படுகிற நிலையில், ஹெச்.ஐ.வி உட்பட்ட பல நச்சுயிர்கள், பத்துக்கும் குறைவான மரபீனிகளை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன.

நகருக்குள் சென் ஹுவான்ஷெங்கின் சாகசம்

பெருமூச்செறிந்தான். சரி, வீட்டுக்குக் கிளம்பலாம் என்று எழுந்தான். கால்கள் துவண்டன. மிகவும் பலகீனமாக உணர்ந்தான். உடல்நலமில்லையா என்ன? கூட்டத்தைச் சமாளித்ததில் அவன் எதையுமே அறியவில்லை. மிகவும் சோர்வாக இருந்தது. வாய் வறண்டு காய்ச்சலடிப்பது போலிருந்தது. நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். சுட்டது. உடல் மிகக் குளிர்ந்தது. சூடாக ஒரு கோப்பை தேநீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால், கடைகள் எல்லாமே மூடியிருந்தன. ரயில் நிலையத்தில் சுடுநீர் கிடைக்கும் என்ற ஞாபகம் வந்தது. கிடுகிடுவென்று போனான்.

உலக ஒளிப்படப் போட்டி – 2012

ஒவ்வொரு வருடமும் உலகின் சிறந்த ஒளிப்படங்களுக்கான ‘World Press Photo Competition’ போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  ஜப்பான், கொரியா, செனகல், அமெரிக்கா என உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறந்த படங்கள், பல்வேறு பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை இங்கே பார்க்கலாம்.

‘ஆற்றேன் அடியேன்’ கட்டுரைக்கு இரண்டு மறுவினைகள்

தமிழ் விக்கிப்பீடியா, வரலாறு காணாத அளவுக்கு இலங்கைத் தமிழர்களும், சிறிய எண்ணிக்கையில் மலேசியத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களுமாக ஒன்றிணைந்து உருவாக்கி வரும் பெரிய ஆக்கம். அத்தனையும் இலவசம். ஏராளமான படங்கள், மிக அரிய ஆயிரக்கணக்கான அறிவுச் செய்திகள் கொண்ட பெரும் தொகுப்பு. அதில் உள்ள குறைகள் மிக ஏராளம் மறுக்கவே இல்லை, எனினும் ஒரு வரலாறு படைக்கும் படைப்பு என்பது அதில் உள்ள அரிய செய்திகளைத் தொகுத்துப் பார்த்தால் தெரியும்.

சாமத்தில் முனகும் கதவு

வாசுகியை நினைக்கும் தோறும் அவன் உடல் இறுக்கம் கொள்வதை அறிந்திருந்தான். அவள் ஸ்பரிசத்தின் மென்மை ஒரு பெண்மையை கையாள்வது இத்தனை எளிதானதா என்ற எண்ணம் ஓடுவதை தவிர்க்கமுடியவில்லை. போகத்தில் ஒவ்வொரு சமயமும் அவள் இளகுவது எந்த உண்மையை அறியும் பொருட்டு என்று கடையின் இருண்ட அறையில் அமர்ந்து யோசித்திருக்கிறான். உச்சத்தில் அவள் கண்களில் தெரிவது வெறிகொண்ட மிருகத்தின் கண்கள் என்பதை பிறகு உணர்ந்து பயந்திருக்கிறான்.