தமிழின் தொன்மையை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கும். அதே சமயம் ஒருவித சோகமும் வந்து கப்பிக்கொள்ளும். இதை தவிர்க்க முடியாமல் இருக்கிறது. 2012ம் ஆண்டு தொடக்கத்தில் விக்கிப்பீடியாவில் பல மொழிகளில் மொத்தமாக எத்தனை கட்டுரைகள் ஏறியிருக்கின்றன என்று தேடிப் பார்த்தேன். ஒரு கோடிக்கும் குறைவானவர்கள் பேசும் ஹீப்ரு மொழியில் 129,000 கட்டுரைகள் ஏறிவிட்டன. ஏழு கோடி மக்கள் பேசும் தமிழில் ஆக 43,000 கட்டுரைகள்தான். உலகத்தில் ஆக மூன்று லட்சம் பேர் மட்டும் பேசும் ஐஸ்லாண்டிக் மொழியில்கூட 36,000 கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டன. […] நான் பிறந்தபோது உலகத்தின் சனத்தொகை 2.3 பில்லியன். இன்று அது 7.0 பில்லியன், மூன்று மடங்காக வளர்ந்திருக்கிறது. ஆனால் பூமியின் அளவு அதேதான். இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழின் வளர்ச்சி எப்படி இருக்கிறது. மூன்று மடங்கு வளர்ந்திருக்கிறது என்று சொல்லமுடியுமா? 2009ம் ஆண்டு யூன் மாதம் 16ம் தேதியை எல்லோரும் கொண்டாடினார்கள். என்ன விசயம் என்று கேட்டபோது ஆங்கில வார்த்தைகளின் எண்ணிக்கை அன்று ஒரு மில்லியனை தொட்டுவிட்டது என்றார்கள். யாரோ கணக்கு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழில் எத்தனை வார்த்தைகள் உள்ளன என்று யாராவது கணக்கு வைத்திருக்கிறார்களா?
Category: இதழ்-64
நயினார்
காலையில் அடுக்களைக்குள் நுழையும் போதே, ‘எம்மா. நேரம் ஆயிட்டெ. இந்தா இப்பம் நயினார் வந்துருமெ’. அவசர அவசரமாக ஏழெட்டு தட்டுகள் இட்லி ஊற்றுவாள். வாசல் கேட்டைத் தாண்டி, தார்சா நடையில் ஏறி, பட்டாசல் வழியாக, மானவெளியில் வந்து நின்று அடுக்களைப் பக்கம் நின்று நயினார், அம்மாவைத் தேடும் போது சிலசமயம் அம்மா ஒளிந்து கொள்வதுண்டு. தும்பிக்கையை அடுக்களைக்குள் நுழைத்து, நயினார் அங்குமிங்குமாக தடவித் துழாவி அம்மாவைத் தேடும் போது, பாகன் உட்பட நாங்கள் அனைவரும் சிரித்தபடி அருகில் நிற்போம்.
குற்றப்புனைவு – ஓர் அறிமுகம்
குற்றப்புனைவின் சிறந்த நாவல்கள் இன்று இலக்கியப் புத்தகங்கள் என்ன பேசுகின்றனவோ, அவற்றையே பேசுகின்றன. அறநெறிகளைக் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. சாதாரண மனிதர்களை அசாதாரணமான சூழலில் நிறுத்தியபின், ‘இச்சூழலில் நீங்கள் இருந்திருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?’ என்று வாசகர்களைக் கேட்கின்றன. ‘இப்படிப்பட்ட குற்றங்கள் நடப்பதை அனுமதிக்கும் உலகில் வசிப்பதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?’ என்று கேட்கின்றன. இலக்கியத்தையும், குற்றப்புனைவையும் நான் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. சில சிறந்த குற்றப்புனைவுகள் சிறந்த இலக்கியப்படைப்புகளாகவும், சில சிறந்த இலக்கியப்படைப்புகள், சிறந்த குற்றப்புனைவுகளாகவும் இருக்கின்றன.
சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 8
கலம்பகங்கள் அகம், புறம் என இரு பிரிவுகளிலும் பாடப்பெறும். புயவகுப்பு, அம்மானை, ஊசல் முதலிய பதினெட்டு உறுப்புகள் கொண்டது அந்தாதியாக அமைக்கப் பெறும். தேவர், அரசர் இவரைத் தலைவராகக் கொண்டு பாடப்பெறுவது. இன்று தேவர் எங்கு கறந்து உறைகின்றனரோ? அரசர் இனமும் அழிந்து போயிற்று. இனமானத் தலைவர்கள் மீது பாடலாம் எனில் கலம்பகம் பாடுவது எளிய யாப்பு முறையும் அன்று.
முகங்கள்
நீங்கள் ஓமானியா என்று தெரியாமல் கேட்டு விட்டேன். நம்பர் ஒன் ஓமானி என்றார். அப்படியே விட்டுவிட முடியுமா ? அப்படியானால் நம்பர் டூ ஓமானி யார் என்று கேட்டேன். ரிங்பாரி என்று ஏதோ சொன்னார். நிச்சயம் கெட்ட வார்த்தையாக இருக்க வாய்ப்புள்ளது.
2012-ஆம் ஆண்டின் இரும்பு மனிதர்
மானுடம் பல விண்ணைத் தொடும் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களை சாதித்துள்ளது. ஆனால், இந்த தொழில்நுட்பங்களை அனுபவித்துக் கொண்டே தன்னுடைய குறைபட்ட அறிவையும் மானுடம் அவ்வப்போது வெளிப்படுத்தும். அத்தகைய கோணங்கித்தனம் ஒன்றை இந்த புகைப்படத் தொகுப்பு ஆவணப்படுத்துகிறது. தங்களை வலுவானவர்களாக முன்னிருத்த மனித இனம் தான் எத்தனை பாடுபடுகிறது? இதனூடேயே “2012-ஆம் ஆண்டின் இரும்பு மனிதர்”
20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் -இறுதிப் பகுதி
Futurist உத்தியில் ஒரு உருவத்தின் தொடரசைவு என்பது கித்தானில் அதன் வேகம் வெளிப்படும் விதத்தில் ஓவியமாயிற்று. Vorticism அதிலிருந்து மேலும் பயணப்பட்டு அறிமுகமற்ற இருண்மை மிகுந்த ஒரு சூழலில் பார்வையாளனைக் கொண்டு சென்று செருகியது. Futurist இயக்கம் இயந்திரப் பயன் பாட்டால் நிகழவிருக்கும் வருங்கால நன்மைகளென்று கணித்தவற்றில் மனித சக்தியின் மெத்தனம் என்பது நீக்கப்பட்டு மனித இனம் புதிய எல்லைகளை தொடும் என்பது முக்கியமானது.
சில நேரங்களில் சில நுண்ணுயிரிகள் – 2
பாக்டீரியாக்கள், பல கோடி ஆண்டுகள் மனிதரில்லாத உலகில் உலவி வந்த உயிரினம். அவற்றின் துணையின்றி நாம் ஒருநாள் கூட வாழ்ந்திருக்க முடியாது. அவை நம் கழிவுகளைச் சுத்தீகரித்து, மறு சுழற்சிக்குத் தருகின்றன. அவை அயராது மென்ற பின்னரே இறந்த உயிரினங்கள் மக்கிப் போக இயலும். அவை, நாம் பயன்படுத்தும் நீரை சுத்தீகரித்தும், நம் விளை நிலங்களின் உற்பத்தித் திறனைத் தக்கவைத்தும் உதவுகின்றன. மேலும், நம் வயிற்றில் வைட்டமின்களை உணவுடன் ஒருங்கிணைப்பது, உடல் ஏற்கும் சர்க்கரைகளாகவும், கலப்புபல்சர்க்கரைகளாகவும் (polysaccharides) , உண்ணும் உணவை மாற்றுவது, நம் தொண்டை வழியாக நுழையும் அயலிடத்து கிருமிகளுடன் போரிடுவது போன்ற பலவற்றையும் அவை செய்கின்றன.
வாசகர் மறுவினை
காலஞ்சென்ற இசை கலைஞர் திரு. வீருசாமி பிள்ளையும் சரி திரு. ஜெயராம நாயுடுவும் சரி இருவருமே திருவிடைமருதூரில் சிறு வயது முதல் அடி மட்டத்திலிருந்து தங்களது வாழ்க்கையில் சிறுக சிறுக வளர்ந்து ஒரு வளமான நாணயமான ஒரு வாழ்க்கையினை அமைத்து கொண்டவர்கள். அதுவும் தங்களது உழைப்பையே மட்டுமே மூலதனமாக வைத்து.
போர்ட்டபெல்லோ சாலை
நம் இயல்புலக அனுபவங்களில் தென்படும் அமானுடத்தின் நிழலை இருளும் மென் புன்னகையும் ஒருசேர விவரிக்கிறார் முரியல் ஸ்பார்க். அவரது சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் கருதப்படும் “போர்டபெல்லோ சாலை” முரியல் ஸ்பார்க்கின் விளையாட்டும் விபரீதமும் கலந்த கற்பனைக்கு ஒரு நல்ல அறிமுகமாகும்.
மகரந்தம்
ஒரு பெரும் யுத்தத்தில் அமெரிக்கா அதன் அத்தனை வளங்களை அழித்த பின்னும் எஞ்சி இருப்பது இத்தனை என்றால் எவ்வளவு பெரும் நிதியை ஆப்பிரிக்க, ஆசிய, லத்தின் அமெரிக்க மக்களிடமிருந்து சுரண்டி இருக்க வேண்டும் என்பதை மேற்கின் மக்களோ, அறிஞர்களோ, அரசியலாளர்களோ அதிகம் பேசுவது இல்லை. ஆனால், சமூக/ அரசியல் ஆய்வாளர்களில் பலரும் காலனியம் உலக மக்களுக்கு நல்லதே செய்தது என்று கூட எதிர்ப் பிரசாரம் செய்யத் தலைப்பட்டிருக்கின்றனர்.
முறுக்கேறும் உண்மைகள் – அகலிகை எதிர்கொள்ளும் உருக்குலைவும் உறைநிலையும்
கல்லிகையில் கௌதமரை சமயமாகவும் இந்திரனை முதலாளித்துவமாகவும் உருவகித்திருக்கிறார் ஞானி. அகலிகை உழைக்கும் வர்க்கத்தின் உருவகமாக இருக்கிறாள். இந்த உருவகத் தன்மைகளுக்கு ஏற்றபடி ஞானியின் அகலிகை பகலில் கௌதமருக்கு மனைவியாகவும் இரவில் இந்திரனின் காதலியாகவும் இருக்கிறாள். கௌதமரிடம் கிடைக்காத இன்பத்தை இந்திரனிடம் பெற்றுக் கொள்கிறாள் அவள்.
என்று தணியும் இந்த எண்ணை தாகம்?
மாற்று சக்தி ஐடியாக்களை கடந்த 40 வருடங்களாக நம் சமூகங்கள் ஒரு சந்தேகத்துடனே பார்த்து வருகின்றன. ஏனென்றால், இவை மாணவ தொழில்நுட்ப முயற்சிகள், அல்லது நடைமுறைக்கு வராத செய்திகளாக வலம் வருகின்றன. எப்படியோ அரசாங்கங்கள், எண்ணைய் நிறுவனங்கள் இம்முயற்சிகளை செயலிழக்கச் செய்துவிடுகின்றன.
GRAPHENE – ஒரு அதிசய உலகம்
ஒரு பென்சிலைக் கொண்டு ஒரு வெள்ளைத்தாளின் மீது சர்வசாதாரணமாக கிறுக்கிவிடமுடியும். ஆனால் அந்த கிறுக்கல்களுக்கு கீழ் உள்ள உலகத்தை நீங்கள் அறிவீர்களா?
கவிதைகள்
மொட்டைமாடியில், இரவு
கரும்பூனைகளென
பதுங்கியிருக்கும்.
கர்நாடக சங்கீத வருங்கால நட்சத்திர நம்பி(க்கை)கள்
இளம் வித்வானாய் இன்றைக்கு சீஸன் சர்க்கியூட்டில் உள்ளே வருவதும் கடினமே. பாரம்பர்யம்மிக்க சில சபாக்களே திறமையை மட்டுமே வைத்து அழைப்புவிடுக்கின்றனர். பல சபாக்கள் இங்ஙனம் செயல்படுவதில்லை. இளம்கலைஞர்கள் மேலெழும்ப ஆரபி, தேவகாந்தாரி என்று மட்டும் சஞ்சரிக்காமல், இவ்வகை நுண்ணரசியல், நரஸ்துதி, முகஸ்துதி என்று நிஜத்திலும், ஃபேஸ்புக், டுவிட்டர் என்று அநேகர் “லைக்” செய்ய இணையத்திலும் சஞ்சாரம் செய்யவேண்டிய நிர்பந்தம் உள்ளது. போதாததற்கு, பொதுவில் வைக்கமுடியாத சில தேவைகளும் உள்ளது. கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள வியாஸர்பாடி கோதண்டராமனை இவ்விடத்தில் மீண்டும் உங்களிடம் குறிப்பிடுகிறேன்.