ரமாவும், உமாவும் – திலீப்குமாரின் புதிய புத்தகத்தை முன்வைத்து…

சமகால இலக்கியப்போக்கைக் குறித்து முற்றிலும் பகடியாக, தான் எழுதும் கதையையும் கூட அதில் சேர்த்தி விஷமப்புன்னகையோடு பேசுகிறார் திலீப்குமார். இக்கதை தரங்கம்பாடியில் நடப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. “ரமாவும், உமாவும் பெங்களூருவில் உள்ள சங்கம் ஹவுஸ் அறக்கட்டளையின் சார்பில் ஆகஸ்ட் 2011-இல் தரங்கம்பாடியில் நடத்தப்பட்ட எழுத்தாளர் முகாமில் பங்கேற்றபோது எழுதப்பட்டது,” என்று புத்தக முன்னுரையில் சொல்கிறார் திலீப்குமார். இக்குறுநாவலைப் பற்றிய முக்கியமான குறிப்பாக அதை நான் படிக்கிறேன்.

விகடனிலிருந்து கிழக்கு வரை . . .

‘கிழக்கு’ ஸ்டாலை நெருங்கும் போது தூரத்திலேயே ஒரே ஒரு நாற்காலி போட்டு சாதாரண மனிதர்கள் உட்கார்ந்திருப்பது தெரிந்ததால், பிரசன்னா அங்கில்லை என்பது உறுதியானது. வழக்கமாக பிரசன்னா மூன்று, நான்கு நாற்காலிகளின் வளைந்த கால்கள் கதற கதற அதன் மீது பரந்து விரிந்து நிறைந்திருப்பார். உள்ளே சென்று புத்தகங்களை நோட்டமிட்டேன். அங்கும் சிலர் கண்டு கொண்டார்கள். ‘ஸார், எனக்கும் திருநவேலிதான். கீளப்புதுத்தெரு. எங்க அக்காமகன் ஒங்கள பாக்கணும்ங்கான்’. ஒரு சின்னப்பையன் என்னைப் பார்த்துத் தயங்கிச் சிரித்தான். எட்டாம் கிளாஸ் படிப்பானாக இருக்கும். அவன் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான் என்ற செய்தியை கொஞ்சம் கூட நம்பாமலேயே அவர்களிடம் சிலநிமிடங்கள் பேசினேன்.

2011-12 சென்னை மார்கழி இசைவிழா பல்லவிகள்

இந்த டிசம்பர் சீஸனில் (2011 -12) கேட்ட ராகம்-தானம்-பல்லவிகளைப் பற்றி விரிவான அலசலைத் தருவதோடு, ராகம்-தானம்-பல்லவியின் பல்வேறு பரிமாணங்களையும் விளக்குகிறார் அருண் நரசிம்மன்:

தமிழிலேயே பாடினாலும், இசையாய் கேட்கையில் மனதிற்கு ரம்யமூட்டுவதற்கு பொருள் செறிவின் பங்களிப்பும் முக்கியம் என்றுணர முடிந்தது. வருடாவருடம் உழைத்து எதையாவது வித்தியாசமாய் செய்யமுனையும், இன்றைய முன்னனி வித்வான்களான கிருஷ்ணா சஞ்சய் இருவருக்கும் இடையே நிலவும் ஆரோக்யமான போட்டியில், இவ்வருட அகதெமி வின்னர் சஞ்சய். சரி இதுதான் 2011 சீசனுக்கு சூப்பர் கச்சேரி என்று நினைத்திருந்தேன். வேதம் சிரித்தது. என் பாட்டியின் வயதையொத்த வல்லியின் உருவில்.

பகையைத் தேடி

நாட்கள் மெதுவாக நகரத் தொடங்கின. வனப்பாக உடல் மாறுவதற்கு பதிலாக, நான் குண்டாகத் தொடங்கினேன். என் மனநிலையைப் பற்றியும் யோசித்துப் பார்த்தால், அந்த ஒரு வருடம் கழித்து என் சுற்றுலாவின் முடிவில் எனக்கு ஒரு வயது கூடியிருந்தது அவ்வளவே! வேறு எந்த மாற்றமும் இல்லை. நான் ராணுவத்திலிருந்து வெளியேறப்போகிறேன். ஆனால் சேர்வதற்கு முன்பு எப்படியிருந்தேனோ, அப்படியேதான் வெளியே போகப்போகிறேன். என்னுடைய அதே சிறிய தடுக்கறைக்கு, என்னுடைய எக்ஸெல் கோப்புகளுக்குத் திரும்பிச் செல்லப்போகிறேன்.

பொங்கல் வாழ்த்தும், ஓவியர் கே.மாதவனும்

ஓவியர் கே.மாதவன் தமிழ்நாட்டின் மிக முக்கியமான சினிமா, நாடக பின்னதி, பேனர், பத்திரிகை, காலண்டர் ஆர்ட்டிஸ்ட். கே.மாதவன் பொங்கல் வாழ்த்து அட்டைகளின் வண்ண அழகும் தூரிகை வீச்சும், அனாயசமான அவரின் வேகமும், அலாதியான பாணியும், எவரையும் ஈர்க்கும். ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் அவருடைய படைப்புகள் மிகுதியாக வெளிவந்து ரசனைத் தன்மையையும் ஊட்டின.

காற்றின் சிறகினிலே… – சாரல் விருது விழா

நாஞ்சில் நாடன் உரையில் குறிப்பிடத்தக்க விஷயம் அவர் வண்ணநிலவனைப் புதுமைப் பித்தனின் நேரடி வாரிசு என்று அறிவித்ததுதான். “புதுமைப்பித்தனையும் கடந்து சென்றுவிட்ட எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், ஆனால் வண்ணநிலவன்தான் புதுமைப்பித்தனின் நேரடி வாரிசு” என்று அவர் குறிப்பிட்டார். வண்ணதாசனைப் பற்றி நிறைய எழுதிவிட்ட காரணத்தால் அன்றைய உரை முழுக்க முழுக்க வண்ணநிலவனுக்காக இருந்தது. “வண்ணநிலவன் இல்லையென்றால் நாஞ்சில் நாடன் என்ற நாவலாசிரியன் இன்று உங்கள் முன் நின்று கொண்டிருக்க மாட்டான்” என்று வண்ணநிலவனின் தாக்கத்தை வெளிப்படுத்தினார் நாஞ்சில்.

சில நேரங்களில் சில நுண்ணுயிரிகள்

1983-லேயே மேற்கு ஆஸ்திரேலியா, பெர்த் நகரில் வசிக்கும், பேரி மார்ஷல் (Barry Marshall) என்ற டாக்டர், பல வகையான வயிற்றுப் புற்றுநோய்க்கும் மற்றும் பெரும்பாலான வயிற்றுப் புண்களுக்கும் Helicobar pylori என்னும் பாக்டீரியம்தான் காரணம் என்று கண்டுபிடித்து விட்டார். இது மிகவும் புரட்சிகரமான கண்டுபிடிப்பாக கருதப்பட்டதால், சோதித்து உண்மை தெரிந்த பின்னரும், அறிஞர்களின் ஒப்புதல் பெற 10 ஆண்டுக்காலம் ஆனது. உதாரணமாக, அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிட்யூட், 1994 வரை, இக்கருத்தை அங்கீகரிக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில், சில ஆயிரம் அல்ஸர் நோயாளிகள் அநியாயமாக மடிந்திருப்பார்கள் என்று மார்சல்,1993-ல் Forbes பத்திரிக்கை நிருபரிடம் கூறியிருக்கிறார்.

டபுள் டாக்டர்

சில புதிர்கள் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்ததால் அவரைப் பற்றிய எங்கள் ஆர்வம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அவர் யார் ? எங்கிருந்து வந்தார் ? பிள்ளைகள் உண்டா ? தம் அடிப்பாரா ? ஏன் டிபார்ட்மெண்ட் ஆசிரியர் அறையில் போய் உட்கார்வதில்லை. எப்பொழுது பார்த்தாலும் லைப்ரரிக்கே போய் விடுகிறார். ஏன் டூருக்கு வரமாட்டேங்குறார். ஏன் விழாக்களில் கலந்து கொள்வதில்லை. இப்படி முக்கியமான கேள்விகளுக்கு விடை கிடைக்காததில் கொஞ்சம் வருத்தம் தான். இருக்கட்டும் . பாடம் நன்றாக எடுக்கிறார் அல்லவா?

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 25

‘ப்லூம்ஸ்பரி’ இயக்கம் பெரும்பாலும் ஒரு குடும்பத்தையே சுற்றியிருந்தது. உறுப்பினர் பலரும் அக்குடும்பத்துடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தனர். அவரவர் தேர்ந்தெடுத்தத் துறையில் பின்னர் அவர்கள் பெரும் புகழ் பெற்றாலும் தொடக்கத்தில் அங்கு நிலவிய உறவு என்பது சமுதாய ஒழுக்கங்களுக்கு ஒவ்வாததான, எப்போதும் கண்டனங்களுக்கு உட்பட்டதாகவே இருந்தது. ஓரினச் சேர்க்கையும், கட்டுப்பாடில்லாத படுக்கைப் பகிர்வும் அவர்களிடையே இயல்பானதாக இருந்தது.

மகரந்தம்

உலக வரலாற்றில் 72 மொழிகள் பேசத் தெரிந்தவர் இருந்திருக்கிறார். ஆனால் அவரது ஜீனியசில் எந்த மர்மமும் இல்லை – நம் மழலைகள் பயன்படுத்தும் பிளாஷ் கார்டுகளைத்தன பயன்படுத்தி இருக்கிறார். ஐம்பது மொழிகளைப் பேசத் தெரிந்த ஒருவர் ஹெல்சின்கிக்கு விமானத்தில் பயன்பப்படுகையில் பின்னிஷ் மொழியைக் கற்றாராம். ஆனால் அவரது மகன், தன் தந்தை கூச்சப்படும் இயல்பு கொண்டவரென்றும், தன் சுபாவத்தை மறைத்துக் கொள்ளவே வெவ்வேறு மொழிகள் கற்றார் என்றும் சொல்கிறார்.

ஃபைபர் ஆப்டிக் இழைகள்

கீழே தரப்பட்டிருக்கும் வீடியோவில் ஃபைபர் ஆப்டிக் இழைகள் எவ்வாறு செய்தியை எடுத்துச் செல்கின்றன என்று அருமையாக எளிதில் புரியும்படி விளக்கப்பட்டிருக்கிறது. ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்துக்கு பெருங்கடல்களுக்குக் கீழே செல்லும் இதுபோன்ற இழைகள்தான் இன்று நம் இணையத் தொடர்பையும், தொலைதூர தொலைபேசித் தொடர்பையும் நிர்ணயிக்கின்றன.

ஜனனி

“கண்ணிலிருந்து திரை கிழிந்து விழுகையில் உலகமே பீங்கான் சக்கரங்களின் மேல் நம் கண் முன் தேர் போல் நகர்ந்து திரும்பும் கம்பீரத்தையும், அதன் பெரும் உடலையும், அது திரும்ப முடியாமல் திரும்புவதில் துளிக்கும் சோகச் சாயையையும் நாம் அதனுள்ளிருந்து கொண்டே பார்க்க முடியும்”. இதுதான் உண்மையின் தன்மை என்கிறார் லாசரா.

வாசகர் எதிர்வினைகள்

சொல்வனம் இப்படி ஆரவராமில்லாமல் தொடர்ந்து பல நல்ல கட்டுரைகளை வெளியிட்டுக்கொண்டிருப்பது மார்க்கெட்டிங் மட்டுமே செய்து ப்ராண்டுகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் நம் சூழலில் மிகப்பெரிய சேவை. இதன் பயன் இன்று உடனடியாகக் கண்ணுக்குத் தெரியாமல் போகலாம். ஆனால் நீண்டகாலத்தில் சொல்வனத்துக்கென்று அழியாத இடம் காத்திருக்கிறது. அது உங்கள் தொடர்ச்சியான செயல்பாடு மூலம் மட்டுமே சாத்தியம்.

மீரா பென்னும் பீத்தோவனும்

காந்திஜியைப் பற்றியே இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது என்றால், அவரது சிஷ்யையான மீரா பென்னைப் பற்றி வேறு எப்படி நினைக்கத் தோன்றும்? ஆனால் கடற்படை அதிகாரியின் மகளான மீரா பென்னுக்கு சாஸ்திரீய சங்கீதத்தில் அபாரமான ஆசை இருந்திருக்கிறது என்றால் நம்பத்தான் முடியுமா? இளமையில் பியானோ கற்றிருக்கிறார். பீதோவன் படைப்புகளின் பைத்தியமாகவே இருந்திருக்கிறார். பீதோவன் வாழ்ந்த வியென்னா, பான் நகரங்களுக்குப் போய் அவர் நடாடிய தெருக்களில், அவர் ஏறிய, இறங்கிய குன்றுகளில், காடுகளில் எல்லாம் மீரா பென்னும் திரிந்திருக்கிறார். அவரைப் பற்றி என்ன புத்தக கிடைத்தாலும் படித்திருக்கிறார்.

அம்மா

மறுநாள் சாயங்காலம் வீட்டிற்கு கிளம்ப தயாரானான். துணியுடன் சேர்த்து பாட்டி கொடுத்த மாதுளம்பழமும் எடுத்துக்கொண்டான். பாட்டி ஒரு தடவை கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுத்தாள். பாட்டி கிட்ட எப்பவும் இந்த விக்கோ வஜ்ராதந்தி வாசன. அவனுக்கு அப்போ அது புடிச்சு இருந்துது. மாமா அவனை பஸ் ஸ்டாண்டில் கொண்டுவிட்டுச் சென்றார்.

நாம் நம்மைப் பலரென்றுணர்ந்த அந்த எதிர்பாரா தருணம்

, அரசு உதவி கிடைக்கும் என்ற குழந்தைத்தனமான, சோவியத்திய நம்பிக்கை ஒருவழியாக குணமாயிற்று நாங்கள் எங்களுக்கு உதவி செய்து கொள்ள முடியும் என்று திடீரென உணர்ந்தோம். இது எங்கள் தேசம், இதன் எதிர்காலம் எங்கள் கையில் உள்ளது என்று உணர்ந்தோம். இது உண்மையான அரசியல் மாற்றத்துக்கு வழி செய்யக் கூடிய புரிதலாக மாற மேலும் பல காலம் ஆகும் என்பது எங்களுக்குப் புரிகிறது. ஆனால் அதற்கான அழைப்பின் முதல் துவக்க மணி ஒலித்து விட்டது- போலோட்நயா சதுக்கத்தில் டிசம்பர் பத்தாம் தேதி ஒலித்தது அந்த அழைப்பு.