நண்பர்களுக்கு, இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சி, ஜனவரி 5 முதல் 17 வரை சென்னை புத்தகக் கண்காட்சி, புனித ஜார்ஜ் பள்ளியில் நடைபெறுகிறது. இந்தப் பள்ளி பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பர் கல்லூரிக்கு எதிரில் உள்ளது. இக்கண்காட்சியில் சொல்வனம் வெளியீடாக வந்திருக்கும் புத்தகங்கள் கிடைக்கும். தாயார் சன்னதி – இரண்டாம் “2012 புத்தகக் கண்காட்சியில் சொல்வனம் வெளியீடுகள்”
Category: இதழ்-62
‘மூங்கில் மூச்சு’ புத்தக வடிவில்
தமிழ்ச் சமூகத்தில் நடந்த பல்வேறு காலச்சார மாற்றங்களையும் போகிற போக்கில் சுகா பதிவு செய்து கொண்டு போகிறார். இது மூங்கில் விடும் மூச்சு மட்டுமே அல்ல….ஓர் இளைஞனின், காலத்தின், ஒரு தலைமுறையின் சுவாசம்!
நான்கு கவிதைகள்
உதடு துடிக்க
உற்றுப் பார்க்கின்றன
திறக்கப்படாத புத்தகங்கள்.
மூடிய புத்தகங்களின் மௌனம்
காந்தப்புலமாய் கவர்ந்திழுக்கிறது.
ஆயிரம் தெய்வங்கள் 17
இலியத் போரில் சாகசம் புரிந்த பெண் வீராங்கனைகளில் அமேசான் அரக்கியர் பிரபலமானவர்கள். இவர்களின் வீரத்திற்குக் காரணம் ஆர்ட்டமிஸ் மீது கொண்ட அளவுகடந்த பக்தியே. அன்றைய ஆசியாமைனரில் எஃப்சஸ் என்ற இடத்தில் இவர்கள் ஆர்ட்டமிசுக்குக் கோவில் கட்டி வழிபட்டனர். பின்னர் ரோமானியர்களால் வெல்லப்பட்ட பின்னர் ஆர்ட்டமிஸ் தெய்வத்தை ரோமானியர்கள் டயானா என்ற தெய்வமாக அடையாளப்படுத்தி வணங்கினர்.
அளிப்பான் அந்தரங்கம்: எப்பொருள் – மெய்ப்பொருள் – உட்பொருள்
எனக்கு தேவதர்ஷினி நாயகியாகக் கொண்ட சீரியல் பிடிக்கும். கே பாலச்சந்தர் இயக்கினால் நல்லது. ஜெயமோகனின் காடு நாவலை கதையாகக் கொண்டிருக்க வேண்டும்; ஆனால், அவரின் வசனம் இயல்பாக இருக்காது; பா ராகவனை வசனம் எழுத வையுங்கள். என்னால் இந்த வாரம் மட்டும்தான் பார்க்க முடியும். என்னிடம் கேபிள் கிடையாது. எனவே, ஐந்து நாளைக்கு மட்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்புங்கள் என்று கேட்பது போல் எதை வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்பொழுது தேவையோ அப்பொழுது வாங்கிக் கொள்ள விழைகிறீர்களா – கிளவுடுக்கு வாங்க.
வாசகர் மறுவினை
சொல்வனத்தின் கடந்த இதழ்களில் வெளியான படைப்புகள் குறித்து வாசகர்களின் மறுவினை
வெட்டுப்புலி
வெட்டுப்புலி கடந்த எண்பதாண்டு தமிழக வரலாற்றை வரலாற்று சம்பவங்களின் வழியாகப்பேச முனைந்திருக்கிறது. அரசியல் அளவில் இது திராவிட இயக்கங்களின் வளர்ச்சியின் வரலாறும் ஆகும். கடந்த நூற்றாண்டு தமிழக சமூக அரசியல் நூல் பந்தில் வெட்டுப்புலி சின்னா ரெட்டி எங்கோ இருக்கும் ஒரு முனைதான். ஆனால் அதை உருவத்தொடங்கியதில் ஒரு முக்கால் நூற்றாண்டும் வெளியே வந்து விழுகிறது.
வண்ணத்துபூச்சியின் நிறமற்ற வானவில்
உத்திரத்தில் ஆடும் ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்திலும் பாட்டியின் அந்தக்கால நவரத்தின பெண்டண்ட்டில் மற்ற கற்களைக்காட்டிலும் வைடூர்யம் மட்டும் டாலடித்து ஜுவலிக்கிறதேன்? தோகை இளமயில் ஆடி வருகையில் வானில் மழைவராவிட்டாலும், தோகை நிறங்கள் அசாதாரணமாய் ஒளிருவதேன்? சாலையிலுள்ள மழைநீர்தேங்கிய குட்டைகளில் பெட்ரோல் டீஸல் ஒழுகிப் படர்ந்து, தாண்டிச்செல்கையில் நாம் பார்க்கும் கோணத்திற்கேற்ப பல நிறங்களில் தெரிவதேன்? கணினி மென்தகட்டை வெளிச்சத்தில் அப்டி இப்டி திருப்பினால் பல நிறங்களாய் தெரிவதேன்? அநேக வண்ணத்துபூச்சியின் இறகுகள் பளபளப்பதேன்?
மகரந்தம்
உலக வரைப்படத்தில் சீனாவை பார்க்கும் போது ஒரு பெரிய விரிந்த அரங்கு போலத் தோன்றும். இந்த பரந்த அரங்கில் சீனா தன் மக்களையே ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு துரத்திஅடிக்கிறது. இது ஒருவகை சமூக கால்பந்தாட்டம் ஆனால் இங்கு இந்தக் கட்டுரை பேசுவது கால்பந்தாட்ட விளையாட்டு குறித்து.
20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 24
என்றாலும் காலப்போக்கில் இந்த இயக்கத்தில் கலைஞனின் படைப்புத் திறனுக்கு முக்கியத்துவம் கூடிவிட்டது. அதனால் பொருள்களின் விலை கூடி, பொது மக்களுக்காக என்னும் நோக்கம் அடிபட்டுப் போயிற்று. செல்வந்தர் மட்டுமே அவற்றை வாங்க முடிந்தது. கலைஞர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து போயிற்று. அதன்பின்னர் இந்த இயக்கம் ‘ஏஸ்தடிக் ஸ்டைல்’ (Aesthetic style) என்னும் புதிய பெயருடன் தொடர்ந்தது. அவ்வமயம் பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பிரபலமாக இருந்த ‘ ஆர்ட் நோவோ’ (Art nouveau) என்னும் இயக்கத்துடன் அது பெரிதும் ஒத்துப் போயிற்று.
3rd Letter – குறும்படம்
நீங்கள் வருங்கால உலகின் மேன்மைகள் குறித்த கற்பனாவாதியாக இருக்கலாம். இல்லை உலகின் சூடேற்றம் குறித்தும், மனித இனத்தின் இருப்பு குறித்தும் கவலை கொண்டவராக இருக்கலாம். யாராக இருந்தாலும் நீங்கள் தவறவிடக் கூடாத அறிவியல்-புனைவு குறும்படம் இது. இருண்ட எதிர்காலம், மரணித்துவிட்ட இயற்கை, கேள்விக்குள்ளாகும் மனித இருப்பு. இப்பின்னணியில் ஒரு “3rd Letter – குறும்படம்”
இருப்பு
உண்மையில் நான் இருப்பது கற்பனை செய்யமுடியாத அதிமகத்தான ஒரு மனித மூளையின் எண்ணற்ற மடிப்புகளுக்கிடையில் ஏதோ ஒரு இடுக்கில் என்று அறிந்தேன். மேலே கவிழ்ந்த அரைக்கோளமாய் மண்டை ஓடு தொட்டுக்கொண்டிருப்பதையும் மங்கலாகக் காணமுடிந்தது. இது என்னால் கொஞ்சம்கூட ஊகிக்கப்படவே முடியாதது என்று புரிந்தபோது மெல்ல என் திண்மையழிந்து, எடையிழந்து நான் இல்லாமலாவதை நானே பார்த்துக்கொண்டிருந்தேன். மூளைக்குள் நானிருக்கிறேன் என்றால் என் உடல் எங்கே என்று கேட்டுக்கொண்டேன். அல்லது நான் என்பதே வெறும் எண்ணம் தானா?
சோவியத் என்றொரு கலைந்த கனவு
சோவியத் என்றொரு புவி அமைப்பு இருந்தது. அது உலகெங்கும் பல மக்களின் கனவாகவும் இருந்தது. 20 வருடங்களுக்கு முன் அந்தக் கனவு கலைந்தது. ஒரு சித்தாந்தத்தின் வீழ்ச்சியாக அது கருதப்பட்டது. தனி மனித அளவில் பலருக்கு அது அளித்த ஏமாற்றம் அளப்பெரியது. ஏமாற்றம், அதைத் தொடர்ந்து வெற்றிடம். அந்த “சோவியத் என்றொரு கலைந்த கனவு”
‘தாயார் சன்னதி’ இரண்டாம் பதிப்பு – இப்போது விற்பனையில்
எழுத்தாளர் சுகா எழுதிய ‘தாயார் சன்னதி’ புத்தகத்தை சொல்வனம் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுள்ளது. இப்புத்தகத்தை இணையம் மூலமாக வாங்க முடியும்.
’பனுவல் போற்றுதும்’ – புத்தக வடிவில்
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சொல்வனம் இதழில் ‘பனுவல் போற்றுதும்’ என்ற தொடரில் அரிய புத்தகங்களை அறிமுகப்படுத்தி வந்தார். அந்தத் தொடர் இப்போது புத்தக வடிவில் ‘தமிழினி’ வெளியீடாக வெளிவருகிறது.
கலங்கிய நதியும், திரும்பிய விமானமும்
இந்நாவல் இரண்டு அடுக்குகளாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று ரமேஷ் சொல்லும் கதை. இன்னொன்று அதைத் தொகுக்கும் ரமேஷின் மனைவி சுகன்யாவின் பார்வை. சில இடங்களில் நான் இது சரியாக வரவில்லையே என்று நினைத்ததையெல்லாம் சுகன்யா விமர்சித்துவிடுகிறாள். ஆனால் இந்த உத்தி வெறும் பின்னவீனத்துவ விளையாட்டாக வலிந்து செய்யப்படாமல், நாவலின் இறுதிக்கட்டத்தில் இரண்டு அடுக்குகளும் அர்த்தபூர்வமாக ஒன்று சேர்ந்துவிடுகின்றன.
’கலங்கிய நதி’ – பி.ஏ.கிருஷ்ணனுடன் ஒரு உரையாடல்
எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனின் சமீபத்திய நாவல் ‘கலங்கிய நதி’. அவரது ஆங்கில நாவலான ‘The Muddy River’ என்ற ஆங்கில நாவலை அவரே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு மத்திய அரசு அதிகாரியின் வாழ்க்கையினுடான பயணத்தில் பல விஷயங்களை பேசிச் செல்லும் இந்நாவலின் வடிவம் தமிழ்க்கு புதிது. இந்நாவல் குறித்து பி.ஏ.கிருஷ்ணனுடன் நடந்த ஒரு உரையாடல் இது. ’ஆங்கிலத்தில் நன்றாக எழுதுபவன் என்ற பெயரை விட தமிழில் நன்றாக எழுதுபவன் என்ற பெயர் எனக்கு வாசகர்கள் மத்தியில் கிடைத்தால் மிகவும் பெருமையாக இருக்கும்’, என்று சொல்லும் கிருஷ்ணன், இந்த உரையாடலில் தன் நாவல் குறித்து மட்டுமல்லாமல், தன்னுடைய இளவயது குறித்தும், அதிகார மட்டத்தில் நிகழும் ஊழல், காந்தியம், அண்ணா ஹசாரே முதலிய பலவற்றைக் குறித்தும் பி.ஏ.கிருஷ்ணன் தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார் : ‘நேசிப்பவர்களுக்கிடையே நெருக்கம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு இடைவெளியும் இருக்கிறது. இது ஒருவருக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பைச் சிறிதளவும் குறைப்பதில்லை. ஆனாலும் அன்புடை நெஞ்சங்கள் தாங்கலந்தாலும் வானம் நீரை மீண்டும் இழுத்துக் கொள்கிறது. செம்புலம் உலர்ந்து விடுகிறது. வானம் மறுபடியும் பொழியும், நீர் திரும்பச் செம்புலத்தை வந்தடையும் என்ற நம்பிக்கையே இந்த நாவலின் மைய அச்சு. கதையின் இரு முக்கியமான பாத்திரங்களான சந்திரனும், சுகன்யாவும் இந்த நம்பிக்கையை வெவ்வேறு பாதைகளில் பயணம் சென்று சேர்ந்தடைகிறார்கள் அவர்களது பயணங்களைப் பற்றிப் பேசும் ஒரு சிறிய முயற்சியே இந்த வடிவம்.’
உடையும் இந்தியா? – புத்தகத்திலிருந்து ஒரு பகுதி
இந்தியாவைக் கூறுபோடுவதில் அமெரிக்காவுக்குப் பல லாபங்கள் இருக்கின்றன. மற்றொரு வலிமையான போட்டியாளர் ஏற்படுவதைத் தடுக்க முடியும். அமெரிக்க கம்பெனிகள் தங்கள் வேலைகளை இந்தியத் தொழிலாளர்களுக்கு அனுப்ப முடியும். ஒரு வலிமையான அரசு இல்லாதபட்சத்தில் அப்படி அனுப்பப்படும் தொழில்கள் முழுக்க முழுக்க அமெரிக்க லாபத்தைத் தவிர வேறெதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத முறையில் இருக்க முடியும்.
’துருவ நட்சத்திரம்’ – குறித்து இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன்
சொல்வனத்தின் சமீபத்திய வெளியீடான ‘துருவ நட்சத்திரம்’ புத்தகம் குறித்து மூத்த படைப்பாளிகளின் கருத்துகள்.
கால வெள்ளத்தில் கரைந்து போன கலைஞர்கள்
மறைந்த செம்மங்குடி சீனிவாசய்யரின் குருவான சகாராமராவ் திருவிடைமருதூர்க்காரர். செம்மங்குடியின் பேச்சில் எப்போதுமே சகாராமராவைப் பற்றி ஒரு செய்தி இருக்கும். அந்த சகாராமராவ் வாழ்ந்த திருவிடைமருதூரையும், அவர் குடும்பத்தினரையும் பார்த்து விட்டு வரலாம் என்ற எண்ணத்தில்தான் நாங்கள் அங்கு சென்றிருந்தோம். ஆனால் அவர்களைத் தேடிப்பிடிப்பது அத்தனை எளிதாக இல்லை.
மாங்குலை இல்லாத கல்யாணம்
‘துருவநட்சத்திரம்’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைக்க விரும்புவதாகவும், அதற்காக என்னுடைய கைபேசி எண்ணை லலிதாராம் கேட்பதாகவும் சேதுபதியிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. ‘தாராளமாக எண்ணைக் கொடுங்கள்’ என்று சேதுபதிக்கு பதில் அனுப்புவதற்குள், ‘லலிதாராமுக்கு ஒன்னோட மொபைல் நம்பர குடுத்திருக்கேன்’ என்று ‘பாட்டையா’ பாரதி மணியிடமிருந்து தகவல் வந்தது. சிறிது நேரத்திலேயே அழைப்பும் வந்தது. ‘வணக்கம் ஸார். நான் லலிதாராம் பேசுறேன்’. மனதோரத்தில் ரகசியமாக ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தகர்ந்து போகிற மாதிரி ‘லலிதாராம்’ என்ற ஆண்குரல் என்னிடத்தில் பேசியது.
இந்தியத் துண்டாட்டம் : உட்பகைகளின் அந்நிய வேர்கள்
ஒரு நாட்டின் வரலாற்றை ஆராயத் தேவையான கோட்பாடுகளை வழங்குவதன் மூலமும், அந்த ஆய்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலமும், அந்த ஆய்வு முடிவுகளை தகுந்த பிரச்சார அமைப்புகள் மூலமாக உலகரங்கில் முன்வைப்பதின் மூலமுமே தனக்கான ஆதாயங்களை மேற்குலகால் இன்று பெற்றுவிட முடியும். இந்த வகையில், ஒரு நாட்டின் வரலாறும், கலாச்சாரமும், மதமும் அந்நாட்டின் நலனுக்கு எதிராக உபயோகப்படுத்தக்கூடிய ஆயுதமாக ஆகின்றன. ஆக ஒரு நாட்டைக் கட்டுப்படுத்த போர், பொருளாதாரம் ஆகிய பழைய காலனிய கருவிகளைத் தாண்டிய ஒரு கருவி தற்போது மேற்கத்திய நாடுகளின் கையில். அது, பண்பாட்டு ஆய்வுகள்.
’உடையும் இந்தியா?’ புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்
’உடையும் இந்தியா?’ புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்
அருங்குணச் செல்வன் காருகுறிச்சி
அருணாசலம் நாகஸ்வரம் வாசிப்பது போலவே வாய்ப்பாட்டும் அற்புதமாகப் பாடுவார். பாடும்போது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாட்டையோ, ராகத்தையோ நிறுத்தி, “இந்த இடத்தில் எங்கள் வாத்தியார் அற்புதமாக வாசிப்பார். அவர் வாசித்துக் கேட்க வேண்டும்” என்று பரவசத்தோடும், பக்தியோடும் சொல்வார். ஒரு ராகத்தைப் பாடி முடிக்கும் முன் ஐந்தாறு தடவைகள் இவ்வாறு கூறிக் குருவின் மேதாவிலாசத்துக்குப் புகழ்மாலை சூட்டி வணங்குவார். குருவே அருணாசலத்துக்கு உயிரும், தெய்வமும் என்று சொல்லி விடலாம்.
சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 7
எனக்குத் தனிப்பட்ட முறையில் சிலசமயம் கர்வமாக இருக்கும் நம்மாழ்வாரை நினைக்க. வெள்ளாளன் என்பதால் அல்ல. ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு தாயார் ஊருக்கு அவர் வந்திருக்கிறார் தானே. திருப்பதி சாரத்தின் மேற்கில் பழையாற்றில் குளித்தும் கீழ்புறத்தில் தேரேகாலில் குளித்தும் அந்நன்னீரைக் குடித்தும் இருப்பார்தானே! அது எனக்கும் நேர்ந்திருக்கிறது தானே! அவர் வழிபட்ட திருவாழிமார்பனை நானும் வழிபட்டிருக்கிறேன் தானே!
நம்பி இருந்த வீடு
திருக்கோட்டியூர் நம்பி பிறந்து இன்றைக்கு 1024 ஆண்டுகள் ஆகின்றன. இவருடைய இயற்பெயர் திருக்குருகைப்பிரான். குருகேசர் என்றும் அழைப்பர். ஆளவந்தார் பிறந்து பதினோரு வருடங்களுக்குப்பின் பிறந்தவர். இராமானுஜரிடம் அளவு கடந்த அன்பு கொண்டவராக விளங்கியவர். எப்போது எல்லாம் இராமானுஜரைக் காணவேண்டும் என்று விரும்புகிறாரோ அப்போதெல்லாம், “நான் கோயிலுக்குச் சென்று வருகிறேன்” என்று வீட்டில் சொல்லிவிட்டு திருவரங்கத்தில் இராமானுஜரை சந்திக்கச் சென்றுவிடுவாராம்.
கதைப் புத்தகம்
நேற்று வரை கதவு அங்கிருந்த ஞாபகம் இல்லை. எதுவரை நேற்று வரை என்பதே வெறும் மனக்கணக்கு தான். ஞாபகம் பற்றி கேட்கக்கூட வேண்டாம். ‘காலம்’ என்பது கட்டுப்படுத்தப்பட்டு, தண்ணீர், மின்சார விநியோகம் போல, தினப்படி வழங்கப்படும் போது, ‘காலக்கிரமமான நிகழ்வுகளின் தொகுப்பான ஞாபகம்’ என்பதற்கு அர்த்தமேயில்லை. உச்ச செயல் துறையிடம், ‘நேற்றை’ ‘நாளை’யாகவும், ‘ இன்றை’ ‘நேற்றா’கவும, ஒன்றை என்றாகவும் மாற்றும் தனிப்பிரிவு இருந்தது.