ஒரு அறுபது வயதுக்காரனாக நான் திரும்பிப் பார்க்கிறவற்றை, நாற்பது வயதுக்காரராக அவர் திரும்பிப் பார்க்கையில், இரண்டு பார்வைகளுக்கும் இடையில் அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டு பேரும் எல்லோரையும் அப்படியே ஆவி சேர்த்துக் கட்டிக் கொள்கிறோம். சுகா அப்படிக் கட்டிக் கொள்வதற்கு முன் அல்லது பின் அல்லது முன்னும் பின்னுமே ஏதாவது கிசும்பும் கிண்டலும் கேலியுமாக நிறையப் பேசுகிறார். அந்த நகைச் சுவை அவருடைய வம்சா வழிச் சொத்து. என்னுடைய பத்திரத்தின் தபசிலில் அது ஒரு இணுக்கு கூட இல்லை. அப்படி மந்திரம் மாதிரி வாய் ஓயாமல் ஏதாவது சொல்லச் சொல்ல, உருவேத்தினது போல, அந்தச் சொல்லுக்குள்ளிருந்து புடைப்புச் சிற்பங்களாக ஆட்கள் மேலெழுந்து வருகிறார்கள். ஆட்களின் எடைக்கு எடை. பேர்பாதியாக அவர்களுடைய திருனவேலி பாஷையையும் சேர்த்து நிறுத்துப் போடப் போட, அவர் எடுத்த மேற்படி புகைப்படங்கள் தத்ரூபமாக நம் முன்னால் நடமாட ஆரம்பித்து விடுகின்றன. இந்தப் பாவிக்கு, படிக்க வைக்கிறபோது ஆனா ஆவன்னாவில் இருந்து சொல்லித் தராமல், அக்கன்னாவில் இருந்து ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ. நிறையக் கட்டுரைகளின் கடைசி வரி அவ்வளவு வாக்காக அமைந்து, அதற்கு முந்திய அத்தனை வரிகளையும் உயரத்திற்குக் கொண்டுபோய் விடுகிறது.
Category: இதழ்-61
’துருவ நட்சத்திரம்’ புத்தக வெளியீட்டு விழா
மாமேதை பழநி அவர்களின் நினைவு சொல்வனம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தால் பாதுகாக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்கு ஒரு நியாயமும் அவசியமும் இந்த இசை தொடர்ந்து வளரும்போதுதான் இருக்கிறது. மிருதங்கமும் புதுக்கோட்டை பாணியும் சபைகளில் மட்டுமின்றி நம் கிராமப்புறங்களிலும் தொடர்ந்து ஒலிக்க வேண்டும்- அருங்காட்சியகத்தில் இருக்கும் ஆவணங்களை நாம் தொட முடியாமல் தூரத்தில் இருந்து ஏக்கத்துடன் பார்க்கும் நிலை இந்தப் புத்தகத்துக்கும், இது பேசும் இசைக்கும் வந்து விடக் கூடாது.
காதலர் பூங்கா
தொடர்ந்து நாங்கள் அந்தப் பூங்காவில் ‘Walking’ போனாலும், எங்கள் இருவரின் உடம்பும் இளைக்காமல் போனதற்குக் காரணம், இரண்டு மாதங்களுக்கு நான்கே நான்கு முறை மட்டும் நாங்கள் அந்தப் பூங்காவுக்குச் சென்றது மட்டும் காரணமில்லை. உட்கார இடம் தேடி அந்தப் பூங்காவில் நாங்கள் அலையும் நேரம் மட்டுமே எங்கள் ‘Walking’ அமையும்.
இதழ் குறித்து…
துவக்கத்திலிருந்து ’சொல்வனம்’ இலக்கியம் மட்டுமல்லாமல் பல்துறை சார்ந்த கட்டுரைகளையும், புனைவுகளையும் வெளியிட்டுவருகிறது. இவற்றுக்கு வாசகர்களிடமிருந்து கிடைக்கும் மறுவினைகள் எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கின்றன. தொடர்ந்து சொல்வனம் இதே திசையில் செல்லும். சமீபத்தில் பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன் ஆகியோருக்கு அவர்களின் பல பத்தாண்டு கால இலக்கிய இயக்கத்தைக் கௌரவிக்கும் வகையில் பொருத்தமான விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்களை எம் பங்குக்குக் கெளரவப்படுத்தும் விதமாக, இந்த இதழில் எப்போதும் போல் பல்துறை சார்ந்த கட்டுரைகளுடன், அவர்கள் சம்பந்தப் பட்ட சில படைப்புகளையும் வெளியிட்டுள்ளோம்.
துருவ நட்சத்திரம் – தனி ஆவர்த்தனக் கச்சேரி
இந்தக் கணக்கெல்லாம் கையில பேச அசுர சாதகம் பண்ணிருப்பாய் இல்லையா? கேட்க நன்னாத்தான் இருக்கு. இதையெல்லாம் ரசிக்கவே நிறைய ஞானம் வேணும். போன கச்சேரியில பிரமாதமா தனி வாசிச்சாய். திஸ்ரத்துக்குள்ள சதுஸ்ரத்தை நுழைச்சு வாசிச்சதெல்லாம் பெரிய காரியம். பட்சே, நான் கல்யாணி கிருதி அனுபல்லவியில கார்வை குடுத்து நிறுத்தினப்போ ஸர்வலகுவா ரெண்டு ஆவர்த்தம் வாசிச்சயே, அப்போ நிஜமாவே சிலிர்த்துப் போச்சு. அதுனாலயாக்கும் இன்னொருக்கா அதே எடத்தைப் பாடினேன்.
பூமணி – அள்ளக் கிடைக்காத அம்பாரம்
பூமணியின் சிறுகதைகளில் ஒருமையைக் கண்டுபிடிப்பது கடினம். சில கதைகள் கிராம வாழ்வைப் பேசுகின்றன, சில நகர வாழ்வை, சில கதைகள் சாதி குறித்து, சிலவற்றில் சாதி பற்றிய பேச்சே கிடையாது. சில கதைகள் சிறுவர்கள் பார்வையில் சொல்லப்படுகின்றன, சில பெண்களின் பார்வையில் என்று ஒவ்வொரு கதையும் மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது.
ஒரு மரம்; தனி மரம்
என் அறையில் நான். உறாலில் அவள். உள் அறையில் அவன். வீடே ஒரு நூலகமாய்த் தோன்றுகிறது. ஏகாந்த அமைதி. பல மணி நேரங்கள் இந்த வீடு இப்படி இருப்பதற்கு அனுபவப்பட்டிருக்கிறது. என் வீட்டிற்குப் பெயா; சாந்தி இல்லம். அது என் மனதை ஈர்த்த ஒரு ஏழைப் பெண்ணின் ஞாபகமானது. முட்டி முட்டிக் கேட்டிருக்கிறாள் சத்யா அது யார் என்று? அது என்னோடு தோன்றி என்னிலேயே அழியக் கூடிய ரகசியம்.
விஷ்ணுபுரம் விருது 2011
’விஷ்ணுபுரம் விருது 2011’ விழா அழைப்பிதழ்
20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 23
ஓவியர்கள் தங்கள் ஓவியங்களில் உருவங்களைத் தத்ரூபமாக -இயற்கைக்கு வெகு அண்மையான நுணுக்கங்களுடன்- படைத்தனர். ஓவியங்களில் அனைத்துப் பொருட்களும் (உருவங்கள் / வடிவங்கள்) ஒரே விதமான அக்கறையுடனும், தெளிவுடனும் தீட்டப்பட்டன. முன்னர் ஓவியத்தின் கீழ்பகுதியில் பெரும்பாலும் உருவங்கள் நிழலில் தெரியும் தெளிவில்லாதவிதமாகவே படைக்கப்பட்டன. அதை மாற்றி அவற்றையும் தெளிவாகத் தெரியும் விதமாக ஒளிரும் வண்ணங்கள் கொண்டு அமைத்தனர்.
மனிதர் என்றென்றுமாக வாழ முடியுமா?
மனிதர் என்றென்றுமாக வாழ முடியுமா? அதற்கு என்ன தடைகள்? என்ன செய்து இவற்றில் பலவற்றை நாம் விலக்க முடியும்? துவக்கத்தில் சாவைப் பற்றி நாம் நினைப்பதையே நாம் மாற்ற வேண்டும். மூப்பு என்பதை எப்படி அணுகுகிறோம் என்பதில் இருந்து துவங்க வேண்டும். வெறும் மூப்பு என்பது அத்தனை நல்ல “மனிதர் என்றென்றுமாக வாழ முடியுமா?”
2011 – ஒரு பார்வை
இந்த வருடமும் வழக்கம்போல் மகிழ்ச்சிகள், நிறைவேறாத எதிர்பார்ப்புகள், சோகங்களுக்கிடையே கழிந்தது. பல இடங்களில் நடந்த பல்வேறு இது போன்ற நடவடிக்கைகளை காட்சிப்படுத்தும் புகைப்படத் தொகுப்பு இங்கே : மேலும் புகைப்படங்கள் : 1. http://www.theatlantic.com/infocus/2011/12/2011-the-year-in-photos-part-1-of-3/100203/ 2. http://www.theatlantic.com/infocus/2011/12/2011-the-year-in-photos-part-2-of-3/100204/
SPARROW – ஒரு பெண்களின் நிறுவனம்
பெண்களின் சரித்திரம், அன்றாட வாழ்க்கை, போராட்டம் இவற்றை ஒலி மற்றும் காட்சி வடிவங்கள் மற்றும் வாய்வழி சரித்திரப் பதிவுகள் மூலம் ஆவணமாக்கி வரும் ஒரே ஆவணக் காப்பகம் ஸ்பாரோ(SPARROW). எழுத்தாளர் அம்பையின் பங்களிப்பை கொண்டிருக்கும் இந்த நிறுவனம் குறித்து ஒரு அறிவிப்பு.
சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 6
காரைக்காலம்மையின் தமிழை, செய்யுளை, வெண்பாவின் நேர்த்தியை, நயத்தை வாசித்து உணர்தல் வேண்டும். எட்டாம் நூற்றாண்டுத் தமிழ் அப்படியொன்றும் நமக்கு இன்னும் அன்னியமாகிப் போய்விடவில்லை. இருமலுக்கு பனங்கற்கண்டுக் கட்டியை அலவில் ஒதுக்குக் கொள்வதைப் போல, ஒரு பாடலை மனதில் போட்டுக் கொண்டால் அது கரைந்து இனிப்புப் பயக்கும். முதலில் பொதுவான பொருள் புரிந்தால் போதும். சில சொற்களுக்குப் பொருள் முதலில் புரியாவிடின் ஒன்றும் மோசம் இல்லை. நாட்பட நாட்படப் புரியும். கொண்டல், கொண் மூ, கார்முகில், எல்லாம் மேகம் தான். அரவம், நாகம், சர்ப்பம் எல்லாம் பாம்பு தான். நாட்பட நாட்பட நாகம் எனில் யானை என்றும் பொருள் உண்டு என்பதும் அர்த்தமாகும்.
வாசகர் மறுவினை
சொல்வனம் இதழில் வெளியான படைப்புகளுக்கு வாசகர்களின் மறுவினை.
மானிடர்க்கென்றுப் பேச்சுப்படில்!
சித்தி பெயருக்கேற்ற கோதைதான், 75 வயதிலும் அழகும் மெருகும் குலையாமல், சிக்கென, சின்னப் பெண்போல காரியங்களைக் கண்ணும் கருத்துமாகச் செய்வாள். எப்போதும் யாராவது உறவினர் வீட்டு கல்யாண கலாட்டா நிரம்பிய சமையலறையிலோ, இல்லை குழந்தைப் பேற்றுக்காக அழைத்து வரப்பட்ட உறவினர் வீட்டுச் சமையலறையில் பத்திய உணவு தயாரிப்பதிலோ, பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டி, சீராட்டி, தாலாட்டுவதிலோ தன்னை மறந்திருப்பாள்.
வீடு வாங்கிய கதை
திருமணம் ஆன பிறகு “மாப்பிள்ளை, எப்போது குழந்தை?” என்ற கேள்விக்கு விடைகிடைத்தபின்பு வீட்டுக்கு வருபவர்கள் “எப்போது சொந்த வீடு?” கேள்விக்கு மாறிவிட்டார்கள். “சரி நாமளும் ஆணி அடிக்க சொந்த வீடு வாங்கலாமே” என்ற எண்ணம் எட்டு வருடம் முன் உதித்தது. பிளாட்(Plot) வாங்கி நம் இஷ்டத்துக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற நினைப்பில், சனி ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் காலி வீட்டு மனை கிடைக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தேம்.
இலக்கிய அங்கீகாரங்கள்
சமீபத்தில் இரு இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டும் தகுதியான படைப்பாளிகளுக்கு அளிக்கப்படுகின்றன. 2011-ஆம் ஆண்டிற்கான ‘சாரல்’ விருதிற்கு எழுத்தாளர்கள் வண்ணநிலவனுக்கும், வண்ணதாசனுக்கும் அளிக்கப்படுகின்றன. 2011-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் பூமணிக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள். தகுதி வாய்ந்த படைப்பாளிகளைத் தொடர்ந்து கெளரவித்து வரும் சாரல் விருது அமைப்புக்கும், விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்துக்கும் வாழ்த்துகளையும், நன்றியையும் சொல்வனம் தெரிவித்துக் கொள்கிறது.
மகரந்தம்
கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் கையாளும் தரவுகள் அளவில் மிகப்பெரியவை. அவை இந்த தரவுகளை எப்படி கையாளுகின்றன போன்ற தகவல்கள் பொதுவாக வெளியில் வருவதில்லை. ஏதோ ஒரு ரகசிய இடத்தில் இந்த தரவுகளும், அதன் சர்வர்களும் கையாளப்படுகின்றன. ஆனால் முதன் முறையாக ஒரு கட்டுரை உங்களை அந்த ரகசிய இடத்திற்கு கொஞ்சம் அருகில் அழைத்து செல்கிறது.
அலீசியா பூல் ஸ்டாட் பார்த்த நான்காம் பரிமாணம்
ஏற்கனவே நான்காம் பரிமாணத்தில் ஒழுங்கான ஆறு பன்வகைகள் (polytopes) இருப்பது அறியாமல், அலீசியாவும் அவைகளைத் தானாகவே கண்டறிந்தார். மேலும் அந்த ஆறு பன்வகைகளுக்கு மூன்றாம் பரிமாணக் குறுக்கு வெட்டு (cross section) மாதிரிகளை அட்டையை (card board) வைத்து உண்டாக்கினர். இதே நேரத்தில் ஹாலந்து நாட்டில் ஷௌடே (Schoute) என்ற பேராசிரியர் பகுப்பாய்வு முறையில் அலீசியா கண்டறிந்த அதே போன்ற நான்காம் பரிமாணத்தின் ஒழுங்கான பன்வகைகளின் மூன்றாம் பரிமாணத்தின் குறுக்கு வெட்டுக்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டிருந்தார்.
பற்பசைக்குழாயும் நாவல்பழங்களும்
மொட்டை மாடி அழகாகவே இருந்தது. யாராலும் மொட்டை மாடிகளை வெறுக்க முடியும் என்று தோன்றவில்லை, சிறியதோ, பெரியதோ அது அடைசலும் புழுக்கமும் அற்ற திறந்த வெளியில் நம்மை நிறுத்திவிடுகிறது. நிச்சயம் காற்று இருக்கும். பளிச்சென்று நம்மைச் சுற்றி வானம் வெள்ளையும் நீலமுமாக இறங்கும். இடம் வலம் எங்கு திரும்பினாலும் மேகமாக இருப்பது நம்மை என்னவோ செய்யாமல் இராது. மொட்டை மாடியில் வைத்து யாராவது கோபப்பட்டிருக்க முடியும் என்று தோன்றவில்லை. மேலும், மழையும் வெயிலும் அடித்து அடித்து இந்தத் தளச் செங்கல்களுக்கு நேர்ந்திருக்கிறதை உற்றுப் பார்த்தாலே எல்லாம் புரிந்து விடவும் கூடும்.
வண்ணநிலவனுடன் ஒரு சந்திப்பு
ஏராளமான படைப்புகளைப் படித்துப் படித்து மனம் ஒருவிதமான மொழிசார்ந்த தளத்தில் பக்குவமாக இருக்கிறது. இதனுடன் நமது சொந்த அனுபவங்கள் சேரும்போது படைப்பு வெளியாகிறது என்று நினைக்கிறேன். என்னுடைய முதல் சிறுகதையான ‘மண்ணின் மலர்கள்’ என்ற சிறுகதை, சாலையோர மரம் ஒன்று வெட்டப்படுவதைப் பற்றியது. இது ஒரு உண்மைச் சம்பவம். பாளையங்கோட்டையில் முருகன்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் பலருக்கும் நிழல் தந்த மரத்தை எதனாலோ வெட்டினார்கள். அது எனக்குக் கஷ்டமாக இருந்தது. அந்த மனநிலையைத்தான் சிறுகதையாக எழுதினேன்.
பொறாமை எனும் விஷம்
இன வாதக் கோட்பாடு, தங்களைக் குறித்து சந்தேகமும், தாழ்வுணர்ச்சியும் கொண்டிருந்த பலவீனமான ஜெர்மானியர்களை, தாங்கள் ஒரு வலுவான மற்றும் உயர்ந்த அறிவுஜீவிகளாகக் கற்பனை செய்துகொள்ளும் கூட்டத்தினராக மாற்றியது. இனவாதம் என்பது பலவீனத்தால் உந்தப்பட்டு மந்தைக்குள் சென்று சேர்வதன்றி வேறல்ல.
எம்மைப் பறித்தால், எம் குருதி வடியாதா
1900ஆம் ஆண்டு வாக்கில் போஸ் தாவரங்களின் ரகசிய உலகம் பற்றிய தனது புலனாய்வுகளை ஆரம்பித்தார். அனைத்துத் தாவரங்களுக்கும், தாவரங்களின் உறுப்புகளுக்கும், பிராணிகளை ஒத்த கூர் உணர்வுடைய நரம்பு மண்டலம் இருப்பதையும், புறத்தூண்டுதல்களுக்கு அவற்றின் எதிர்வினைகள் அளக்கப்பட்டு பதிவு செய்யக்கூடியவை என்றும் அவர் கண்டறிந்தார்.
டென்னிஸ் ரிச்சீ (1941- 2011)
டென்னிஸ் ரிச்சீக்கு கவனம் படிப்பில் மட்டும்தான். இவருக்கு உடற்பயிற்சி, விளையாட்டுகளில் கவனம் இல்லை என்பது தாய் மேக்கீக்கு வருத்தம் அளித்தது. ஆனால் இவரே பிற்காலத்தில் தான் உருவாக்கப்போகும் ஸி மொழி மூலம் உலகெங்கும் பல்வேறு கம்ப்யூட்ட கேம்ஸ் உருவாகக் காரணமாக இருக்கப்போகிறார் என்பது அப்போது அவர் தாய்க்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஏன் பல்லி கொன்றீரய்யா
பத்து வருட ஆராய்ச்சியில் பல பல்லிகளை சந்தித்து, க்ளவுஸ் அணிந்து கைகுலுக்கி, நுண்னோக்கி, சிந்தித்து, பல்லியின் கால் படம் மட்டும் வரைந்து, நுண்ணோக்கியில் தெரியும் பல பாகங்களை குறித்து… என்.சி.வசந்தகோகிலம் இன்றிருந்து இப்பல்லி ஆராய்ச்சியை கேள்விப்பட்டிருந்தால், தான் ரங்கனாதர் மேல் பாடியதை சற்றே திருத்தி, “ஏன் பல்லி கொன்றீரய்யா” என்று மோஹனத்தில் பொருமியிருப்பார்.
மரம் மெல்ல பறக்கும்
ஒரு
அற்புதத்துளி போதும்
வேர்களை விடுவிக்க
பெருங்கருணைமுன்
ஆயிரங்கரமுயர்த்தி
மன்றாடும் மரம்.
ஈர்ப்பு : ஒரு வியப்பு
அமர்ந்திருக்கும்போது அல்லது நின்றுகொண்டிருக்கும் போது, நம் உடலின் எடை முழுவதும் ஏதோ ஒரே ஒரு புள்ளியில் குவிந்திருப்பதைப் போல் தோன்றும்படி, ஈர்ப்பு விசையை அளிப்பதுபோல் தோன்றும். பொருளுக்கு ஒன்று ஓர் அடித்தளம் கொண்டிருக்குமானால் அந்த அடித்தளத்தின் மீது பொருளின் ஈர்ப்பு மையம் இருக்கும்; அப்போதுதான் அந்தப்பொருள் தடுமாறி விழாமல் இருக்கும்.