நதிக்கடியில் மனிதர்கள்

“கடவுள் என்னைக் காப்பாற்றினார் சகோதரர்களே! கடவுள் எப்போதும் பாவப்பட்டவர்களுடன்தான் இருப்பார். நதிக்கடியில் நிறைய புனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் என் கஷ்டங்களைப் பார்த்து மனம் வருந்தி, எனக்கு அன்பளிப்பாக இந்த மாடுகளைக் கொடுத்தார்கள். என்னைப் பாதுகாப்பாக கரையேற்றிவிட்டதும் அவர்கள்தான். என் நினைவுக்காக என் உடையை மட்டும் அவர்கள் வைத்துக்கொண்டார்கள். கடவுள் அவர்களை ஆசிர்வதிக்கட்டும்!”

உயிரிழை

“நாலே நாலு டிக்கட் கொடுத்துவிட்டு ஹவுஸ் ஃபுல்லாடா நாயே” கதவைத் திறடா” “அந்த ரெண்டு நாயிங்களுக்கு மட்டும் எப்படிடா டிக்கட் கொடுத்தே.” “டேய் நாயிங்களா. வெளிலே வாங்கடா பார்க்கலாம்” என்று பலவாறு கூச்சல்கள் கேட்டன. அவனுக்கு பயம் தாங்க முடியவில்லை. கதவு பெயர்ந்துவிடும் போல் இருந்தது. வெளியிலிருந்து ஒரு குரல் ஒரு ஜாதிப் பெயரைச் சொல்லி கூடவே நாயிங்களா வெளியே வாங்கடா என்று இரண்டு மூன்று ஆபாச சொற்றோடர்களைக் கத்தியது. இன்னும் பல பேர் அதில் சேர்ந்து கொண்டார்கள்.

மனிதன் 2.0 எப்படி இருப்பான்?

ஆன்லைன் வாசகர்கள் ட்விட்டர் பற்றி அறியாமல் இருக்க முடியாது. ‘என்னுடைய பூனை பிங்க்கி காலையிலிருந்து பர்ர்..ர் என்று சப்தம் எழுப்புகிறது’ என்பது போன்ற மானாவாரியான செய்திகளுக்கிடையே சில சமயம் முத்து ரத்தினங்களும் சிக்குவதுண்டு. திடீரென்று ட்விட்டருக்கு ஞானம் பிறந்து, நீங்கள் என்ன மாதிரியான செய்திகளைப் படிக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு, மலச்சிக்கல் பூனைகளையெல்லாம் வடிகட்டிவிட்டுக் கொடுத்தால்? அப்போது தகவல் ஓவர்லோடினால் வரும் நிரந்தரமான அரைப் பிரஞ்ஞை நிலையிலிருந்து மீண்டு, கௌதம புத்தர் போன்று எல்லாம் அறிந்த ஓர் உணர்வு நிலையை எட்டுவோம்.

முகம் சொல்லும் கதை

உலகின் சிறந்த புகைப்படங்களை அறிமுகப்படுத்தும் புதிய தொடர் இது: ஷரபத் குலா ஸ்டீவ் மக்கரியைச் சந்தித்தபோது அவர் தன்னுடைய விருப்பமாகச் சொன்ன ஒரே ஒரு விஷயம், தனக்குக் கிடைக்காமல் போன கல்வி தன் மூன்று பெண் குழந்தைகளுக்காவது கிடைக்க வேண்டும் என்பதுதான். சோவியத் யூனியனின் தாக்குதல்களில் தன் குடும்பத்தை இழந்த குலா, இப்போது பெண்களின் சுதந்திரத்தையும், தேவைகளையும் காலடியில் நசுக்கி வரும் தாலிபான் ஆட்சியில் பழமைவாதிகளின் மத்தியில் வாழ்ந்து வருகிறார். உலகெங்கும் அறியப்படும் இந்தப் பிரபலமான முகம் இப்போது ஆப்கானிஸ்தானின் ஏதோ ஒரு மூலையில் பர்தாவுக்குப் பின் மறைந்திருக்கிறது.

மகரந்தம்

மேற்குலகில், ஆண்களின் இருப்பையும்/அவசியத்தையும் கேள்விக்குள்ளாக்கும் பெண்ணியத்தின் “நான்காவது அலை” தொடங்கிவிட்டது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெண்ணியம் குறிப்பிடப்படும்படியான வெற்றியை அடைந்ததுள்ளது. பெண்கள் மிகவும் அவதியுறும் ஈரான் போன்ற நாடுகளில் பெண்ணியத்தின் வெற்றி வெகு தொலைவில் இருந்தாலும், அதன் தேவை மிக அதிகம்.

ஹாரிசன் பெர்ஜரான்

2081-ஆம் ஆண்டு. எல்லோரும் ஒருவழியாக முழுமுற்றான சமத்துவத்தை அடைந்து இருந்தனர். கடவுளின் முன்போ, சட்டத்தின் முன்போ மட்டுமே கட்டுப்பட்ட சமத்துவம் இல்லை அது. எல்லா நிலைகளிலும் அனைவரையும் முழுமையாக ஒருமைப்படுத்திய அதிசயம் அது. யாரும் யாரை விடவும் புத்திசாலியாக இல்லை, அழகாகவும் இல்லை. அவ்வளவு ஏன், எந்த ஒருவரும் மற்றவரை விட அதிக வலிமையும், சுறுசுறுப்பும் கூட கொண்டு இருக்கவில்லை.

பின்தொடருதல் – 1

இரவுடை தரித்த குண்டு பெண்ணொருத்தி
குப்பையைக் கொட்ட தெருவிற்குள் இறங்கினாள்
வலது காது, முதுகு கால்கள் வால் என கருமை
அடர்ந்த வெள்ளைக் கொழுகொழு நாயொன்று
பின்னாலேயே குடுகுடுவென நிற்காமல் ஓடி வந்தது

வாசகர் எதிர்வினை

இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் நேரடி வாசிப்பில் சிறிய புன்னகையையும், தொடர்ந்த யோசிப்பில் வாழ்க்கையின் பெரிய குரூரத்தையும் ஒரு சேர முன்வைத்தன. சொல்வனம் இதழில் திரு.விக்கி எழுதிய இளையராஜாவைக் குறித்த கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது. சாம்.ஜி.நேதன், ராமன்ராஜா இருவரும் ஆழமான கருத்துகளை மிகவும் எளிமையான நடையில் எழுதி வருகிறார்கள்.

எல்லை மீறும் கம்பிகள் – ராகசாகா

அறிவியலிலும் சரி, கலை வடிவங்களிலும் சரி திறந்த மனநிலையே பல புதிய சாத்தியங்களுக்கு இட்டுச் செல்லும். இந்தத் தொகுப்பைக் கேட்கும் அனைவரையும், சங்கம இசை வடிவம் மற்றும் ஒலிகள், அடுத்த கட்ட ரசிகனாக மாற்றும் என்பதில் சந்தேகமேயில்லை. ராகசாகா கர்நாடக சங்கீதத்தை மட்டுமல்லாது ரசிகனின் ரசனையையும் மேம்படுத்தி இசைத் தேடல்களுக்குத் திறவுகோலாக இருக்கும் என நம்பலாம்

கோலுக்கு கை கொடுப்போம்

தஞ்சாவூரில் ’மகரநோன்புச்சாவடி’ (மானம்புச்சாவடி) எனும் ஓர் இடம் உள்ளது. அங்கே தஞ்சை மன்னர்கள் காலத்தில் கோலாட்டமும், பின்னல் கோலாட்டக் கச்சேரிகளும் நடைபெற்றனவாம். இன்றைக்கும் ஒரு சில கிராமங்களில் விடியற்காலை சூரிய உதயத்திற்கு முன்னால் கோயில்களில் பெண்கள் கூட்டமாகக் குழுமித் ‘திருப்பாவை’ போன்ற பாடல்களைப் பாடித் தோழிகளை அழைத்துக் கோலாட்டம் போடுகின்ற மரபைப் பார்க்கலாம்.

மாற்றங்களை மறுதலிக்கிறதா இந்திய ராணுவம்?

கார்கில் போர் நடந்துமுடிந்து சென்ற ஜூலையோடு பத்து வருடங்கள் ஆகின்றன. இன்னொரு கார்கில் போர் ஏற்பட்டால் நம்மால் சமாளிக்க முடியுமா? கார்கில் போரில் நாமிழைத்தத் தவறிகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோமா? இந்திய ராணுவத்திடம் நவீனத் தாக்குதல்களுக்கான தளவாடங்கள் உள்ளனவா? – அலசுகிறார் அமர்நாத் கோவிந்தராஜன்: “காஷ்மீர் போன்ற பல்லாயிரம் வீரர்கள் எல்லைப்பகுதிகளில் இருபக்கமும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற தவறுகள் நடக்க வாய்ப்புகள் இருந்தாலும் அவற்றை விசாரிப்பதும் ஏற்பட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்பதும் எந்தவொரு ராணுவ அமைப்புக்கும் மிகவும் முக்கியமான விஷயம். ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை ஒன்றை நடத்தியிருந்தாலும் இன்றுவரை பொதுமக்களின் பார்வைக்கு அந்த விசாரணையின் முடிவு தெளிவாக எடுத்துச் செல்லப்படவில்லை.”

தொடர்ந்து சுருங்கும் இந்திய எல்லைகள்

நடுநிசியில், 12 மணி அடித்து ஆங்கிலக் காலண்டர் பிரகாரம் 15ம் தேதி தொடங்கியவுடன் பிரிவினைக்கப்புறம் மீதியிருந்த நாடு (முழு இந்தியாவில் ஏறக்குறைய முக்கால் பங்கு) இந்தியன் யூனியன் என்றபெயருடன் இன்னொரு நாடாக உதயமாயிற்று. அதற்கு முன் ஜோதிட ரீதியில் நாள் நன்றாக இல்லையாம். பாகிஸ்தான் பிறந்தவேளை மரண யோகம் என்றும் சொன்னார்கள். அடுத்த அறுபத்தியிரண்டு ஆண்டுகால வரலாற்றைத் இன்று திரும்பிப் பார்ததால் அது சரியாக இருக்கலாம் என்று தோன்றவும் செய்யலாம்.