மகரந்தம்

உணவு வாங்கப் பணம் இல்லை, வீட்டுக் கடனுக்கு வட்டி கட்டப் பணம் இல்லை என்று தெருவில் வாழ நேர்கிற நிலையில் உள்ள முன்னாள் மத்திய வர்க்கத்தினர் இன்று ஏழைகளுக்கு இலவச உணவு கொடுக்கும் சூப் கிச்சன்களில் வரிசையில் நின்ற வண்ணம் தம் நிலையை நினைத்துக் கண்ணீர் சிந்துகிறார்கள். ஆனால் இன்னும் கோடீஸ்வரர்களுக்கு வரி விதிக்கக் கூடாது என்ற அரசியல் கொள்கையையே ஆதரிக்கிறார்கள் என்பதுதான் என்னே விசித்திரம்.

Quantum Levitation

அந்தரத்தில் மிதக்கும் வித்தையாளர்களைத் தான் பார்த்திருக்கிறோம். அடுத்த கட்ட இயற்பியலின் விதிகளை முன்னிருத்தும் இந்த கண்டுபிடிப்பை பாருங்கள்.

சீனா – சவால்களும் குற்றச் செயல்களும்

பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக சமூகவியலாளர்கள் பார்ப்பவை ஊழல், குடிமக்கள் சட்டங்களை, நிர்வாக விதிகளை அவமதிப்பது, சுற்றுச்சூழல் அழிப்பு ஆகியவை, இவை தவிர, நகரை நோக்கி அலையலையாகக் கிளம்பிப் போகும் மக்கள் கூட்டம். நகர வாசிகளுக்கு இருக்கும் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் இம்மக்களிடம் இல்லாததால் இவர்களை நிர்வகிப்பதே மிகவும் சவாலாக இருக்கிறதாகச் சொல்பவர்கள் அரசு அதிகாரிகள்.

புரட்சியில் நீ இணையும் நாள் இதுதானா?

காவல் துறையினர், தன்னைப் பார்க்கக்கூடிய அளவில், அண்மையில் இருக்கின்றனர் என்பதைக் கண்டுகொண்ட லிஸ், கொஞ்சம் தாராளமாகவே நீலிக்கண்ணீர் வடித்தாள். அவர்கள் கிரெக்கிடம் அச்சிட்ட தாள் ஒன்றினை அளித்து, அவனிடமிருந்த பற்றுச்சீட்டின் எஞ்சிய பகுதியில் முத்திரை பதித்துவிட்டு, அவளை கண்ணியமாக நடத்தி, வீட்டிற்கு உடனே இட்டுச்செல்லுமாறு கூறினர்.

ஆயிரம் தெய்வங்கள் – 15

கிரேக்க தெய்வங்களில் மிகவும் சக்திவாய்ந்த தாய் தெய்வம் ஹீரா. இவர் ஸீயஸ்ஸின் சட்டப்பூர்வ மனைவி. நிறைய அதிகாரம் உள்ளவள். ஸீயஸ்ஸின் தங்கை முறை என்றாலும் கிரேக்க நாடோடி வழக்கிலும், பிராந்தியத் திரவிழாக்களிலும், ஹோமரின் இலியத்திலும் ஸீயஸ் ஹீரா திருமணம் தெய்வத் திருமணமாகப் போற்றப்படுகிறது.

பணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா? – இரண்டாம் பகுதி

அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் ஒரு வெள்ளியன்று தள்ளுபடி விற்பனை திருவிழா போல வருடம்தோறும் நாடெங்கும் நடைபெறும். இதை கருப்பு வெள்ளி (black Friday) என்கிறார்கள். சமீப காலமாக, வெள்ளியுடன் கருப்பு திங்களும் (black Monday) உண்டு. திங்களன்று இணையம் மூலம் மட்டுமே தள்ளுபடி விற்பனை. சில்லரை வியாபாரிகள் கருப்பு திங்கள் வியாபாரம் வளர்ந்து வருவதை கவனித்து வருகிறார்கள். அடித்து பிடித்துக் கொண்டு வரிசையில் குளிரில் அல்லல்படுவதைவிட க்ளிக்கினால் அடுத்த வாரம் குறைந்த விலையில் ஆசைப்பட்ட பொருளை வாங்கி விடலாம்.

நீர் சூழ் பேங்காக்

பருவ மழையால் வெள்ளம் பெருகி பாங்காக் நீர் நிரம்பிக் கிடக்கிறது. அடுத்த ஒரு மாதத்திற்கு வெள்ள அளவு குறையாது என்று அரசு சொல்லிவிட்டது. இத்தகைய சூழலில் பாங்காக்கின் வெவ்வேறு தருணங்களை அழகாக நம்முன் வைக்கும் படத் தொகுப்பு. இங்கே. தவறாமல் பார்க்கவேண்டி தொகுப்பு.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – கட்டுரைத் தொடர்

1909 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் மூனிச் (Munich) நகரில் ‘புதிய கலைஞர் குழுமம்’ (New Artist Assiociation) என்னும் பெயரில் ஒரு ஓவியர் குழு தோன்றியது. ‘வாஸ்லி கண்டின்ஸ்கி’ (Wassily Kandinsky) என்னும் ஓவியர் அதற்குத் தலைவராய் இருந்தார். ஓவியர் ‘பால் க்லீ’ (Paul Klee) யும் அதில் ஒரு உறுப்பினர். அந்தக் குழுவின் இலட்சியம் வெறும் உணர்வு சார்ந்த கருப் பொருளை மையமாகக் கொண்ட ஓவியங்களைவிடவும் மற்ற தளங்களில் இயங்கும் விதமாகப் படைப்பதுதான்.

வம்ச விருட்சம்

தலைவர் வீட்டின் முற்றத்தில் உள்ள சாவடியில் அம்மாவையும் , அப்பாவையும் கட்டி வைத்துவிட்டார்கள். அண்ணன் சொன்னது மாதிரிச் செய்து விட்டான். அவனுக்கு எங்கள் சாதி மீது வெறுப்பா சாதிகள் மீதே வெறுப்பா என்று தெரியவில்லை. எங்கள் பக்கம் ஜாதியைச் சொல்லும் போது பிள்ளைமார் , நாய்க்கமார் , தேவமார் என்று மார் சேர்த்துச் சொல்வோம். அண்ணன் எல்லாவற்றையும் சொல்லி, எல்லாம் விளக்கமாறு என்பான். அப்பொழுது சிரித்தோம்.

தமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை

சங்க காலத்திலிருந்து இன்றைய உமா மகேஸ்வரி வரை, ஒரு வேளை இவர்களில் மிக இளம் வயதினராக லீனா மணிமேகலையோ அல்லது அ.வெண்ணிலாவோ இருக்கக் கூடும். ஆக கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட நீட்சியில் தமிழ் கவிதைக்கு பெண் கவிஞர்களின் பங்களிப்பை நம் முன் வைத்துள்ளார் கே.எஸ் சுப்ரமணியன்.

ஹிந்தித் திரையிசையில் கஸல்

கஸல் பாடல்களில், இசைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவு முக்கியத்துவம் கவிதைக்கும் கொடுக்கப்படுகிறது. வார்த்தைகளின் அழகும், சந்தத்தின் நேர்த்தியும், மெட்டுகளின் இனிமையும், மனம் கவர் ராகங்களும் ஒன்று சேர இருக்கும் கஸல் பலரை மயக்கியதில் ஆச்சரியம் இல்லை. (அதே சமயம், ஒரு பாடல் மென்மையாக இருப்பதினாலோ, கவிதை நன்றாக இருப்பதினாலோ அதை கஸல் என்று சொல்லி விடமுடியாது. அந்த பாடல் வரிகள் கஸல் இலக்கணத்திற்கு உட்பட்டு இருக்கவேண்டும்.) இந்த அருமையான வடிவம் திரையிசைக்கு உகந்ததாக இருந்தது. இருப்பினும், கஸலை திரைசையில் பொருத்துவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல.

செண்பகத்தக்காவின் குரல்

தான் பாடி வந்த காலகட்டத்தில் ஜென்ஸி, பல இளம்பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் பிடித்த பாடகியாக இருந்த காரணத்தை இப்போது யோசித்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது. எந்த நளினமும், மேதமையும் இல்லாத ஜென்ஸியின் குரலை தங்களின் குரலாக அப்போதைய பெரும்பாலான யுவதிகளும், தங்கள் சகோதரிகளின், காதலிகளின் குரலாக அப்போதைய இளைஞர்களும் நினைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ’ஆயிரம் மலர்களே மலருங்கள்’, ‘இதயம் போகுதே’, ‘அடி பெண்ணே’ இப்படி எந்த ஒரு ஜென்சியின் பாடலைக் கேட்டாலும் அதில் ஜென்சியின் குரல் கேட்பதில்லை. அடுக்களையின் குழம்புக் கொதியினூடே கேட்கும் அக்காவின் குரலாக, குளியலறையிலிருந்து சந்திரிகா சோப்பின் நுரைத்த நறுமணத்துடன் வெளியே கசிந்து ஒழுகும் அத்தை மகளின் குரலாக, மதிய உணவுக்குப் பின் ஒட்டுமொத்த வீடும் உறங்கிக் கொண்டிருக்க, ஒருச்சாய்த்துப் படுத்தபடி, ‘ராணி’ புத்தகத்தைப் புரட்டியவாறே, தனக்கு மட்டும் கேட்கும் விதமாகப் பாடும் மதினியின் குரலாகத்தான் நம்மால் கேட்க முடிகிறது. இல்லையென்றால் அத்தனை தெளிவான தமிழ் உச்சரிப்பில்லாத ஜென்ஸிக்கு இத்தனை வரவேற்பு அந்த சமயத்தில் கிடைத்திருக்காது.

சுற்றம்

முதல் நாளிரவு சாப்பாட்டில் திருப்தியின்மை கண்களில் தெரிய தெருக்கோடி முதலியார்
இன்னும் சில வருடங்களில் விபத்தில் உடல் சிதறப்போகிற சபாரி சூட் பழனி சித்தப்பா
குருப் போட்டோவிலும் கால் வீக்கம் தெரியும் வில்லுக்குறி அத்தை

விவல் அக்கா

அப்போதெல்லாம் நவராத்திரிக்கு எங்கள் அரைகுறை அக்ரஹாரத்து சிறுவர் சிறுமியர் அலங்கரித்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று தெரிந்தது தெரியாதது அறிந்தது அறியாதது என்ற பாகுபாடற்று சொல்லியும் பாடியும் சுண்டல் அள்ளிக் கொண்டு வருவோம். இப்படி இருந்த அக்ரஹாரத்தில் ஒரு தென்றல், ஆடவர் அனைவரையும், ஏன் பெண்டிரையும், மௌனமாக, ஆனால் ஒரு ஆழிப் பேரலையின் தீவிரத்துடன் தாக்கியது.

திறப்பு

சுருதி சுத்தத்தை கவனிக்கப் பழக்கப்பட்ட ஜெயந்திக்கு பாடுபவரே இசையாக மாறிய விந்தையை நம்ப முடியவில்லை. பக்தி பாவத்தை உணரப் பிரயத்தனப்பட்ட அவளது பயிற்சிகள் தன் முன் சிதறுவதைக் கண்டாள். பக்தியையும் தாண்டி அவரது பாடல் வேறெங்கோ சஞ்சாரிப்பதை உணர்ந்தாள். பாடலைக் கொண்டு நிறுத்தியிருந்த நிலையில் ஒவ்வொரு ஸ்வரமும் தனி இசைவெளியாக ஒலிக்கத் தொடங்கியது. எத்தனை அன்பையும், உணர்ச்சியையும் ஒவ்வொரு ஸ்வரத்திலும் பாடகர் செலுத்தியிருக்க வேண்டும் என நினைக்க நினைக்க ஜெயந்தியின் கண்களில் அவளறியாமல் கண்ணீர் சுரந்தது.

காற்றிசைச்சரம்

இப்போதெல்லாம்
உச்சுக்கொட்டி கொஞ்சும் கடிகாரத்திற்கும்
சிணுங்கும் காற்றிசைச்சரத்திற்குமான
சில்மிஷ சம்பாஷணைகளைக் கேட்காமல்
உறக்கம் வருவதில்லை.

நகரம் – மூன்று கவிதைகள்

இயற்கையின் பிடியை விடு.
சென்றுவரும் திசையறியா
சக்கரத்தை பற்று.
தளர்ந்த ஒரு நாள், இங்கிருந்து
புல்தேடி பயணம் போவோம்,
படுத்துருண்டு புகைப்படம் எடுத்து,
இருண்ட நம் அறைகளில்
எப்போதும் பார்த்துக்கிடப்போம்
பச்சையை.

நன்றி ஸ்டீவ்!

இப்போது ஜாப்ஸின் உரையை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டேன். எங்கே போனாலும் ஒரு notepad-டும் அதற்குள் இந்த உரையும் இருக்கும். எதோ ஆராய்ச்சிக் கட்டுரை படிப்பது போல்
படித்துக் கொண்டிருப்பேன். சென்ற வருடத்தில் மட்டும் பல முறை அதை படித்திருக்கிறேன். எப்போதெல்லாம் என்னுடைய எண்ணம் சரியான திசையில் இல்லை என்று உணர்ந்தேனோ அப்போதெல்லாம் அந்த தாளை எடுத்து படிக்கத் தொடங்கிவிடுவேன். மனம் நிலைப்படும்.

ஆஸ்காருக்குப் போகும் ஆதாமிண்ட மகன் அபு

அபு ஒரு மிக எளிமையான நேரடியான கதை. வாழ்வின் பின்மாலைப் பொழுதைத் தொட்டுவிட்ட ஒரு முஸ்லிம் தம்பதியினரின் கதை இது. தங்கள் ஒரே மகனாலும் கைவிடப்பட்ட, ஆதரவற்ற அந்த முஸ்லிம் தம்பதியர் இஸ்லாமிய பக்தி மார்க்கத்தில் ஊறியவர்கள். தங்களுடைய ஒரே லட்சியமான ஹஜ் யாத்திரையை அவர்களால் மேற்கொள்ள முடியாமல் போவதை மட்டும் சொல்லும் மிக எளிய கதை. சிடுக்குகளும், சிக்கல்களும், திருப்பங்களும், அதீதமான நாடகீய உச்சங்களும் இல்லாத, ஒரு தம்பதியினரின் வாழ்க்கையில் நடக்கும் சில தருணங்களை மட்டும் சொல்லும் ஒரு சினிமா.