தர்ப்பணம்

அப்பா எல்லாவற்றையும் அப்படி பத்திரமாக வைத்துக் கொள்வார். அதில் டென்ஷனும் இருக்காது. தன் உடம்பைத்தான் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அது அவரோட அப்பா அம்மா கொடுத்தது. சின்ன வயசில் கால் முட்டி வலியோடு ஜுரமும் வந்திருக்கிறது. யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘முட்டியை நக்கிய கிருமி இதயத்தை கடித்து’ விடுமாம். பின்னால் ‘ருமாடிசம்’ என்கிற அந்த வியாதி பற்றி எங்கோ படிக்கையில் தெரிந்துகொண்டான். சாவதற்கு சில நாட்கள் முன்பு கூட ஆபீஸிலிருந்து திரும்பி வந்து நாற்காலியில் உட்கார்ந்துகொண்ட அப்பா எதற்கோ அவர் பர்ஸை எடுக்கச் சொன்னார். அவன் நல்ல லெதர் வாசனை இப்போதும் அடிக்கும் அந்த பழங்காலத்துப் பர்ஸை எடுத்து அவரிடம் கொடுத்தான். “என் கிட்டே ஏன் கொடுக்கற. இனிமேல் நீதான் பர்ஸ் பணம் எல்லாம் வச்சுக்கணும்; அப்பாவையும், அம்மாவையும் பாத்துக்கணும்.காலேஜ் சேர்ந்தாச்சு” என்று புன் முறுவல் பூத்தவாறே சொன்னார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வெறுமனே தலையை ஆட்டினான். அந்த முறுவல் அவனுக்கு ஏதாவது கற்றுக் கொடுக்கும் போது மட்டும் விசேஷமாக வரும்.

மேகமூட்டம்

உண்மையில் பெரிய கவலை இருந்தது. இரண்டு வயது அஷ்வினை ஆஸ்பெர்கர் மையத்தில் விட்டு அரை மணி ஆகிவிட்டது. அதற்குள் விளையாட்டு, பேச்சு, பார்வைத் தொடர்பு என்று பன்னிரண்டு கோணங்களில் அவனை சோதித்திருப்பார்கள். சில நாட்களுக்கு முன், அஷ்வினின் பதினாறாவது க்ரோமோசோமை சோதித்தபோது ஒருசில உயிரணுக்கள் சாதாரணத்திலிருந்து அதிகமாகவோ குறைவாகவோ இருந்தன. அந்த வேறுபாடு ஆடிசத்துக்கு அடையாளமாக இருக்கலாம் என்பது சரவணப்ரியாவின் கருத்து.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 18

வடக்கு ஐரோப்பியப் பகுதிகளில் ‘பாஃவ்’ (Fauves) களின் வண்ண அணுகு முறை வெற்றியடைந்து புதிய உணர்வுகளாகவும், ஆழ்மன உளைச்சல்களாகவும் விரிவடைந்தன. எக்ஸ்ப்ரஷனிசம் (Expressionism) என்று பொதுவாக அறியப் பட்ட அது ஒரே காலகட்டத்தில் பல ஐரோப்பிய நாடுகளில் வளரத் தொடங்கியது. அந்தப் படைப்புகளில் வண்ணங்கள் குறியீடுகளாகவும், (Symbolic Colours) இயற்கைக்கு ஒவ்வாத கற்பனை உருவத் தோற்றங்களும் (Imagery) மேலோங்கி இருந்தன.

புண்சட்டை

ஒரு கவ்வியைப்போலச் செயல்பட்டு
மெந்தென்றலில்
உன்னைக் காற்றாட்டினேன்
சுத்தமானபின்
காணாமல் போய்விடுவாய்
மீண்டும் அழற்புண்களுடன்
வந்து நிற்பாய்

பெரு எனும் நாடு

பெரு நாடு குறித்தும், அதன் புகழ்பெற்ற “மச்சு பிச்சு” குறித்தும் நீங்கள் அறிந்திருக்கலாம். அந்நாட்டை பல கோணங்களில் ஆவணப்படுத்தும் புகைப்படத் தொகுப்பு இங்கே.

யூலெக்சி மர்டாக்

பிரபல இசைக் கலைஞர் யூலெக்சி மர்டாகின் பிரபல பாடலொன்று. தன் அன்பை வெளிப்படுத்தும் ஒருவனது பாடல். மிக எளிமையான ஒரு பாடல். அதிரும் இசைக் கருவிகள் அல்லாத, மென்மை கசிந்தோடும் மெட்டு.

சீனா- இடப்பெயர்வு வாழ்க்கையில் குடும்ப அமைப்பு

சீனாவின் நகர மற்றும் பெருநகர வாசிகளிடையே நடத்தப்பட்ட அரசுக் கணக்கெடுப்பின் முடிவில் குடிமக்கள் ‘மிக மகிழ்ச்சியாக’ இருப்பதாக அறிவித்துள்ளார்கள். அது ஒருபுறமிருக்க, இடப்பெயர்வுக் கதைகளையெல்லாம் கேட்கும் போது, பொருளாதாரத்தின் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கும் நவீனச் சீனத்தில் குடிமக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்ற கேள்வி நமக்குள் எழத்தான் செய்கிறது. பெரும்பாலோருக்கு இக்கேள்விக்கு பதிலளிக்கும் போது ஒருவிதக் குழப்பமே மிஞ்சுகிறது.

மகரந்தம்

ஆப்பிரிக்காவிற்கு முதன்முதலில் பயணம் மேற்கொண்டு மனிதர்கள் அந்நாட்டு காடுகள் குறித்தும், அதில் மறைந்திருக்கும் நுட்பங்களையும், மிருகங்களின் குணாதிசியங்களையும் மிக விரிவாக பதிவு செய்துள்ளனர். இத்தகைய பயண குறிப்புகள் சூழியல் பாதுகாப்பாளர்களுக்கு உதவும் பலவித தகவல்களை கொண்டிருப்பதாக அறிஞர்கள் பேசத் துவங்கியிருக்கின்றனர். காடுகள் குறித்தும், மிருகங்களின் செயல்பாடுகள் குறித்தும் வாய்வழி செய்திகளை விடவும், மிக விரிவான தகவல்களை தரும் இந்தக் குறிப்புகள், காடுகளை வரலாற்று நோக்கில் அணுக உதவுகின்றன என்றும் சொல்கின்றனர்.

ஹெர்டா முல்லர் – புலம்பெயர்தலின் இலக்கியம்

“சர்வாதிகாரம் இப்படித்தான் ஒருவரைக் குறித்த சாத்தியமில்லாத விஷயங்களைப் புனைகிறது. உங்களுக்குக் கொலை மிரட்டல்கள் இருக்கும். ஆனால் அவற்றுடன் நீங்கள் வாழ்ந்துவிட முடியும். ஏனெனில் உங்கள் வாழ்க்கையே ஏதோ ஒரு வகையில் சாவு குறித்த அச்சுறுத்தலை கொண்டிருக்கிறது. ஆனால் உங்களைக் குறித்த தவறான தகவல்களும் வார்த்தைகளும் உங்கள் ஆன்மாவை முற்றிலும் கிழித்துவிடுகின்றன. நீங்கள் ஒரு பயங்கரத்தில் சிக்கிவிடுகிறீர்கள்”.

முதல் கிரிக்கெட் வெற்றி – இங்கிலாந்து மண்ணில்!

எல்லாரையும் போல நானும் ஒரு சராசரி இந்தியன் என்பதிற்கு கிரிக்கெட் ஆர்வமும் ஒரு காரணி. பள்ளி, கல்லூரி நாட்களில் ஊரிலுள்ள அத்தனை வெயிலும் எங்களது தலைகளில்தான். இரயில் பயணங்களில் தென்படும் கிரிக்கெட் காட்சிகளைப்பார்த்து, கண் பார்வையிலிருந்து மறைவதிற்குள் ஒரு பந்தையாவது பார்த்துவிடவேண்டும் என்று தோன்றுவது சகஜம்தானே!

உயரம் குறைவாக உள்ள வேட்டி

என் முழங்கை உயரமே இருக்கும் நண்பன் சந்திரஹாசன் எப்போதுமே வேட்டிதான் கட்டுகிறான். ‘இவ்வளவு கட்டையா இருந்துட்டு எப்படில வேட்டி கட்டுதெ?’ என்று கேட்டால், ‘அத ஏன் கேக்கெ? சுருட்டி சுருட்டி வயித்துப் பக்கத்துல ஒரு பெரிய பந்து கணக்கால்லா சவம் வீங்கிட்டு இருக்கு. நாளுபூரா பிள்ள உண்டாயிருக்கிறவ மாரிதான் வயித்தத் தள்ளிட்டு நடமாடுதென்’.

அடக்கப் பிரசங்கம்

புகைப்படங்கள் அனைத்திலும், அப்பா ஒரு சைகையின் மத்தியில் உறைந்து நின்றார் புகைப்படங்கள் அனைத்திலும் அப்பா தான் அடுத்து என்ன செய்ய என்பது தெரியாதவர் போலிருந்தார். ஆனால் அப்பாவுக்கு எப்போதும் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தது. அதனால்தான் இந்தப் படங்கள் அனைத்தும் பொய்யாக இருந்தன. அத்தனை பொய்ப் படங்களாலும், அத்தனை பொய் முகங்களாலும் அறை சில்லிட்டிருந்தது.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – 2

எகினம், மயில், கிளி, மழை, பூவை, சகி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு முதலிய பத்தும் தூது விடப்பட்டுள்ளன. இந்தப் பத்தினுள் மயில், பூவை, குயில் என்பன தூது போன இலக்கியங்கள் இன்று எல்லை என்கிறார்கள். மேற்குறிப்பிட்ட பத்தும் நீங்கலாக, அந்த வரையறைக்குள் அடங்காமல் பண விடு தூது, முகில் விடு தூது, தமிழ் விடு தூது, மான் விடு தூது, வசை விடு தூது, சவ்வாது விடு தூது, நெல் விடு தூது, விறலி விடு தூது, புகையிலை விடு தூதும்,வசை பாடிக் கழுதை விடு தூதும்கூட இருந்திருக்கின்றன.

டி. எம் கிருஷ்ணா – கேணி சந்திப்பு

விசேஷமாக கவனித்து ரசிக்கக் கூடிய, தஞ்சாவூர் பாணியில் வாசிக்கப்படும் மிருதங்கம், மராட்டியர்களின் ‘மிருதங்’ என்ற பாணியில் இருந்து வந்ததுதான். புதுக்கோட்டை மிருதங்க வாசிப்பு முறை தவிலிலிருந்து வந்திருக்கிறது. இதில் ரசிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மொழியாலும், கலாச்சாரத்தாலும் வேறுபட்டிருந்தாலும் இசையால் அனைவரும் சங்கமித்திருக்கிறார்கள் என்பதுதான். ‘Fusion’ என்பதே இன்றுதான் வந்ததுபோல மிகைபடுத்திப் பேசிக்கொள்கிறோம். வரலாறை கூர்ந்து நோக்கினாலே மரபில் கலப்பிசை இருப்பது தெரிகிறது.

தனிமனித நேர்மை மட்டுமே போதாதபோது…

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மையும், அந்த உலகத்துடன் ஒரு தனி உறவும் கொண்டவரென நான் நம்புகிறேன். ஒவ்வொரு மனிதரும் இப்படியே. மேலும் நாம் செய்யும் எதையும் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக செய்கிறோம். ஏனெனில் நமக்கு வேறு வழிகளில்லை.