துளசி மாடம் வீட்டுக்கு வேண்டும் என்று சொல்லி என் மனைவிதான் அதனை வாங்கி வைத்தாள். அபார்ட்மெண்ட்டுகளில் துளசி மாடத்தை எங்கே வைப்பது என்று நான் எத்தனை சொல்லியும், துளசி மாடம் வேண்டும் என்று உறுதியாக இருந்து, அவளும் என் அம்மாவும் போய் சிறிய மாடம் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்து, வீட்டின் பின்னால் வைத்துக்கொண்டார்கள், அதற்குப் பக்கத்தில்தான் கழிவுநீர் தேங்கும் தொட்டியும் இருந்தது. கழிவுநீர்த் தொட்டி நிரம்பி தண்ணீர் வெளியே வரும்போதெல்லாம் பயந்து போய் ‘துளசி மாடத்துக்கு என்னாச்சு’ என்று பார்க்க ஓடுவோம். மெல்ல அதனை நகர்த்தி வேறு இடத்தில் வைப்போம்.
Category: இதழ்-55
20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 17
1930 களில் ஐரோப்பிய நாடுகளில் வேற்று நாட்டுக் குடிமகன் என்பவனை அச்சத்துடன் வெறுக்கும் மனோபாவம் தோன்றி வளர்ந்தது. பிரான்ஸ் நாட்டிலும் பாரிஸ் பாணி ஓவியர்களிடம் முன்னர் காட்டப்பட்ட அன்பும், சகிப்புத் தன்மையும் மறைந்து போயிற்று. தங்கள் நாட்டின் கலை மரபைக் குலைக்கும் விதமாக அந்த ஓவியர்கள் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டனர். முன்னர் அவர்தம் படைப்புகளைப் போற்றி, உதவிகள் செய்தவர் இப்போது அவர்களிடமிருந்து விலகிச் சென்றனர்.
நான்கு கவிதைகள்
நடந்து செல்வதற்கில்லை
நிகழ்தல் பயணமல்ல
பந்தயம்
தோற்பது இகழ்ச்சி
தெருநாய்கள் துரத்தும்
சொறிநாய்கள் குரைக்கும்
ஒடு!
இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி
ஸ்ருதியுடன் ஒருங்கிணைவதை ஓர் உபாசனையாகவே செய்த மதுரை மணி ஐயருக்கு முருகபூபதியின் வாசிப்பு வெகுவாகப் பிடித்திருந்ததில் ஆச்சர்யமில்லை. ஒரு கச்சேரியில், மதுரை மணி ஐயரின் தம்புரா பழுதாகி அவ்வப்போது ஸ்ருதியிலிருந்து விலகிய படி இருக்க, “எனக்கு தம்புராவே வெண்டாம். பூபதியாரின் மிருதங்க ஸ்ருதியே போதும்.”, என்று கச்சேரியைத் தொடர்ந்துள்ளார்.
ஆயிரம் தெய்வங்கள் – 13
ஒலிம்பிக் யுத்தம் முடிவுக்கு வந்தபின் சைக்ளோபன் ஸீயஸ் வசம் வஜ்ராயுதம் ஒன்றைப் பரிசாக வழங்கினார். அதைப் பயன்படுத்தினால் நினைத்த இடத்தில் மழை, புயல், இடிமுழக்கம் செய்யும். ஸீயஸ் தரப்பில் போரிட்ட அண்ணன் ஹேடசுக்கு சைக்ளோப்ஸ் ஒரு மாயக்கவசத்தைப் பரிசாக வழங்கினார். அதை அணிந்ததால் அடுத்தவர் கண்ணுக்குத் தெரியமாட்டார். அண்ணன் பாசி டோனுக்கு ஒரு வகை சூலாயுதத்தை வழங்கினார். அந்த சூலாயுதம் எப்படிப்பட்ட பகைவரையும் தோற்றோடவைக்கும்.
பண்டிட் ரவிஷங்கர்
வாழும் காலத்திலேயே தங்கள் அசாத்திய திறமையால் சமூகத்தை தன்வசப்படுத்தி தனக்கு சேர வேண்டிய புகழை அடைந்தவர்கள் வெகு சிலர். அப்படிப்பட்ட ஒருவர் தான் பிரபல சிதார் இசைக் கலைஞர் ரவிஷங்கர். தன் மகளுடன் அவர் இணைந்து நடத்தும் இசை நிகழ்ச்சி இங்கே.
ஐரீன்
சமீபத்தில் அமெரிக்காவை தாக்கிய ஐரீன் புயலை ஒட்டி மக்களின் பதட்டங்களையும், மகிழ்ச்சிகளையும் காட்சிப்படுத்தும் புகைப்படங்கள் இங்கே.
மகரந்தம்
ஒரு புறம் பார்த்தால் மேற்கு- அமெரிக்கா/ யூரோப் ஆகியன பெரும் கூட்டணியாகச் சேர்ந்து பல வகைகளில் லிபியாவைத் தாக்கி கதாஃபியை ஒழிக்க முயன்றிருக்கின்றன. மேற்கு லிபியாவில் செலுத்தியுள்ள பராக்கிரமத்தின் விஸ்தீரணத்தைப் பார்த்தால் ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் மிகவும் பொறுமையாகவும், நீண்ட தயாரிப்புடனும் இருந்தாலே மேற்கின் அடாவடித்தனங்களை எதிர்கொள்ள முடியுமென்பது தெரிகிறது. மேற்கும், அமெரிக்காவும் தம் ஏகாதிபத்திய நோக்கங்களையோ, உலகம் தம் ஆளுமையின் கீழ்ப்பட்டதே என்ற கர்வத்தையும் சிறிதும் இழந்ததாகத் தெரியவில்லை.
சித்தூர் தென்கரை மகாராஜாவும், நெல்லையப்பரும்
காந்திமதியம்மன் சந்நிதியின் வாசலில் பன்னிருதிருமுறை அடியார்கள் உடம்பு முழுக்க திருநீறும், மார்பு முழுக்க ருத்திராட்சங்களுமாக, தத்தம் வேட்டியை அவிழ்த்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள். இரண்டொரு வயதான ஆச்சிகளும், நடுத்தர வயதுப் பெண்களும் தேவார, திருவாசகப் புத்தகங்கள், சின்னத் தூக்குச்சட்டி, தீப்பெட்டி, பூ, கூடை சகிதம் நடைவாசலில் காத்து நின்றனர். ‘சட்டைய கெளட்டிருங்க சித்தப்பா’. மீனாட்சியின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்தேன். நடை திறந்து கோயிலுக்குள் நுழையவும், பள்ளிக்கூடம் மணியடித்தவுடன் வெளியே ஓடிவரும் சிறுபிள்ளைகளின் உற்சாகக் குரலுக்கு இணையாக, ‘நம பார்வதி பதயே’ என்று ஒரு அடியார் சத்தமெழுப்ப, கூட்டத்தோடு கூட்டமாக நானும் மனதுக்குள் ஹரஹர மஹாதேவா’ என்றபடியே உள்ளே நுழைந்தேன்.
சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்
தமிழில் பிரபந்தங்களைத் தொண்ணூற்றாறு வகையாகப் பிரிக்கிறார்கள். இந்தத் தொண்ணூற்றாறுக்கு வகை மாதிரிக்கான பிரபந்தங்கள் எழுதப்பட்டனவா, இன்னும் இருக்கின்றனவா எனும் தகவல்கள்கூட என்னிடம் இல்லை. நான் அறிந்து வைத்திருக்கும் வகைகள் ஆவன: கோவை, தூது, உலா, பரணி, கலம்பகம், காதல், மடல், பள்ளு, குறவஞ்சி, பிள்ளைத் தமிழ், அந்தாதி முதலானவை. அவற்றுள்ளும் கோவை எனில் பல, தூது எனில் பற்பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. நான் கேள்விப்பட்ட, வாசித்த, அனுபவித்த சிலவற்றை மட்டும்- சாம்பிள் சர்வே போல- உங்களுக்கு அறிமுகப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
மேரி எவரெஸ்ட் பூல்
ஒரு குழந்தை அறிவியல் உலகத்திற்கு வருவது, உண்மைகளை அறிந்து கொள்ள மட்டுமோ, புலன்களை வளர்த்து மற்ற விஷயங்களை செய்யவோ இல்லாமல், முதன்மையாக இயற்கையின் விதிகளுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவேயாகும். இங்கு இயற்கையின் விதி என்பது எந்த விதிகளால் இந்த உலகம் இயங்குகிறதோ அதைக் குறிக்கிறது.அங்கு கணிதம் (arithmetic) என்பது எண்களைப் பற்றி நமக்குத் தெரிந்த சில உண்மைகளைக் கொண்டு தர்க்க ரீதியாக இது வரை தெரியாத ஒன்றை கண்டறியும் நோக்கத்துடன் அணுகுவதாகும்.
SPARROW – ஒரு பெண்களின் நிறுவனம்
பெண்களின் சரித்திரம், அன்றாட வாழ்க்கை, போராட்டம் இவற்றை ஒலி மற்றும் காட்சி வடிவங்கள் மற்றும் வாய்வழி சரித்திரப் பதிவுகள் மூலம் ஆவணமாக்கி வரும் ஒரே ஆவணக் காப்பகம் ஸ்பாரோ(SPARROW). எழுத்தாளர் அம்பையின் பங்களிப்பை கொண்டிருக்கும் இந்த நிறுவனம் குறித்து ஒரு அறிவிப்பு.
தணிக்கையாளர்கள்
நாட்கள் செல்லச் செல்ல அவன் அந்தப் பணியை மிகவும் விருப்பத்துடன் செய்தான். அவன் இங்கு வந்த காரணமே தற்போது அவனுக்கு முற்றிலும் மறந்துவிட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் பல்வேறு கடிதங்களின் பலவரிகளை அழிக்க வேண்டியிருந்தது. பல கடிதங்களை குப்பைக்கூடையிலும் சேர்த்தான். அரசாங்கத்திற்கு ”எதிரான” மக்களின் சூக்குமுமான வாசகங்களை கண்டு பயந்த நாட்களும் உண்டு. தற்போதெல்லாம் அவனால் “விலைவாசி உயர்ந்துவிட்டது”, “வானம் மந்தமாக உள்ளது” போன்ற வரிகளில் கூட அரசாங்கத்திற்கு எதிரான செய்திகள் புதைந்திருப்பதை கண்டுபிடிக்க முடிந்தது.
அறிவாற்றல் மரபுப் பண்பா?
நெடுங்காலமாக மனித இனத்தில் இருந்து கொண்டிருக்கும் கேள்விகளுள் ஒன்று: அறிவாற்றல் இயற்கையாகவே அமைவதா அல்லது வளர்த்தெடுக்கக் கூடியதா? (Nature Vs Nurture). இந்தக் கேள்வியின் இன்னொரு பரிமாணம் தான், ”அறிவாற்றல் மரபுப் பண்பா இல்லை சமூக சூழ்நிலையால் அமைவதா?”
அன்னாவும், அருணாவும்
இன்றைய கொந்தளிப்பான பொது மனநிலையில், அன்னாவின் தரப்புக்கு மாற்றுத் தரப்பு என்றாலே, “நீ யார்.. உனக்கு என்ன தகுதி” என்ற கேள்விகள் எழுவது இயல்புதான். அதுவும் சோனியா காந்தியின் தலைமையில் அமைந்துள்ள தேசிய ஆலோசனைக்குழுவின் உறுப்பினர் என்னும் போது, காங்கிரஸின் கையாள் என்பது போலத் தோன்றி விடுகிறது. ஊடகங்கள் பலவற்றிலும், அருணா அவ்வாறே சித்தரிக்கப் படுகிறார். இன்று அன்னா வெற்றி பெற்று, எல்லோரும் ஆசுவாசம் கொண்டுள்ள நிலையில், நாம் அருணா ராயைப் பற்றிக் கொஞ்சம் பேசுவது அவசியம்.
மாலதி மைத்ரி – கேணி சந்திப்பு
மீனாட்சி, பூரணி, திரிசடை போன்ற பெண் படைப்பாளிகள் தொண்ணூறுளுக்கு முன்பே நவீன கவிதைப் படைப்புகளில் பங்களிப்பு செய்திருந்தாலும், தொண்ணூறுகளுக்கு பின் வந்த பெண் படைப்பாளிகளால் தான் பெண்ணிய சிந்தனைகள் வளரத் தொடங்கியது. பெண்ணியம் சார்ந்த கவிதைகள் குறைந்த அளவே வெளிவந்தாலும் பரவலான சலசலப்பிற்கும் கவனத்திற்கும் உள்ளாயின. அவைகள் பெண்ணிய உரிமையைப் பெற்றுத் தரும் அடையாளக் குரலாக ஒலித்தன. ஒலித்த கவிக்குயில்களில் மாலதி மைத்ரி குறிப்பிடத்தக்க முக்கியமான கவிஞர்.
ஊழல் ஒழிப்பு : சிங்கப்பூர் குறித்து சில சிந்தனைகள்
இன்று சிங்கப்பூரில் லஞ்சம் கேட்பதோ, வாங்குவதோ கூடாது. அப்படி சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டதாக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்-கணிசமான அபராதம் விதிக்கப்படுவதோடல்லாமல், நீண்ட காலம் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம், ஏன், முறைகேடாகச் சேர்த்த சொத்து முழுமையும் பறிமுதலும் செய்யப்படலாம்- முறைகேடாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தர முடியாத நிலையில் இருப்பதாக ஒருவர் கை விரித்தால், அதற்கு பதிலாக அவருக்குச்சிறை தண்டனை நீடிக்கப்படும்! அவரைச் சார்ந்தவருடைய வங்கி மற்றும் அனைத்து கணக்குகளையும் கூட அரசு விசாரிக்கலாம்.
இடைமட்ட மேலாளுகைக்கு நிலையான வியூகங்கள்
அந்த அறையைவிட்டு வெளியேறியபோது ஒரு கைப்பிடி அந்த அகன்ற இலைகளைப் பிடுங்கிக்கொண்டு என் அலுவலகத்திற்கு மீண்டும் வந்தேன். என் நாவால் இலையின் தடித்த பகுதியிலிருந்து ஒரு நரம்பைக் கண்டுபிடித்தேன். அவ்வளவு மோசமில்லை. பசுஞ்சுவையோடிருந்தது. அது உலரும்வரை நன்றாக உறிஞ்சியெடுத்துவிட்டு சக்கையைக் குப்பைக்கூடையில் எறிந்தேன்.