நாள் காட்டியை வாங்கியதும்
முதலில் குறிப்பது
பிறந்த நாள்களைத்தான். இருந்தும்
ஏதாவது ஒரு பிறந்தநாள்
தவறி விடுகிறது.
Category: இதழ்-54
தர்ப்பை
குழாயைத் திறந்து இரு கைகளையும் சேர்த்து பரபரவெனத் தேய்த்தான். எவ்வளவு முறைத் தேய்த்தும் கையில் இருந்த சிகப்பு தீற்றல் போகவில்லை. தர்ப்பை போல வேண்டிய நேரத்தில் எடுத்து மாட்டி வேண்டாதபோது தூக்கி எறியும்படி எல்லாமே இருந்தால் எவ்வளவு நன்னா இருக்கும் என நினைத்துக்கொண்டான்.
அம்மாயி
அம்மாயிக்கு பால் கறக்கும் நேரம் வந்தவுடன் சோகம் எல்லாம் பறந்து விடும். “யார்ளா அது.. போ.. போ நாம் பால் பீச்சோணும்” என்று துரத்தி விட்டு, தன் பொழைப்பைப் பார்க்கப் போய்விடும். சிக்கனத்தின் சின்னம். வருடத்துக்கு 3-4 வெள்ளைச் சேலைகள் மட்டும் தான் அம்மாயியின் அலங்காரம். பால் காசை மிச்சம் பிடித்து, சீட்டுப் போட்டு, ஓட்டு வீடு கட்டி, புள்ளைக்கும், பையனுக்கும் கல்யாணம் பண்ணி வைத்தது.
தடைகளைக் கடந்து கணித மேதையான ஸோபி ஜெர்மைன்
ஜெர்மைனின் தந்தை ஒரு வியாபாரி மற்றும் அரசியல்வாதியாக இருந்தார். அவருக்கும் தன் பெண் கணிதம் படிப்பதால் அவளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற எண்ணம் இருந்தது. அதனால் ஜெர்மைன் கணிதம் படிப்பதைக் கடுமையாக எதிர்த்தார். அதனால் அவருக்கு இரவில் படிப்பதற்கு முடியாமல் மெழுகுவர்த்தி மற்றும் குளிராமல் இருக்க தேவையான வெப்பம் போன்றவைகள் கொடுக்காமல் பெற்றோர்கள் தடை செய்தார்கள். அப்படியிருந்தும் ஜெர்மைன் இரவில் பெற்றோர்கள் உறங்கிய உடன் திருடிய மெழுவர்த்தியை உபயோகித்து தன் படிப்பைத் தொடர்ந்தார்.
மதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம்
ஒரு நல்ல நாளன்று நான் வாய்ப்பாட்டையும் வீணையையும் கிருஷ்ணசாமி நாயுடுவிடமும், மிருதங்கத்தை பீதாம்பர தேசாயிடமும் கற்றுக் கொள்ளத் துவங்கினேன். இப்போதெல்லாம் ஒருவரே பல துறைகளில் வல்லுனர்களாக இருக்கிறார்கள். அந்த நாட்களில் ஏதோ ஒன்றில் தேர்ச்சியை அடைய வேண்டுமென்றாலும் மற்ற அனைத்தையும் விட்டு விட வேண்டும் என்று நம்பினோம். நான் வீணையையும் வாய்ப்பாட்டையும் மிருதங்கத்துக்காக விட்டுவிட்டேன்”.
மாற்றம்
இல்லை, அங்கு கடையை
காணவில்லை.
‘இடமாற்றம்’ என்றொரு
அறிவிப்பு பலகை.
அதை அடுத்திருக்கும் விடுதி
என்னுடையது தானா?
வழி எப்போது மாறியது?
மகரந்தம்
இணையப் பயன்பாட்டாளர்கள் “cookie” குறித்து அறிந்திருக்கலாம். ஒரு தளத்தை முதன் முறை பார்த்துவிட்டு, சில நேரம் கழித்தோ அல்லது அடுத்த நாளோ அதே தளத்திற்கு செல்லும்போது உங்களை வரவேற்கும் வாசகம் ஒளிர்கிறதா? இது தான் குக்கீயின் பணி. குக்கீகளை இணைய உலாவிகள் மூலம் தடுக்கலாம். சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விஷயத்தை கண்டுபிடித்துள்ளனர். சில தளங்கள் புதிய தொழில்நுட்பம் ஒன்றின் மூலம் இணைய உலாவிகளால் கூட ஒன்றும் செய்யமுடியாத குக்கீக்களை உங்கள் கணிணியில் விதைத்துவிடுகின்றன.
அப்ரஞ்ஜி
பெண் பிரசவத்தின்போது. ‘அப்ரஞ்ஜி… பச்ச உடம்பு, பொண்ண பாத்துக்க’ என்பார்கள் இரண்டுநாள் வீட்டோடு இருந்து முதுகு, கால், தொடையில் எண்ணைவிட்டு நீவி பச்ச உடம்பு பெண்ணை சுகப்படுத்துவது அவளுக்கு கைவந்த கலை. குழந்தை பிறந்ததும் கவனித்தது போக பதினோராம் நாளோ அல்லது பதிமூன்றாம் நாளிலோ அரிவுரிஅம்மன் பூசை இருக்கும். வீட்டின் கிழக்கு பார்த்த சுவரில் கண்மையால் நான்கு குமிழுடைய கோலம்போட்டு இரண்டு பக்கம் பொம்மைகள் வரைந்து வைத்து – குழந்தை அதைபார்த்து சிரிக்கும் என்பாள். – அதற்கு ஐந்து வகை காய்கறியுடன் பூசை செய்வாள் அப்ரஞ்ஜி.
ஜெயந்தி சங்கரின் நெடுங்கதைகள்…..
ஜெயந்தியின் நாவல்களில் உரையாடல்களின் பங்களிப்பும் முக்கியமானது. பல நேரங்களில் வெகு எளிதாக கதையை முன் நகர்த்த அவை உதவுகின்றன. அக்கறையோடு செவிமடுத்தால் சொற்களின் தொனி தெளிவாக, இயல்பாக கேட்கின்றன. வாசிக்கிறவர்களுக்கு கதைக்கான களமெது, உரையாடுபவர்கள் என்ன மனநிலையில் உள்ளார்கள், அவர்களது பின்புலமென்ன என்பதை துல்லியமாக உணர்த்தும் வசனங்கள் நாவல்கள் நெடுக வருகின்றன. குரல்களூடாக, சொற்களைக்கொண்டு பேசுவது ரம்யாவா சந்தியாவா; குமாரா செந்திலா; அவுன்ஸ் மாமாவா அத்தையாவென சட்டென்று சொல்லிவிடலாம்.
தேசம், காலம், சிந்தனை
கீழே இருக்கும் இந்த ஒளிப்படம் மனிதர்கள் தங்கள் வாழ்வு மொத்தத்தையும் மூன்று காலநிலைகளில் கழிப்பதாக சொல்கிறது. கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம். உண்மை தான். ஆனால் ஒவ்வொரு தேசமும் கூட இப்படித்தான செயல்படுவதாக சொல்கிறது. இதன் தாக்கம் அந்தந்த மக்களின் சிந்தனை, மொழி, வாழ்க்கைமுறை ஆகியவற்றை கூட பாதிக்கிறது “தேசம், காலம், சிந்தனை”
இசை, கேளிக்கை, வாழ்க்கை
கடந்த சில வாரங்களாக உலகமெங்கும் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மக்களின் கொண்டாட்டங்களை வண்ண மயமாக காட்சிப்படுத்திய புகைப்படங்கள் இங்கே.
தலை வெட்டப்பட்ட கோழி
அந்தச் சிறுமிக்கு இப்போது விரல் நுனியை ஊன்றி தன் உடலை மேலே எழுப்ப வசதியான ஒரு இடம் கிடைத்தது. அந்த இடத்தில் தன் விரல் நுனியை நன்கு அழுத்திக்கொண்டாள். தன் உடலை மேலே உயர்த்த முயன்றாள். ஆனால் அவள் காலை யாரோ மிக இறுக்கமாக பிடித்திருப்பதை உணர்ந்தாள். கீழே பார்த்தாள். அந்த எட்டு கண்களும் அவளுக்கு பெரும் அச்சத்தை அளித்தன.
கண்ணீரால் காத்த பயிர்
இரண்டாம் உலகப்போரில் இந்திய ராணுவம் பங்கேற்க காங்கிரஸின் ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடன் பிரிட்டனிற்கு போர் நேரத்தில் இந்திய உள்நாட்டு எழுச்சியையும் சமாளிக்க வேண்டியதாயிற்று. 1940-இல் வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்து பிரதமமந்திரியானதைத் தொடர்ந்து பயிற்சியும் திறமையும் மிக்க இந்திய ராணுவத்தினரை இந்தியாவிலிருந்து அகற்றுவது காலனி அரசுக்கு முக்கியக் கடமையானது. உள்நாட்டில் அவர்களில் ஒரு பகுதியினர் தமக்கு எதிராகத்திரும்பினால் கூட இந்தியாவைத் தக்க வைக்க முடியாது என்பது மட்டுமல்ல, உலகப் போரின் தோல்வியில் இருந்து இங்கிலாந்தே தப்ப முடியாது என்பதும் சர்ச்சிலுக்கு தெரிந்திருந்தது. ஏனெனில் இங்கிலாந்தின் போர்முனைகளுக்குத் தேவையான மணற்சாக்கு மூட்டைகளிலிருந்து, அரிசி, கோதுமை, உணவுப்பொருட்கள், ராணுவத் தளவாடங்கள் என்று அத்தனை போர்க்காலப்பொருட்களுக்குமான உற்பத்தி மற்றும் வினியோகத்துக்கான ஆதார கேந்திரமாக இந்தியா விளங்கியது.
20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 16
இக்கலைஞர்கள் உலகை ஒரு பயன்பாட்டுப் பொருளாகவே நோக்கினர். அதிலிருந்து தமக்குத் தேவையான பகுதியைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தமது படைப்புகளில் பொருத்தி ஓவியங்கள் தீட்டினர். வாழ்க்கை, கலை இரண்டையும் அருகருகே கொணரும் முயற்சிதான் அது. தங்களுக்குள் இருக்கும் தாம் சார்ந்த சிந்தனைகளை மீறி ‘ஒன்றிணைந்த சிந்தனை’ என்னும் குறிக்கோளை முன் நிறுத்தி வேற்றுமைகளிடையே ஒற்றுமை என்பதாக இயங்கினர். கலை விமர்சகர் ‘பியெர் ரெஸ்டனி’ இதை, “விளம்பரம், தொழில், நகரவாழ்க்கை கியவற்றின் கவிதுவம் கூடிய மீள் சுழற்சி” கூறினார்.
செந்தாமரைப் புரட்சி
பிரிட்டிஷ் அரசாங்காத்திற்கு எதிராக 1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டம் குறித்த நூல் “Operation Red Lotus”. இந்தப் போரில் ஈடுபட்ட வீரர்கள் ஒரு சிவப்பு தாமரையுடன் இந்தப் போரில் பங்கேற்றனர். அதனால் தான் புத்தகத்திற்கு இந்தப் பெயர். இந்தப் புத்தகத்தின் ஆசிரிய பராக் டோபே, இந்தப் போரில் முக்கிய பங்காற்றிய தாத்தியா டோபே-வின்(Tatya Tope) வம்சாவளியில் பிறந்தவர். தன் குடும்பத் தலைவரான் பிரபாகர் தாபேரிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் இதுவரை வெளியாகாத மற்றும் மறக்கப்பட்ட பல்வேறு ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டும் இந்த நூலை எழுதியுள்ளார்.