தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம். தமிழின் ஒரிஜினல் காப்பியம். ஒரிஜினல் என்று அழுத்திச் சொல்வதன் காரணம், மற்றெல்லாம் வடமொழியில் இருந்து பெயர்க்கப்பட்டவை, தழுவப்பட்டவை அல்லது மூலமாகக் கொண்டவை, பிற காப்பியங்கள். அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் எனத் தொடங்கி சுஜாதாவின் எளிய அறிமுகம் வரை வந்து சேர்ந்தது சிலப்பதிகாரம். சிலம்புச் செல்வர் என அறியப்பட்ட ம.பொ.சிவஞான கிராமணியாரால் சிலப்பதிகாரம் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. சிலப்பதிகாரத்துக்கு ம.பொ.சி. அற்புதமான விளக்கத் தெளிவுரை ஒன்று எழுதியுள்ளார். 2008-ல் முதற்பதிப்பு வெளிவந்தது. தமிழ்நாடு முழுக்க, சிலம்பைப் பரவலாக்கிய பெருமை ம.பொ.சி.க்கு உண்டு. 1942-ல் ஆகஸ்ட் போரில் ஈடுபட்டுச் சிறையில் கிடந்த போது சிலம்பைப் பயிலத் தொடங்கியதாக ம.பொ.சி. எழுதுகிறார் முன்னுரையில். ஆசிரியரின் உதவியின்றி, திரும்பத் திரும்பப் பயின்றிருக்கிறார். ம.பொ.சி.யின் சிலப்பதிகாரச் சொற்பொழிவு கேளாதார் செவியென்ன செவியே என்ற கேட்டவர் துணிந்து சொல்ல இயலும்.
Category: இதழ்-52
‘கோவில் பொக்கிஷங்கள் சந்தைப் பொருட்கள் அல்ல’
இவற்றை வெறும் “சொத்து”க்கள் என்று மட்டுமே பார்க்க முடியாது. இவை நமது கலைப் பொக்கிஷங்கள். கலைப் பொக்கிஷங்கள் சந்தையில் விற்கப்படும் பொருள்கள்(commodity) அல்ல. உதாரணமாக, தஞ்சை பெரிய கோவிலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கோவிலில் இருக்கும் ஓவியங்களை வெறும் “சொத்து”க்கள் என்று நீங்கள் கூறமுடியுமா? சோழர் கால சிலைகளை வெறும் “சொத்து” என்று வகைப்படுத்திவிட முடியுமா? ”இவற்றையெல்லாம் அரசாங்கம் கைப்பற்றி அதை சந்தையில் விற்று விட வேண்டும். அந்த பணத்தைக் கொண்டு மக்கள் நலப்பணித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்” என்ற சொல்லத் துணிவது எத்தகைய முட்டாள்த்தனம்!
ஆயிரம் தெய்வங்கள் -11
கி.மு. 1000-1100 காலகட்டத்தில் செமிட்டிக் மொழி சிரியாவில் லிபி- அகரவரிசை எழுத்துகளாயிருந்தன. கி.பி. 1929-இல் பிரஞ்சுக்கார அகழ்வராய்ச்சிக்குழு ரஸ்வும்ரா என்ற இடத்தில் தோண்டியபோது புராதன உகாரித் நகரைக் கண்டுபிடித்தனர்.
இந்த அகழ்வாராய்ச்சியின் சிறப்பு எதுவெனில் அங்கு கண்டெடுக்கப்பட்ட கியூனிபார்ம் கல்வெட்டுகள் மூலம் செமிட்டிக் அகரவரிசை புலனாவதுடன் செமிட்டிக் தெய்வீக உறவு பற்றிய புதிர்களுக்கு விளக்கம் கிடைத்தது
மத்தகங்கள் வீழ்ந்த காலம்!
நுகர்வோரைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் விளம்பரப் படுத்தி, சிகரெட் வியாபாரத்தில் கொண்டிருந்த வலிமையை உபயோகித்து, பொருளை எளிதாகச் சந்தைப் படுத்தவும் செய்தது. கார்ட் வீல் பல்டி அடித்து வந்து அன்னையைத் தழுவிக்கொள்ளும் குட்டிப் பையன் விளம்பரம் அன்று மிகப் பிரபலம். 90களின் இறுதியில், ஐ.டிஸி, எண்ணெய்த் தொழிலை, கான் அக்ரா என்னும் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றது. ஏன்?
20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 14
பெண்ணியவாதிகள் ஸர்ரியலிஸ இயக்கத்தைப் பற்றி விமர்சிக்கையில் அடிப்படையில் அது ஒரு ஆணாதிக்க சிந்தனை இழை ஓடிய இயக்கம் என்னும் எதிர் கருத்தை முன் வைத்தனர். ஸர்ரியலிஸ குழு உறுப்பினர்களும் மற்ற எல்லா ஆண்களையும் போலவே பெண்ணைத் தேவையற்றுப் போற்றுவதும், பெண்களை உடல்ரீதியாக அணுகுவதும், பெண் எப்போதும் ஆணின் காம உணர்வுடன் கூடிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஜீவன் என்பதாகத்தான் இயங்கினர், என்று கடுமையாகச் சாடியபோதிலும் இயக்கத்தில் சில பெண்கவிஞர்களும் பெண் ஓவியர்களும் இருக்கத்தான் செய்தனர்.
ஸ்டீவ் மக்கரி
ஸ்டீவ் மக்கரி உலகமெங்கும் புகழப்படும் புகைப்படக் கலைஞர். மனிதர்கள், அவர்களது அவலங்கள், தினசரி நடப்புகளை உள்ளடக்கியது அவரது கலை. அவரது ”ஆப்கன் சிறுமி”(Afghan Girl) எனும் புகைப்படம் உலகை உலுக்கிய ஒன்று. அவரது இன்ன பிற சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு இங்கே.
உயிரின் நெடுஞ்சாலை
உயிரின் தோற்றம் குறித்த ஒரு காட்சிப் படம் கீழே. பல பகுதிகளை கொண்ட இந்தப் மொத்தப் படத்தின் முதல் பகுதி கடந்த 4 பில்லியன் வருடங்களை குறித்து மட்டும் எளிமையாக பேசுகிறது. மற்றப் பாகங்களுக்கு இந்தப் பக்கத்திற்கு செல்லுங்கள்.
அன்புள்ள முதல்வருக்கு..
தமிழகத்தின் பாசன நீர்த் தேவையில் 60 சதத்திற்கும் மேலாக நெல்லுக்கு உபயோகப் படுகிறது. திருந்திய நெற்சாகுபடி என்னும் புது முறையில், ஒரு குத்துக்கு ஒரு நாற்று உபயோகிப்பதும், நீர் நிறுத்திப் பாசனம் செய்யாமல், காய விட்டு, மற்ற பயிர்களைப் போல் நீர் பாய்ச்சுவதும் நல்லதென்று சொல்கிறார்கள். இதனால், தண்ணீர்த்தேவை 50 சதம் குறைகிறதென்றும், மகசூல் 25-40 சதம் அதிகரிக்கிறதென்றும் சொல்கிறார்கள். ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தும் முறை இது – உபரி நீரை அதிக நிலத்தில் பாசனம் செய்ய உபயோகிக்கலாம்.
பிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டு புத்தகங்கள்
தான் முன்னரே தீர்மானித்துக்கொண்ட தமிழ் இனத்தின், சரித்திரத்தின், கலாச்சாரத்தின் உன்னதங்களைத் திரும்பச் சொல்லும் சந்தர்ப்பங்களை அடுக்கிச் சொல்வதும் அல்ல. ஒரு சிந்திக்கும் மனது தன் பார்வையில் பட்டதையெல்லாம் பற்றி தீவிரமாக சிந்திக்கிறது. வெளித்தோற்றத்தில் முரண்பட்ட மேற்கத்திய கலாச்சார அம்சங்களும் கீழைத் தேய கலாச்சார பண்புகளும் உடன் வாழ்வதன் அடியில் என்ன தான் இருக்கிறது இந்த அந்நிய மண்ணின் சமூக, கலாச்சார சூழலில். என்று ஒரு சிந்தனை அடிக்கடி தோன்றுகிறது. இந்தப் பயண வரலாறு முழுதுமே தி. ஜானகிராமனின் மனதில் நிகழும் ஒரு மௌன சம்பாஷணை.
யானைகளுடன் பேசுபவன்
யானைகளின் அதிசய தொலை தொடர்பு திறமையை அடிக்கோடிடும் இன்னொரு சம்பவம் சூடானில் நடந்திருக்கிறது. வடக்கு சூடானுக்கும் தெற்கு சூடானுக்கும் இருபது வருடங்களாக உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் யானைகள் தந்தக்களுக்காகவும் மாமிசத்திற்காகவும் கொடூரமாக வேட்டையாடப்படுகின்றன. இதன் விளைவாக பெரும் திரளாக யானைகள் சூடானிலிருந்து பல நூறு மைல் தொலைவிலுள்ள கென்யாவிற்கு இடம் பெயர்கின்றன. ஆனால் போர் நிறுத்தம் கையெழுத்தான சில நாட்களிலேயே அங்கிருந்து கிளம்பி மீண்டும் சூடானுக்கு வந்து விடுகின்றன. சூடானில் அமைதி திரும்பியது என்பது எப்படியோ அந்த ஒட்டுமொத்த யானைக்கூட்டத்துக்கும் தெரிந்து விட்டிருக்கிறது!
மகரந்தம்
’சைபர் வார்’ எனப்படும் தகவல் தளத்தில் நடத்தப்படும் போர். இதைச் சீனா உலகெங்கும் நடத்தி வருவதைக் கனடிய ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர். சீன ராணுவம் இதற்காக ஒரு பல்கலையையே நிறுவி இருப்பதாகவும் அவர்கள் சொல்கின்றனர். சீனா கனடிய ஆய்வாளர்கள் சொல்வதை மறுப்பதில் எந்த வியப்பும் இல்லை. ஆனால் மேற்கின் பல அரசுகள் சமீபத்து ஆண்டுகளில் தம் நிறுவனங்கள் கடுமை
வாசகர் மறுவினை
பொருளாதாரம் குறித்த கட்டுரைகள் பொதுவாக தமிழ் இதழ்களில் காணக்கிடைக்காதது. அப்படியே அத்தகைய கட்டுரைகள் வெளியானாலும் மிக மேலோட்டமாகவும், வாசகர்களுக்கு அந்நியமான மொழியிலும் இருக்கும். இவரின் கட்டுரைகள் அப்படியில்லாமல், வாசகனை முன்வைத்து எழுதப்படுகிறது. இந்தியாவின் பொருளாதாரம் குறித்த வரலாற்றுப் பார்வையை இவரது கட்டுரைகள் முன்வைக்கின்றன.
தாய்ப்பால் சுரக்கும் பசுக்கள்
மாற்று மரபணு விலங்குகளை(transgenic) உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் சில நாட்களுக்கு முன் இதற்கு முன்பு எட்டப்படாத புதிய உயரத்தை அடைந்திருக்கிறார்கள். தங்கள் ஆராய்ச்சியின் மூலம் தாய்ப்பால் சுரக்கும் கன்றுகளை உருவாக்கியுள்ளனர். சீன விஞ்ஞானிகள் இதை முதலில் சாத்தியப்படுத்தினர். அவர்களைத் தொடர்ந்து அர்ஜென்டேனிய விஞ்ஞானிகள் அதே முயற்சியை அடுத்த தளத்திற்கு நகர்த்தியுள்ளனர்.
வெங்கட் சாமிநாதனுக்கு…
வெங்கட் சாமிநாதனுக்கு தி.ஜானகிராமன் எழுதிய கடிதங்கள்.
ஸ்குரில்
அந்த வார இறுதியில் ஸ்குரில் குடும்பம் எங்கள் ப்ளாட்டிற்கு வந்திருந்த போது அந்த சின்ன பையனின் “வால்தனத்தின்” கடுமை பிடிபட்டது. சோபாவின் மேலிருந்து உணவு மேசைக்கு ஒரு சாடல்; அங்கிருந்து பக்கத்து சன்னலுக்கு மறு சாடல்…ஸ்குரிலும் மனைவி ஸ்குரிலும் அவனை ரொம்ப கண்டுக்கவே இல்லை.மூன்றாவது தாண்டலில் சன்னல் திரையை பற்றிக்கொண்டு கீழே விழுந்துவிட்டான். மறு நிமிடத்தில் துள்ளி சமையலறையில் ஓடிப்போனான்; இரு நிமிடங்கள் கழித்து உள்ளே போன மீரா அலறி காஸ்ஸை அணைத்துவிட்டு பையனையும் கொஞ்சம் இறுகவே அணைத்து, இருண்ட முகத்துடன் வந்தாள்…
இயல் எண்களின் பிரிவினைகள், இராமானுஜன் மற்றும் கென் ஓனோ
எண் கணிதத்தில் இன்றைய ஆராய்ச்சியாளர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் இந்திய கணித மேதை இராமானுஜன் என்றால் மிகையாகாது. “ஒவ்வொரு நேர்மறையான முழு எண்ணும் (positive integer) இராமானுஜனின் தனிப்பட்ட நண்பர்கள்” என்ற டி.ஜெ. லிட்டில்வூட் (Littlewood) என்ற கணிதவியலாளரின் கூற்றுக்கிணங்க 1919 ஆம் ஆண்டு இராமானுஜன் இயல் எண்களைப் பற்றி எழுதி வைத்துச் சென்ற குறிப்பின் வீச்சும், பொருளும் அறிய ஏறக்குறைய 90 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது.
இருளும் காமம், நிலங்களின் வழியே
ஓவ்வொரு நகரமும் தன்னுள் மிகப்பெரிய கதையை கொண்டுள்ளன. மனிதர்களை போலவே அவைகளது வாழ்க்கையும்(சரித்திரமும்) அளவிட முடியாத நிரந்தரமற்ற தன்மையையும், ஏதோ மாயத்தேவதைகளின், யட்சிகளின் ஆளுகைக்குட்பட்டது போலவும் வளர்ந்தும், வீழ்ந்தும் காற்றில் உரு மாறியும் உருக்கொள்கின்றன. நம்மோடு நெருங்கிய தொடர்பு கொண்ட இந்த நகரங்களின் கதைகள் வெறும் வருடக் குறிப்புகள் மட்டுமல்ல. ஆனால் எழுதப்பட்ட வரலாற்று குறிப்புகள் அப்படியான பிம்பத்தை தான் தருகின்றன.