கடக் படங்கள் சமூகத்தின் அன்றைய நிலை பற்றியும், அகதிகளின் நிலை பற்றியும், அன்றைய குடும்பங்களின் நிலையை பற்றியும், இந்த சூழலில் தனிமனிதன் எதிர்க்கொள்ளவேண்டிய சவால்களை பற்றியும் பேசின. எந்த சமரசமின்றியும் எடுக்கப்பட்ட படங்கள் இவை. இவர் படங்கள் யதார்த்தவாத படங்கள் என்று சொல்லலாம். இவர் எல்லா படங்களிலும் இசையை வெகு நேர்த்தியாக பயன்படுத்தியிருப்பார். வெகு அருமையான ஹிந்துஸ்தானி மரபிசை பாடல்களும், ரபீந்திர சங்கீத் பாடல்களும், வங்க கிராமிய இசை பாடகளும் இவர் படங்களில் நமக்குக் கேட்க கிடைக்கும்.
Category: இதழ்-51
அறிவிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
கட்டுப்பாடுகள், நியதிகள் ஏதுமின்றி, எந்தப் பேராண்மையும் வழி நடத்தாமல், விரிவான சோதனைகளும், பரிசீலனைகளுமின்றி, பொருளாதார ஊக்கங்களெதுவுமின்றி, நிரந்தர அமைப்பைச் சாராமல் சுதந்திரப் பறவைகளான பலர் ஒன்று சேர்ந்து சீர்மிகு மென்பொருள் தயாரிக்க முடியும் என்றால், நாம் இத்தனை நாள் கடைப்பிடித்த நடைமுறைகள் அநாவசியமானவையா? லைனக்ஸின் இந்த அவதாரம் ஒன்றைப் புரிய வைத்தது. நோக்கங்கள் மெய்ப்பட மேலே சொன்ன எல்லாக் காரணங்களையும் விட பெரிய ஒரு காரணம் எதிரி ஒருவனை அடையாளம் கண்டு கொள்வதே.
தி ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’
தி. ஜானகிராமனின் பலமே சம்பாஷணைகளாலேயே கதை சொல்லும் அவர் சிறப்புத் தான். அவரது எல்லா எழுத்துக்களிலும் போல இந்த நாவலிலும் அவர் சம்பாஷணைகளில்தான் அவர் உலகமே விரிகிறது. இன்றைய எந்த தமிழ் எழுத்திலும் இதற்கு இணையான ஒரு சிருஷ்டிகரத்தை காணமுடியாது. கதை சொல்லல் வெகு சரளமாக, எளிமையாக, அதே சமயம் கொள்ளை அழகுடன் ஆற்றின் புது வெள்ளம் போலச் ஓடுவது அறியாது செல்கிறது. ஒரு குதூகலத்தின் துள்ளல், ஆரவாரம். எப்படிச் சொன்னாலும் அது அப்படியாகத் தான் தோன்றும்.
ஆயிரம் தெய்வங்கள்-10
எந்த தெய்வம் முதல் தெய்வம் என்பதில் போரும் சண்டையும் தெய்வங்களையும் விட்டுவைக்கவில்லை. எந்த தெய்வம் பெரிது? என்ற கேள்விக்கு சரியான விடை இல்லையென்றாலும் மெசப்பட்டோமியாவிலும் பின்னர் பாரசீகத்திலும் நிகழ்ந்த போட்டிக்கு இந்தியாவில் தீர்வு காணப்பட்டது.
மூன்று கவிதைகள்
தீபப் பிறை வர்த்தி
ஏற்றப்படும் முன்
இருந்ததா கடவுள்?
இருந்ததா வன்முறை?
இல்லையா கடவுள்?
இல்லையா வன்முறை?
சந்தை என்னும் கோவில்: நுகர்வோர் என்னும் கடவுள்
குப்புற விழுந்து, மூஞ்சியும் முகரையும் பெயர்ந்த பின்பு, அந்நிறுவனம், தொலைபேசிக் கட்டணம், ஒரு தபால் கார்டை விட மலிவானதாக இருக்க வேண்டுமென்று எங்கப்பாரு சொன்னாருன்னு ஒரு புதுக் கதை சொன்னது.. நுகர்வோருக்கான மாபெரும் சலுகை என்று அலைபேசிக் கருவிகளை ஐந்நூறு ரூபாய்க்குத் தந்தது.. பல ஆயிரம் கோடிகள் நஷ்டம்……தேவைப் பட்டால், விதிமுறைகளையும் அரசாங்கங்களையும் மாற்றும் வல்லமை படைத்தவர்கள். ஆனால், பாவம் பத்து ரூபாய் ப்ரீபெய்ட் வாங்கும் ஒரு சாதாரண நுகர்வோரை வீழ்த்த முடியாமல் போயிற்று.
20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 13
க்யூபிசம் பாணியில் அறிவு ஜீவி பார்வை கூடிய, வண்ணங்கள் விலக்கப்பட்ட ஓவியங்கள்தான் படைக்கப்பட்டன. ஆனால் ஓர்ஃபிஸம் பாணியில் மிளிரும் வண்ணங்கள் கொண்ட விதத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. கவிதைக்கும் இசைக்கும் அதிபதியான ஆர்பியஸ் (Orpheus) என்னும் கிரேக்க புராண நாயகனிடம் ஈர்ப்புக் கொண்ட அவர்கள் தமது படைப்புகளில் அதன் அனுபவத்தைக் கொணர்ந்து, வரண்டு இருந்த க்யூபிசம் பாணியில் உயிரூட்ட முனைந்தனர்.
மின்ணணு பாடப்புத்தகம்
அடுத்த தலைமுறைக்கான மின்ணணு பாடப்புத்தகம் எப்படி இருக்கும்? நிச்சயம் மட்டமான காகிதத்தில் அச்சடிக்கப்பட்டதாக இருக்காது என்று இவர் உறுதியளிக்கிறார். பாடப் புத்தகங்களின் மோசமான மொழி நடைக்கு இவரிடம் நாம் பதில் எதிர்பார்க்க முடியாது தான்.
வாசகர் மறுவினை
தெரிந்தவர்களைக் கதாபாத்திரமாக ஆக்குவதில் இருக்கிற சிக்கல் குறித்துப் பலபேர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அப்படிச் சொன்ன யாரும் ”அம்மா வந்தாள்” மாதிரி ஒரு கதை எழுதியதில்லை. மரப்பசுவைக் குறித்த ஜானகிராமனின் அந்த ஒருவரித் தீர்மானம் தூக்கிவாரிப் போடச் செய்துவிட்டது. இறுதிவரை திறக்கப்படாத அவர் மனத்தின் இன்னொரு பெரும் அறையை மானசீகத்தில் திறந்து பார்க்கத் தூண்டிய பத்தி அது.
என் கடவுளின் சாமரம்
கூரைக் களையப்பட்ட பேருந்து நிறுத்தத்தில்
காலையில் ஓடும் காலத்தை
கிலுகிலுப்பையில் சலங்கையாக
ஆட்டிக்கொண்டிருக்கிறது.
சிலியை மூடிய எரிமலை வெடிப்பு
சிலியில் நிகழ்ந்த சமீபத்திய எரிமலை வெடிப்பு, அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது. விமானத்தின் நேர தாமதங்களை மட்டும் பேசும் ஊடகங்களிலிருந்து விலகி சாதாரண மக்களின் துன்பத்தையும் பதிவு செய்திருக்கிறது இந்த புகைப்படத் தொகுப்பு.
மெலமீன் – நடந்தது இதுதான்
மெலமீன், நைட்ரஜன்(N என்பது நைட்ரஜனைக்குறிக்கும்) நிறைந்த ஒரு வேதிப்பொருள்(C6H6N6). குறைந்த செலவில் அதிக வருவாய் கிடைக்கவேண்டும் என்று பேராசை கொண்ட குழந்தை பால்மாவு தயாரிப்பாளர்களில் சிலர், பால்மாவில் உள்ள புரதத்தைக் காட்ட நச்சுத்தன்மைதான் இல்லையே என்று நினைத்து பால்மாவில் நைட்ரஜன் நிறைந்த மெலமீனைக் கலக்கத் துணிந்தனர்.
இணையதள அறிமுகம்
பொதுவாக அறியப்படாத இணையத்தளங்களை அறிமுகப்படுத்தும் பகுதி.
இரண்டாம் படி
பஸ் ஒரு தொழிற்சாலை, ஒரு கடை, சில விடுகள் என் சின்னச் சின்ன பகுதிகளை கடந்து சென்று கொண்டிருந்தது. பலவகை தொழிற்சாலைகள் இருந்தன. மருந்து வாசனை, மண்வாசனை, புகைவாசனை என கலவையாக வந்து கொண்டிருந்தன. கன்னனூர் என்ற பகுதியில் இறங்கி சற்றுதூரம் நடந்ததும் அவன் சொன்ன சிமெண்ட் பேக்ட்ரி வந்தது. கடற்கரக்கு சென்று வந்தது போல் எல்லோர் சிகையும் தாறுமாறாய் கலைந்திருந்தது. தியாகு தவிர அனைவரிடமும் சீப்பு இருந்தது உடனே வாரிக் கொண்டபடி உள்ளே நுழைந்தனர்.
மகரந்தம்
பொதுவாக பூமியின் மிகவும் ஆழமான பகுதிகளில் பல செல் உயிரினங்கள் வாழ முடியாது என்றுதான் அறிவியலாளர்கள் இன்று வரை கருதி வந்தனர் இந்த சூழல்களில் பாக்டீரியங்கள் போன்ற ஒற்றை செல் உயிரினங்களே காணப்படுவது உண்டு. ஆனால் முதன் முறியாக தென் ஆப்பிரிக்க ஆழ்-சுரங்கங்களிலிருந்து பூமியின் அடியாழங்களில் பலசெல்கள் கொண்ட நுண்புழுக்கள் (nematodes) இருப்பது அறிவியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
காவல்
மீனாட்சியின் ஆண்டாளின்
வல, இடத் தோட்கிளிகளின்
பேச்சரவம்
தேரேகாலின் கரையோரச்
சடைப் புதரின்
கானங்கோழியும் குருகும்
யாத்தன செப்பலோசை
’ ஒரு எடிட்டராக நான் என்ன செய்கிறேன் என்பது உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை’
“நீங்கள் ஒரு நல்ல எடிட்டரா மோசமான எடிட்டரா இல்லை எடிட்டரே இல்லையா என்பது முக்கியமில்லை: நீங்கள் ஒரு மிக முக்கியமான வாசிப்பின் பிரதிநிதி. ஆமாம் அவருடைய கணவர் அதைப் படித்திருக்கிறார். ஆமாம், அவருடைய ஏஜண்ட் அதைப் படித்திருக்கிறார். ஆனால் நீ அதிகாரத்தின் குறியீடாக இருக்கிறாய், அதற்கான தகுதி உனக்கு இல்லை என்றாலும். நீ பணத்தின் குறியீடாகவும் இருக்கிறாய்.”
சீனா- பாரம்பரியக் கிராமங்கள்
மிகவும் ஏழ்மையிலிருக்கும் கிராம மக்கள் பெரும்பாலும் வெளியூர்களுக்கு இடம்பெயர்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் வெளியூருக்கோ நகரத்துக்கோ போக பயணச்செலவுக்கான தொகை கூட அவர்களிடம் இருப்பதில்லை. மாதக்கணக்கில், வருடக்கணக்கில் விவசாயம், சிறு தொழில், சிறுபண்ணை போன்ற தொழில்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் பயணச்செலவுக்கானதைச் சேர்த்துக் கொண்ட பிறகோ, கடன் வாங்கிக் கொண்டோ வெளியூருக்கு வேலை வாய்ப்பும் அதிக வருவாயும் தேடிப் போவோர் தான் அதிகம்.
கற்க கசடற
பல வருடங்களாய் கல்வி என்று பயின்ற அறிவியல் பாடங்கள், முதலில் நம்மை கேள்விகளை இயல்பாய் (நமக்குள்) கேட்கச்செய்யவேண்டும். அறிவியல் சிந்தையுடன் பதில்களை விடைகளை அணுகும் மனநிலையை வளர்த்திருக்க வேண்டும். தற்காலிகமாக கிடைக்கும் பதில்களை ஆராய்ந்து சரிபார்க்கும் பகுத்தறிவை வளர்த்திருக்க வேண்டும். படித்த அறிவியலின் தகவல்களை மறந்திருக்கலாம். அறிவியலின் நோக்கை உணர்ந்து மனதில் ஊறி நிலைத்திருக்கவேண்டும். அறிவியல் கல்வி, அனுபவக் கல்வியாகாமல் போகலாம். அனுபவத்திற்கு வேண்டிய கல்வியை சிந்தையை கொடுக்க முடியாமல் ஏட்டுச்சுரைக்காயாக நின்றுவிடக்கூடாது. தனிமனிதன் படித்திருந்தும் கல்வியறிவு தந்திருக்கவேண்டிய தீர்க்கமும் மனத்திடமும் வளராமல் படித்தால் மட்டும் போதுமா என்று வாழ்வின் பல தருணங்களில் எள்ளலுக்குள்ளாகும் நிலைக்கு பல காரணங்கள் கூறலாம்.