பண்டிட் பாலேஷுடன் ஒரு மாலை

பிஸ்மில்லா கானின் ஷெனாய் இசையைத் தொடர்ந்து கேட்டுக் கேட்டு அந்த வாத்தியத்தை திரையிசையில் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். திரையிசையில் வாசிக்கும் பல வாத்தியக்கலைஞர்கள் ஒப்பற்ற மேதைகள். அவர்களில் ஒருவர் முப்பது வருடங்களாகத் தமிழ்த்திரையிசையில் ஷெனாய் வாசித்து வரும் பண்டிட் பாலேஷ். உஸ்தாத் பிஸ்மில்லா கானின் மாணவர். சாலிகிராமத்தில் என் வீட்டிலிருந்து நடந்து போகும் தூரம்தான் பாலேஷின் வீடு. அவ்வப்போது சாலிகிராமத்து வீதிகளில் நாங்கள் சந்தித்துக் கொள்வதுண்டு. பார்க்கும்போதெல்லாம், இருவரும் சாவகாசமாக அமர்ந்து இசை குறித்து நிறைய பேச வேண்டும் என்று சொல்லிக் கொள்வோம். பல நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் ஒருநாள் அது அமைந்தது. அவரது வீட்டின் மாடியிலுள்ள ஓர் அறையில் அவரது குருமார்களின் புகைப்படங்களுக்கு அருகே அமர்ந்து பேசத் தொடங்கினோம். பாலேஷின் மகன் கிருஷ்ணா பாலேஷும் உடனிருந்தார்.

வெறுமை

லேசா இராகம் வாசிச்சதும் ஆபேரியோணு நெனக்கதுக்குள்ள ஹிந்துஸ்தானி மாதிரி கேக்கு. பீம்பிளாசப் போட்டு உருக்கிட்டாரு. இவரு வாசித்ததும் தவிலுல உருட்டுச் சொல்லு அடிச்சுட்டு, கையைப் பொத்தி வலந்தலையிலே ஜிம் ஜிம்முன்னு ஒரு முத்தாய்ப்பு வைச்சான். யாரு? சண்முகவடிவேலுதான். கந்தன் கருணை புரியும் வடிவேலுண்ணு இவரு எடுத்தாரு. மதுரை மணி பாடி எத்தனை தடவைக் கேட்டிருக்கேன். “வடிவேல்” என்று அவர் பாடுகையில் பழனி சுப்புடு மிருதங்கத்தில் பிளாங்குனு ஒரு சாப்பு கொடுப்பாரு. அது ஒரு அனுபவம். காருக்குறிச்சி வேறு தினுசு. ஒவ்வொரு வரியும் வாய்ப்பாட்டு மாதிரியே கேக்கு.

மூன்று கவிதைகள்

சட்டை, கன்னம் கை கால் என்று
எங்கும் மண்தீற்றல்களுடன்
இரண்டு கற்களை எடுத்துக்கொண்டு வந்து
இப்பவே வீட்டுக்குப்போய் பச்சை அட்டையை
எடுத்துவரவேண்டும் என்கிறாள் பொறுப்பு வழியும் குரலில்

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 8

தனது சமகால பெண்ணியப் படைப்பாளிகளில் சிலரைப் போலவே இவரும் உடையற்ற தனது உடலையே படைப்புக்கருவாகவும், கித்தானாகவும் பயன்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் சமுதாயத்தில் பெண்ணெனப்படுபவளின் முன்னரே முடிவு செய்யப்பட்ட அடையாளத்தை கேள்விக்குறியாக்கி முறியடிக்கிறார். சமூகத்தில் தடை செய்யப்பட்ட விஷயங்களைப் பற்றி தனது எதிர் கருத்துக்களை வெளியிட ஒருபோதும் இவர் அஞ்சியது இல்லை.

உயிரின் கதை – 6

துணி வியாபாரம் செய்யும் ஆன்டன் வான் லீவன்ஹாக் (Anton Van Leeuwenhoek) என்ற டச்சுக்காரர் 1674-இல் ஒருநாள் படகில் சவாரி போய்விட்டுத் திரும்பியபோது கொண்டுவந்த தண்ணீரை, ஒரு கண்ணாடிக் குப்பியில் ஊற்றி எண்ணெய் விளக்கை ஒளி ஆதாரமாகக் கொண்டு தானே வடிவமைத்து உண்டாக்கிய நுண்ணோக்கியில் பார்த்து அதுவரை வெறும் கண்ணால் பார்க்க முடியாத நுண்ணுயிரிகளைக் கண்டறிந்து அவற்றுக்கு ’உயிரித்துணுக்குகள்’ (animalicule) என்று பெயரிட்டார்.

தம்புராவின் மெளனம்

தஞ்சை இசைச்சூழல் தமிழகத்தின் தொன்மையான கலாசாரப் பின்னணியை உயிர்ப்போடு வைத்திருந்த ஒன்று. தஞ்சை இசைச்சூழலில் எஞ்சியிருந்த வளமான இசைக்கலைஞர்களில் ஒருவரான தஞ்சை வெங்கடேசய்யங்கார் சென்ற வாரம் தன்னுடைய 85-ஆவது வயதில் மறைந்தார். அவரைக் குறித்தும், தஞ்சை இசைச்சூழலைக் குறித்தும், தஞ்சை வெங்கடேசய்யங்கார் அவர்களிடம் சங்கீதம் கற்றுக்கொண்ட தஞ்சை K.சிவசுப்ரமணியன் அவர்களிடம் ஒரு பேட்டி கண்டோம்.

ஆப்பிரிக்க புஷ் யானைகள்

ஸ்மித்சொனியன் இன்ஸ்டிட்யூட்டின் இணைய தளம் ஸ்மித்சோனியன் வைல்ட். இங்கு உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு சரணாலயங்களில் காமேராவைப் பொறியாக வைத்து எடுத்த இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை இணைத்திருக்கிறார்கள். இயற்கை சூழலில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் சிறப்பான வகைகளில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கென்யாவில் எடுக்கப்பட்ட ஆப்பிரிக்க புஷ் யானைகளின் புகைப்படங்கள் எவ்வளவு “ஆப்பிரிக்க புஷ் யானைகள்”

சக்தி சுரபி – இயற்கை எரி சக்தி

உங்கள் வீட்டுக் கழிவிலிருந்து கிடைக்கும் எரி சக்தியால் உங்கள் வீட்டு எல்பிஜியை உங்களால் குறைக்க முடிந்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது. ஆனால் இலவசங்களின் மயக்கத்தில் இருக்கும் சமூகம் இந்த தொழில்நுட்பம் குறித்து புரிந்து கொள்வது தற்போதைக்கு சாத்தியமாகும் என்பது கேள்விக்குறிதான்.

தமிழினி கலை இதழ், உபு இணைய தளம்

தமிழறிஞர்கள், தமிழாராய்ச்சி, தத்துவம், சிற்பக்கலை, கல்வெட்டு ஆராய்ச்சி, சமூகம், சமகாலத் தமிழ்ச்சூழல் ஆகியவற்றைக் குறித்துத் தீவிரமான பல கட்டுரைகளை வெளியிட்டு வரும் சிறந்த சிற்றிதழான தமிழினியை இப்போது இணையத்திலும் படிக்கலாம். உபு டாட் காம் என்ற தளத்தில் ஏராளமான அரிய இசைத்தொகுப்புகளையும் திரைப்படங்களையும் பதிவிடுகிறார்கள். தொடர்ந்து புதிய படைப்புகளை இணைக்கிறார்கள்.

வாசகர் கடிதங்கள்

இந்த சொல்வனம் இதழில் வந்த கணியான் கூத்து கட்டுரை அபாரம். நான் மிகவும் ரசித்துப் படித்தேன். திருச்செல்வன் இதை ஒரு கலை வடிவம் என்று மட்டுமில்லாமல், தன் சொந்த அனுபவத்தையும் சேர்த்து எழுதியிருப்பது மிகவும் அற்புதமானதாகவும், அவர் ரசனையின் உண்மையைச் சொல்வதாகவும் இருந்தது. இதைப் போன்று அழிந்து, நசிந்து வரும் நாட்டார் கலைகளைக் குறித்து சொல்வனம் வெளியிடவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

பகுதி 01 – கூட்டுக்குள் அலையும் தேனீக் கூட்டம்

சீனர்கள் தங்கள் நாட்டுக்குள் செய்யும் இடப்பெயர்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தாலே போதும் – ஆதி மனித நாகரீகத்தின் வளர்ச்சியைக் கூட ஓரளவு புரிந்துகொள்ளலாம். சீனாவின் கிராமங்கள் நகரமயமாகிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் நகரங்கள், உலகமயமாகிக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம், குடும்ப வாழ்க்கையும் தனி மனித வாழ்க்கையும் வெறுமையாகிக் கொண்டிருக்கின்றன. சொந்த நாட்டுக்குள்ளேயே சீனர்கள் அகதிகளாக மாறி ஓடத் தொடங்கியது எப்போது? எதனால்? இதன் காரண காரியங்கள் சுவாரசியமானவை. வாருங்கள், சீனாவுக்கு!

உயர் நிர்வாகக் குழுக்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு

உலகம் முழுவதிலும் வேலைகளில் பெண்கள் எதிர்கொள்ள நேர்கிற தடைகளுக்கு, மொத்தமாக ஒரு உருவகம் கொடுக்கப்படுகிறது. அது, வேலைகளில் பெண்களை உயர விடாமல் தடுக்கும் ’கண்ணாடிக்கூரை’ என அழைக்கப்படுகிறது. நிறுவனங்களின் உயர் தளங்கள் தகுதி உள்ள பெண்களால் அடையப்படக் கூடியவை என்ற தோற்றம் தரும். ஆனால் உயர முயற்சி செய்யும்போதுதான் ஏதோ ஒரு தாண்டமுடியாத தடை அங்கிருப்பது தெரியும்.

அதெல்லாம் மாறியபோது

எங்களை விட உருவில் பெரியவர்கள். பெரிதாக மட்டுமில்லை, அகலம் வேறு. இரண்டு பேர் என்னை விட உயரம், நானே ரொம்பவும் நெட்டை என்று பெயர். காலணி இல்லாமல் என் உயரம் ஒரு மீட்டர், 80 சென்டி மீடர். அவர்களைப் பார்த்ததுமே எங்கள் இனம் என்று தெரிந்தது, ஆனால் எங்களிடமிருந்து வேறுபட்டு இருந்தனர். எளிதில் சொல்லி விட முடியாதபடி மாறிய ஆட்களாகத் தெரிந்தார்கள்.

பால்வழி குற்றத் தடுப்பு

பேராசிரியர் மங்கை நடராஜன் நியுயார்க் மாநிலத்தின் சிடி யுனிவர்ஸிடி பல்கலை அமைப்பில் ஒரு அங்கமான, புகழ் பெற்ற, ஜான் ஜேய் காலேஜ் ஆஃப் க்ரிமினல் ஜஸ்டிஸ் என்ற கல்லூரியில் இளங்கலைப் பட்டப் படிப்புக்கு இயக்குநராக இருக்கிறார். இந்தக் கட்டுரை, ஐக்கிய நாட்டுச் சபையின் 12ஆவது பேரவையில் குற்றத் தடுப்பும், குற்றத்துக்கு நீதியும் ஆகிய கருதுபொருளில் நடந்த கருத்தரங்கில் ஆற்றிய ஒரு உரையின் அண்மையான தழுவலாக எழுதப்பட்டது.

சென்னையில் ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட்

இது நடந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைக்கு கிரிக்கெட் உலகில் முதலாம் இடத்தில் இருக்கும் இந்தியா, இந்த இடத்திற்கு வருவதற்கு காரணமான ஒரு திருப்புமுனை தொடர் ஒன்று உண்டு. இந்தியாவில் 2001ஆம் ஆண்டு நடந்த பார்டர் கவாஸ்கர் தொடர்தான் அது. இந்தியாவே பார்த்திராத, ஒரு புதிய கேப்டனாக கங்குலி உருப்பெற்றார். ஒரு போராடும் இந்தியாவை, பணியாத இந்திய அணியை உருவாக்கியதில் கங்குலியின் பங்கு அதி முக்கியமானது.

மகரந்தம்

வளி மண்டலத்திலிருந்து இது தவிர மின்னல் மூலமாகவும் நைட்ரஜன் பூமிக்கு வரும். இந்த நைட்ரஜன் புவியில் ஒரு சுழற்சியில் உள்ளது. வளி மண்டலத்திலிருந்து நிலம் நீர் என செல்லும் அச்சுழலில் இப்போது கடல்களில் உள்ள நைட்ரஜனில் துண்டு விழுகிறது என்கிறார்கள். உண்மையிலேயே துண்டு விழுகிறதா அல்லது அதன் சுழற்சியில் நாம் இன்னும் அறிந்திராத மர்மப் பாதைகள் இருக்கின்றனவா?

உள்ளம் கவர்ந்த உள்வேலை

இந்த ஊழலின் விளைவுகளை இன்றும் உலகம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறது. இதனால் ஏற்பட்ட உலகப் பொருளாதாரச்சரிவால், குறைந்தபட்சம் 1.5 கோடி பேர் மீண்டும் வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுள்ளார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல கோடி மக்கள் உலகெங்கும் வேலை இழந்து தவிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஒரு நிதி நிறுவனத் தலைமை அதிகாரி கூட இன்றுவரை சிறை செல்லவில்லை. இதைக் குறித்து அழகாக விளக்குகிறது ‘Inside Job’ என்ற விவரணப்படம்.

04. உலகப் புகழ் பெற்ற பிரதேஸ் இசை நிகழ்ச்சி

யுத்தத்துக்குப் பின் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தும் ஸ்பெயினைப் பற்றிக் கவலைப்படவில்லை. இசை நிகழ்ச்சிக்கு தலைமைத் தாங்குமாறு அழைத்த ஐ.நா சபையிடம் தன் கொள்கையைப் பற்றி கசல்ஸ் விளக்கினார். அதையே ஒரு பேட்டியாக டைம்ஸ் பத்திரிக்கைக்குக் கொடுத்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார். தன இன மக்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு ஃபிராங்கோ மன்னிப்பு கேட்கும் அதேநேரத்தில் உடனடியாக மக்களாட்சியை காடலோனியாவில் அமுலாக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

முக்தாம்மாவுடன் ஒரு மணி நேரம்

2004-ஆம் ஆண்டு தொண்ணூறு வயது இருக்கும் முக்தம்மா கீழே விழுந்ததில் அவர் தலையில் அடிபட்டு நினைவிழந்து இருந்தார். எங்களை யார் என்று அறிந்து கொள்வது அவருக்குக் கடினமாக இருந்தது. அனால் அந்த நிலையிலும் அந்த பந்துவராளி பதத்தின் ஒரு சங்கதியும் அவர் நினைவைவிட்டு அகலவில்லை. எந்த ஒரு பிழையுமில்லாமல் பாடினார்.