உயிரின் கதை – 5

நம் உடலிலே உயிர் எங்கே இருக்கிறது என்ற கேள்வியைத்தான் நானும் சின்னப் பையனாக காய்ச்சல் வந்து வீட்டில் தனியாகப் படுத்திருந்தபோது ஒருநாள் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆஸ்பத்திரியில் ஊசி போடப்போன டாக்டர் மாமாவிடம் கேட்டபோது, ”இதயத்துக்குள், வலது ஓர மூலையில், ஆவி ரூபத்தில்!” சொல்லிவிட்டு தாம்பூலத்தை எடுத்து வாயில் போட்டு குதப்பிக்கொண்டே சிரிஞ்சில் மருந்தை எடுத்துக் கொண்டிருந்தார். பயந்து கொண்டே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ”அப்ப ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது வெளியே போய்டாதா?” என்றேன்.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்-7

மிக அண்மைக் காலமாகப் பெண்ணியவாதிகள் தனக்கும் தனதுடலுக்கும் உள்ள உறவை வெளிப்படுத்துவதான ஓவியம்-சிற்பங்களைப் படைக்கிறார்கள். அவற்றைப் பெண் என்பவள் இறைவனால் ஆணுக்காகப் படைக்கப்பட்ட அழகான கவர்ச்சி மிக்க போகப்பொருள் என்பன போன்ற கற்பனைகளைத் தகர்க்கவேண்டியே படைக்கிறார்கள். இனி பெண்ணின் பார்வையில் சித்தரிக்கப்படத் தேவையில்லை என்னும் கருத்தில் உறுதியாக உள்ளனர். ஒரு பெண்ணுக்கு ஏற்படும் உடல், மனம் சார்ந்த வலிகளைச் சொல்கிறார்கள். சமுதாயத்தின்மேல் தங்கள் கோபங்களை வெளிப்படுத்துகிறார்கள். ஆண் என்பவன் அவர்களிடத்தில் காண மறுக்கும் சில விஷயங்களை படைப்பில் கொணர்கிறார்கள்.

தளவாய்ப்பேட்ட சந்தையும், மேலாண்மை உத்தியும்

ஒரு சின்ன விளையாட்டில் துவங்கி, பேரம் பேசுதலின் பல்வேறு அம்சங்களை விளக்கினார். முதலில் சொன்னது – அடிப்படை உழைப்பு. எந்த ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றாலும், அதைப் பற்றிய விவரங்கள், அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை முதலில் சேகரிக்க வேண்டும் என்றார். இது பால பாடம். பங்கு பெற்ற எல்லோருமே செய்வதாகச் சொன்னார்கள். அதைக் கேட்டு ஜேம்ஸ் பாண்ட் பட வில்லி மாதிரி சிரித்த அவர் அடுத்து ஒரு புள்ளி விவரம் கொடுத்தார்.

மகரந்தம்

மனித குலத்தின் தேவை வளர வளர, அதற்கு ஈடுகொடுத்து கணிணியின் வேகமும் வளர வேண்டும். இல்லையேல், எளிய மனிதர்களுக்கான நுகர்வோர் மின்ணணுவியல் துறை முதல் பெரும் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் அறிவியல் துறை வரை, பல்வேறு தளங்களில் பெரும் தேக்கம் ஏற்படும். அதனால், வேறு வழியே இல்லை, கணிணியின் வேகம் அதிகரித்தபடி இருக்க வேண்டும். ஆனால் எப்படி? கணிணி வல்லுநர்கள் முன்வைக்கப்பட்ட சவால் இது.

மூடிய அரசுகளைத் திறக்கும் தொழில்நுட்பங்கள்

மக்கள் தொகை என்று எடுத்துக்கொண்டால் இன்றைய அராபியச்சமூகம் மிகவும் இளமையான ஒன்று. மூன்றில் ஒரு பங்கு ஜனத்தொகை 15-இலிருந்து 29-க்குள் உள்ள இளைஞர் கூட்டம். எகிப்து போன்ற நாடுகளில் இவர்கள் படித்த ஆனால் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள். அராபிய நாடுகளின் ஃபேஸ்புக் பயனாளர்களில் 22% எகிப்தில் உள்ளனர். பிற அராபிய நாடுகள் போல அரசாங்கம் வலைத்தளங்களை கடுமையாய்க் கட்டுப்படுத்துவதும் எகிப்தில் கிடையாது. இந்த சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் பங்கெடுப்பது 15-லிருந்து 29-க்குள் இருக்கும் இளைஞர்களே.

வில்லியம் கிப்ஸன், அறிவியல் நவீன ‘ஆளுமை’

நீங்கள் ஒரு பயங்கரவாதி என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கொஞ்சம் பேர்தான் இருப்பீர்கள். நீங்கள் மோதுவதோ, ஏராளமான பெருந்தலைகளுடன். பயங்கரவாதம் என்பது உங்களுடைய பிராண்டைப் பிரபலமாக்கும் முயற்சி. ஏனெனில் உங்களிடம் இருப்பதெல்லாம் அந்த பிராண்ட் ஒன்றுதான். பயங்கரவாதிகளிடம் அவ்வளவாகப் பொருள் வசதி இருப்பதில்லை. முதலில், பயங்கரவாதம் என்ற சொல்லே எனக்குப் பிடிக்கவில்லை. உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அந்த வார்த்தை துல்லியமாகச் சொல்லுவதில்லை

பிப்ரவரி மழை

மஞ்சுநாத் அவளை தினமும் பனர்கட்டா சாலையில் மீனாக்ஷி கோயிலுக்கு பக்கம் இருக்கும் ஹுல்லிமாவு என்ற இடத்தில் அவளது வீட்டில் விடும் டிரைவர். எஃப் எம் போட்டுவிட்டு, ரியர் மிரர் வியூவை சரிசெய்து பார்த்த போது திவ்யா போட்டிருந்த உள்ளாடை மீது அவன் கண்கள் சில வினாடிகள் அதிகப்படியாகத் தங்கியது. திவ்யா செல்பேசியில் பேசிக்கொண்டு ஒரு சாக்லெட் பட்டையை தின்றுகொண்டு இருந்தாள்.

உரிமையை மீட்கும் பெண்கள்

பெண் விடுதலை என்பதை ஆணுக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பை முன்வைத்தே தமிழகத்தில் உள்ள பெண்ணியலாளர்களில் பெரும்பாலானவர்கள் செயல்படுவதாக ஒரு தோற்றம் இருக்கிறது. அப்பட்டமான உண்மையை சொல்வதானால், பெண் விடுதலை என்பது வன்முறையிலிருந்து விடுதலை என்ற நிலையை அடையவே வெகு தூரம் போக வேண்டியிருக்கும் போலிருக்கிறது. பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் பங்கு, சம உரிமை, சம வாய்ப்பு என்பதெல்லாம் போக்கு காட்டும் கோஷங்களாக வெற்றி பெற்று, உலகெங்கும் வன்முறைக்கு ஆளாகும் பெண்களில் தீனக்குரலை மறைத்து விட்டிருக்கின்றன.

தொலைபேசி – ஒரு பரிணாமம்

90-களில் இரவு ஒன்பது மணிக்கு மேல் பொது தொலைபேசியகத்தில் ஒரு பெரிய வரிசை காத்திருக்கும். ஏனெனில் தொலைதூர அழைப்புகளுக்கு(STD) ஒன்பது மணிக்கு மேல் விலை சற்று குறைவு. ஓசி விகடன், ஓசி குமுதம் இவற்றோடு ஓசி டெலிபோன் வாய்ப்புக்காக கழுகாய் திரியும் பக்கத்துவீட்டுகாரர்கள் இன்னும் நினைவில் உள்ளனர். ஆனால் “தொலைபேசி – ஒரு பரிணாமம்”

‘மரணம் மற்றும்…’ கன்னடச் சிறுகதைகள்

இக்கதைத் தொகுப்பில் பாராட்டப்பட வேண்டியது அதன் சரளமான அம்சம். சரளம் என்றால் தன்னிஷ்டத்துக்கு மொழிபெயர்த்து மூலக்கதையைக் காணாமலடிப்பது அல்ல. தீவிரமான கதைகளில் உரையாடல்களைத் தூயத் தமிழிலும், கொஞ்சம் இறுக்கம் தளர்ந்த கதைகளில் ‘இயல்பான’ பேச்சுத் தமிழிலும் மொழிபெயர்த்திருக்கிறார் நஞ்சுண்டன். கெளடர் என்பதாலேயே கொங்குநாட்டுக் கவுண்டர் வட்டாரவழக்கில் உரையாடல்களை அமைத்துவிட்டு அதை ‘மொழிபெயர்ப்பாளனின் சுதந்திரம்’ என்றெல்லாம் நஞ்சுண்டன் சொல்லியிருக்கலாம்.

சகலகலாச்சாரியார் எஸ்.ராஜம்

ராஜம் தனது வாழ்க்கையிலேயே இவ்வளவு பதவிசாகவும் நறுவிசாகவும் லலிதமாகவும் நளினமாகவும் எளிமையாகவும் பொறுமையாகவும் இருந்ததை புரிந்துகொண்டால் அவர் பாடலும் சித்திரமும் கேட்காமலே பார்க்காமலே புரிந்து கொள்ள முடியும். இருந்தாலும் லலிதாராமும் காந்தனும் நமக்கு மேலும் புரியவைக்க அவர்கள் எடுத்த ஆவணப்படத்தில் இருந்து ஒரு பகுதியை குறும்படமாகக் காட்டினார்கள். மதுரை மணி அய்யர் அவர்கள் ராஜத்திடம் சொன்னது – “ராஜூ ராகமெல்லாம் குளிச்சுட்டு வர்றமாதிரி சுத்தமா இருக்கணும்.” இதை நினைவூட்டுவது போல் ராஜம் குளித்துவிட்டு துண்டுடன் வருகிறார். ஒரு சுத்த ராகமாக திகழ்கிறார்.

‘இசையால் வளமாகும் ஆளுமை’ – ஆர்.கே.ஸ்ரீகண்டனுடன் ஒரு நேர்காணல்

பெங்களூரில் வசிக்கும் கர்நாடக சங்கீத மேதை ஆர்.கே.ஸ்ரீகண்டன் அவர்களுக்கு இந்த வருடத்துக்கான பத்மபூஷண் விருது கிடைத்ததைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. 91 வயதான ஸ்ரீகண்டனுக்கு எழுபது வயதுதான் என்று சத்தியம் செய்து கூறலாம். எல்லோரும் நம்பிவிடுவார்கள். மெலிந்த தேகம், கூர்மையான பார்வை, சின்ன ஓசையையும் துல்லியமாகக் கேட்கும் காது. அவர் பேச்சு, பாவனை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி. மிக அருமையாகத் தமிழ் பேசுகிறார். கையோடு எடுத்துப் போயிருந்த லாப்டாப்பில் சொல்வனத்தில் வந்த சில இசைக்கட்டுரைகளைக் காட்டினேன். ஆர்வமாகப் படித்துப் பார்த்தார். சாவகாசமாகப் படித்துப் பார்க்கவேண்டும் என்று அக்கட்டுரைகளின் ப்ரிண்ட்-அவுட்டுகளைத் தரச்சொல்லிக் கேட்டார். பின் உரையாடத் தொடங்கினோம்.

கணியான் கூத்து

“வாரானே சுடைலைக் கண்ணு, சுடலைக் கண்ணு….நாங்குநேரி தான் கடந்து, தான் கடந்து” “பக்கத்திலே முண்டனுமாம் முண்டனுமாம்” என்று உடையும் குரலில் கம்மலுடன் மத்திம காலத்தில் அப்பாடல் ஒலிக்கும். அதற்கு ஒத்திசைந்து வாசிக்கப்படும் மகுடம் (கையால் வாசிக்கப்படும் தப்பு). பாடலைப் பாடும் அண்ணாவி அதே வரிகளைத் துரித காலத்தில் பாடும் போது, சர்வலகுவாக மிருதங்கம் வாசிப்பதைப் போல் சொற்களை விளாசித் தள்ளுவார்கள் மகுடம் வாசிப்பவர்கள்.ஏதோ ஒன்று நம்மைப் போட்டு உலுக்கியது போன்ற உணர்வுடன், ஒலி வரும் பாதையை நோக்கி செல்வதற்கு ஆசை எழும்.

ஆயிரம் தெய்வங்கள் – 7

ஈரானிய புராண மரபுப்படி மித்ரா ஒரு அவதாரம். மீண்டும் உலகைப் புத்துயிர் பெறச் செய்யவே கடவுளுக்குக் காவலனாயிருந்த காளையை கடவுள் விருப்பப்படி கொன்றதாக மரபு. சிரோஷீடனும், இறப்பின் தெய்வமான ரஷ்ணுவுடனும் கூட்டாட்சி செய்த மித்ரா, அங்கும் ஒளியின் கடவுள். பகல் தெய்வம். இந்திய சூரியனைப்போல் வெள்ளைக் குதிரை ரதத்தில் பவனி வருபவர். போர் தெய்வமும் மித்ரனே. அகுராவுடன் சேர்த்து உயர்நிலையில் பூஜிக்கப்பட்ட மித்ரா சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவன். பொய்மையை எதிர்த்துப் போராடுபவன்.

பாலழித்தல்

அறுவை நிறைவேற்றப் படும் விதத்தில் வேறுபாடுகள் நிலவியிருக்கின்றன. ஆணுறுப்பையே முழுக்க அறுத்தெறியப் படுவது ஒருவகை என்றால் பீஜக்கொட்டை மட்டும் அகற்றப் படுவதுமுண்டு. தலைநகரில் இருக்கும் மிக பிரமாண்ட அரண்மனை வளாகத்தில் அரசாங்கம் அங்கீகரித்த அறுவை நிபுணர்கள் இருந்தார்கள். அரசாங்க ஊதியம் என்று ஒன்றும் இவர்களுக்குக் கிடையாது. இருப்பினும், இத்தொழிலில் ஈடுபட்டிருந்தோர் அக்காலந்தொட்டே தலைமுறை தலைமுறையாக குடும்பத்தொழிலாகவே செய்தனர். ஒவ்வொரு அறுவைக்கும் அதன் பிறகான சிகிச்சைக்கும் ஆறு பணம் வாங்கினர்.