அண்ணன்களின் பாடகன்

வாசுதேவனின் பாடல்களை எனக்கு நிறைய அறிமுகப்படுத்தியவன் யாரென்று யோசித்துப் பார்த்தால் கணேசண்ணன்தான் நினைவுக்கு வருகிறான். கணேசண்ணன் அப்போது ஐ.டி படித்து முடித்துவிட்டு கண்ணில் படுகிற பெண்களையெல்லாம் காதலித்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் எந்த ஒரு புதிய பாடலையும் கணேசண்ணன் குரலில்தான் நாங்கள் முதலில் கேட்போம். ‘முடிவல்ல ஆரம்பம்’ திரைப்படப்பாடலான ‘தென்னங்கீற்றும் தென்றல்காற்றும்’ பாடலில் ‘வண்ணாத்திப் பாறைக்கு வரவேணும் நாளைக்கு’ என்னும் வரியை கணேசண்ணன் யாரையோ நினைத்தபடி ரசித்துப் பாடுவான். ‘கோழி கூவுது’ படத்தின் ‘பூவே இளைய பூவே’ பாடலின் ’காமாட்சி’ என்று துவங்கும் வசனத்திலிருந்தே ஆரம்பித்து விடுவான். அதுவும் ‘தம்பி ராமகிருஷ்ணா, கூச்சப்படாமல் மற்றவைகளையும் படித்துக் காட்டவும்’ என்று சுற்றி அமர்ந்திருக்கும் எங்களில் யாரையாவது பார்த்துச் சொல்லுவான்.

எஸ்.வி.ராமகிருஷ்ணன்

இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு, என் கைபேசியில் இருக்கும் எண்களைச் சரிபார்க்கும் போது எஸ்.வி.ராமகிருஷ்ணன் என்ற பெயர் பார்த்து, “அட இவரிடம் பேசி ரொம்ப நாள் ஆச்சே. பேச வேண்டும்” என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் பேசவில்லை. “பேசியிருக்கலாமே” என்று இனி ஆயுளுக்கும் வருத்தப்படப்போகிறேன். இலக்கியச் சர்ச்சை, மற்ற எழுத்தாளர்களைப் பற்றி தேவையில்லாத விமர்சனம் போன்றவை அவரிடம் கிடையாது. அவருடன் பேசிய சமயங்களில் இதை நான் உணர்ந்திருக்கிறேன். அவருடையவை, தொப்புள் சமாசாரம் இல்லாத இதழ்களில் பெரும்பாலும் கடந்தகால இந்தியாவைச் சித்தரிக்கும் வகைக் கட்டுரைகளும், nostalgia-வையும் சார்ந்தவை.

பழநி முத்தையா பிள்ளை

மான்பூண்டியா பிள்ளையின் சிஷ்யர்களுள், கச்சேரி வித்வானாக தட்சிணாமூர்த்தி பிள்ளைக்குப் பெரும் பெயர் இருந்த போதிலும், லய விவகாரங்களில் தேர்ச்சியைப் பொறுத்த மட்டில் முத்தையா பிள்ளையின் பெயர் சிறந்து விளங்கியது. “எந்த வித்வான் தலையால் போட்ட லய முடிச்சையும் முத்தையா பிள்ளை காலால் அவிழ்த்துவிடுவார். ஆனால் முத்தையா பிள்ளை காலால் போட்ட முடிச்சை தலையால் அவிழ்ப்பதே முடியாத காரியம்”, என்றொரு சொலவடை லய உலகில் இருந்து வந்ததாக எம்.என்.கந்தசாமி பிள்ளை கூறியுள்ளார்.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 6

எழுபதுகளில் இவ்வகைக் கலைஞர்கள் தங்களை அச்சமின்றி வெளிப் படுத்திக் கொண்டனர். “மகிழ்ச்சியே எல்லாம்” என உரத்துக் கூறிய ஆண் கலைஞர்கள் பெண் கலைஞர்களிடமிருந்து மிகவும் மாறுபட்டிருந்தனர். 1980களின் தொடக்கத்திலிருந்து இவர்களின் படைப்புவெளிப்பாடு அதிகரித்தது. ஆனால், அத்துடனேயே மற்றொன்றும் பரவலாகப் பேசப்பட்டது. அதுதான் AIDS என்னும் ஆட்கொல்லி நோய்.

மகரந்தம்

எத்தனையோ தணிக்கைகளையும் மீறி சர்வதேச ஊடகங்கள் வழியே அங்கொன்றும், இங்கொன்றுமாகக் கசியும் இந்த தண்டனைகளை இத்தனை கொடூரமானவை என்றால், வெளியுலகம் அறியாமல் கிராமப் பஞ்சாயத்துகளால் கொலை செய்யப்பட்ட பெண்கள் எத்தனை, எத்தனை!

ஆயிரம் தெய்வங்கள் – 6

பாரசீக ஈரானிய தெய்வக்கதைகளை நுணுகி ஆராய்வோமெனில் தமிழ்நாட்டில் எவற்றையெல்லாம், யாரையெல்லாம் ஆரியம் என்றும் ஆரியர் என்றும் அறியப்பட்டுள்ளதோ அவை அனைத்துமே தவறு என்று எண்ணத்தோன்றும். பண்டைய உலக வரலாற்றின்படி ஆரியர்களின் தளமாயிருந்தது பாரசீகம். பாரசீகப் பேரரசர்கள் டரீயஸ், செர்சஸ் காலத்தில் இந்தியாவின் வடமேற்குப்பகுதி பாரசீக ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம்.

போர் – நினைவுகள், சாட்சியங்கள்

என்னைப் பொருத்தவரை இலக்கியமும் கலையும் இறுதியில் மானுடம் குறித்தவை. ஒரு நாவலை நான் எழுதி முடிக்கையில், அதிலிருந்து எதையாவது நான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும், அல்லது இந்த உலகில் மனிதராய் வாழ்வதன் அர்த்தத்தைக் குறித்து என் மண்டைக்குள் ஏதாவது குடைந்துகொண்டிருக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதுதான் அறம் என்றால், ‘ஆம்’ என்பதே என் பதில்.

மாதிரிக்கு ஒரு எளிய காக்கநாடன்

ஊட்டியில் வசிக்கும் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் நிர்மால்யா மொழிபெயர்த்த உமர் என்ற நாவல் இந்த வருடத்திய சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. நிர்மால்யா அவர்களுக்கும், புத்தகத்தை வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்துக்கும் சொல்வனத்தின் வாழ்த்துகள். இச்சமயத்தில் நிர்மால்யா மொழிபெயர்த்த வேறொரு புத்தகத்தின் விமர்சனத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

திக்பந்தனம்

கருமுலைப்புள்ளியில்
ஒருசொட்டுப்பால் சிதறி
சூன்யகர்ப்பம் சூலுறும் மீண்டுமென்று
வெள்ளையனுரைத்தால் பளிங்குண்மை
கருப்பையன் நானுரைத்தால்
சனாதனப் புனைவுச்சுருள்.

World Press Photo போட்டியில் வென்ற ஒளிப்படங்கள்

உலகெங்கும் நன்றாக அறியப்பட்ட இப்போட்டிக்கு ஒரு லட்சத்து சொச்சம் ஒளிப்படங்கள் அனுப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து வெற்றிபெற்றிருக்கும் அந்த ஒரு படம்தான் எத்தனை விஷயங்களைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது! இப்போட்டியில் கல்கத்தா நகர வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு படமும் வெற்றிபெற்றிருக்கிறது. படங்களை இங்கே காணலாம்: http://www.boston.com/bigpicture/2011/02/world_press_photo_winners.html

மீள்பதிப்பு: தொடர்ந்து சுருங்கும் இந்திய எல்லைகள்

அமரர் எஸ்.வி.ராமகிருஷ்ணன் சொல்வனம் இதழ் 6-இல் எழுதிய இக்கட்டுரையை அவர் நினைவாக மீள்பதிப்பு செய்கிறோம்: நடுநிசியில், 12 மணி அடித்து ஆங்கிலக் காலண்டர் பிரகாரம் 15ம் தேதி தொடங்கியவுடன் பிரிவினைக்கப்புறம் மீதியிருந்த நாடு (முழு இந்தியாவில் ஏறக்குறைய முக்கால் பங்கு) இந்தியன் யூனியன் என்றபெயருடன் இன்னொரு நாடாக உதயமாயிற்று. அதற்கு முன் ஜோதிட ரீதியில் நாள் நன்றாக இல்லையாம். பாகிஸ்தான் பிறந்தவேளை மரண யோகம் என்றும் சொன்னார்கள். அடுத்த அறுபத்தியிரண்டு ஆண்டுகால வரலாற்றைத் இன்று திரும்பிப் பார்த்தால் அது சரியாக இருக்கலாம் என்று தோன்றவும் செய்யலாம்.

வாசகர் மறுமொழி

இசைச்சிறப்பிதழ் என்று சொல்லாமலேயே கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, அமெரிக்க இசை, திரையிசை எனப் பலவகை இசையைப் பற்றியும் சத்தமில்லாமல் ஒரு சிறப்பிதழாக வெளியிட்ட உங்களுக்கு என் நன்றிகள். கட்டுரைகளை ஏனோ தானோவென்று வெளியிடாமல், தேவையான படங்கள், வீடியோக்கள், ஒலித்துணுக்குகள் தந்து ஒரு புதிய அனுபவத்தையே அள்ளித்தரும் உங்கள் சிரத்தையை எத்தனை பாராட்டினாலும் தகும்.

எறும்புகளின் ஜீனோம், யானை டாக்டர், செயற்கைக்கால் யானை

இங்கே கீழே தரப்பட்டிருக்கும் வீடியோவில் சில சுவாரசியங்கள் இருக்கின்றன. சென்ற வாரத்தில், அதீதமான நோயெதிர்ப்பாற்றல் கொண்டிருக்கும் அர்ஜெண்டீனிய எறும்புகளின் ஜீனோம்கள் படிக்கப்பட்டிருக்கின்றன. இதைக்குறித்து Calacadamey-யைச் சேர்ந்த எறும்பு நிபுணர் Dr.ப்ரையன் ஃபிஷர், இந்த எறும்புகளின் ஜீனோம்களைப் புரிந்துகொள்வதன் மூலம் மனிதர்களும் இந்த எறும்புகளைப் போல, தங்கள் வியாதிகளை எதிர்க்கும் “எறும்புகளின் ஜீனோம், யானை டாக்டர், செயற்கைக்கால் யானை”

உயிரின் கதை – 4

கூட்டிக்கழித்துப் பார்த்தால், இந்திய சிந்தனை மரபில் உள்ள ஏறக்குறைய அதே விஷயங்களைத்தான் பிளாட்டோ, பித்தாக்ரஸ், அரிஸ்டாட்டில், ஹிப்போகிரடெஸ் ஆகியோரும் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. தொல் இந்திய நூல்களின் காலம் இவர்களின் காலத்துக்கும் முந்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அப்படியானால் இச்சிந்தனைகள் இந்தியாவில் தோன்றி பிற்காலத்தில் பரவி கிரேக்கத்திற்குச் சென்றவையா என்ன?

ஆர்தர் ஆஸ்போர்னின் ரமணர்

ஆஸ்போர்னின் இப்புத்தகத்தில் எழுதியுள்ள மொழி மிகப் புதிதாய் இன்றும் இருக்கிறது. ஒரு காலமின்மையை (timelessness) எவரும் உணர முடியும். சுத்தானந்த பாரதியின் மொழி இன்றில்லை. இன்று படிக்கும் ஒரு மனிதருக்குச் சலிப்பு தட்டும் நடை. ஆனால், ஆஸ்போர்னைப் படிக்கும் எவரும் அதன் ”இன்றைய” மொழிநடையினால், மிக எளிதாகப் படித்துச் செல்லமுடியும். அதே போல் வாக்கியங்களின் அமைதியும் அவரின் மொழியாளுமைக்குச் சான்று.